கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

73/73

73 - தாவீதின் இறுதி வருடங்கள்

அப்சலோமை கவிழ்த்தது உடனடியாக இராஜ்யத்திற்கு சமாதானத்தைக் கொண்டுவரவில்லை. தேசத்தின் பெரிய பகுதி கலகத்தில் இணைந்திருந்ததால் கோத்திரங்களிலிருந்து ஒரு வரவேற்பு இல்லாதபோது தாவீது தன் தலைநகருக்குச் சென்று தன் அதிகாரத்தை திரும்ப எடுக்க மாட்டான். அப்சலோமின் தோல்வியை தொடர்ந்த குழப்பத்தில் இராஜாவை திரும்ப அழைப்பிக்க எந்த முயற்சியும் தீர்மானமான செயலும் இல்லாதிருந்தது. கடைசியாக தாவீதைத் திரும்பக் கொண்டுவர யூதா முயற்சி எடுத்தபோது மற்ற கோத்திரங்களின் பொறாமை எழுப்பப்பட, எதிர்புரட்சி எழுந்தது. எனினும் இது விரைவாக அடக்கப்பட்டு இஸ்ரவேலுக்கு சமாதானம் திரும்பியது. PPTam 981.1

மனிதருக்கு நடுவே மிக ஊக்கமாக வாஞ்சிக்கப்படுகிற வல்லமை ஐசுவரியம் மற்றும் உலக கனத்தினால், ஆத்துமாவை அழிவிற்குட்படுத்தும் ஆபத்துக்களைக்குறித்த மிகவும் உணர்த்துகிற சாட்சிகளில் ஒன்றை தாவீதின் சரித்திரம் கொடுக்கிறது. இப்படிப்பட்ட சோதனையை சகிக்கத்தங்களை ஆயத்தப்படுத்தும் அனுபவத்தை சிலரே கடந்து வந்திருக்கிறார்கள். தாவீதின் ஆரம்ப வாழ்க்கையில் ஒரு மேய்ப்பனாக அவன் கற்ற தாழ்மையின் பாடங்களும், பொறுமையான உழைப்பும், மந்தைகளின் மேல் வைத்த இளகிய கவனமும், மலையின் தனிமைகளில் இயற்கையோடு கொண்டிருந்த தொடர்பும், இசையிலும் கவிதையிலும் வளர்த்திருந்த அறிவும், நினைவுகளை சிருஷ்டிகரிடம் திருப்பியிருந்ததும், கூடவே, தைரியத்தையும் மனோபலத்தையும் பொறுமையையும் தேவன்மேல் விசுவாசத்தையும் செயல்பாட்டிற்கு அழைத்திருந்தவனாந்தர வாழ்க்கையின் நீண்ட ஒழுங்கும் இஸ்ரவேலின் சிங்காசனத்திற்கு அவனை ஆயத்தப்படுத்த ஆண்டவரால் நியமிக்கப்பட்டிருந்தன. தேவனுடைய அன்பின் விலையுயர்ந்த அனுபவங்களை அவன் அனுபவித்திருந்து, அவருடைய ஆவியை மிகவும் அதிகமாகப் பெற்றிருந்தான். வெறும் மனித ஞானத்தின் ஒட்டுமொத்த மதிப்பின்மையை சவுலின் சரித்திரத்தில் அவன் கண்டிருந்தான். அப்படியிருந்தும் உலக வெற்றியும் கனமும் தாவீதின் குணத்தை வெகுவாக பலவீனப்படுத்தியிருந்தது. அவன் அடுத்தடுத்து சே பாதனைக்காரனால் மேற்கொள்ளப்பட்டான். PPTam 981.2

