கிறிஸ்தவச் சேவை

186/289

நடுவைசெய்ய ஞானமிக்க தோட்டக்கலைஞர்கள் தேவை

நெடுஞ்சாலைகளுக்கும் எல்லைகளுக்கும் செல்கிறபணியாளர்களை ஆயத்தம் செய்யுங்கள். வெவ்வெறு இடங்களில் மரங்களை நட்டு, அவை வளரும்படிச் செய்கிற ஞானமிக்க தோட்டக் கலைஞர்கள் நமக்குத் தேவை. தூரமான பகுதிகளுக்கும் செல்ல வேண்டியது தேவ மக்களுடைய கடமை. புதிதாக நிலங்களைப் பண்படுத்தவும், வாய்ப்பு காணப்படும் இடங்களில் புதிதாக செல்வாக்கு மையங்களை ஏற்படுத்தவும் ஊழியப்படையை அனுப்ப வேண்டும். மெய்யான ஊழியப்பணி ஆவியுள்ளவர்களை அணியணியாக அனுப்புங்கள்; தொலைவிலும் சமீபத்திலும் சென்று ஒளி யையும் அறிவையும் வழங்கும்படிக்கு அவர்கள் புறப்பட்டுச் செல்லட்டும். 4 TamChS 241.3

மற்றவர்களோடு ஒப்பிடும்போது, பெரிய திருச்சபைகளின் அங்கத்தினர்கள் பலர் எதுவுமே செய்வதில்லை. ஒரே இடத்தில் குவிவதற்குப் பதிலாக, சத்தியம் சென்றிராத இடங்களுக்கெல்லாம் அவர்கள் பரவிச்சென்றால், மிகமேலான பணியைச் செய்துமுடிக்கலாம். நெருக்கமாக நடப்படுகிற மரங்கள் செழித்து வளராது. அவை வாடி வதங்கிப்போகாமல், வளருவதற்கு போதுமான இடைவெளி விட்டு தோட்டக்காரன் அவற்றை நடுகிறான். நம் பெரிய திருச்சபைகளும் இதேபாணியைக் கடைபிடித்தால் நன்மை உண்டாகும். இத்தகைய பணி நடைபெறாததால்தான் அங்கத்தினர்கள் அநேகர் ஆவிக்குரிய ரீதியாக மரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாடி, பயனற்றுப் போகிறார்கள். அவர்களைப் பிடுங்கி வேறு இடத்தில் நட்டால், வளருவதற்குப் போதுமான இடம் கிடைக்கும்; மிகவும் பெலப்படுவார்கள். 1 TamChS 241.4