கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்
23 - எகிப்தின் வாதைகள்
துதர்களால் அறிவுறுத்தப்பட்ட ஆரோன், வெகுகாலம் விட்டுப்பிரிந்திருந்த சகோதரனைச் சந்திக்கும்படியாகச் சென்றான். அவர்கள் ஓரேபுக்கு சமீபமாயிருந்தவனாந்திரத்தின் தனிமைகளில் சந்தித்தார்கள். இங்கே அவர்கள் ஒருவரோடொருவர் பேச, மோசே தன்னை அனுப்பின் கர்த்தருடைய சகலவார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும் (யாத். 4:28) ஆரோனுக்குச் சொன்னான். இருவரும் சேர்ந்து எகிப்துக்குப் பயணித்தார்கள். கோசேன் நாட்டை சென்றடைந்தபோது, இஸ்ரவேலர்களின் மூப்பர்களை கூட்டிச் சேர்க்கும்படி சென்றார்கள். தேவன் மோசேயோடு நடந்து கொண்ட விதங்களை யெல்லாம் ஆரோன் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான். மோசேக்கு ஆண்டவர் கொடுத்த அடையாளங்கள் பின்னர் ஜனங்களின் முன்பாக காட்டப்பட்டது. ஜனங்கள் விசுவாசித்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும் அவர்கள் கேட்டபோது, தலை குனிந்துத் தொழுது கொண்டார்கள் வசனம் 31. PPTam 310.1
இராஜாவிற்கான செய்தி ஒன்றும் மோசேயிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இரண்டு சகோதரர்களும் இராஜாதி இராஜாவின் தூதுவர்களாக பார்வோனுடைய அரண்மனைக்குள் பிரவேசித்து, அவருடைய நாமத்தில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போக விடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள். PPTam 310.2
(நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? என்று அந்த மன்னன் கோரினான். நான் கர்த்தண அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான். PPTam 311.1
அவர்கள் எபிரெயருடைய தேவன் எங்களைச் சந்தித்தார், நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி போகவிட வேண்டும், போகாதிருந்தால், அவர் கொள்ளை நோயும் பட்டயமும் எங்கள் மேல் வரப்பண்ணுவார் என்று பதிலளித்தார்கள். PPTam 311.2
அவர்களைக்குறித்த செய்தியும், ஜனங்கள் நடுவே அவர்கள் தூண்டிவிட்டிருந்த ஆர்வத்தைக் குறித்த செய்தியும் ஏற்கனவே இராஜாவை சென்றடைந்திருந்தது. அவன் கோபம் தூண்டப்பட்டது. மோசேயும் ஆரோனுமாகிய நீங்கள் ஜனங்களைத் தங்கள் வேலைகளை விட்டுக் கலையப்பண்ணுகிறது என்ன? உங்கள் சு மைகளைச் சுமக்கப் போங்கள் என்றான் அவன். இந்த அந்நியர்களின் தலையீட்டினால் இராஜாங்கம் ஏற்கனவே நஷ்டப்பட்டிருந்தது. இதை நினைத்தவனாக . இதோ, தேசத்தில் ஐனங்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; அவர்கள் சுமை சுமக்கிறதை விட்டு ஓய்ந்திருக்கும் படி செய்கிறீர்கள் என்று சேர்த்துக் கூறினான். PPTam 311.3
