கிறிஸ்தவச் சேவை

206/289

ஊழியர்களின் விசேஷித்த தகுதிகள்

சிலர் உயர் அந்தஸ்தினர்களுக்கு ஊழியம் செய்ய தகுதிபெற்றிருக்கிறார்கள். உயர் அந்தஸ்தினரை வெறுமனே அணுகுவது போதாது; தனிப்பட்ட முயற்சியாலும் உயிருள்ள விசுவாசத்தாலும் அவர்களுடைய ஆத்தும தேவைகுறித்து அவர்களில் விழிப்பு உண்டாக்கவேண்டும்; இயேசுவின் சத்தியத்தைக்குறித்த அறிவை அவர்கள் பெறவேண்டும்; அதற்காக அவர்களை அணுகுவதற்கான வழியை அறிய, தேவனிடம் ஞானம் கேட்கவேண்டும். 2 TamChS 266.1

உயர் அந்தஸ்தினர்களுக்கு ஊழியம் செய்கிறவர்களுக்கு தேவதூதர்கள் துணையாக இருக்கிறார்கள். இதை உணர்ந்து, மெய்யான கண்ணியத்துடன் நடக்கவேண்டும். பொக்கிஷ சாலையான தங்கள் மனதையும் இருதயத்தையும் ‘என்று எழுதப்பட்டிருக்கிறது’ என்று சொல்லப்படும் வார்த்தைகளால் நிரப்பியிருக்க வேண்டும். 3 TamChS 266.2

உயர் அந்தஸ்தினர்களை அணுகுவதற்கான ஒவ்வொரு முயற்சியிலும், தேவ ஊழியருக்கு வலுவான விசுவாசம் தேவை. தோற்றங்கள் பயமுறுத்துவதாக இருக்கலாம்; ஆனாலும் பயங்கர இருளாகத் தோன்றும் வேளையில் மேலேயிருந்து வெளிச்சம் பிறக்கும். 4 TamChS 266.3

உயர் அந்தஸ்தினர்களுக்கு சுவிசேஷத்தைக் கொண்டு செல்கிற ஊக்கமிக்க, தாழ்மையான ஊழியர்களை தேவன் அழைக்கிறார். 5 TamChS 266.4