கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்
6 - சேத் மற்றும் ஏனோக்கு
தெய்வீக வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்கிறவனாகவும், ஆவிக் குரிய சேஷ்டபுத்திரபாகத்தை சுதந்தரிக்கிறவனாகவும் ஆதாமுக்கு மற்றொரு குமாரன் கொடுக்கப்பட்டான். காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று அவன் தாய் சொன்னதால், அவனுடைய குமார னுக்குக் கொடுக்கப்பட்ட சேத் என்னும் பெயர் நியமிக்கப்பட்டவன் அல்லது ஈடு என்று தெரிவித்தது. காயீன் ஆபேலைவிடவும் சேத் அதிக வளர்த்தியை உடையவனாயிருந்து ஆதாமுடைய மற்ற மகன்களைக் காட்டிலும் ஆதாமை அதிகம் ஒத்திருந்தான். ஆதாமின் வழி யைப் பின்பற்றி, தகுதியான குணத்தைக் கொண்டிருந்தான். என்றாலும், காயீனைக் காட்டிலும் வேறு எந்த இயற்கையான நல்ல குணத் தையும் அவன் மரபுரிமையாகப் பெற்றிருக்கவில்லை. ஆதாமின் சிருஷ்டிப்பைக் குறித்து : தேவன் மனுஷனை .... தேவசாயலாக உண் டாக்கினார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் விழுகைக்குப் பின்னர் மனிதன் தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்றான். ஆதாம் பாவமற்றவனாக தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டிருந்தபோது, சேத், காயீனைப்போல் தனது பெற்றோரின் விழுந்து போன இயல்பை மரபுவழியாகச் சுதந்தரித்திருந் தான். ஆனால் மீட்பரைக்குறித்த அறிவையும் நீதியின் போதனைகளையும் அதோடுடை பெற்றுக் கொண்டான். தெய்வீக கிருபையினால் அவன் தேவனைகனப்படுத்தி, அவருக்கு ஊழியஞ்செய்தான். ஆபேல் பிழைத்திருந்தால் என்ன செய்திருப்பானோ, அப்படியே தங்களுடைய சிருஷ்டிகரை கனம் பண்ணி, அவருக்குப் பயந்து கீழ்ப்படிய பாவ மனிதர்களின் மனங்களை திருப்ப அவன் உழைத் தான். PPTam 72.1
சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான், அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான், அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத் தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள். விசுவாசமாயிருந்தவர்கள் தேவனை முன்னதாகவே தொழுது கொண்டிருந்தார்கள். ஆனால் மனிதர்கள் பெருகினபோது, இருவகுப்பாருக்கும் இடையே இருந்த வேறுபாடு அதிக குறிப்பாகக் காணப்பட்டது. ஒருவகுப்பாரிடம் தேவனுக்கு உண்மையாயிருப்பது வெளிப்படை யாகக் காட்டப்பட்டது. அடுத்த வகுப்பாரிடம் அலட்சியமும் கீழ்ப் படியாமையும் காணப்பட்டது. PPTam 73.1
நம்முடைய முதற்பெற்றோர் விழுகைக்கு முன்பு ஏதேனில் ஸ்தாபிக்கப்பட்ட ஓய்வுநாளை கைக்கொண்டிருந்தனர். பரதீசிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்புங்கூட அதன் ஆசரிப்பைத் தொடர்ந்தனர். கீழ்ப்படியாமையின் கசப்பான கனிகளை அவர்கள் ருசித்திருந்து, தேவனுடைய கற்பனைகளை மிதிக்கிற ஒவ்வொரு வரும் விரைவாகவோ அல்லது தாமதமாகவோ தெய்வீக பிர மாணங்கள் புனிதமானது அதோடு மாற்றப்பட முடியாதது என்ப தையும், அதை மீறுவதன் தண்டனை நிச்சயமாக சுமத்தப்படும் என் பதையும் கற்றிருந்தனர். தேவனுக்கு விசுவாசமாயிருந்த ஆதாமின் பிள்ளைகள் அனைவராலும் ஓய்வு நாள் கனப்படுத்தப்பட்டது. ஆனால் காயீனும் அவனது சந்ததியாரும் தேவன் ஓய்ந்திருந்த நாளை மதிக்கவில்லை. உழைக்கவும், விவரிக்கப்பட்டிருந்த யேகோவாவின் கட்டளையை பொருட்படுத்தாமல் தங்களுடைய சொந்த நேரங்களில் ஓய்வெடுக்கவும் அவர்கள் தெரிந்து கொண் டார்கள். PPTam 73.2
தேவனுடைய சாபத்தைப் பெற்றபின் காயீன் தன் தகப்பனுடைய வீட்டாரிடமிருந்து விலகினான். முதலில் நிலத்தை உழுகிற வனாக தன் முதல் தொழிலைத் தெரிந்தெடுத்தான் இப்போது ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்குத் தன் மூத்த குமாரனுடைய பெயரைக் கொடுத்தான். பாவத்தின் சாபத்தின்கீழ் தனக்கு உடைமைகளையும் இன்பத்தையும் தேடி, இவ்வாறாக இந்த உலகத்தின் தேவனை வணங்குகிற மாபெரும் வகுப்பாரின் தலைவனாக நிற்பதற்காக ஆண்டவருடைய சமுகத்திலிருந்து சென்று மீட்கப்படப்போகிற ஏதேனைக் குறித்த வாக்குத்தத்தத்தை தூர எறிந்தான். வெறும் பூமியையும் பொருட்களையும் சார்ந்த