தங்களது அடிமைத்தனத்தில் இஸ்ரவேலர்கள் தேவனுடைய பிரமாணங்களைக் குறித்த அறிவை ஓரளவிற்கு இழந்து, அதனுடைய நியமங்களிலிருந்து பிரிந்து சென்றிருந்தனர். ஓய்வு நாள் பொதுவாக கருத்தில் கொள்ளப்படாதிருந்து, அவர்களுடைய ஆளோட்டிகளின் நிர்ப்பந்தங்கள் அதைக் கைக்கொள்ளுவதை கூடாத காரியமாக்கியிருந்தது. ஆனால் விடுதலையின் முதல் நிபந்தனை தேவனுக்குக் கீழ்ப்படிவதே என்று மோசே காண்பித்திருந்தான். ஓய்வு நாளை மீண்டும் கைக்கொள்ளும்படி செய்யப்பட்ட PPTam 311.4
முயற்சிகள் அவர்களை ஒடுக்குகிறவர்களின் கவனத்திற்கு வந்தது. PPTam 311.5
முழுமையாக தூண்டப்பட்டிருந்த இராஜா, இஸ்ரவேலர்கள் தனக்கு சேவை செய்வதிலிருந்து கலகம் பண்ணுகிறார்கள் என்று சந்தேகித்தான். சும்மாயிருப்பதினால் தான் விருப்பம் குறைகிறது. ஆபத்தான சதித் திட்டங்களுக்கு அவர்களுக்கு எந்த நேரமும் கொடுக்கப்படாமல் அவன் பார்த்துக்கொள்ளுவான். அவர்களுடைய அடிமைத்தனத்தை கடினமாக்கவும் அவர்களுடைய சு தந்திரமான ஆவியை நசுக்கிப்போடவும் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டான். அவர்களுடைய வேலையை இன்னமும் கொடுமையும் ஒடுக்கமுமாக்கும் படியான சட்டங்கள் அந்த நாளிலேதானே போடப்பட்டன. வெய்யிலில் காயவைக்கப்பட்ட செங்கல் தான் அந்த நாட்டில் பொதுவாக கட்டடம் கட்ட அதிகம் உபயோகிக்கப்பட்டது. மிக நேர்த்தியான மாளிகைகளின் சுவர்கள் இதனால் கட்டப்பட்டு, பின்னர் அவைகளின்மேல் கற்கள் பொருத்தப்பட்டன. செங்கல்லை உற்பத்தி செய்ய மிக அதிக எண்ணிக்கையிலான அடிமைகள் உபயோகப்பட்டனர். வெட்டப்பட்ட வைக்கோல் பிணைப்பிற்காக களிமண்ணோடு கலக்கப் பட்டதால், அதிக அளவிலான வைக்கோல் வேலைக்குத் தேவைப்பட்டது. இனி வைக்கோல் கொடுக்கப்படமாட்டாது என்றும், உழைப்பாளிகள் அதைத் தாங்களே சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அதே சமயம், அதே அளவு செங்கல் கொடுக்கப்பட வேண்டும் என்றும் இராஜா இப்போது அவர்களுக்குக் கட்டளையிட்டான். PPTam 312.1
தேசம் முழுவதிலுமிருந்த இஸ்ரவேலர்களுக்கு இந்தக் கட்டளை மாபெரும் துயரத்தைக் கொண்டு வந்தது. எகிப்திய ஆளோட்டிகள் மக்களின் வேலையை கண்காணிப்பதற்காக எபிரெய தலைவர்களை நியமித்திருந்தனர். இந்தத் தலைவர்கள் தங்களுக்குக் கீழ் இருந்தவர்களின் வேலைக்குப் பொறுப்பாளிகளாக இருந்தனர். இராஜாவின் கோரிக்கை செயல்படுத்தப்பட்ட போது, வைக்கோலுக்குப் பதிலாக தாளடிகளைச் சேகரிக்கும்படி ஜனங்கள் தேசம் எங்கும் சிதறினார்கள். ஆனால் எப்போதும் செய்யும் அளவு வேலை செய்ய அவர்களுக்குக் கூடாதிருந்தது. இந்த இயலாமைக்காக எபிரெய தலைவர்கள் கொடுமையாக அடிக்கப்பட்டனர். PPTam 312.2