புறஜாதிமக்களோடு கொண்டிருந்த உறவு அவர்களுடைய தேச வழக்கங்களைப் பின்பற்றும் ஆசைக்கு அவனை நடத்தி, உலக மேன்மையின் மேல் ஒரு பேராசையைத் தூண்டியது. யெகோவாவின் மக்களாக இஸ்ரவேல் கனப்படுத்தப்பட வேண்டும். ஆனால் பெருமையும் சுயநம்பிக்கையும் அதிகமான போது யெகோவாவின் மக்கள் என்ற ஒப்புயர்வற்ற இந்த நிலையில் அவர்கள் திருப்தியடையவில்லை. மற்ற தேசங்களுக்கு நடுவே தங்கள் நிலையைக் குறித்து அவர்கள் கவனம் செலுத்தினர். இந்த ஆவி சோதனையை வரவேற்பதில் தோல்வியடையாது. தன்னுடைய வெற்றிகளை வெளிதேசங்களுக்கு விரிவுபடுத்தும் கண்ணோட்டத்தில், தகுதியான வயதுடைய அனைவரிடமிருந்தும் இராணுவ சேவையை கோரி தன் படையை பலப்படுத்த தாவீது தீர்மானித்தான். இதை நடப்பிக்க ஜனத்தைத் தொகையிடுவது அவசியமாயிற்று. இராஜாவின் இந்தச் செயலை தூண்டியது பெருமையும் பேராசையுமே . ஜனத்தைத் தொகையிடுவது தாவீது அரியணைக்கு ஏறின் போது இருந்த இராஜ்யத்தின் பெலவீனத்திற்கும், அவனுடைய ஆட்சியின் கீழ் பெற்ற பெலம் மற்றும் செழிப்பிற்கும் இடையே இருக்கிற வேறுபாட்டைக் காண்பிக்கும். அது ஏற்கனவே மிகப் பெரியதாக இருந்த இராஜா மற்றும் மக்களின் சுயநம்பிக்கையை வளர்க்கும். சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது என்று வேதவாக்கியம் சொல்லுகிறது. தாவீதின் கீழ் இருந்த இஸ்ரவேலின் செழிப்பு, அதன் இராஜாவினுடைய திறமையையோ அல்லது அதன் படைகளின் பலத்தையோ சார்ந்து அல்ல; தேவனுடைய ஆசீர்வாதத்தினால் உண்டாயிருந்தது. இராணுவ ஆதாரங்களை உயர்த்துவது இஸ்ரவேலின் நம்பிக்கை யெகோவாவின் வல்லமையிலல்ல, அவளுடைய படைகளில் இருக்கிறது என்கிற எண்ணப்பதிப்பை சுற்றியிருக்கிற தேசங்களுக்குக் கொடுக்கும். PPTam 982.1

மக்கள் தங்கள் தேசமேன்மையைக் குறித்துப் பெருமையாக இருந்தபோதும், இராணுவ சேவையை மிக அதிகம் விரிவாக்கும் தாவீதின் திட்டத்தை விருப்பத்தோடு பார்க்கவில்லை. கொடுக்கப்பட்ட வேலை அதிக அதிருப்தியை உண்டாக்கியது. விளைவாக முன்னதாக மக்கள் தொகையை கணக்கிட்ட ஆசாரியர்கள் மற்றும் நியாயாதிபதிகளின் இடத்தில் இராணுவ அதிகாரிகளை அமர்த்துவது அவசியம் என்று எண்ணப்பட்டது. இந்த செய்கையின் நோக்கம் இறையாண்மையின் கொள்கைகளுக்கு நேரெதிராக இருந்தது. இதுவரையிலும் தன்னை நேர்மையற்றவனாக காண்பித்திருந்த யோவாபும் கூட இதை ஆட்சேபித்தான். அவன் : கர்த்தருடைய ஜனங்கள் இப்போது இருக்கிறதைப் பார்க்கிலும் நூறத்தனையாய் அவர் வர்த்திக்கப்பண்ணுவாராக. ஆனாலும் ராஜாவாகிய என் ஆண்டவனே, அவர்களெல்லாரும் என் ஆண்டவனின் சேவகரல்லவா? என் ஆண்டவன் இதை விச் ாரிப்பானேன்? இஸ்ரவேலின் மேல் குற்ற முண்டாக இது நடக்கவேண்டியது என்ன என்றான். யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலிட்டபடியினால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து, எருசலேமுக்கு வந்தான். தாவீது அவனுடைய பாவத்தைக்குறித்து உணர்த்தப்பட்ட போது இந்த எண்ணப்படுதல் முடிவடைந்திருக்கவில்லை. சுய நிந்தனைக்குட்பட்டவனாக அவன் நான் இந்தக் காரியத்தைச் செய்ததினால் மிகவும் பாவஞ் செய்தேன், இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும், வெகு புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான். அடுத்த நாள் காலையில் காத்தீர்க்கதரிசியால் ஒரு செய்தி தாவீதிற்கு கொண்டுவரப்பட்டது. தீர்க்கதரிசி. மூன்று வருஷத்துப் பஞ்சமோ? அல்லது உன் பகைஞரின் பட்டயம் உன்னைப் பின்தொடர் நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும் மூன்று மாதச் சங்காரமோ? அல்லது மூன்று நாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும் படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று கர்த்தர் உரைக்கிறார். இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு உத்தரவு கொண்டு போகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்று கூறினான். PPTam 983.1