முன்னேற்றத்தில் அவனுடைய சந்ததியினர் புகழ் பெற்றவர்களானார்கள். அதேநேரம் தேவனை பொருட்படுத்தாதவர்களாக, மனிதனுக்கான அவருடைய நோக்கங்களை எதிர்க்கிறவர்களாக இருந்தார்கள். காயீன் செய்த கொலை குற்றத்தோடு அவனுடைய ஐந்தாம் தலைமுறையான லாமேக்கு பலதாரங்களைச் சேர்த்தான். பெருமையோடு கூடிய இணக்கமற்றவனாக, தனது பாதுகாப்பிற்காக காயீனுடைய பழியிலிருந்து தப்பிக்கும்படி மாத்திரம் அவன் தேவனை ஒப்புக்கொண்டான். ஆபேல் கூடாரங்களில் குடியிருந்து ஒரு போதகருடைய வாழ்க்கையை வாழ்ந்தான். சேத்துடைய வம்சாவழிவந்தவர்களும் பூமியின் மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள் (எபி 11:13, 16). PPTam 73.3
சிலகாலம் இந்த இரு வகுப்பாரும் பிரிந்திருந்தனர். காயீனுடைய இனத்தார் தாங்கள் முதலாவது குடியேறின் இடத்திலிருந்து பரவி, சேத்தின் பிள்ளைகள் வசித்திருந்த சமபூமிகளிலும் பள் ளத்தாக்குகளிலும் சிதறினார்கள். PPTam 74.1
டைய அநீதியான செல்வாக்குகளிலிருந்து தப்புவதற்காக சேத் தின் பிள்ளைகள் மலைகளுக்குச் சென்று அங்கே தங்களுடைய குடும்பங்களை உண்டாக்கினார்கள். இந்தப் பிரிவு தொடர்ந்தவரையிலும், தேவனை தூய்மையில் தொழுது கொள்ளுவதை பராமரித்து வந்தார்கள். ஆனால் இந்த காலக்கட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பள்ளத்தாக்குகளின் வாசிகளோடு கலக்கும்படியாக அவர்கள் துணிந்தனர். இந்தத் தொடர்பு மிக மோசமான விளைவுகளை உண் டாக்கியது. தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டார்கள். சேத்தின் பிள்ளைகள் காயீ னுடைய வம்சத்தில் வந்த பெண்களுடைய அழகினால் கவரப்பட்டு, அவர்களை திருமணம் செய்ததால், ஆண்டவருக்கு வெறுப்பை உண்டாக்கினார்கள். தேவனைத் தொழுதுவந்த அநேகர் அவர்கள் முன் நிலையாக இருந்த கவர்ச்சிகளினால் பாவத்திற்குள் ஏமாற்றப்பட்டு, தங்களின் அசாதாரணமான பரிசுத்த குணத்தை இழந்து போயினர். சீரழிந்தவர்களோடு கலந்ததால், ஆவியிலும் செய்கையிலும் அவர்களைப்போலவே ஆனார்கள். ஏழாம் கற்பனையின் கட்டுப்பாடு பொருட்படுத்தப்படாமல் போயிற்று. அவர்களுக் குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்து கொண்டார்கள். சேத்தின் பிள்ளைகள் காயீனுடைய வழியில் சென்றார்கள். (யூதா 10). தங்களுடைய மனங்களை உலகச் செழிப்பின் மீதும் மகிழ்ச்சியின் மீதும் வைத்து ஆண்டவருடைய கற்பனைகளை நெகிழ்ந்தார்கள். தேவனை தங்கள் அறிவில் நிறுத்திக்கொள்ள மனிதர்கள் விரும்ப வில்லை. தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தங்கள் சிந்தனைகளி னாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. ரோமர் 1:21. தேவன் அவர்களைக் கேடான சிந் தைக்கு ஒப்புக்கொடுத்தார் (1:28). சாவுக்கேதுவான குஷ்டரோகத் தைப் போல பாவம் எங்கும் பரவியது. PPTam 74.2
பாவத்தின் விளைவுகளுக்கான சாட்சியாக ஏறக்குறைய ஆயிரம் வருடங்கள் ஆதாம் மனிதருக்குள்ளே வாழ்ந்திருந்தான். தீமையின் அலைகளை தடுப்பதற்கு அவன் விசுவாசத்தோடு நாடினான். ஆண்டவரின் வழியில் அவனுடைய சந்ததிக்குப் போதிக்க அவனுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. தேவன் தனக்கு வெளிப்படுத்தினவைகளை கவனமாக வைத்திருந்து, பின் சந்ததிகளுக்கு அவைகளை மீண்டும் மீண்டும் சொல்லி வந்தான். ஒன்பதாவது தலைமுறை வரைக்கும் தன் பிள்ளைகளுக்கும் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் பரதீசிலே மனிதனுக்கு இருந்த பரிசுத்தமும் மகிழ்ச்சியுமான நிலையை விவரித்து, தன்விழுகையின் சரித்திரத்தை மீண்டும் மீண்டும் சொல்லி, துன்பங்களின் வழியாக தமது பிரமாணங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை தேவன் கற்றுக்கொடுத்ததை அறிவித்து, தங்களுடைய இரட்சிப்பிற்காக செய்யப்பட்டிருந்த கிருபையின் ஏற்பாடுகளை விளக்கினான். என்றாலும் அவனுடைய வார்த்தைகளுக்கு சிலரே கவனம் செலுத்தினர். அவனுடைய சந்ததியின் மேல் அப்படிப்பட்ட ஆபத்துகளைக் கொண்டுவந்த பாவத்தினிமித்தம் பலவேளைகளில் கசப்பான நிந்தைகளை அவன் சந்தித்தான். PPTam 75.1
