கிறிஸ்தவச் சேவை
ஊழியர்களுடைய கரங்களைத் திடப்படுத்துங்கள்
அமெரிக்காவிலுள்ள அயல்நாட்டவர்களுக்கு இக்காலத்திற்கான சத்தியத்தை அறிவிப்பதில் இதற்குமுன்பு செய்யப்பட்டதைவிட அதிகமானது செய்யப்படுவதைக் காண தேவன் பிரியமாயிருக்கிறார். தலைவர் ஓல்ஸனுடைய கரங்களையும், அவருடைய உடன் ஊழியர்களுடைய கரங்களையும் திடப்படுத்துவோம். (ஓல்ஸன் என்பவர் அப்போது ஜெனரல் கான்ஃபரன்ஸின் வடஅமெரிக்க அயல்நாட்டு ஊழியத்துறையின் பொதுச்செயலாளராக இருந்தார்.) அவர்கள் தங்கள் மாபெரும் பணியைச் செய்ய சொற்பமான உதவித்தொகையே கிடைப்பதால் அவர்கள் தனியே போராட நாம் அனுமதிக்காதிருப்போமாக. 2 TamChS 263.1
இத்தாலியர்கள், செர்பியர்கள், ருமேனியர்கள், ரஷ்யர்கள், மேலும் பல நாட்டினர்கள்மத்தியில் ஆரம்பக் கட்ட ஊழியங்கள் ஊக்கமளிக்கும் விதத்தில் இருப்பதாக போதகர் ஓல்ஸன் எங்களிடம் சொன்னார். செய்யப்பட்ட அனைத்திற்காகவும் அவரோடு கூட சந்தோஷப்பட்டோம்; ஆனாலும் வசதிக்குறைவால் இன்னும் ஏராளம் செய்யப்படாமல் விடப்பட்டிருப்பதை அறிந்தபோது எங்களுக்கு வருத்தமாக இருந்தது. அமெரிக்காவிலுள்ள நம் திருச் சபைகள் அனைத்திலும் எடுக்கப்பட்ட விசேஷித்த காணிக்கையானது, இத்துறையைப் பொறுப்பேற்றுள்ள நம் சகோதரர்கள் நம் தேசத்தின் மாபெரும் நகரங்களில் இன்னும் அதிகமாக மும்முரத்துடன் ஊழியம் செய்வதற்கு உதவியாக இருக்குமென நம்புகிறோம். இதன்மூலம் அநேகர் நம் விசுவாசத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்யலாம்; மேலும், நம் தேசத்திலும் இவ்வுலகின் பிற தேசங்களிலும் உள்ள தங்களுடைய சொந்தத் தேசத்தினருக்கு செய்தியை அறிவிக்கிற ஊழியர்கள் இவர்கள் மத்தியிலிருந்து எழும்புவார்கள். 3 TamChS 263.2