கிறிஸ்தவச் சேவை
கவலைப்படுவதை நிறுத்துங்கள்
அர்ப்பணிப்பற்ற ஊழியர்களால் எல்லாமே தவறாகப் போகும். இதனால் உண்டாகும் விளைவை எண்ணி நீங்கள் கண்ணீர் வடிக்கலாம்; ஆனால் கவலைப்படாதீர்கள். ஸ்தோத்திரத்திற்குரியவரான எஜமான் தம் ஊழியம் முழுவதையும் ஒன்றுவிடாமல் தம்முடைய பிரதான மேற்பார்வையின்கீழ் வைத்திருக்கிறார். அவர் கேட்பதெல்லாம் தம்முடைய ஊழியர்கள் தம்முடைய கட்டளைகளைக் கேட்க வரவேண்டும் என்பதும், தம்முடைய வழிநடத்துதல்களின்படி கீழ்ப்படியவேண்டும் என்பதும்தான். நம் திருச்சபைகள், நம் ஊழியப்பணிகள், நம் ஓய்வுநாள் பள்ளிகள், நம் நிறுவனம் என எல்லாமே அவருடைய தெய்வீக இருதயத்திலிருந்து நடை பெறுபவைதாம். ஏன் கவலைப்படவேண்டும்? திருச்சபையைக் குறித்து தேவன் திட்டமிட்டுள்ளதுபோல அதை அணையாத, பிரகாசிக்கிற விளக்காகப் பார்க்கவேண்டும் என்கிற உங்களுடைய தீவிர வாஞ்சையை, தேவன் மேலான முழுநம்பிக்கைதான் உறுதிப் படுத்த வேண்டும். 3 TamChS 317.2
அமைதியாக இருக்கப் பழகுங்கள்; உங்கள் ஆத்துமாக்களைப் பாதுகாக்கும்படி உண்மையுள்ள சிருஷ்டிகரிடம் அர்ப்பணியுங்கள். அவருடைய பலிபீடத்தை நம் கண்ணீராலும் குற்றச்சாட்டுகளாலும் நிறைப்பது அவருக்கு பிரியமானதல்ல. இன்னோர் ஆத்துமா மனந்திரும்புவதை நீங்கள் காணமுடியவில்லை என்றாலும், தேவனைத்துதிப்பதற்கு ஏற்கனவே அவர் செய்திருப்பவையே போதுமானவையாக இருக்கும். ஆனால், நீங்கள் தொடர்ந்து முன் செல்ல வேண்டும், எல்லாவற்றையும் உங்களுடைய கருத்துகளின் படி மாற்ற முயலக்கூடாது; அப்போதுதான் நற்கிரியைகளும் தொடரும். தேவ சமாதானம் உங்களுடைய இருதயங்களில் காணப்படுவதாக; நீங்களும் நன்றியுள்ளவர்களாக இருங்கள். தேவன் கிரியை செய்ய இடங்கொடுங்கள். அவருடைய வழியை அடைக்காதீர்கள். நாம் அவரை அனுமதித்தால், அவரால் கிரியைசெய்ய முடியும்; அவர் கிரியை செய்வார். 1 TamChS 317.3