ஆதாமின் வாழ்க்கை துக்கமும் சிறுமையும் உளைச்சலும் கொண்ட ஒன்றாக இருந்தது. ஏதேனை விட்டு வந்தபோது, சாக வேண்டுமே என்ற நினைவு ஆழமான பயத்தினால் அவனை நடுங்கவைத்தது. முதல் குமாரனான காயீன் தன் சகோதரனைக் கொலை செய்தபோது, மனித குடும்பத்தில் மரணத்தின் உண்மைத் தன்மையோடு அவன் அறிமுகமானான். தனது பாவத்தின் நுண் ணிய குற்ற உணர்வினால் நிறைந்தவனாக, ஆபேல் மரித்ததாலும் காயீன் நிராகரிக்கப்பட்டதாலும் இரட்டிப்பாக துக்கப்பட்டு, ஆதாம் வியாகுலத்தினால் தலை குனிந்தான். உலகத்தை கடைசியாக வெள்ளத்தினால் அழிக்கக் காரணமாயிருந்த எங்கும் பரவிய சீர ழிவை அவன் கண்டான். தன்னை உண்டாக்கினவரால் சொல்லப் பட்டமரணத்தீர்ப்பு முதலில் பயங்கரமாகத் தோன்றியிருந்தபோதும், ஏறக்குறைய ஆயிரம் வருடங்களாக பாவத்தின் விளைவுகளைக் கண்ட பின்பு, துயரமும் வேதனையும் கொண்ட வாழ்க்கையை முடி வுக்குக் கொண்டுவருவது தேவனுடைய இரக்கம் என்கிறதை அவன் உணர்ந்தான். PPTam 75.2
பிரளயத்திற்கு முன்பு இருந்த காலத்தின் துன்மார்க்கத்தோடு அநேகர் பல வேளைகளில் கருதியிருப்பதைப்போல் அறியா மையும் காட்டுமிராண்டித்தனமும் இருக்கவில்லை. சன்மார்க்கம் மற்றும் அறிவு சார்ந்த ஒரு தரத்தை எட்டக்கூடிய சந்தர்ப்பம் அந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் மாபெரும் சரீர மற்றும் மனபலத்தைப் பெற்றிருந்தார்கள். மார்க்க மற்றும் அறிவியல் சார்ந்த அறிவை அடையும் சாதகங்கள் நிகரற்றதாயிருந்தன. மிக அதிக காலமாக மக்களின் மனது தாமதமாகவே முதிர்ந்தது என்று நினைப்பது தவறு. அவர்களுடைய மனவல்லமைகள் இளமையி லேயே வளர்ந்தது. தேவனுக்கு பயப்படுவதை போற்றியிருந்து அவருடைய சித்தத்திற்கு இசைவாக வாழ்ந்தவர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் அறிவிலும் ஞானத்திலும் தொடர்ந்து விருத்தி யடைந்தார்கள். நம்முடைய காலத்தின் சிறந்த மேதைகளை பிரள யத்துக்கு முன்பு வாழ்ந்த இதே வயதுடைய மனிதர்களோடு ஒப்பிட் டால், சரீர பலத்தைப்போலவே மனபலத்திலும் மிகவும் அதிகம் தரம் தாழ்ந்தவர்களாக காணப்படுவார்கள். மனிதனுடைய வாழ் நாள் குறுகின்போது, அவனுடைய சரீர பலம் நலிவடைந்தபோது, அவனுடைய மனதிறமைகளும் குறைந்து போனது. இருபதிலிருந்து இருபத்து ஐந்து வருடகாலம் ஆராய்ச்சி செய்யும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய சாதனைகளின் புகழ்ச்சியால் உலகம் நிறைந்திருக்கிறது. ஆனால் நூற்றுக்கணக்கான வருடங்களாக மன மற்றும் சரீர வல்லமைகள் வளரப்பெற்றிருந்த மனிதர் களோடு ஒப்பிடும்போது, இந்த சாதனைகளெல்லாம் எவ்வளவு வரையறுக்கப்பட்டவைகளாக இருக்கின்றன. PPTam 76.1
தங்களுக்கு முன்னிருந்தவர்கள் எட்டினவைகளின் நன்மைகளை நவீனகால மக்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மை தான். தேர்ந்த மனங்களைக் பெற்றிருந்து, திட்டமிட்டு ஆராய்ந்து எழுதிவைத்த மனிதர்கள், தங்களுக்குப்பின் வருவோருக்காக தங்களுடைய வேலைகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த விதத்திலும் கூட, மனித அறிவை மாத்திரம் கருத்தில் கொள்ளும் போது, பழங்கால மனிதர்களின் அனுகூலங்கள் எவ்வளவு பெரிய வைகளாக இருக்கின்றன. தேவனுடைய சாயலில் உண்டு பண்ணப் பட்ட மனிதனை, சிருஷ்டிகர்தாமே நன்றாயிருக்கிறது என்று அறி வித்த - பொருட்கள் சம்பந்தப்பட்ட அனைத்திலும் தேவன் தாமே போதித்திருந்த மனிதனை நூற்றுக்கணக்கான வருடங்களாக அவர்கள் தங்கள் நடுவே கொண்டிருந்தார்கள். ஆதாம் சிருஷ்டிகரிட மிருந்து, சிருஷ்டிப்பின் வரலாற்றை கற்றிருந்தான். அவன்தானே ஒன்பது நூற்றாண்டுகளின் சம்பவங்களைக் கண்டிருந்தான். அவன் தன் அறிவை தனது சந்ததியினருக்குக் கொடுத்திருந்தான். ஜலப் பிரளயத்துக்கு முன்பு வாழ்ந்தவர்கள் புத்தகங்களின்றி இருந்தனர். எழுதப்பட்ட ஆவணங்கள் அவர்களுக்கு இல்லை. ஆனால் மாபெரிய சரீர மற்றும் மனபலத்தினால் தங்களுக்குச் சொல் லப்பட்டவைகளை பற்றிக்கொண்டு மனதில் வைத்திருக்கவும், அவைகளை மாற்றாமல் அப்படியே தங்களுடைய சந்ததியின ருக்குக் கடத்தவும் பலமான ஞாபகசக்தி கொண்டிருந்தார்கள். மேலும் நூற்றுக்கணக்கான வருடங்களில் அடுத்தடுத்த ஏழு தலை முறையிரும் ஒருவரை ஒருவர் ஆலோசித்து, அனைவருடைய அனுபவத்தாலும் அறிவாலும் ஒருவருக்கொருவர் நன்மை செய்து கொள்ளும் சந்தர்ப்பத்தைப் பெற்றவர்களாக ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தார்கள். PPTam 76.2