இந்த ஒடுக்குதல் இராஜாவிடமிருந்து அல்ல, தங்களுடைய ஆளோட்டிகளிடமிருந்து வந்திருக்கிறது என்று இந்தத் தலைவர்கள் நினைத்தார்கள். இதினிமித்தம் வருத்தத்தோடு அவர்கள் இராஜாவிடம் சென்றார்கள். அவர்களுடைய வருத்தம். நீங்கள் சோம்பலாயிருக்கிறீர்கள் சோம்பலாயிருக்கிறீர்கள்; அதினால் தான் போகவேண்டும், கர்த்தருக்குப் பலியிட வேண்டும் என்கிறீர்கள் என்று பார்வோனால் இகழ்ச்சியாகச் சந்திக்கப்பட்டது. அவர்களுடைய பாரம் எவ்விதத்திலும் குறைக்கப்படாது என்று அறிவிக்கப் பட்டு, மீண்டும் வேலைக்குச் செல்லும்படியும் கட்டளையிடப்பட்ட னர். திரும்பி வரும் வழியில் அவ்கள் மோசேயையும் ஆரோனையும் சந்தித்து, நீங்கள் பார்வோனின் கண்களுக்கு முன்பாகவும் அவருடைய ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் எங்கள் வாசனையைக் கெடுத்து, எங்களைக் கொல்லும்படி அவர்கள் கையிலே பட்டயத்தைக் கொடுத்ததினிமித்தம், கர்த்தர் உங்களைப் பார்த்து நியாயந்தீர்க்கக்கடவா என்று முறையிட்டனர். PPTam 312.3
இந்த நிந்தனைகளை மோசே கேட்டபோது அதிக துயரமடைந் தான். ஜனங்களின் பாடுகள் மிகவும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தேசம் முழுவதும் வயோதிகர் முதல் வாலிபர் வரை அனைவரிட மிருந்தும் விரக்தியின் குரல் மேலெழும்ப, தங்களுடைய நிலை மையில் வந்த ஆபத்தான இந்த மாற்றத்திற்கு அவனை காரணங் காட்ட அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர். ஆத்துமத்தின் கசப்போடு அவன் தேவன் முன் சென்று : ஆண்டவரே, இந்த ஜனங்களுக்குத் தீங்கு வரப்பண்ணினதென்ன? ஏன் என்னை அனுப்பி னீர்? நான் உமது நாமத்தைக் கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்தது முதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்து கிறான்; நீர் உம்முடைய ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்று அழுதான். நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய், பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்தி விடுவான் என்று அவனுக்குப் பதில் வந்தது. தேவன் பிதாக்களோடு செய்த உடன்டிக்கை அவனுக்கு மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டு, அது நிறைவேறும் என்கிற நிச்சயமும் கொடுக்கப்பட்டது. PPTam 313.1
எகிப்தில் அடிமையாக இருந்த காலங்கள் நெடுகிலும் யெகோவா தேவனை தொழுது கொள்ளுவதில் நிலைத்திருந்த சிலர் இஸ்ரவேலர் நடுவே இருந்தனர். தங்களுடைய பிள்ளைகள் அனுதினமும் புறஜாதியாரின் அருவருப்புகளைக் காண்கிறதினாலும், பொய்யான தேவர்களுக்கு பணிகிறதினாலுங்கூட இவர்கள் மிகவும் வருத்தப்பட்டிருந்தனர். விக்கிரகாராதனையின் கெடுக்கும் செல்வாக்கிலிருந்து விடுதலை பெறுவதற்கேதுவாக, எகிப்திய நுகத்திலிருந்து விடுதலை தரும்படி தங்கள் துயரத்தில் அவர்கள் ஆண்டவரை நோக்கி கதறியிருந்தனர். அவர்கள் தங்களுடைய விசுவாசத்தை மறைத்து வைக்காமல், தங்கள் ஆராதனை