கிறிஸ்தவச் சேவை
23—நற்செய்தி ஊழியத்தின் இதர வழிகள்
கண்தெரியாதோர்மேல் கவனிப்பு
கண்பார்வையற்ற தேவபிள்ளைகளுக்கு ஊழியம் செய்ய தூதர்கள் அனுப்பப்படுகிறார்கள். தூதர்கள் அவர்களுடைய காலடிகளைப் பாதுகாக்கிறார்கள்; அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களுடைய வழியெங்கும் சுற்றியிருக்கும் ஓராயிரம் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுகிறார்கள். 1 TamChS 281.1
தங்கள்மத்தியிலுள்ள கண்தெரியாதோர், வியாதியஸ்தர்களைப் புறக்கணிக்கிற தம் மக்களுடைய ஜெபத்திற்கு அவர் செவி கொடுப்பதில்லை. 2 TamChS 281.2
கண்தெரியாதோர் இடறும்படிக்கு திருச்சபையில் நடந்து கொள்கிறவர்கள் தண்டனைக்கு உரியவர்கள்; ஏனென்றால், கண் தெரியாதோருக்கும், வேதனையில் இருப்போருக்கும், விதவைகளுக்கும், திக்கற்றோருக்கும் பாதுகாவலர்களாக தேவன் நம்மை வைத்திருக்கிறார். இடறல் என்று வேதவசனம் எதைச் சொல்கிறது? கண்தெரியாதோர் கால் இடறும்படி அவர்கள் முன்வைக்கிற ஒரு கட்டை அல்ல; அதைவிட அதிகமானது அதில் உள்ளது. கண்தெரியாத ஒரு சகோதரனுடைய ஆற்றலைக் கெடுக்கிற போக்கைக் கடைப் பிடிப்பதும், அவனுடைய நலனுக்கு எதிராகச் செயல்படுவதும், அவனுடைய நல்வாழ்வைத் தடுப்பதும் அதில் அடங்கும். 1 TamChS 281.3
கண்பார்வை இழந்த ஒருவர் காண்கிற திறனை இழந்திருப்பதால், எல்லாப்பக்கத்திலும் அவருக்குப் பிரச்சனைகள் இருக்கும். அவருக்கு இருளாகத் தெரிகிற உலகில் தட்டுத்தடுமாறி நடந்துசெல்வதைக் காணும்போது, பரிவும் இரக்கமும் நமக்கு உண்டாகவேண்டும்; அப்படி உண்டாகாத இருதயம் தேவகிருபையால் மிருதுவாக வேண்டிய நிலையில் உள்ளது. 2 TamChS 282.1