இராஜா : கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்போது நான் கர்த்தருடைய கையிலே விழுவேனாக, அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்று பதிலளித்தான். PPTam 984.1

தேசத்தில் கொள்ளை நோய் வந்தது . இஸ்ரவேலில் எழுபதினாயிரம் பேர் இறந்து போனார்கள். தலைநகருக்கு இன்னமும் வரவில்லை . தாவீது தன் கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள். இராஜா இஸ்ரவேலுக்காக தேவனிடம் மன்றாடினான். ஜனத்தை எண்ணச் சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவஞ் செய்தேன், பொல்லாப்பு நடப்பித்தேன், இந்த ஆடுகள் என்ன செய்தது? என் தேவனாகிய கர்த்தாவே, வாதிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய ஜனத்திற்கு விரோதமாயிராமல், எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாயிருப்பதாக என்றான். PPTam 984.2

ஜனத்தைத் தொகையிட்டது மக்கள் மத்தியில் ஒரு பிரியமின்மையை உண்டாக்கியிருந்தது. எனினும் தாவீதின் செயலை தூண்டியிருந்த அதே பாவங்களில் அவர்களும் மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்சலோமுடைய பாவத்தினால் தாவீதின் மேல் தண்டனையை அனுப்பின் ஆண்டவர் அவ்விதமே தாவீதின் தவறினால் இஸ்ரவேலின் பாவங்களைத் தண்டித்தார். PPTam 984.3

சங்கரிக்கும் தூதன் தன் வேலையை எருசலேமிற்கு வெளியே நிறுத்தினான். அவன் மோரியா மலையின் மேல் எபூசியனாகிய ஓர்னானின் களத்திலே நின்றான். தீர்க்கதரிசியால் நடத்தப்பட்டவனாக தாவீது மலைக்குச் சென்று அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான், அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின் மேல் இறங்கின அக்கினியினால் அவனுக்கு மறு உத்தரவு கொடுத்ததுமல்லாமல் .... அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்; இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது. PPTam 984.4

அன்றிலிருந்து என்றைக்கும் பரிசுத்த நிலமாக கருதப்படவேண்டிய பலிபீடம் எழுப்பப்பட்ட நிலம், ஓர்னானால் இராஜாவிற்கு பரிசாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் இராஜா அதை அவ்விதம் பெற்றுக்கொள்ள மறுத்தான். நான் உன்னுடையதை இலவசமாய் வாங்கி, கர்த்தருக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதைப் பெறும் விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஓர்னானுக்குக் கொடுத்தான். ஆபிரகாம் தன் குமாரனை பலிகொடுக்க பலிபீடத்தைக் கட்டின இடமாக நினைவுகூரப்பட்டு மாபெரும் விடுதலையினால் பரிசுத்தப்படுத்தப்பட்ட இந்த இடம், பின்னதாக சாலமோனால் எழுப்பப்பட்ட ஆலயத்தின் இடமாக தெரிந்து கொள்ளப்பட்டது. PPTam 985.1