தேவனுடைய கிரியைகளின் வாயிலாக அவரைக் குறித்த அறிவைப் பெற்றுக்கொள்ள அந்தக்கால மனிதர்களுக்கு இருந்த மகிழ்ச்சியான அனுகூலங்கள் அன்றிலிருந்து எந்தக் காலத்திற்கும் நிகரானதல்ல. ஆவிக்குரிய இருள் படிந்த யுகமாக இராமல், அதிலிருந்து வெகு தூரத்தில் மாபெரும் வெளிச்சம் பெற்றிருந்த யுகமாக அது இருந்தது. ஆதாமிடமிருந்து போதனையைப் பெறுகின்ற சந்தர்ப்பத்தை அனைவரும் பெற்றிருந்தனர். அதிலும் ஆண்டவருக்குப் பயந்தவர்களுக்கு கிறிஸ்துவும் தூதர்களும் போதகர்களாயிருந்தார்கள். அநேக நூற்றாண்டுகளாக அவர்கள் நடுவேதங்கியிருந்த தேவனுடைய தோட்டத்தில், சத்தியத்திற்கான மௌனமான சான்றைப் பெற்றிருந்தார்கள். கேருபீன்கள் காவல் காத்திருந்த பரதீசின் வாசலில் தேவனுடைய மகிமை வெளிப்பட்டது. இங்கே தான் முதலில் தொழுகை செய்தவர்கள் வந்தார்கள். இங்குதான் அவர்களுடைய பலிபீடம் எடுப்பிக்கப்பட்டு, அவர் களுடைய காணிக்கை ஏறெடுக்கப்பட்டது. இங்கேதான் காயீனும் ஆபேலும் தங்கள் காணிக்கைகளை கொண்டுவந்தார்கள். இங்கே தான் அவர்களோடு தொடர்பு கொள்ளும்படி தேவன் இறங்கினார். PPTam 77.1
ஏதேன், அதனுடைய நுழைவு வாயில் காவல் தூதர்களால் தடுக்கப்பட்டு, அவர்கள் பார்வையில் இருந்ததால், சமய நம் பிக்கை இல்லாதவர்கள் அது இருந்ததை மறுக்க முடியாது. சிருஷ் டிப்பின் முறையும் தோட்டத்தின் இலக்கும், மனிதனுடைய நிலை யோடு மிக நெருக்கமாக இணைக்கப்பட்டிருந்த இரண்டு மரங்களின் சரித்திரமும், வாதிட முடியாத உண்மைகளாக இருந்தன. ஆதாம் அவர்கள் நடுவே இருந்தபோது, தேவனுடைய உச்ச அதிகாரமும், அவருடைய கற்பனைகளைக்குறித்த கடமைகளும் மனிதன் கேள்வி கேட்கத் துணியாத சத்தியங்களாக இருந்தன. PPTam 78.1
நிலவியிருந்த அக்கிரமத்துக்கு மத்தியிலும் தேவனோடு தொடர்பு கொண்டதால் உயர்ந்து மேன்மையடைந்து, பரலோகத்தின் தோழமையில் வாழ்ந்திருந்த ஒருவரிசை மனிதர்களும் இருந்தனர். அவர்கள் பெரும் அறிவும், ஆச்சரியமான சாதனைகளும் பெற்ற வர்களாக இருந்தனர். நீதியின் குணங்களை விருத்தி செய்யவும், தங்களுடைய காலத்து மக்களுக்கு மட்டுமல்லாது எதிர்கால தலை முறையினருக்கும் தேவபக்திக்கான பாடங்களைப் போதிக்க வேண்டிய மாபெரும் பரிசுத்த ஊழியத்தை அவர்கள் பெற்றிருந் தார்கள். அதிக முன்னணியிலிருந்த மக்களில் ஒரு சிலரே வேதவாக் கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். ஆனால் யுகங்கள் நெடுகிலும் தேவன் தமக்கு விசுவாசமுள்ள சாட்சிகளையும் மெய்யான இருதயங்கொண்ட பக்தர்களையும் உடையவராயிருந்தார். PPTam 78.2
ஏனோக்கைக் குறித்து, அவன் 65 வயதில் ஒரு குமாரனைப் பெற்றான் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன்பின்பு அவன் தேவ னோடு 300 வருடங்கள் சஞ்சரித்தான். இந்த ஆரம்ப வருடங்களில் ஏனோக்கு தேவனை நேசித்து, அவருக்கு பயந்திருந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தான். அவன் மெய்யான விசுவாசத்தை பாதுகாத்து, பரிசுத்த வரிசையில் வந்த, வாக்குத்தத் தம் பண்ணப்பட்ட வித்தின் மூதாதையரில் ஒருவனாயிருந்தான். ஆதாமின் உதடுகளிலிருந்து விழுகையின் இருண்ட கதையை அறிந்திருந்து, வாக்குத்தத்தத்தில் காணப்பட்டிருந்த தேவனுடைய கிருபையைக் குறித்து மகிழ்ந்திருந்த ஒருவனாயிருந்தான். அவன் வரப்போகும் மீட்பரை நம்பியிருந்தான். ஆனால் தனது முதல் குமாரனின் பிறப்பிற்குப்பின்பு, ஏனோக்கு உன்னதமான அனுப வத்தை அடைந்தான். அவன் தேவனோடுள்ள நெருங்கின் உற வுக்கு இழுக்கப்பட்டான். தேவனுடைய ஒரு குமாரனாக தனக்கு இருக்கும் கடமையையும் பொறுப்பையும் முழுமையாக அவன் உணர்ந்தான். தகப்பன்மேலிருந்த குழந்தையின் அன்பையும், அவனுடைய பாதுகாப்பின் மேல் அதற்கிருந்த எளிமையான விசுவாசத்தையும் அவன் கண்டபோது, முதற்குமாரனின் மேல் தன் இருதயத்திலிருந்த