வானத் தையும் பூமியையும் உண்டாக்கின் ஒரே மெய்யான ஜீவனுள்ள தேவனுக்கே என்று எகிப்தியர்களுக்கு அறிவித்திருந்தனர். சிருஷ் டிப்பிலிருந்து யாக்கோபினுடைய நாட்கள் வரையிலும், அவர் இருக் கிறார் என்பதற்கும் அவருடைய வல்லமைக்கும் இருந்த சான்றுகளை அவர்கள் மீண்டும் கூறினர். இவ்வாறாக எபிரெயர்களின் மதத்தோடு அறி முகமாக எகிப்தியர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இருந்தது. என்றாலும் தங்களுடைய அடிமைகளால் போதிக்கப் படுவதை அலட்சியப்படுத்தி, வெகுமானங்களைக் குறித்த வாக்குத்தத்தங்களால் தேவனைத் தொழுது கொண்டவர்களை மயக்க முயற்சித்து, அதில் தோல்வியடைந்ததால் பயமுறுத்தவும் கொடுமை செய்யவும் முயற்சித்தார்கள். PPTam 313.2
தங்கள் பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களைக் திரும்பக் கூறுவதினாலும், யோசேப்பின் மரணத்திற்கு முன்பு எகிப்திலிருந்து விடுதலையாவதைக் குறித்து முன் சொல் லப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தைகளை மீண்டும் சொல்லுவதினாலும் இஸ்ரவேலர்களின் மூப்பர்கள் மூழ்கிக்கொண்டிருந்த விசுவாசத்தை நிலைநிறுத்த முயற்சித்தார்கள். PPTam 314.1
சிலர் கவனித்து விசுவாசித்தனர். மற்றவர்கள் தங்களைச் சுற்றியிருந்த சூழ்நிலைகளைக்கண்டு நம்பிக்கை கொள்ள மறுத்தனர். எகிப்தியர்கள் அடிமைகள் நடுவே அறிவிக்கப்பட்டதைக் குறித்து கேள்விப்பட்டு, அவர்களுடைய எதிபார்ப்புகளை பரிகசித்து, அவர்களுடைய தேவனின் வல்லமையை ஏளனமாக மறுதலித் தனர். அடிமை ஜாதியாக இருக்கும் அவர்களுடைய நிலைமையை சுட்டிக்காட்டி, உங்கள் தேவன் நீதியும் இரக்கமுமுள்ளவராயிருந்து, எகிப்திய தேவர்களுக்கு மேலான வல்லமையை பெற்றிருப்பாரானால், அவர் ஏன் உங்களை விடுதலை செய்யவில்லை? என்று இகழ்ச்சியாகக் கூறினர். தங்களுடைய நிலையை கவனிக்கும்படி அவர்கள் அழைத்தனர். பொய்தேவர்கள் என்று இஸ்ரவேலர்களால் அழைக்கப்பட்ட தேவர்களை அவர்கள் வணங்கியிருந்தும், ஐசுவரியமும் வல்லமையுமுள்ள ஜனமாக இருப்பதாகவும், தங்களுடைய தேவர்கள் தங்களை ஆசீர்வதித்து செழிக்கப்பண்ணு வதாகவும், இஸ்ரவேலரை தங்களுக்கு வேலைக்காரர்களாகக் கொடுத்திருப்பதாகவும் அறிவித்து, யெகோவாவைத் தொழுது கொள்ளுகிறவர்களை ஒடுக்கவும் அழிக்கவும் தங்களுக்கு இருக்கும் வல்லமையில் பெருமை பாராட்டினர். பார்வோன் தானும் எபிரெயர்களின் தேவன் அர்களை தன் கையிலிருந்து விடுவிக்கக்கூடாது என்று சொல்லி பெருமை பாராட்டினான். PPTam 314.2