தாவீதின் கடைசி வருடங்களின் மேல் மற்றொரு நிழல் இன்னமும் வரவேண்டியிருந்தது. அவன் எழுபது வயதை அடைந்திருந்தான். ஆதிகால அலைச்சலின் கடினங்களும் வெளிப்பாடுகளும், அநேகயுத்தங்களும், பின்வந்தவருடங்களின் கவலைகளும் துன்பங்களும் ஜீவனின் ஊற்றை உறிஞ்சியிருந்தது. அவனுடைய மனது தெளிவாகவும் பலமாகவும் இருந்தபோதும், பலவீனமும் வயோதிகமும், தனிமையின் மேலிருந்த ஆசையும் இராஜ்யத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறித்த அறிவைத் தடுத்தது. மீண்டும் சிங்காசனத்தின் நிழலிலேதானே மற்றொரு கலகம் துளிர்த்தது. மீண்டும் தாவீதின் தகப்பன் என்னும் திளைப்பின் கனி வெளிப்பட்டது. இப்போது சிங்காசனத்தின் மேல் ஆசைப்பட்டவன், உடற்கட்டிலும் தனித்தன்மையிலும் மிகவும் அழகுள்ளவனாயிருந்தும் கொள்கையற்றவனாகவும் அமைதியற்றவனாகவும் இருந்த அதோனியா. வாலிபத்தில் சிறிது கட்டுப்பாட்டிற்குள் மாத்திரமே அவன் கொண்டு வரப் பட்டிருந்தான். ஏனெனில், அவனுடைய தகப்பன் : நீ இப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்து கொள்ளவில்லை. சிங்காசனத்திற்கு சாலமோனை நியமித்திருந்த தேவனுடைய அதிகாரத்திற்கு எதிராக அவன் இப்போது கலகம் செய்தான். இயற்கையாக திறமைகளாலும் ஆவிக்குரிய குணங்களாலும் இஸ்ரவேலின் அதிபதியாவதற்கு தன்னுடைய மூத்த சகோதரனைக்காட்டிலும் சாலமோன் அதிக தகுதியுடையவனாயிருந்தான். தேவனுடைய தெரிந்து கொள்ளுதல் தெளிவாகக் காட்டப்பட்டிருந்தபோதும் அதோனியா தன்மேல் பரிதாபப்படுகிறவர்களைச் சம்பாதிக்க தவறவில்லை. யோவாப், அநேக குற்றங்களைக் குறித்து குற்றவாளியாக இருந்தபோதும் இதுவரையிலும் சிங்காசனத்திற்கு உண்மையாயிருந்தான். ஆனால் இப்போது, அவன் சாலமோனுக்கு எதிரான சதியில் இணைந்தான். ஆசாரியனாகிய அபியத்தாரும் அவ்விதமே செய்தான். PPTam 985.2

கலகம் முதிர்ந்தது. சதிகாரர்கள் அதோனியாவை அரச னென்று அறிவிக்க பட்டணத்திற்கு சற்று வெளியே மாபெரும் விருந்தில் கூடியிருந்தனர். அவர்களுடைய திட்டங்கள் சில உண்மையுள்ள மனிதரின் தகுந்த வேளையில் செய்யப்பட்ட செய்கையால் முறியடிக்கப்பட்டது. அவர்களில் ஆசாரியனாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் சாலமோனின் தாயாகிய பத்சேபாளும் முதன்மையாயிருந்தார்கள். அவர்கள் நாட்டின் நிலையை இராஜாவிற்கு எடுத்துக்காட்டி, சாலமோனே சிங்காச னத்தைத் தொடரவேண்டும் என்ற தெய்வீக நடத்துதலை அவனுக்கு நினைவு படுத்தினார்கள். தாவீது உடனடியாக சாலமோனுக்கு ஆதரவாக தன் சிங்காசனத்திலிருந்து விலகினான். சாலமோன் உடனடியாக அபிஷேகம் பண்ணப்பட்டு இராஜாவாக அறிவிக்கப்பட்டான். சதித்திட்டம் நசுக்கப்பட்டது. அதன் முதன்மை செயலாளிகள் மரண தண்டனையை சம்பாதித்தனர். அபியத்தாரின் வாழ்க்கை அவனுடைய தொழிலினிமித்தமும் தாவீதிற்கு அவன் காண்பித்த முந்தைய விசுவாசத்தினிமித்தமும் விட்டுவைக்கப்பட்டது. எனினும் பிரதான ஆசாரியன் என்னும் தகுதியிலிருந்து தாழ்த்தப்பட்டான். அது சாதோக்கின் வம்சத்திற்கு தாண்டிப் போனது. யோவாபும் அதோனியாவும் சில காலம் விட்டுவைக்கப்பட்டனர். ஆனால் தாவீதின் மரணத்திற்குப்பிறகு அவர்கள் தங்கள் தண்டனையை அடைந்தனர். தாவீதின் குமாரன் மேல் செயல்படுத்தப்பட்ட தண்டனை, தகப்பனுடைய பாவத்தின் மேல் தேவனுக்கிருந்த அருவருப்பிற்கு சாட்சி பகர்ந்த நாலு மடங்கு நியாயத்தீர்ப்பை நிறைவாக்கியது. PPTam 986.1