ஆழமான ஏக்கம் நிறைந்த பரிவை அவன் உணர்ந்தபோது, தேவன் தமது குமாரனை மனிதனுக்குப் பரிசாகக் கொடுத்ததிலிருந்த ஆச்சரியமான அன்பையும் பரலோகத் தகப்பன்மேல் தேவனுடைய பிள்ளைகள் திருப்பிக் காட்டக்கூடிய நம்பிக்கையையும் குறித்த விலைமதிப்புமிக்க பாடத்தைக் கற்றுக்கொண்டான். கிறிஸ்துவின் வழியாக தேவன் காண்பிக்கும் முடிவில்லாத புரிந்து கொள்ளக்கூடாத அன்பு, இரவும் பகலும் அவனுடைய தியானத்தின் பொருளாகிற்று. தன் ஆத்துமாவின் எல்லா உற்சாகத்தோடும் தான் யாருடன் வசித்து வந்தானோ, அவர்களுக்கு அந்த அன்பை வெளிப்படுத்த வகைதேடினான். PPTam 78.3
நினைவிழந்த நிலையிலோ அல்லது தரிசனத்திலோ அல்லாது அனுதின் வாழ்க்கையின் எல்லா கடமைகளிலும் ஏனோக்கு தேவனோடு நடந்தான். உலகத்திலிருந்து தன்னை முற்றிலும் அடைத்துக்கொண்டதுறவியாகிவிடவில்லை அவன். ஏனென்றால் தேவனுக்கென்று இந்த உலகத்திலே செய்யும்படியான வேலை ஒன்று அவனுக்கு இருந்தது. தன் குடும்பத்திலும் மனிதர்களோடு உறவாடுவதிலும் ஒரு கணவனாக, தகப்பனாக, ஒரு நண்பனாக ஒரு குடிமகனாக ஆண்டவருடைய உறுதியான அசையாத ஊழியக்காரனாயிருந்தான். PPTam 79.1
அவனுடைய இருதயம் தேவனுடைய சித்தத்துடன் இசைந் திருந்தது. இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ? ஆமோஸ் 33. இந்த பரிசுத்த வாழ்க்கை 300 வருடங்கள் தொடர்ந்தது. தங்களுக்கு வாழும்படி குறுகிய காலமே இருக்கிறதென்றோ அல்லது கிறிஸ்துவின் வருகை உடனே நடக்கப்போகிறது என்றோ தெரிந்தால் கூட சில் கிறிஸ்தவர்கள் அவ்வளவு அதிக ஊக்கத்தோடும் அர்ப்பணிப்போடும் இருக்கமாட் டார்கள். ஆனால் நூற்றாண்டுகள் செல்லச் செல்ல ஏனோக்கின் விசுவாசம் பலமடைந்து அவனுடைய அன்பு அதிகத் தீவிரமானது. PPTam 79.2
ஏனோக்கு உறுதியும் மிக உயர்வாக பண்படுத்தப்பட்ட மனதும் விஸ்தாரமான அறிவும் கொண்ட மனிதனாக இருந்தான். தேவனுடைய விசேஷ வெளிப்படுத்தல்களால் அவன் கனப்படுத் தப்பட்டான். பரலோகத்தோடு நிலையான தொடர்புடன் தெய்வீக மேன்மையையும் பரிபூரணத்தையும் குறித்த உணர்வை எப்போதும் தன் முன் வைத்திருந்தபோதும், அவன் மனிதர்களில் மிகவும் தாழ்மையானவர்களில் ஒருவனாக இருந்தான். தேவனோடுள்ள தொடர்பு எவ்வளவு நெருக்கமாயிருந்ததோ, அவ்வளவு ஆழமாக தனது பெலவீனத்தையும் குறைகளையும் குறித்த உணர்வு அவ னுக்கு இருந்தது. PPTam 79.3
தேவ பக்தியற்றவர்களின் அதிகரித்துவரும் துன்மார்க்கத் தினால் வேதனைப்பட்டு, அவர்களுடைய பற்றின்மை தேவன் மேலிருக்கும் தன் பயபக்தியை குறைத்துவிடுமோ என்று பயந்து, அவர்களோடு நிலையான தோழமையை வைத்துக் கொள்வதைத் தவிர்த்து, தனிமையில் அதிக நேரம் செலவளித்து, ஏனோக்கு தன்னை தியானத்திற்கும் ஜெபத்திற்கும் கொடுத்திருந்தான். இவ் வாறாக, அவன் ஆண்டவருக்கு முன்பாக காத்திருந்து, அவருடைய சித்தத்தை செய்வதற்கேதுவாக, அதைக்குறித்த தெளிவான அறி வைத் தேடினான். அவனுக்கு ஜெபம் ஆத்தும் சுவாசமாக இருந்தது. அவன் பரலோக சூழ்நிலையிலேயே வாழ்ந்தான். PPTam 80.1
பரிசுத்த தூதர்கள் வழியாக, இந்த உலகத்தை ஜலப்பிரளயத் தினால் அழிக்கும் தமது நோக்கத்தை தேவன் ஏனோகுக்கு வெளிப் படுத்தி, மீட்பின் திட்டத்தை முழுவதுமாக அவன் முன் திறந்துவைத் தார். தீர்க்கதரிசன ஆவியினால், ஜலப்பிரளயத்துக்குப்பின்பு வாழவிருக்கிற தலைமுறைகள் வரையிலும் அவனைக் கொண்டு சென்று, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையுடனும் உலகத்தின் முடிவுடனும் தொடர்புடைய சம்பவங்களை அவனுக்குக் காண்பித்தார். PPTam 80.2
மரித்தவர்களைக்குறித்து ஏனோக்கு கலங்கியிருந்தான். நீதி மான்களும் துன்மார்க்கரும் ஒன்றாக மண்ணுக்குத்திரும்புவதாகவும் அதுதான் அவர்களுடைய முடிவு என்பதாகவும் அவனுக்குத் தோன்றியது. கல்லறையைத் தாண்டி அதற்கு அப்பாலுள்ள வாழ்க் கையை அவனால் பார்க்க முடியவில்லை. தீர்க்கதரிசனத்தில் கிறிஸ் துவின் மரணத்தைக் குறித்து போதிக்கப்பட்டு, பரிசுத்த தூதர்கள் சூழ, கல்லறையிலிருந்த தமது மக்களை மீட்க அவர் மகிமையில் வருவதைக் குறித்து காண்பிக்கப்பட்டான். மேலும் கிறிஸ்து இரண் டாம் முறை வரும்போது உலகம் இருக்கும் கெட்ட நிலையை பெரு மையான, துணிகரமான, சுயவிருப்பம் கொண்ட, ஒரே தேவனையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் மறுதலித்து, அவரது கற்பனையை மிதித்து, மீட்பை நிந்திக்கிற தலைமுறையின் இழிந்த நிலையை அவன் கண்டான். நீதிமான்கள் மகிமையாலும் கனத் தாலும் முடிசூட்டப்பட்டதையும், துன்மார்க்கர் ஆண்டவருடைய சமுகத்திலிருந்து விரட்டப்பட்டு, அக்கினியில் அழிக்கப்படுவதையும் கண்டான். PPTam 80.3
