கிறிஸ்தவச் சேவை

158/289

குருடான கண்களுடன் அநேகர்

ஞாயிறு கட்டாயச்சட்ட இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் அநேகர் இச்செயலால் உண்டாகிற விளைவுகளை அறியாத குருடர்களாக இருப்பார்கள். மதச்சுதந்திரத்தை தாங்கள் நேரடியாகத் தாக்குவதை அவர்கள் அறியமாட்டார்கள். வேதாகம ஓய்வு நாளின் அதிகாரத்தையும், ஞாயிறு ஆசரிப்பின் பொய்யான அஸ்திவாரத்தையும் அறிந்திராத அநேகர் இருக்கிறார்கள். 3 TamChS 212.2