தாவீதுடைய ஆட்சியின் ஆரம்பத்திலிருந்து அவன் மிகவும் நேசித்திருந்த திட்டங்களில் ஒன்றாக ஆண்டவருக்கு ஒரு ஆலயத்தை எழுப்புவது இருந்தது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அவன் அனுமதிக்கப்படாவிடினும், அதன் சார்பாக குறைவான வைராக்கியத்தையும் ஊக்கத்தையும் அவன் செயல்படுத்தியிருக்கவில்லை. மிகவும் விலையுயர்ந்த பொருட்களான பொன், வெள்ளி, விலையுயர்ந்த கற்கள், வெவ்வேறு வண்ணக்கற்கள், பளிங்கு இன்னும் விலையுயர்ந்த மரங்கள் இவைகளை மிக ஏராளமாக அவன் ஏற்பாடு செய்திருந்தான். இப்போது இந்த மதிப்புள்ள பொக்கிஷங்கள் மற்றவர்களிடம் கொடுக்கப்பட வேண்டும். மற்ற கைகள் தேவனுடைய சமூகத்தின் அடையாளமான கர்த்தருடைய பெட்டிக்கு ஒரு வீட்டைக் கட்டவேண்டும். PPTam 986.2

இராஜாதன் முடிவு சமீபமாயிருக்கிறதை கண்டு, இஸ்ரவேலின் பிரபுக்களையும், இராஜ்யத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து அதன் பிரதிநிதிகளையும் உறுதியாகச் செய்து முடிக்கப்படும் நம்பிக்கையில் இந்த மரபை பெற்றுக்கொள்ளும்படியாக அழைத்தான். தன் மரண பொறுப்பை அவர்களிடம் கொடுத்து, செய்யப்படவிருக்கிற மாபெரும் வேலைக்கு அவர்களுடைய சம்மதத்தையும் ஆதரவையும் பெற அவன் விரும்பினான். அவனுடைய சரீர பெலவீனத்தினிமித்தம் அவன்தானும் இந்த ஒப்படைப்பில் பங்கெடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால் தேவனுடைய ஏவுதல் அவன் மேல் வந்தது. அவனுடைய வழக்கமான உற்சாகத்திற்கும் வல்லமைக்கும் அதிகமாக மக்களோடு பேச கடைசி முறையாக அவனால் முடிந்தது. ஆலயத்தைக் கட்டும் தன் சொந்த ஆசையை அவன் அவர்களுக்குச் சொல்லி, அது அவன் குமாரனான சாலமோனிடம் கொடுக்கப்பட வேண்டும் என்கிற ஆண்டவருடைய கட்டளையையும் கூறினான். உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிராகாரங்களையும் கட்டடக்கடவன், அவனை எனக்குக் குமாரனாகத் தெரிந்து கொண்டேன்; நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். இந்நாளில் நடக்கிறபடியே அவன் என் கற்பனைகளின்படியும் என் நியாயங்களின்படியும் செய்ய உறுதியாயிருப்பானானால், அவன் ராஜ்யபாரத்தை என்றென்றைக்கும் திடப்படுத்துவேன் என்பது தெய்வீக நிச்சயமாக இருந்தது. எனவே, இப்போதும் நீங்கள் என்றென்றைக்கும் இந்த நல்ல தேசத்தைச் சுதந்தரமாய் அனுபவித்து, உங்களுக்குப்பிறகு அதை உங்கள் பிள்ளைகளுக்குச் சுதந்தரமாய்ப் பின்வைக்கும் பொருட்டாக, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு விசாரியுங்கள் என்று தாவீது சொன்னான். PPTam 987.1

தாவீது தன் சொந்த அனுபவத்தினால் தேவனிடமிருந்து விலகுகிறவனுடைய பாதை எவ்வளவு கடினமானது என்பதைக் கற்றிருந்தான். உடைக்கப்பட்ட கற்பனையின் கண்டனையை அவன் உணர்ந்திருந்து, மீறுதலின் கனிகளை அறுத்திருந்தான். இஸ்ரவேலின் அதிபதிகள் தேவனுக்கு உண்மையாயிருக்கவும், சாலமோன் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவன் தகப்பனுடைய அதிகாரத்தைப் பெலவீனப்படுத்தி அவனுடைய வாழ்க்கையை கசப்பாக்கி தேவனைக் கனவீனப்படுத்தியிருந்த பாவங்களை விட்டுவிடவும் வேண்டும் என்ற விசாரத்தினால் அவனுடைய முழு ஆத்துமாவும் அசைக்கப்பட்டது. சாலமோனின் உயர்த்தப்பட்ட நிலையில் நிச்சயமாக வரக்கூடிய சோதனைகளை எதிர்த்து நிற்க இடைவிடாத கண்காணிப்பும் தாழ்மையான இருதயமும் தேவன் மேல் நிலையான நம்பிக்கையும் அவசியம் என்று தாவீது அறிந்திருந்தான். ஏனெனில் அப்படி முன்னணியிலிருப்பவர்கள் சாத்தானுடைய வஞ்சகத்தின் விசேஷ குறிகளாயிருக்கிறார்கள். ஏற்கனவே சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டிருந்த தன் மகனிடம் தாவீது திரும்பி என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம் இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி, கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார். இப்போதும் எச்சரிக்கையாயிரு, பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்குக் கர்த்தர் உன்னைத் தெரிந்து கொண்டார்; நீ திடன் கொண்டு அதை நடப்பி என்று சொன்னான். PPTam 987.2