இப்படிப்பட்ட வார்த்தைகள் அநேக இஸ்ரவேலர்களின் நம்பிக்கைகளை அழித்துப்போட்டது. அந்த நிலை எகிப்தியர்கள் எடுத்துக்காட்டுவதைப்போலவே அவர்களுக்குக் காணப்பட்டது. அவர்கள் அடிமைகளாக இருந்து, அவர்களுடைய ஆளோட்டிகள் அவர்களை உபத்திரவப்படுத்த எப்படியெல்லாம் தெரிந்து கொண்டார்களோ, அவைகளை சகிக்க வேண்டியதிருந்தது மெய்தான். அவர்களுடைய குழந்தைகள் வேட்டையாடப்பட்டு, கொல்லப்பட்டனர்; அவர்களுடைய சொந்த வாழ்க்கையுமே அவர்களுக்கு பாரமாகியிருந்தது. எனினும் அவர்கள் பரலோகத்தின் தேவனை தொழுது கொண்டிருந்தார்கள். யெகோவா அனைத்து தேவர்களைக் காட்டிலும் மேலானவராக இருந்தால், விக்கிரக ஆராதனை செய்கிறவர்களுக்கு இவ்விதம் அடிமைகளாக நிச்சயமாகவே அவர்களை விட்டிருக்கமாட்டார். ஆனால் இஸ்ரவேலர் தேவனைவிட்டு பிரிந்து சென்று, புறஜாதி மக்களோடு திருமண உறவு வைத்து இவ்விதமாக விக்கிரகாரா தனைக்குள் நடத்தப்பட்ட அவர்களுடைய குணத்தினிமித்தமே தேவன் அவர்களை அடிமைகளாகும்படி அனுமதித்தார் என்று தேவனுக்கு உண்மையாக இருந்தவர்கள் புரிந்து கொண்டனர். அவர் ஒடுக்குகிறவனின் நுகத்தை விரைவில் முறிப்பார் என்று அவர்கள் தங்கள் சகோதரருக்கு நம்பிக்கையோடு உறுதியளித்தனர். PPTam 315.1
விசுவாசத்தின் எந்த விசேஷித்த போராட்டமுமின்றி, அல்லது எந்த கடின உழைப்பும் போராட்டமுமின்றி தங்களுடைய விடு தலையை அடைய வேண்டும் என்று எபிரெயர்கள் எதிர்பார்த்திருந்தனர். எனினும் விடுதலையடைய அவர்கள் இன்னமும் ஆயத் தப்பட்டிருக்கவில்லை. தேவனிடத்தில் குறைவான விசுவாசமே கொண்டிருந்தனர். அவர் தங்களுக்காக வேலை செய்யும் வரையிலும் தங்களுடைய உபத்திரவங்களை பொறுமையாக சகிக்க மனமின்றி இருந்தனர். அந்நிய தேசத்துக்கு குடிபெயர்வதால் உண் டாகும் கஷ்டங்களைச் சந்திப்பதற்கு பதிலாக அடிமைத் தனத்திலேயே PPTam 315.2
தங்கியிருப்பதில் அநேகர் மனநிறைவோடு இருந்தனர். மேலும் அவர்களில் சிலருடைய பழக்கங்கள் எகிப்தியருடைய தைப்போலவே மாறியிருந்ததால் எகிப்தில் தங்கியிருப்பதை அவர்கள் விரும்பினர். எனவேதான் பார்வோனின் முன்பு தமது வல்லமையை முதல் முறையாக வெளிப்படுத்தினபோதே ஆண்ட வர் அவர்களை விடுவிக்கவில்லை. எகிப்திய இராஜாவினுடைய கொடுமையான ஆவியை முழுமையாக விருத்தி செய்யவும், தம்முடைய ஜனங்களுக்கு தம்மை வெளிப்படுத்தவும் அவர் சம்பவங்களை முழுமையாக ஆட்சி செய்தார். அவருடைய நீதி யையும் அவருடைய அன்பையும் அவருடைய வல்லமையையும் கண்டு, எகிப்தைவிட்டு வெளியேறவும் அவருடைய சேவைக்கு ஒப்புக்கொடுக்கவும் அவர்கள் தெரிந்து கொள்ளுவார்கள். எகிப்தைவிட்டு வெளியேற மனமின்றி போகுமளவு அநேக இஸ்ரவேலர்கள் கெட்டுப்போகாதிருந்திருந்தால், மோசேயின் பணி மிகவும் இலகுவாக இருந்திருக்கும். PPTam 315.3