ஏனோக்கு நீதியை பிரசங்கித்து, தேவன் தனக்கு வெளிப்படுத் தினவைகளை மக்களுக்கு அறிவித்தான். ஆண்டவருக்கு பயந்த வர்கள் அவனுடைய போதனையையிலும் ஜெபங்களிலும் பங் கெடுக்க இந்த பரிசுத்த மனிதனை நாடினார்கள். அவன் எச்சரிப்பின் வார்த்தைகளைக் கேட்கக்கூடிய அனைவருக்கும் தேவனுடைய செய்தியை சுமந்து சென்று, வெளியரங்கமாகவும் உழைத்தான். அவனுடைய வேலைகள் சேத்தின் பிள்ளைகளோடு நின்றுவிட வில்லை. தெய்வீக பிரசன்னத்திலிருந்து காயீன் விலகியோடின தேசத்திலும், தரிசனத்தில் தனக்கு முன் கடந்து சென்ற ஆச்சரியமான காட்சிகளை தேவனுடைய தீர்க்கதரிசி அறிவித்தான். இதோ, எல் லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவ பக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்து வந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிற தற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் (யூதா 14, 15) என்று அறிவித்தான். PPTam 81.1
பயமின்றி பாவத்தைக் கடிந்து கொண்ட ஒருவனாக அவன் இருந்தான். தனது காலத்திலிருந்த மக்களுக்கு தேவனுடைய அன்பை பிரசங்கித்து, தங்களுடைய தீய வழிகளைவிட்டு வரும்படி அவர்களோடு மன்றாடினபோதும், நிலவியிருந்த அக்கிரமத்தைக் கண்டித்து, மீறுகிறவன்மேல் நியாயத்தீர்ப்பு நிச்சயமாக வரும் என்று தன் தலைமுறையினரை எச்சரித்தான். கிறிஸ்துவின் ஆவியானவரே ஏனோக்கின் வழியாகப் பேசினார். அந்த ஆவி, அன்பான இரக்க மான, மன்றாடுகிற வார்த்தைகளில் மாத்திரம் வெளிப்படாது. பரி சுத்த மனிதர்களால் மென்மையான காரியங்கள் மாத்திரம் பேசப்படு வதில்லை. சொல்லும்படியாக, இருபுறமும் கருக்குள்ள பட்டயம் போல் வெட்டுகிற ஆழமான சத்தியங்களையும் தேவன் தம்முடைய தூதுவர்களின் உதடுகளிலும் இருதயங்களிலும் வைக்கிறார். PPTam 81.2
அதைக் கேட்டவர்களால் தேவனுடைய ஊழியக்காரனில் செயல்பட்ட அவருடைய வல்லமை உணரப்பட்டது. சிலர் எச்சரிப் புக்குச் செவிகொடுத்து தங்கள் பாவங்களை விட்டொழித்தார்கள். ஆனால் திரளானவர்கள் பவித்திரமான செய்தியைப் பரிகசித்து, தங்களுடைய தீய வழிகளில் அதிக தைரியமாகச் சென்றார்கள். தேவனுடைய ஊழியக்காரர்கள் கடைசி நாட்களில் இதேபோன்ற செய்தியை உலகிற்குக் கொண்டு செல்ல வேண்டும். அது அவிசு வாசத்தோடும் பரியாசத்தோடுந்தான் பெற்றுக்கொள்ளப்படும். தேவனோடு சஞ்சரித்தவனுடைய எச்சரிப்பின் வார்த்தைகளை பிரளயத்துக்கு முன்னிருந்த உலகம் நிராகரித்தது. அப்படியே கடைசிதலைமுறையும் ஆண்டவருடைய ஊழியக்காரரின் எச் சரிப்புகளை அலட்சியமாக எண்ணும். PPTam 81.3
சுறுசுறுப்பான வேலை கொண்ட வாழ்க்கை மத்தியிலும், ஏனோக்கு தேவனுடனான தனது தொடர்பை உறுதியாக பராமரித் தான். அவனுடைய உழைப்பு எவ்வளவு அதிகமாகவும் நெருக்கு வதாகவும் இருந்ததோ, அவ்வளவு தொடர்ச்சியாகவும் ஊக்கமாகவும் அவனது ஜெபங்கள் இருந்தன. சமுாயத்திலிருந்து சில சம் யங்களில் தன்னை பிரித்துக்கொள்வதில் அவன் தொடர்ந்தான். மக்கள் நடுவே சிலகாலம் இருந்து போதனையாலும் வாழ்க்கையாலும் அவர்களுக்கு நன்மை செய்ய உழைத்த பின், தேவன் மாத்திரமே வழங்கக்கூடிய தெய்வீக அறிவிற்காக பசியடைந்து, தாகமுற்று, தனிமையில் சில சமயம் செலவு செய்ய தன்னை விலக்கிக்கொண்டான். இவ்வாறாக, தேவனுடன் தொடர்பு கொண்டு தெய்வீக சாயலை அதிகம் அதிகமாகப் பிரதிபலிக்கும்படியாக ஏனோக்கு வந்தான். அவனுடைய முகம் பிரகாசமான பரிசுத்த ஒளியினால் இயேசுவின் முகத்தில் தானே பிரகாசிக்கிற ஒளியினால் பிரகாசமடைந்திருந்தது. இப்படிப்பட்ட தெய்வீகத் தொடர்பிலிருந்து அவன் வரும் போது, தேவபயமற்றவர்களுங்கூட அவன் முகத்தின் பரலோக முத் திரையை பிரமிப்போடு கண்டனர். PPTam 82.1
