கிறிஸ்தவச் சேவை
வெற்றிகரமான ஒரு திட்டம்
அவிசுவாசிகளை ஆதாயப்படுத்துவதற்கான புதிய திட்டங்களில் ஒன்றுதான் சேர்ப்பின் பண்டிகை நடத்துவதாகும். கடந்த சில வருடங்களாக அநேக இடங்களில் இது வெற்றிகரமான திட்டமாக அமைந்துள்ளது; அநேகருக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்துள் ளது; ஊழியப் பணி நிதிக்கு அதிக வழிமுறைகளைத் திறந்துள்ளது. அஞ்ஞான தேசங்களில் மூன்றாம் தூதனுடைய தூது பரவி வருவது பற்றி இங்குள்ள நம் விசுவாசத்தைச் சேராதவர்களுக்கு நன்றாகப் புரிய வைக்கும்போது, அவர்களும் மனதில் தூண்டப்படுவார்கள்; வாழ்க்கையையும் இருதயங்களையும் மாற்ற அத்தகைய வல்லமை படைத்த சத்தியத்தை அதிகம் அறிந்துகொள்ள சிலர் முயன்றும் இருக்கிறார்கள். சகல வகுப்பினரிலும் ஆண்களும் பெண்களும் ஆதாயமடைந்திருக்கிறார்கள்; தேவ நாமம் மகிமைப்பட்டுள்ளது. 1 TamChS 219.2
அவிசுவாசிகளிடமிருந்து காணிக்கை வாங்குவது தகுதியாக இருக்குமா என்று சிலர் கேள்வி எழப்பலாம். அவர்கள் தங்களிடம் இவ்வாறு கேட்டுப்பார்க்கவேண்டும்: “நம் உலகின் உண்மையான எஜமான்யார்? அதன் வீடுகளும் நிலங்களும், பொன்னும் வெள்ளியுமான பொக்கிஷங்களும் யாருக்குச் சொந்தமானவை? நம் உலகத்தின் நிறைவு தேவனுடையது; கீழ்ப்படிகிறவர்கள், கீழ்ப்படியாதவர்கள் என அனைவருடைய கரங்களிலும் தம் உடைமைகளை தேவன் ஒப்படைத்திருக்கிறார். தம் ஊழியத்தை ஆதரிப்பதற்காக உலகமனிதர்களும் விக்கிரகாரதனைக்காரரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து கொடுக்கும்படிக்கு அவர்கள் இருதயங்களை அசைக்க தேவன் ஆயத்தமாக இருக்கிறார்; அவர்களை ஞானமாக அணுகவும், உதவுவது தங்கள் சிலாக்கியமென அவர்களைச் சிந்திக்க வைக்கவும் அவர்களுடைய மக்கள் பழகவேண்டும்; அப்போது தேவனும் இவ்வாறு செயல்படுவார். தேவபணிக்கான தேவைகளை வசதிகளும் செல்வாக்கும் படைத்தவர்களுக்குமுன் சரியான வெளிச்சத்தில் வைக்கும்போது, தற்காலச் சத்தியத்தின் நோக்கத்தைப் பரப்புவதற்கு இவர்கள் அதிகமாகச் செய்யமுடியும். உலகத்தோடு சேரக்கூடாதெனத் தீர்மானித்ததால், தாங்கள் பெற்றிருக்கக் கூடிய அநேக சிலாக்கியங்களை தேவமக்கள் இழந்திருக்கிறார்கள். 2 TamChS 220.1
அரசாளுகிறவர்கள் இருதயங்களிலும் அதிகாரிகளுடைய இருதயங்களிலும் தம் மக்களின்சார்பாக ஆண்டவர் இன்னும் பேசி வருகிறார். அவரது நோக்கம் நிறைவேறுவதற்காகக் கொடுக்கும் படி அவர் தூண்டுகிறவர்களிடமிருந்து அவருடைய ஊழியர்கள், உதவிபெறவேண்டும். இந்தக் காணிக்கைகள் மூலமாக இருளில் சிக்கிய தேசங்களில் சத்தியத்தின் ஒளி கிடைக்கும்படியான வழிகளைத் திறக்கலாம். இந்த மனிதர்கள் தேவனுடைய ஊழியத்தில் அக்கறையற்றவர்களாக இருக்கலாம்; கிறிஸ்துவில் விசுவாசமற்றவர்களாக இருக்கலாம்; அவருடைய வார்த்தையை அறியாதவர் களாக இருக்கலாம். ஆனால், இந்தக் காரணத்திற்காக அவர்கள் தரக்கூடிய காணிக்கைகளை நிராகரிக்கக்கூடாது. 1 TamChS 220.2
தேவன் தம் உடமைகளை விசுவாசிகளுடைய கரங்களிலும் கொடுத்திருக்கிறார்; அவிசுவாசிகளுடைய கரங்களிலும் கொடுத்திருக்கிறார். விழுந்துபோன உலகத்திற்காகச் செய்யப்படவேண்டிய வேலையைச் செய்வதற்கு அவருக்குரியதை அவரிடமே அனைவரும் கொடுக்கவேண்டும். நாம் இந்த உலகத்தில் இருக்கிற காலம் வரையிலும், தேவ ஆவியானவர் மனுபுத்திரரோடு போராடுகிற வரையிலும் உதவிகளைப் பெறவேண்டும்; பிறருக்கு உதவவேண்டும். வேதவாக்கியங்களில் வெளிப்படுத்தப்பட்டபடி சத்தியத்தின் வெளிச்சத்தை உலகத்திற்குக் கொடுக்கவேண்டும். தம்முடைய நோக்கத்திற்காகக் கொடுப்பதற்கு தேவனால் தூண்டப்படுகிற உலகத்தாரிடமிருந்து காணிக்கைகளை வாங்கிக்கொள்ளவேண்டும். 2 TamChS 221.1
இன்று ஒட்டுமொத்த உலகமும் துன்மார்க்கருடைய பிடியில் இருந்தாலும், உலகமனைத்தும் அதன் ஐசுவரியங்களும் பொக்கிஷங்களும் தேவனுக்கு சொந்தமானவை. ‘பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.’ ‘வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.’ ‘சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த்திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள். நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.’ சரியான நியதிகளைப் பெரிதாகப் போற்றினாலும் கூட, இந்த உலகத்தில் தேவனுடைய ராஜ்யம் பரவும்படிக்கு பரலோகம் அனுப்புகிற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவது தங்களுடைய சிலாக்கியமும் கடமையுமாக இருக்கிறது என்பதை கிறிஸ்தவர்கள் உணர்ந்தால், இன்னும் முழுமையாக உணர்ந்தால் ஓ, எவ்வளவு நன்றாக இருக்கும்! 3 TamChS 221.2