ஒவ்வொரு பகுதியின் மாதிரிகளோடும் ஊழியத்திற்கான அனைத்து கருவிகளோடும் ஆலயத்தைக் கட்டுவதற்காக தெய்வீக ஏவுதலினால் தனக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தவைகளைக் குறித்த நுண்ணிய நடத்துதலை தாவி சாலமோனுக்குக் கொடுத்தான். சாலமோன் இன்னமும் வாலிபனாக இருந்து, ஆலயத்தை எழுப்புவதிலும் தேவனுடைய மக்களை நிர்வகிப்பதிலும் அவன்மேல் விழக் கூடிய கனமான பொறுப்புகளிலிருந்து பின்வாங்கினான். தாவீது தன் மகனிடம், நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு, தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார் என்று கூறினான். PPTam 988.1

மீண்டும் தாவீது : சபையார் எல்லாரையும் நோக்கி : தேவன் தெரிந்து கொண்ட என் குமாரனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனுஷனுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்குக் கட்டும் அரமனை என்று முறையிட்டான். நான் என்னாலே இயன்ற மட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று ... சவதரித்தேன் என்று கூறி, தான் சவதரித்து வைத்திருந்த பொருட்களைத் தொடர்ந்து பட்டியலிட்டான். இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின் மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன். அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும், ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன் என்றான். தாராளமான காணிக்கைகளைக் கொண்டுவந்திருந்த திரளானவரிடம் : இப்போதும் உங்களில் இன்றைய தினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார் என்று வினவினான். PPTam 989.1

சபையிடமிருந்து ஆயத்தமான பதில் வந்தது. வம்சங்களின் பிரபுக்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரபுக்களும், ஆயிரம் பேருக்கு அதிபதிகளும், நூறு பேருக்கு அதிபதிகளும், ராஜாவின் வேலைக்காரராகிய பிரபுக்களும் மனப்பூர்வமாய், தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பதினாயிரம் தங்கக்காசையும், பதினாயிரம் தாலந்து வெள்ளியையும், பதினெண்ணாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள். யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கொடுத்தார்கள். இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட் டார்கள்; உத்தம் இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான். PPTam 989.2

தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது : எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல் லாம் உம்முடையவைகள், கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர். ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம். இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது, உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம். உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம், பூமியின் மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல் இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை. எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப் பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது. என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம் குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன், PPTam 989.3

இவையெல்லாம் நான் உத்தம் இருதயத்தோடே மனப்பூர்வ மாய்க் கொடுத்தேன், இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய ஜனமும் உமக்கு மனப்பூர்வமாய்க் கொடுக்கிறதைக் கண்டு சந்தோஷித்தேன். ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்னும் எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் இருதயத்தில் உண்டான இந்தச் சிந்தையையும் நினைவையும் என்றைக்கும் காத்து, அவர்கள் இருதயத்தை உமக்கு நேராக்கியருளும். என் குமாரனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும் உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்பண்ணின் இந்த அரமனையைக் கட்டும் படிக்கும், அவனுக்கு உத்தம் இருதயத்தைத் தந்தருளும் என்றான். அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டார்கள். PPTam 990.1