மீண்டும் தமது ஜனத்திடம் சென்று விடுதலையின் வாக்குத் தத்தத்தை, தெய்வீக தயவைக்குறித்த புதுப்பிக்கப்பட்ட நிச்சயத் தோடு திரும்பக் கூறும்படி ஆண்டவர் மோசேயை நடத்தினார். தனக்குக் கட்டளையிடப்பட்ட படியே அவன் சென்றான். ஆனால் அவர்கள் கவனிக்கவில்லை . வேதவாக்கியம் : அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற்போனார்கள் என்று சொல்லுகிறது. மீண்டும் நீ எகிப் தின் ராஜாவாகிய பார்வோனிடத்தில் போய், அவன் தன் தேசத் திலிருந்து இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடும்படி அவனோடே பேசு என்ற தெய்வீக செய்தி மோசேக்கு வந்தது. மிகவும் சோர் வுற்றவனாக அவன் இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப் பான்? என்று பதில் கொடுத்தான். ஆரோனை தன்னோடு அழைத்துக்கொண்டு பார்வோன் முன்பு செல்லவும், இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி கோரிக்கை வைக்கவும் அவன் அறிவுறுத்தப்பட்டான். PPTam 316.1
எகிப்தின் மேல் நியாயத்தீர்ப்புகளை கொண்டு வந்து, இஸ்ரவேலர்களை தம்முடைய வல்லமையின் குறிப்பான அடையாளங்களோடு வெளியே கொண்டு வரும் வரையிலும் அந்த இராஜா இணங்கமாட்டான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இராஜா தான் விரும்பினால் அதிலிருந்து தன்னை பாதுகாத் துக்கொள்ளுவதற்காக, ஒவ்வொரு வாதையின் வேதனைக்கு முன்பாகவும், அவ்வாதையின் இயல்பையும் விளைவுகளையுங்குறித்து மோசே விவரிக்க வேண்டும். அவனுடைய அகந்தையான இருதயம் தாழ்த்தப்பட்டு, வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவரே மெய்யான ஜீவனுள்ள தேவன் என்பதை அறிக்கை செய்யும் வரையிலும் நிராகரிக்கப்படும் ஒவ்வொரு தண்டனையும் இன்னும் கடுமையான தண்டனையால் பின்தொடரப்படும். யெகோவாவின் கட்டளைகளை எதிர்க்கும் போது, அவர்களுடைய வல்லமையான மனிதர்களின் ஞானம் எவ்வளவு மாயை என்பதையும், அவர்களுடைய தேவர்களின் வல்லமைகள் எவ்வளவு பலவீனமானது என்பதையும் பார்க்கும்படி ஆண்டவர் எகிப்தியர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பார். அவர்களுடைய விக்கிரக ஆராதனைக்காக அவர்களை தண்டித்து, உணர்வற்ற தெய்வங்களிடமிருந்து பெற்றுக்கொண்டதாக அவர்கள் பாராட்டின் பெருமைகளை மௌனமாக்குவார். மற்ற தேசங்கள் அவருடைய வல்லமையைக் கேட்டு அவருடைய வல்லமையான செயல்களினிமித்தம் நடுங்கத்தக்கதாகவும், அவருடைய ஜனங்கள் விக்கிர ஆராதனையிலிருந்து திரும்பி அவருக்கு தூய்மையான ஆராதனை செய்யத்தக்கதாகவும் தேவன் தமது நாமத்தை மகிமைப்படுத்துவார். PPTam 316.2
மீண்டும் மோசேயும் ஆரோனும் எகிப்து இராஜாவினுடைய செருக்கான மன்றங்களுக்குள் பிரவேசித்தார்கள். அங்கே, உயர்ந்த தூண்களாலும் பிரகாசமான அலங்காரங்களாலும், அஞ்ஞான தேவர்களைக் குறித்த நேர்த்தியான படங்களாலும் செதுக் கப்பட்ட உருவங்களாலும் சூழப்பட்டிருந்த அந்த இடத்தில், அப்போதிருந்த மிக வல்லமையான இராஜ்யத்தின் அரசனின் முன்பு, அடிமையாக்கப்பட்டிருந்த இனத்தின் பிரதிநிதிகளாக, தேவனிடமிருந்து