மனிதரின் துன்மார்க்கம் அவ்வளவு உயரம் எட்டியதால், அவர்களுக்கு எதிராக அழிவு அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் செல்லச் செல்ல, மனித குற்றம் ஆழம் ஆழமாக வளர்ந்து, இருண்டு காரிருளானது. என்றாலும் விசுவாச சாட்சியான ஏனோக்கு தன் வழியில் தொடர்ந்து எச்சரித்து, கெஞ்சி, மன்றாடி, குற்ற அலைகளைதிருப்பி அனுப்பவும், பழிவாங்கும் முழக்கத்தை நிறுத்தவும் போராடினான். பாவ இன்பத்தை நேசித்த மக்களால் அவனுடைய எச்சரிப்புகள் பொருட்படுத்தப்படாமல் போன போதிலும், தேவன் அங்கீகரித்த ஒரு சாட்சியைக் கொண்டிருந்து, பாவ உலகத்திலிருந்து பரலோகத்தின் தூய்மையான மகிழ்ச்சியில் தேவன் அவனைக் கொண்டு செல்லும் வரை, நிலவியிருந்த தீமைக்கு எதிராக விசுவாசத்தோடு போராடுவதில் தொடர்ந்தான். PPTam 82.2
இங்கே சம்பத்துக்களை சேர்த்துவைக்கவும், பொன்னையும் வெள்ளியையும் சேர்க்க நாடாமலும் இருந்த அவனுடைய மடத் தனத்தை அந்தத் தலைமுறையின் மனிதர்கள் பரிகசித்தனர். ஆனால் ஏனோக்கின் இருதயம் நித்தியமான பொக்கிஷங்களின் மேல் இருந்தது. அவன் வானலோக பட்டணத்தை பார்த்திருந்தான். அவன் சீயோன் நடுவிலே இராஜாவை அவருடைய மகிமையிலே கண்டிருந்தான். அவனுடைய மனமும், அவன் இருதயமும், அவன் பேச்சும் பரலோகத்திலிருந்தது. நிலவியிருந்த அக்கிரமம் எவ் வளவு பெரியதாயிருந்ததோ, அவ்வளவு ஊக்கமானதாக தேவனுடைய வீட்டைக் குறித்த அவனுடைய ஏக்கம் இருந்தது. பூமியிலே இருந்தபோதே, விசுவாசத்தினால் ஒளியின் வட்டத்தில் அவன் வசித்துக்கொண்டிருந்தான். PPTam 82.3
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். மத்தேயு 58. முன்னூறு வருடங்களாக பரலோகத்தோடு இசைவாயிருக்கும்படி ஏனோக்கு ஆத்துமாவின் தூய்மையைத் தேடியிருந்தான். மூன்று நூற்றாண்டுகள் அவன் தேவ னோடு நடந்தான். நாளுக்கு நாள் நெருக்கமான இணைப்பிற்காக அவன் ஏங்கினான். தேவன் அவனைத் தம்மோடு எடுத்துக்கொள்ளும் வரையிலும், தொடர்பு நெருங்கி நெருங்கி வளர்ந்தது. நித்திய உலகத்தின் வாசற்படியிலே அவன் நின்றான். அவனுக்கும் ஆசீர் வாத நாட்டிற்குமிடையே ஒரு அடிமாத்திரமே இருந்தது. இப்போது முன்வாசல் கதவுகள் அவனுக்குத் திறந்தது. பூமியின் மேல் தேவ னோடு கொண்டநடை தொடர்ந்தது. மனிதர்களுக்கு நடுவேயிருந்து அதற்குள் பிரவேசிக்கும் முதல் நபராக அவன் பரிசுத்த நகரத்தின் வழியாகக் கடந்து சென்றான். PPTam 83.1
அவனுடைய இழப்பு பூமியிலே உணரப்பட்டது. எச்சரிப்பிலும் பேதனையிலும் நாளுக்குநாள் கேட்கப்பட்டுவந்த சத்தம் காணா மற்போனது. நீதிமான்களிலும் துன்மார்க்கரிலும் சிலர் அவன் சென்றதைக் கண்டிருந்தனர். ஓய்வெடுக்கும் இடங்கள் ஒன்றிற்கு அவன் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்னும் நம்பிக்கையில், பின்நாட்களில் தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலியாவைத் தேடினதைப் போல், அவனை நேசித்திருந்தவர்கள் அவனை ஜாக்கிரதையாகத் தேடினார்கள். ஆனால் எவ்வித பலனுமில்லை. அவன் காணப்படா மற்போனான். தேவன் அவனை எடுத்துக்கொண்டார் என்று திரும்பி வந்து சொன்னார்கள். PPTam 83.2
ஏனோக்கு மறுரூபமடைந்ததின் வழியாக முக்கியமான பாடங்களை கற்றுக்கொடுக்க ஆண்டவர் திட்டம் பண்ணியிருந்தார். ஆதாமுடைய பாவத்தின் பயப்படக்கூடிய விளைவுகளால் மனிதர்கள் உற்சாகமின்மைக்குத் தங்களைக் கொடுத்துவிடும் ஆபத்து உள்ளது. பாரமான சாபம் இந்த இனத்தின் மேல் இருப் பதாலும், மரணமே நம்முடைய பங்காக இருப்பதாலும், நாங்கள் ஆண்டவருக்கு பயப்பட்டு அவருடைய நியமங்களைக்கடைபிடிப் பதினால் என்ன நன்மை இருக்கிறது என்று அநேகர் ஆச்சரியமாகச் சொல்ல ஆயத்தமாயிருந்தனர். ஆனால் ஆதாமுக்கு தேவன் கொடுத்து, பின்னர் சேத்குடும்பத்தினரால் மீண்டும் சொல்லப்பட்டு, ஏனோக்கினால் வாழ்ந்து காட்டப்பட்ட போதனைகள், மனச்சோர் வையும் இருளையும் துடைத்து, ஆதாமினால் மரணம் வந்தது போல் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மீட்பரால் ஜீவனும் அழியாமையும் வரும் என்கிற நம்பிக்கையை மனிதனுக்குக் கொடுத்தது. நீதி மானுக்கு எந்த பரிசும் இல்லை; துன்மார்க்கருக்கு எந்த தண்டனையும் இல்லை; மனிதனால் தெய்வீக கட்டளைகளுக்குக் கீழ்ப் படிவது PPTam 83.3
