கிறிஸ்தவச் சேவை
நீ இங்கு என்ன செய்கிறாய்?
உண்மையும் உத்தமுமானவர்களின் அயராத சேவையைச் சார்ந்து நடப்பவை ஏராளம். எனவேதான், கீழ்ப்படிவோர்மூலமாக நிறைவேற வேண்டிய தேவநோக்கத்தைத் தகர்த்துப்போட தன்னால் இயன்ற எல்லா வழிகளிலும் சாத்தான் முயன்று வருகிறான்; தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பரிசுத்தமான உன்னத நோக்கத்தைக் காணமுடியாதவர்களாய்ச் சிலரை மாற்றி, இவ்வாழ்வின் சிற்றின்பங்களினால் திருப்தியடையச் செய்கிறான். இலகுவான வாழ்வைத் தேடி அவர்களை ஓடவைக்கிறான்; அல்லது, நன்மை செய்யக்கூடிய இடத்திலிருந்து, உலக ஆதாயத்தை நாடி ஓடச்செய் கிறான். வேறு சிலருக்கு உபத்திரவம் அல்லது எதிர்ப்பைத் தந்து, அதைரியப்படுத்தி, தங்கள் கடமையை விட்டு ஓடச்செய்கிறான். அப்படிப்பட்ட அனைவரையும் உருக்கமான இரக்கத்தோடே பரலோகம் உற்றுநோக்குகிறது. பேசவிடாமல் ஆத்துமாக்களின் எதிரி தடுத்துள்ள ஒவ்வொரு தேவபிள்ளையிடமும், ‘ இங்கே உனக்கு என்ன காரியம்?’ என்கிற கேள்வியை தேவன் கேட்கிறார். ‘உலகம்முழுவதற்கும் சென்று, சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, கர்த்தரின் நாளுக்காக மக்களை ஆயத்தப்படுத்துமாறு நான் உனக்குக் கட்டளையிட்டேன். நீ இங்கு என்ன செய்கிறாய்? இங்கு உன்னை அனுப்பியது யார்?”என்று தேவன் கேட்கிறார். 1 TamChS 239.1
‘இங்கே உங்களுக்கு என்ன காரியம்?’ என்கிற இதே கேள்வி குடும்பங்களிடமும் தனிப்பட்ட நபர்களிடமும் கேட்கப்படுகிறது. தேவவார்த்தையின் சத்தியங்களை நன்கு அறிந்த குடும்பங்கள் இன்று பல சபைகளில் உண்டு. அவர்கள் என்ன ஊழியம் செய்ய முடியுமோ, அந்த ஊழியம் தேவைப்படும் இடங்களுக்கு அவர்கள் குடிபெயரும்போது, தங்கள் செல்வாக்கின் எல்லையை விஸ்தாரமாக்கலாம். 2 TamChS 240.1