வந்த இஸ்ரவேலர்களின் விடுதலைக்கான கட்டளையை மீண்டும் கூறும்படி அந்த இரண்டு பேரும் நின்றனர். அந்த இராஜா தெய்வீக கட்டளைக்கான சான்றாக ஒரு அற்புதத்தை கோரினான். அப்படிப்பட்ட ஒரு கோரிக்கை வருமானால் எவ்விதம் செயல்படவேண்டும் என்று மோசேயும் ஆரோனும் அறிவிக்கப்பட்டிருந்தனர். ஆரோன் இப்போது கோலை எடுத்து, பார்வோன் முன் போட்டான். அது சர்ப்பமாயிற்று. இராஜா சாஸ் திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின், ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று. பின்னர் இராஜா முன்பிருந்ததிலும் அதிக தீர்மானத்தோடு, தன்னுடைய மந்திரவாதிகள் மோசே ஆரோன் என்பவர்களின் வல்லமைக்கு ஒத்தவர்களென்று அறிவித்தான். ஆண்டவருடைய ஊழியக்காரரை ஏமாற்றுக்காரரென்றும் கூறி, அவர்களுடைய கோரிக்கைகளை தடுப்பதில் தான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தான். எனினும் அவர்களுடைய செய்தியை புறக்கணித்த அதே நேரம், அவர்களுக்கு தீங்கு செய்யக்கூடாதபடி தெய்வீக வல்லமையினால் தடுக்கப்பட்டிருந்தான். PPTam 317.1
பார்வோனின் முன்பாக அவர்கள் காண்பித்த அற்புதங்களை நடப்பித்தது தேவனுடைய கரமேயன்றி மோசேயும் ஆரோனும் பெற்றிருந்த மனித செல்வாக்கோ அல்லது வல்லமையோ அல்ல. மாபெரிய இருக்கிறவராகவே இருக்கிறேன் என்பவரே மோசே யை அனுப்பினார் என்றும், ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்காக இஸ்ரவேலை அனுப்புவது இராஜாவினுடைய கடமை என்றும் பார்வோனை நம்பவைக்கவே இந்த அடையாளங்களும் அற்புதங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன. மந்திரவாதி களும் அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பித்தார்கள். அவைகளை அவர்களுடைய சொந்த திறமையினால் மாத்திரமல்ல, யெகோவாவின் கிரியைக்குப் போலியை உண்டாக்க அவர்களுக்கு ஒத்துழைத்த அவர்களுடைய தேவனாகிய சாத்தானுடைய வல்லமையினாலும் அவர்கள் நடப்பித்தார்கள். PPTam 318.1
மந்திரவாதிகள் உண்மையில் தங்களுடைய கோல்களைச் ர்ப்பங்களாக மாற்றவில்லை. ஆனால் மாபெரும் வஞ்சகனின் உதவியோடு மந்திரத்தினால் அந்தத் தோற்றத்தை அவர்களால் உண்டாக்க முடிந்தது. கோல்களை உயிருள்ள சர்ப்பங்களாக மாற்றுவது சாத்தானுடைய வல்லமைக்கு அப்பாற்பட்டது. இந்த தீமையின் அதிபதி, விழுந்து போன தூதனுடைய அனைத்து ஞானத்தையும் வல்லமையையும் கொண்டிருந்த போதும் உண்டாக்கவோ அல்லது உயிரைக் கொடுக்கவோகூடிய வல்லமையை கொண்டிருக்கவில்லை. இது தேவனுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று. எனினும் செய்யும்படியாக தன் வல்லமையில் இருந்த அனைத்தையும் செய்தான். ஒரு போலியை உண்டா கண்களுக்கு கோல்கள் சர்ப்பங்களாக மாறின. அவ்வாறே பார்வோனாலும் அவனுடைய அவையினாலும் அவைகள் நம்பப்பட்டன. மோசேயினால் உண்டாக்கப்பட்டசர்ப்பத்திலிருந்து வேறுபடுத்திக் காண்பிக்கும் எதுவும் அவைகளின் தோற்றத்தில் இல்லை. போலியானவைகளை விழுங்கும்படி ஆண்டவர் மெய்யான சர்ப்பத்தை நடத்தியிருந்தபோதும், அதையும் தேவனுடைய வல்லமையின் கிரியையாக அல்லாமல், தன்னுடைய PPTam 318.2
