கிறிஸ்தவச் சேவை

168/289

உள்நாட்டு ஊழியப்பணியா, அயல் நாட்டு ஊழியப்பணியா?

அயல்நாட்டு ஊழியப்பணிகளின் வெற்றிக்காக தாராளமனதோடும் சுயமறுப்போடும் சுயதியாகத்தோடும் செயல்பட்டிருந்தால், உள்நாட்டு ஊழியப்பணி எல்லாவிதத்திலும் வளர்ச்சியடைந்திருக்கும். ஏனென்றால், தேவனுக்காக அயல்நாடுகளில் செய்யப்படும் சுவிசேஷப்பணியின் தாக்கம்தான் பெரும்பாலும் உள்நாட்டு ஊழியப்பணியின் வெற்றியில் பிரதிபலிக்கிறது. தேவநோக்கத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்ய மும்முரமாகச் செயல்படும்போது சகல வல்லமையின் ஆதரமானவரோடு நம் மனதைத் தொடர்பு கொள்ளவைக்கிறோம். 4 TamChS 223.3

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் தீவிர கிறிஸ்தவர். இருபத்து நான்கு மணிநேரமும் கிறிஸ்துவுக்காகவேதான் ஊழியம் செய்ததாகதன் சகவேலையாள் ஒருவரிடம் இவ்வாறு சொன்னார்: “என் தொழில் நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் என் எஜமானைப் பிரதிபலிக்க முயல்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது, அவருக்காக மக்களை ஆதாயப்படுத்த முயல்கிறேன். நாள் முழுவதும் கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்கிறேன். இரவில் நான் தூங்கும் போது, சீனாவில் அவருக்காக ஊழியம் செய்கிற ஒருவர் என்னிடம் இருக்கிறார்” என்று சொன்னார். பிறகு அதுகுறித்து விளக்கின போது, ‘நான் வாலிபனாக இருந்தபோது, அஞ்ஞானிகளின் மத்தியில் நற்செய்தி ஊழியம் செய்ய தீர்மானமாக இருந்தேன். ஆனால், என் அப்பா மரித்துவிட்டதால், என் குடும்பத்தினரைக் கவனிப்பதற்காக அவருடைய தொழிலைச் செய்யவேண்டியதாயிற்று. நானே செல்வதற்குப் பதிலாக, இப்போது ஒரு நற்செய்தியாளருக்கு உதவி செய்து வருகிறேன். சீனாவிலுள்ள ஒரு குறிப்பிட்ட மாகாணத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட நகரத்தில் என்னுடைய பணியாளர் தங்கியிருக்கிறார். நான் தூங்கும்போதும் கூட, என்னுடைய பிரதிநிதிமூலமாக கிறிஸ்துவுக்காக நான் ஊழியம் செய்கிறேன்” என்று சொன்னார். TamChS 223.4

இதேபோல ஊழியம் செய்கிற செவந்த்டே அட்வென்டிஸ்டுகள் இல்லையா? ஏற்கனவே சத்தியத்தை அறிந்த திருச்சபைகளில் ஊழியர்களை ஊழியம் செய்ய வைப்பதற்குப் பதிலாக, திருச்சபையின் அங்கத்தினர்கள் அந்த ஊழியர்களைப் பார்த்து பின்வருமாறு சொல்லவேண்டும்: ‘இருளில் அழிந்துகொண்டிருக்கும் ஆத்துமாக்களுக்கு ஊழியம் செய்யச் செல்லுங்கள். திருச்சபையின் ஆராதனைகளை நாங்களே நடத்திக்கொள்ளுவோம். கூட்டங்களை நடத்துவோம். கிறிஸ்துவுக்குள் தரிந்திருந்து, ஆவிக்குரிய வாழ்வைக்காத்துக்கொள்வோம். எங்களைச் சுற்றிலுமுள்ள ஆத்துமாக்களுக்காக ஊழியம் செய்வோம். அதிக தேவையுள்ள, யாருமற்ற களங்களில் ஊழியம் செய்பவர்களை எங்களுடைய ஜெபங்களாலும் காணிக்கைகளாலும் தாங்குவோம்” என்று சொல்லவேண்டும். 1 TamChS 224.1