கிறிஸ்தவச் சேவை

172/289

ஊழியப்பணிக்கான தைரியம் மேலான வல்லமையால் கிடைத்தது

நெகேமியாவும் அர்தசஷ்டாவும் நேருக்குநேர் சந்தித்தார்கள். ஒருவன் கடைநிலை வேலைக்காரன்; அடுத்தவர், உலகின் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தின் பேரரசர். அந்தஸ்தில் பார்த்தால் இருவருக்கும் ஏணிவைத்தாலும் எட்டாது. ஆனால் அதைவிட ஒழுக்கத்தில் இருவரும் இருவேறு நிலைகளில் இருந்தார்கள். அவன் என் பெலனைப்பற்றிக்கொண்டு என்னோடே ஒப்புரவாகட்டும்; அவன் என்னோடே ஒப்புரவாவான்” என்று ராஜாதி ராஜா கொடுத்த அழைப்புக்கு நெகேமியா இணங்கியிருந்தான். தன் வேண்டுதலை தேவன் நிறைவேற்ற வேண்டுமென்று பரலோகத்தை நோக்கி மனதிற்குள் வேண்டுதல் செய்ததுபோல, பல வாரங்களாகச் செய்துவந்திருந்தான். இப்போது சர்வ ஞானமும் சர்வவல்லமையும் படைத்த நண்பர் ஒருவர் தன் பட்சத்தில கிரியை செய்ய தனக்கு இருக்கிறார் என்கிற எண்ணத்தால் தைரியமடைந்து, தன்னுடைய அரசவைப்பணியிலிருந்து விடுபட சிலகாலம் தன்னை அனுமதிக்க வேண்டுமென்றும், எருசலேமின் பாழான இடங்களை எடுத்துக் கட்டி, மீண்டும் அதை வலுவானதும் பாதுகாப்பானதுமான நகரமாக மாற்ற தனக்கு அதிகாரம் வழங்குமாறு ராஜாவிடம் தன் ஆசையைத் தெரிவித்தான். அந்த வேண்டுகோளைச் சார்ந்துதான் யூத நகரத்திற்கும் தேசத்திற்குமான நன்மை இருந்தது. “என் தேவனுடைய தயவுள்ளகரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்” என்று நெகேமியா சொல்கிறான். 1 TamChS 225.3