கிறிஸ்தவச் சேவை
12—வேதாகம நற்செய்தி ஊழியம்
பரலோகம் தந்த யோசனை
வேத ஆராய்ச்சி கூட்டங்கள் நடத்துவது பரலோகம் தந்த ஒரு யோசனை. நற்செய்தி ஊழியத்தின் இந்தப் பிரிவில் ஆண்கள், பெண்கள் என அநேகர் ஈடுபட முடியும். தேவனுக்கென வல்லமையான மனிதர்களாகமாறக்கூடிய ஊழியர்கள் இதன்மூலம் உருவாகுவார்கள். இந்த வழிமுறைகளால் வேதவசனம் ஆயிரக்கணக்கானோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது; சகலவித பாஷைக்காரரோடும் தேசத்தாரோடும் ஊழியர்கள் நேரடியாகத் தொடர்புகொள்ள வழி பிறந்துள்ளது. குடும்பங்களில் வேதாகமம் அறிவிக்கப்படுகிறது. அதன் பரிசுத்த சத்தியங்கள் மனச்சாட்சியில் உணர்த்தப்படுகின்றன. மக்கள் தாங்களே அதை வாசித்து, பரிசோதித்து, நியாயந்தீர்க்க வேண்டுகிறேன். அந்தத் தெய்வீக வெளிச்சத்தை ஏற்றுக்கொள்ள அல்லது புறக்கணிக்க அவர்களே பொறுப்பேற்கவேண்டும். தேவனுக்காகச் செய்யக்கூடிய இந்த விலைமதிப்பற்ற ஊழியத் திற்கேற்ற பலனை தேவன் கொடாமல் இருக்கமாட்டார். தம் நாமத்தினால் செய்யப்படுகிற தாழ்மையான ஒவ்வொரு முயற்சிக்கும் அவர் வெற்றிதருவார். 1 TamChS 185.1
நம் ஊழியம் என்னவென நம் பரலோகப் பிதா குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். நம் வேதாகமங்களை எடுத்துக்கொண்டு, உலகத்தை எச்சரிக்கச் செல்லவேண்டும். ஆத்துமாக்களின் இரட்சிப்பில் தேவனுடைய உதவிக்கரங்களாக நாம் இருக்கவேண்டும். அதாவது, அழிகிறவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஊற்றப்படுகிற அன்பின் வாய்க்கால்களாக இருக்கவேண்டும். 1 TamChS 186.1