கிறிஸ்தவச் சேவை

126/289

தேவனுடைய முன்மாதிரி

மாபெரும் மருத்துவ நற்செய்தி ஊழியரான கிறிஸ்துதான் நம் முன்மாதிரி. அவர் வியாதியஸ்தர்களைக் குணமாக்கி, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அவருடைய ஊழியத்தில் போதனையும் குண மாக்குதலும் இணைந்தே காணப்பட்டன. இன்றும் அவற்றைப் பிரித்துப் பார்க்கக்கூடாது. 5 TamChS 175.4

கிறிஸ்துவின் ஊழியர்கள் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றவேண்டும். அவர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் உபத்திர வப்பட்டோரைத்தேற்றினார்; வியாதியஸ்தரைக் குணப்படுத்தினார். அதன்பிறகு, தம்முடைய இராஜ்யத்திற்கடுத்த மேன்மையான சத்தியங்களை அவர்களுக்கு எடுத்துரைத்தார். அவரைப் பின்பற்றுகிறவர்கள் செய்யவேண்டிய பணியும் இதுதான். 6 TamChS 175.5

தங்களை கிறிஸ்துவின் பிள்ளைகளெனச் சொல்லிக்கொள் வோர் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றவேண்டும். உங்கள் சகமனிதர்களின் சரீரத்தேவைகளைச் சந்தியுங்கள். அவர்கள் நன்றியுணர்வு காட்டுவது தடைகளை உடைக்கும். அவர்களுடைய இருதயங்களில் இடம்பிடிக்க உங்களுக்கு வழிகொடுக்கும். இந்த விஷயம்பற்றி ஊக்கமாகச் சிந்தியுங்கள். 1 TamChS 175.6

குறிப்பாக மருத்துவ நற்செய்தி ஊழியர்கள், தங்களுடைய மருத்துவ நற்செய்தி ஊழியத்தில் தெய்வீக முன்மாதிரியாம் கிறிஸ்து இயேசுவையே தங்கள் ஆவியிலும் வார்த்தையிலும் குணத்திலும் பின்பற்றவேண்டும். 2 TamChS 176.1