கிறிஸ்தவச் சேவை
பாரபட்சமின்மை
மனிதர்கள்மத்தியில் நம் இரட்சகர் வாழ்ந்தவரை, ஏழைகளின் வேதனையில் அவரும் பங்கெடுத்தார். அவர்களுடைய கவலைகளையும் கஷ்டங்களையும் அனுபவத்தால் அறிந்துகொண்டார்; தாழ்மையுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் அவர் ஆறுதலும் தேறுதலும் வழங்கமுடிந்தது. அவருடைய வாழ்க்கையின் போதனையை மெய்யாக உணர்ந்தவர்கள், வகுப்புவாரியாக மக்களைப் பிரித்துப் பார்க்கவேண்டும் என்றும், தகுதியான ஏழைகளுக்குமேலாக பணக்காரரைக்கனப் படுத்தவேண்டும் என்றும் ஒருபோதும் நினைக்கமாட்டார்கள். 2 TamChS 315.1
உங்கள் பார்வைக்குப் பயனற்றவர்களாகத் தெரிவதால், உங்களுக்குப்பிடிக்காததால் ஆத்துமாக்களைப் புறக்கணிக்கும்போது, கிறிஸ்து தேடுகிற அந்த ஆத்துமாக்களை நீங்கள் அலட்சியப்படுத்துகிறீர்களென்பதை உணர்கிறீர்களா? அவர்களை நீங்கள் புறக்கணிக்கிற அந்தக் கணத்தில்தானே, நீங்கள் அவர்கள்மேல் மனதுருகியிருக்க வேண்டிய அவசியம் அதிகமாக இருந்திருக்கலாம். தொழுகைக்காகக்கூடுகிற இடங்களில், இளைப்பாறுதலுக்காகவும் சமாதானத்திற்காகவும் ஏங்கும் ஆத்துமாக்கள் உண்டு. அவர்கள் பொறுப்பற்று வாழ்வதுபோலத் தெரியலாம்; ஆனால், பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலுக்கு இணங்குகிறவர்களாக இருப்பார்கள். அவர்களில் அநேகர் கிறிஸ்துவுக்காக ஆதாயப்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். 3 TamChS 315.2
சுவிசேஷத்தின் அழைப்பை ஒரு சிலருக்கென்று ஒதுக்கி, இவர்கள் அதை ஏற்றுக்கொண்டால் நமக்குமரியாதை செலுத்துவார்கள் என்று நாம் நினைக்கிற சிலருக்கு மட்டுமே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களாக நாம் இருக்கக்கூடாது. எல்லாருக்கும் அந்தச் செய்தியை நாம் அறிவிக்கவேண்டும். சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும்படி எங்கெல்லாம் இருதயங்கள் திறந்திருக்கின்றனவோ, அங்கேல்லாம் அவர்களுக்கு அறிவுரைவழங்க கிறிஸ்து ஆயத்தமாக இருக்கிறார். 1 TamChS 315.3