கிறிஸ்தவச் சேவை
இலவச விநியோகத்திற்கான வாய்ப்புகள்
புத்தகப்படைப்புகளை இரயில்களிலும், தெருவிலும், கடலில் செல்லும் மாபெரும் கப்பல்களிலும், அஞ்சல் மூலமாகவும் சாதுரியமாக விநியோகிக்கவேண்டும். 2 TamChS 198.2
பயண வசதிகள் நிறைந்த இந்நாட்களில், ஆண்களும் பெண்களும் எல்லா வகுப்பைச் சேர்ந்தவர்களோடும், பல தேசத்தாரோடும் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு இஸ்ரவேலருடைய நாட்களைவிட இப்போது மிகவும் அதிகரித்திருக்கிறது. பயண வழித்தடங்கள் ஆயிரம் மடங்கு பெருகியுள்ளன. தேவன் அற்புதமாக வழியை ஆயத்தம் பண்ணியிருக்கிறார். பன்மடங்கு வசதிகளையுடைய அச்சக நிறுவனங்களை எளிதில் நாம் அணுக முடிகிறது. இக்காலத்திற்கான சத்தியத்தை முன்வைக்கிற வேதாகமங்களும் வெளியீடுகளும் பல மொழிகளில் கிடைக்கின்றன; உலகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் உடனே அவற்றைக் கொண்டு செல்ல முடியும். 3 TamChS 198.3
கைப்பிரதிகளும் சிறுபுத்தகங்களும் தாள்களும் புத்தகங்களும் ஒவ்வொரு திசைக்கும் கொண்டுசெல்லப்படுகின்றன. தேர்ந்தெடுக் கப்பட்டதுண்டுபிரதிகளை நீங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் கொண்டுசெல்லுங்கள்; வாய்ப்பு கிடைக்கும்போது அவற்றை நீங்கள் கொடுக்கலாம். உங்களால் முடிந்ததை விற்கலாம். தேவைப்படும்போது கடனாகவோ இலவசமாகவோ கொடுக்கலாம். அதனால் முக்கிய விளைவுகள் உண்டாகும். 1 TamChS 198.4
சிறிய வெளியீடுகளை இலவசமாக விநியோகிக்க வேண்டிய நம் கடமையை நாம் செய்யவில்லையென எனக்குக் காட்டப்பட் டது. உண்மையுள்ள அநேக ஆத்துமாக்கள் இந்த வழிவகைகளால் மட்டுமே சத்தியத்தை அறிந்துகொள்ள வாய்ப்புள்ளது. நான்கு, எட்டு அல்லது பதினாறு பக்கங்களுள்ள இந்த குறும்புத்தகங்களை மிகக்குறைந்த விலையில், இந்த ஊழியநோக்கம் குறித்து இருதயத்தில் ஏவப்படுகிறவர்களின் நன்கொடையால் வழங்கலாம். உங்கள் நண்பருக்கு கடிதம் எழுதும்போது, அஞ்சல் செலவு இல்லாமலேயே இதுபோன்ற ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களை சேர்த்து அனுப்பலாம். கார்களிலும் படகிலும் மேடையிலும் கேட்பதற்கு வாஞ்சையுள்ள நபர்களை நீங்கள் சந்திக்கும்போது, அவர்களிடம் ஒரு கைப் பிரதியைக் கொடுக்கலாம். 2 TamChS 199.1