கிறிஸ்தவச் சேவை

19/289

வாழ்க்கைப் பணிகள்

வாலிபர்களின் பயன்மிக்க முயற்சிகளுக்கான வாய்ப்பாக அமையும்பல வாழ்க்கைப்பணிகள் உள்ளன. வாலிபர்களை ஒருங் கிணைத்துசெவிலியர்களாக, சுவிசேஷ ஊழியர்களாக,வேதாகமப் போதகர்களாக, பிரச்சாரகர்களாக, ஊழியர்களாக, மருத்துவச் சுவிசேஷகர்களாக முழுப்பயற்சியளிக்க வேண்டும். 3 TamChS 48.2

வாலிபர்களுக்கு உதவ வாலிபர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்; அவ்வாறு உதவும்போது, பெரிய அளவில் ஊழியம் செய்கிற அர்ப்பணிப்புமிக்க ஊழியர்களாக அவர்களைத் தகுதிப் படுத்துகிற அனுபவத்தை வாலிபர்கள் பெறமுடியும். 4 TamChS 48.3

வாலிபர்களான ஆண்களையும் பெண்களையும் தங்களுடைய சுற்றுப்புறத்திலும் பிற இடங்களிலும் ஊழியஞ்செய்யப் பயிற்றுவிக்கவேண்டும். இக்காலத்தில் செய்யவேண்டிய பணிகுறித்து தெளிவாக அறிந்திருக்க, தங்கள் சிந்தைகளையும் மனதையும் அவர்கள் ஈடுபடுத்தவேண்டும். தங்களுக்கு எதைச் செய்யமுடியுமோ அதைச் செய்ய, தங்களைத் தகுதிப்படுத்தவேண்டும். 1 TamChS 48.4