கிறிஸ்தவச் சேவை

257/289

கண்ணிமைக்கும் நேரத்தில் செயல்படுபவர்கள்

அந்தகாரத்திலிருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளிக்குள் வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் செயல்படும் உண்மையுள்ள மனுஷராக இருங்கள். 4 TamChS 318.3

தேவ ஊழியர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் செயல்பட வேண்டும்; அவருடைய முன்னேற்பாட்டின்படி வழிதிறக்கும் போது, செயல்படுவதற்கு எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும். அவர்கள் தாமதம் செய்தால், அவர்களைத் தோற்கடிக்க சாத்தானுக்கு நேரம் கொடுப்பதாக அந்தத் தாமதம் இருக்கிறது. 5 TamChS 318.4

கற்பனையைக் கைக்கொள்ளுகிற அவருடைய மக்கள் அவருக்குச் சேவை செய்ய எப்போதும் ஆயத்தமாக நிற்கவேண்டும். 6 TamChS 318.5

மெய்யாகவே கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள், பிறருடைய நலன்களுக்காக வேலைசெய்கிறார்கள். உள்ளூரிலும் வெளியூரிலும் தேவனுடைய நோக்கத்தைச் செயல்படுத்துவதில் சந்தோஷமடைகிறார்கள். ஜெபக்கூட்டத்தில் மற்றவர்கள் அவர்களைப் பார்க்கிறார்கள்; அவர்கள் பேசுவதைக் கேட்கிறார்கள்: அவர்களால் தாக்கம் ஏற்படும். ஊழியர்கள் சென்று வேலைசெய்ய முடியாத இடங்களில் தாங்கள் சென்று ஊழியம் செய்ய முயலுவார்கள். சுயத்தை உயர்த்த அவர்கள் முயலுவதில்லை; மாபெரும் பணியைச் செய்கிறோமேன்று அதற்கான புகழைத் தேடுவதில்லை. மாறாக, கிறிஸ்து தங்களுக்காக அதிகம் செய்திருப்பதால் சிறிய வேலைகளையும், தேவைப்பட்டால் பெரிய பணியையும் தாழ்மையாகவும் சாந்தமாகவும் உண்மையாகவும் செய்வார்கள். 1 TamChS 318.6