ஆலயத்தைக் கட்டவும் அழகுபடுத்தவும் இராஜா ஐசுவரிய மான பொருட்களை ஆழமான வாஞ்சையோடு சேர்த்திருந்தான். வருங்காலங்களில் அதன் பிராகாரங்களிலிருந்து எதிரொலிக்க வேண்டிய மகிமையான பாடல்களை அவன் இயற்றியிருந்தான். இப்போது பெரியவர்களில் முதன்மையானவர்களும் இஸ்ரவே லின் பிரபுக்களும் நேர்மையாக அவனுடைய மன்றாட்டிற்கு பதிலளித்து அவர்கள் முன் இருந்த முக்கியமான வேலைக்கு தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தம் அவனுடைய இருதயம் தேவனுக்குள் களிப்படைந்தது. தங்களுடைய சேவையை கொடுத்தபோது அவர்கள் இன்னும் அதிகம் செய்ய விருப்பங் கொண்டனர். தங்கள் சொந்த சொத்துக்களிலிருந்து காணிக்கைகளை பொக்கிஷசாலையில் குவித்தனர். தேவனுடைய வீட்டிற்கு பொருட்களைச் சேர்த்ததில் தன் தகுதியின்மையை தாவீது ஆழமாக உணர்ந்திருந்தான். தன்னுடைய இராஜ்யத்தின் பிரபுக்கள் உடனடி பதிலாக தங்களுடைய சொத்துக்களை மனதார யெகோவாவிற்கு அர்ப்பணித்து, அவருடைய சேவைக்கு தங்களை நேர்ந்து கொண்டதில் அவர்கள் வெளிக்காட்டியிருந்த உண்மை அவனை மகிழ்ச்சியால் நிரப்பிற்று. ஆனால் இந்த மனநிலையை தமது மக்களுக்குக் கொடுத்தது தேவன் மாத்திரமே . மனிதனல்ல, அவரே மகிமைப்படுத்தப்பட வேண்டும். அவரே மக்களுக்கு பூமியின் செல்வங்களைக் கொடுத்தவர். ஆலயத்திற்கு விலைமதிப்பானவைகளைக் கொண்டுவர அவர்களை மனமுள்ளவர்களாக்கினது அவருடைய ஆவியானவரே. அவை அனைத்தும் ஆண்டவரால் உண்டாயிற்று. அவருடைய அன்பு மக்களின் மனங்களை அசைத்திருக்காவிடில் இராஜாவின் முயற்சிகள் வீணாக இருந்திருக்கும். ஆலயம் ஒருபோதும் எழுப்பப்பட்டிருக்காது. PPTam 991.1

தேவனுடைய ஏராளத்திலிருந்து மனிதன் பெற்றுக்கொள்ளும் அனைத்தும் இன்னமும் தேவனுக்கே சொந்தமானது . தேவன் படைத்த பூமியின் மதிப்புள்ள அழகிய பொருட்கள் மனிதனைச் சோதிக்கும்படியாக அவர் மேலிருக்கும் அவர்களுடைய அன்பின் ஆழத்தையும், அவருடைய தயவுகளின் மேல் அவனுக்கிருக்கும் பாராட்டுதலையும் தெரிவிக்க அவர்கள் கைகளில் வைக்கப்படு கிறது. அது செல்வமாக இருந்தாலும் சரி, அறிவாக இருந்தாலும் சரி, அவைகள் இயேசுவின் பாதத்தில் கொடுத்தவரிடத்தில் தாவீதோடு சேர்ந்து : எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம் என்று கூறி மனமார்ந்த காணிக்கையாக படைக்கப்படவேண்டும். PPTam 991.2

மரணம் நெருங்குகிறது என்பதை உணர்ந்தபோது தாவீதின் இருதயம் சாலமோனுக்காகவும் இஸ்ரவேல் இராஜ்யத்திற்காகவும் பாரமாயிருந்தது. ஏனெனில் அதன் செழிப்பு இராஜாவினுடைய மெய்ப்பற்றைச் சார்ந்திருந்தது. தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது. நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன், நீ திடன் கொண்டு புருஷனாயிரு. நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திமானாயிருக்கிறதற்கும், கர்த்தர் என்னைக் குறித்து உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும் படிக்குத் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்ன வார்த்தையைத் திடப்படுத்துகிறதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும் படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக. 1 இராஜா. 21-4. PPTam 992.1

தாவீதின் கடைசி வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கிறபடியே ஒரு பாடலாக நம்பிக்கையின் பாடலாக, உன்னதமான கொள்கையின் பாடலாக, மரித்துப்போகாத விசுவாசத்தின் பாடலாக இருந்தது. PPTam 992.2

மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது என்னும் புருஷன் சொல்லுகிறது என்னவென்றால், கர்த்தருடைய ஆவியானவர் என்னைக் கொண்டு பேசினார்; நீதி பரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம் பண்ணுகிறவர் இருப்பார், அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப் பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப் போல இருப்பார் என்றார். என்னுடைய வீடு தேவனிடத்தில் இப்படியிராதோ? சகலமும் திட்டம் பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லாரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் வளர்ந்தோங்கச் செய்யாரோ?. 2 சாமு. 23:1-5 PPTam 992.3

தாவீதின் விழுகை மிகப் பெரியதாயிருந்தது; ஆனால் அவனுடைய மனந்திரும்புதல் ஆழமானதாயிருந்தது. அவனுடைய அன்பு தீவிரமும் அவனுடைய விசுவாசம் உறுதியானதுமாயிருந்தது. அவன் அதிகம் மன்னிக்கப்பட்டிருந்தான். எனவே அதிகம் அன்புகூர்ந்தான். லூக்கா 7:47. PPTam 993.1

தாவீதின் சங்கீதங்கள் குற்ற உணர்வின் ஆழம் மற்றும் சுய கண்டனை முதல், உயர்ந்த விசுவாசம் மிக உயர்த்தப்பட்ட தேவனுடனான தொடர்புவரை உள்ள வெவ்வேறு அனுபவங்களைக் கடந்துவருகின்றன. அவனுடைய வாழ்க்கையின் பதிவு, பாவம் அவமானத்தையும் ஆபத்தையும் மாத்திரமே கொண்டுவரும் என்று அறிவிக்கிறது. அதேசமயம், தேவனுடைய அன்பும் இரக்கமும் மிக ஆழ்ந்த ஆழங்களையும் சென்றடையும் என்றும் விசுவாசம் மனந்திரும்புகிற ஆத்துமாவை உயர்த்தி தேவனுடைய குமாரர் என்னும் சுதந்தரத்தை பகிர்ந்துகொள்ள வழி நடத்தும் என்றும் அறிவிக்கிறது. அவருடைய வார்த்தையில் இருக்கிற அனைத்து நிச்சயங்களிலும் தேவனுடைய உண்மைக்கும் நீதிக்கும் அவருடைய கிருபையின் உடன்படிக்கைக்குமான மிக வலிமையான சாட்சிகளில் ஒன்றாக இது இருக்கிறது. PPTam 993.2

மனிதன் நிழலைப்போல் நிலை நிற்காமல் ஓடிப்போகிறான். நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும், கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள் மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது. அவருடைய உடன்படிக் கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது யோபு 14:2, ஏசாயா 40:8; சங். 103:17,18 PPTam 993.3

தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும். பிரசங்கி 3:14. PPTam 993.4

தாவீதிற்கும் அவனுடைய வீட்டாருக்கும் ஏற்படுத்தப்பட்ட வாக்குறுதிகள் மகிமையானவை. நித்திய காலங்களை நோக்கியிருந்த அவைகள் தங்களுடைய முழுமையான நிறைவேறுதலை கிறிஸ்துவில் காண்கின்றன. PPTam 993.5

என் தாசனாகிய தாவீதை நோக்கி... என்று ஆணையிட் டேன். என் கை அவனோடே உறுதியாயிருக்கும், என் புயம் அவனைப் பலப்படுத்தும். என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும், என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும். அவன் கையைச் சமுத்திரத்தின் மேலும், அவன் வலதுகரத்தை ஆறுகள் மேலும் ஆளும் படி வைப்பேன். அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான், நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப் பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன். என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன், என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும் (சங். 893-28) என்று ஆண்டவர் அறிவிக்கிறார். PPTam 993.6

அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ள மட்டும் நிலை நிற்கவும் செய்வேன் - சங். 89:29. PPTam 994.1

ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிற வனை நொறுக்குவார். சூரியனும் சந்திரனுமுள்ள மட்டும், அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள். அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான், சந்திரனுள்ள வரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். ஒரு சமுத்திரத் தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும், நதி தொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அவர் அரசாளுவார். அவருடைய நாமம் என்றென் றைக்கும் இருக்கும்; சூரியனுள்ள மட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும், மனுஷர் அவருக்குள் ஆசீர் வதிக்கப்படுவார்கள், எல்லாஜாதிகளும் அவரைப்பாக்கியமுடைய வர் என்று வாழ்த்துவார்கள். சங். 72.4-8.17. PPTam 994.2

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமை யுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது. ஏசாயா 9:6, லூக்கா 1:32, PPTam 994.3