கிறிஸ்தவச் சேவை

197/289

நோக்கம்

ஒன்றாகக்கூடிவருவதின் நோக்கம் என்ன? நமக்குதெரிந்ததை எல்லாம் ஜெபத்தின்மூலம் தேவனுக்குத் தெரியப்படுத்தி, அவருக்குத் தகவல் சொல்லவா? நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு, ஒவ்வொருவரின் எதிர்பார்ப்புகளையும் இலட்சியங்களையும் அறிவதன்மூலம் பெலமும் வெளிச்சமும் பெற்று ஒருவரை ஒருவர் வளப்படுத்திக் கொள்வதற்காகவே கூடிவருகிறோம். விசுவாசத்தோடு உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஊக்கமாக ஜெபிப்பதால், நம் பெலத்தின் ஆதாரமான வரிடமிருந்து புத்துணர்வும் அதிக ஆற்றலும் பெறுகிறோம். 1 TamChS 254.3

நாம் முகாம் கூட்டங்கள் நடத்துவதற்கு இன்னொரு நோக்கமும் உண்டு. நம் மக்கள் மத்தியில் ஆவிக்குரிய வாழ்வை ஊக்குவிப்பதற்காகவும் நடத்துகிறோம். மிகவும் பரிசுத்தமான ஒரு பணியை தேவன் நம் கையில் ஒப்படைத்திருக்கிறார், இந்த ஊழியத்தைச் செய்ய நாம் தகுதியடையும்படிக்கு அறிவடைய நாம் கூடிவர வேண்டும். பூமியில் தேவநோக்கத்தை நிறைவேற்றுவதிலும், தேவனுடைய பரிசுத்தபிரமாணத்தை நிலைநாட்டுவதிலும், ‘உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக’ இரட்சகரை உயர்த்திக்காட்டுவதிலும் எத்தகைய பங்காற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். யோவான் 1:29. குடும்பத்தில் நாம் செய்யவேண்டிய ஊழியம்பற்றிப் புரிந்துகொள்ள, நாம் ஒன்று கூடி, தெய்வீக தொடுதலைப் பெறவேண்டும். 2 TamChS 255.1

ஒழுங்காக நடத்தப்படுகிற முகாம் கூட்டம் ஒரு பள்ளிக்கூட மாகும்; எஜமானுக்காக மிகவும் பூரணமான ஓர் ஊழியத்தைச் செய்ய அங்கே போதகர்களும் மூப்பர்களும் உதவியாளர்களும் பாடம் கற்றுக்கொள்ளலாம். வாலிபரும் முதியவரும் உட்பட சபை அங்கத்தினர்கள் ஆண்டவருடைய வழியை முற்றிலுமாகக்கற்றுக் கொள்ளும்படி வாய்ப்பளிக்கப்படும் ஒரு பள்ளிக்கூடமாக அது இருக்கவேண்டும். விசுவாசிகள் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு உதவுகிற கல்வியைப் பெறுகிற இடமாக இருக்கவேண்டும். 3 TamChS 255.2

கடந்த ஆண்டுகளில், நம் முகாம் கூட்டங்கள் மூலமாக, தேவனுடைய ஊழியர்கள் மூன்றாம் தூதனுடைய தூதில் உள்ள இரட்சிப்புக்கேதுவான சத்தியங்களை தங்கள் நண்பர்களுக்கும் தங்களுக்கு அறிமுகமானவர்களுக்கும் அறிவிப்பதற்கு கிடைத்த மிக அருமையான வாய்ப்புகளை மேம்படுத்தியுள்ளார்கள். தாங்கள் வாழ்கிற பகுதிகளில் சுய ஆதரவு நற்செய்தி ஊழியர்களாக எவ்வாறு ஊழி யம் செய்யவேண்டுமென அநேகர் போதனையைப் பெற்றுள்ளார்கள். இந்த வருடாந்தரக் கூட்டங்களில் கலந்துகொண்டு, வீடு திரும்பினோர், முன்பைவிட அதிக வைராக்கியத்தோடும் புத்திசாலித்தனத்தோடும் ஊழியம் செய்யவேண்டுமெனத் தீர்மானித்திருக்கிறார்கள்.வழக்கமாக கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டதைவிட, திருச்சபையின் அங்கத்தினர்களுக்கு நம் முகாம் கூட்டங்கள் மூலம் இந்த நடைமுறை ரீதியான போதனை அதிகம் வழங்கப்படுவதை தேவன் விரும்புகிறார். தனிநபர் நற்செய்தி ஊழியத்தை நடைமுறை ரீதியாகச் செய்வவதற்கான அறிவை அனைவரும் பெறவேண்டும் என்பதே நம் வருடாந்தரக் கூட்டங்களுடைய நோக்கங்களில் ஒன்று; இதை பொது ஊழியர்களும் ஒவ்வொரு கான்ஃபரன்ஸிலும் உள்ள சகோதர சகோதரிகளும் நினைவில் வைத்திருக்க வேண்டும். 1 TamChS 255.3

நம்முடைய கான்ஃபரன்ஸுகள் சிலவற்றில் இந்த நடைமுறை போதனை முறைகளை அறிமுகப்படுத்த தலைவர்கள் தயங்கினார்கள். பாடம் நடத்துவதைவிட பிரசங்கம் செய்வதே சிலரின் இயல்பாக இருந்தது. ஆனால், விசுவாசிகள் தாங்கள் வாழக்கூடிய இடத்தில் நற்செய்தி ஊழியத்தை நடைமுறை ரீதியாகச் செய்வது குறித்த போதனையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் நம் முகாம் கூட்டங்கள் போன்ற தருணங்களில் இருப்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது. 2 TamChS 256.1