கூடாத காரியம் என்கிற நம்பிக்கையை மனிதர்மேல் சாத்தான் திணிக்கிறான். ஆனால் ஏனோக்கின் காரியத்தில், அவர் உண்டென் றும், அவர்தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென் றும் (எபிரெயர் 11:6) அவர் அறிவிக்கிறார். தமது கற்பனைகளை கைக்கொள்ளுவோருக்கு என்ன செய்வார் என்று அவர் காண்பிக் கிறார். தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவது கூடும் என் றும், பாவம் மற்றும் கெட்டுப்போன மக்கள் மத்தியில் வசித்தாலும், சோதனைகளை எதிர்த்து தூய்மையும் பரிசுத்தமும் அடைய தேவனுடைய கிருபையினால் அவர்களுக்கு முடிந்தது என்றும் மனிதர் போதிக்கப்பட்டார்கள். அவனுடைய உதாரணத்தில் அப்படிப்பட்ட வாழ்க்கையின் ஆசீர்வாதத்தை அவர்கள் கண்டார்கள். இதற்குப் பின் கீழ்ப்படிந்தவர்களுக்குக் கிடைக்கவிருக்கிற மகிழ்ச்சியையும் மகிமையையும் அழியாத வாழ்க்கையையும், மீறினவர்களுக்குக் கிடைக்கவிருக்கிற ஆக்கினையையும் ஆபத்தையும் மரணத்தையும் குறித்த அவனுடைய தீர்க்கதரிசனத்தின் உண்மைக்கு அவனுடைய மறுரூபம் ஒரு சான்று. PPTam 84.1
ஏனோக்கு மரணத்தைக்காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; .... அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத் துக்கொள்ளப் படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றான். எபிரெயர் 11:5. தனது அக்கிரமத்தினால் அழிவுக்கென்று குறிக்கப்பட்ட உல கத்தின் நடுவே ஏனோக்கு தேவனோடு நெருக்கமான தொடர் புடைய அப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்தான். எனவே மரணத் தின் வல்லமையின்கீழ் விழ அவன் அனுமதிக்கப்படவில்லை இந்த தீர்க்கதரிசியின் தேவகுணம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது பூமியிலிருந்து மீட்கப்பட (வெளி 14:3) இருக்கிறவர்கள் கட்டாயம் அடைந்திருக்கவேண்டிய நிலையை எடுத்துக்காட்டு கிறது. அப்போது ஜலப்பிரளயத்துக்கு முன்பிருந்த உலகத்தில் இருந்ததைப்போன்று அக்கிரமம் நிலவும். கெட்டுப்போன இதயத்தின் தூண்டுதலையும் ஏமாற்றும் தத்துவங்களின் போதனைகளையும் பின்பற்றி மனிதன் பரலோக அதிகாரத்திற்கு எதிராக கல கம் செய்வான். ஆனால் ஏனோக்கைப்போல் கிறிஸ்துவின் சாயலை பிரதிபலிக்கும் வரையிலும் தேவனுடைய பிள்ளைகள் இருதயத்தின் தூய்மையையும் அவருடைய சித்தத்திற்கு இசைவாயிருப்பதையும் தேடுவார்கள். ஏனோக்கைப்போல் ஆண்டவருடைய இரண்டாம் வருகையைக் குறித்தும் மீறுதல்காரர்மேல் வரும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் அவர்கள் உலகத்தை எச்சரித்து, தங்களுடைய பரிசுத்த வாழ்க்கையினாலும் உதாரணத்தினாலும் தேவபக்தியற்றவர்களுடைய பாவங்களைக் கடிந்து கொள்ளுவார்கள். ஜலத்தினால் உல கம் அழிக்கப்படுவதற்கு முன்பாக ஏனோக்கு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைப்போல, உயிரோடிருக்கும் நீதி மான்கள் உலகம் அக்கினியால் அழிக்கப்படும் முன்பாக பூமியிலிருந்து மறுரூபமாவார்கள். நாமெல்லாரும் நித்தியரையடைவ தில்லை ; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும் போது, ஒரு நிமி ஷத்திலே ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக் கப்படுவோம். கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூத னுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்; எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக் கப்படுவோம். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முத லாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த் தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழு தும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தை களினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள் (1கொரி 15:5152, 1தெச 4:16-18) என்று அப்போஸ்தலன் சொல்லுகிறான். PPTam 84.2