கிறிஸ்தவச் சேவை
பரவோகத்திலிருந்து கொடுக்கப்பட்ட ஓர் வாய்ப்பு
நம் நாட்டில் சகல தேசத்தாரும், மொழிபேசுகிறவர்களும், ஜனத்தாரும் இருக்கிறார்கள். அவர்கள் அறியாமையோடும் மூட நம்பிக்கையோடும் வேதாகமத்தையும் அல்லது அதன் பரிசுத்த போதனைகளையும் பற்றிய எந்த அறிவும் இல்லாமலும் காணப்படுகிறார்கள். தம் வார்த்தையில் வெளிப்பட்டுள்ள அறிவுக்கேதுவான செல்வாக்கின்கீழ் அவர்கள் கொண்டுவரப்படவும், தம் இரட்சிப்புக்கேற்ற விசுவாசத்தில் அவர்கள் பங்குபெறவும் தேவனுடைய கரம் தாமே அவர்களை அமெரிக்காவுக்குக் கொண்டுவந்தது. 3 TamChS 261.2
தேவன்தம் வழிநடத்துதலின்படி மனிதர்களை நம் நாட்டுக்குக் கொண்டுவந்து, அவர்கள் சத்தியத்தை அறிந்துகொள்வதற்கும், பிறமொழி மனிதர்கள் வெளிச்சம் பெறுவதற்கு நம்மால் செய்யமுடியாததை அவர்கள் மூலம் செய்ய அவர்களைத் தகுதிப்படுத்தவும் அவர்களை நம் கரங்களில் தள்ளியுள்ளார். 4 TamChS 261.3
அயல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இக்காலத்திற்கானசத்தியத் தைக் கேள்விப்படுகிற வாய்ப்பைப் பெறவேண்டும்; தேவனுடைய சிங்காசனத்திலிருந்து நேரடியாக வீசுகிற ஒப்பற்ற வெளிச்சத்தை அவர்கள் பெறவேண்டும்; வெளிச்சத்தைப் பெற்றவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச்சென்று ஊழியம் செய்யத்தகுதிப்படுத்துகிற ஆயத்தத்தைப் பெறவேண்டும்; அவர்களில் அநேகர் தேவனு டைய வழிநடத்துதலினால் அதற்காகவே இங்கு இருக்கிறார்கள். 1 TamChS 261.4
நம் சொந்தத் தேசத்திலுள்ள அயல்நாட்டினருக்காக மெய்மனதோடு முயற்சி மேற்கொண்டால், அப்பாலுள்ள பகுதிகளில் தேவ திட்டத்திற்காக அதிக நன்மைகள் உண்டாகும். இவர்கள் மத்தியிலிருக்கும் சில ஆண்களும் பெண்களும், தாங்கள் சத்தியத்தை ஏற்றுக் கொண்டதுமே, தங்கள் நாட்டிலும் பிறநாடுகளிலும் ஊழியம் செய்வதற்கான தகுதியைப் பெறுவார்கள். தங்கள் நண்பர்களை சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்யலாம் என்கிற நம்பிக்கையோடு அநேகர் தாங்கள் எங்கிருந்து வந்தார்களோ, அந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வார்கள். அங்கே அவர்கள் தங்களுடைய உறவினர்களையும் அயலகத்தாரையும் தேடிச்சென்று, மூன்றாம் தூதனுடைய தூதை அவர்கள் அறிந்து கொள்ளும்படிச் செய்வார்கள். 2 TamChS 262.1