ஊழியக்காரர்களுடையதைவிட மேன்மையான ஒரு மந் திரத்தின் விளைவு என்றே பார்வோன் கருதினான். PPTam 318.3
தெய்வீகக் கட்டளையை தடுக்கும் தன்னுடைய பிடிவாதத்தை நியாயப்படுத்த பார்வோன் வாஞ்சித்தான். எனவே, தேவன் மோசேயின் வழியாக நடப்பித்த அற்புதங்களை கருத்தில் கொள்ளாமலிருக்க சில சாக்குப்போக்குகளைத் தேடினான். அவன் விரும்பியதை சாத்தான் அவனுக்குக் கொடுத்தான். மந்திரவாதி களின் வழியாக தான் நடப்பித்த வேலையால் மோசேயும் ஆரோனும் மந்திரவாதிகளும் சூனியக்காரருமே என்றும், தெய்வீக நபரிடமிருந்து வரும் செய்திக்குரிய மரியாதையை அவர்கள் கொண்டு வந்த செய்தி உரிமை பாராட்ட முடியாது என்றும் தோன்றச் செய்தான். இவ்வாறாக, எகிப்தியர்களை அவர்களுடைய கலகத்தில் தைரியப்படுத்தி, பார்வோனுடைய இருதயத்தை நம்புவதற்கு எதிராக கடினப்படுத்தும் அதனுடைய நோக்கத்தை சாத்தானுடைய போலி நிறைவேற்றியது. அவனுடைய ஏதுகரங்கள் வெற்றிகொள்ளுவதற்கேதுவாக தங்களுடைய ஊழியம் தேவனிடமிருந்து வந்திருக்கிறது என்கிற நம்பிக்கையை மோசேயிலும் ஆரோனிலும் அசைக்கும்படியாகவும் சாத்தான் நம்பியிருந்தான். ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்காக இஸ்ரவேல் மக்கள் அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கப்படுவதை அவன் விரும்பவில்லை. PPTam 318.4
மந்திரவாதிகள் வழியாக தன்னுடைய அற்புதங்களை வெளிக்காட்டியதில் தீமையின் அதிபதிக்கு இன்னமும் ஆழமான நோக்கம் இருந்தது. மனித குடும்பத்தை ஆட்சி செய்யும் பாவத்தை முறிக்கவிருக்கும் கிறிஸ்துவை, இஸ்ரவேல் மக்கள் மேலிருக்கும் அடிமையின் நுகத்தை முறிப்பதின் வழியாக மோசே முன் குறித்திருந் தான் என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். கிறிஸ்துவரும் போது, தேவன்தாம் அவரை அனுப்பினார் என்று இந்த உலகத்திற்கு சான்று பகர, வல்லமையான அற்புதங்கள் நடப்பிக்கப்படும் என்று அவன் அறிந்திருந்தான். அவருடைய வல்லமையைக் குறித்து சாத்தான் நடுங்கினான். மோசேயின் மூலம் தேவன் நடப்பித்த வைகளுக்கு போலியை உண்டாக்குவதினால், இஸ்ரவேலின் விடுதலையை தடுப்பது மாத்திரமல்ல, கிறிஸ்துவின் அற்புதங்களின் மேலிருக்கும் விசுவாசத்தை அழிக்கக்கூடிய செல்வாக்கை வருங்காலத்திலும் ஏற்படுத்த அவன் நம்பியிருந்தான். கிறிஸ்துவின் கிரியைகளை போலியாக்கவும், தன்னுடைய சொந்த வல்லமைகளையும் உரிமைகளையும் ஸ்தாபிக்கவும் சாத்தான் நிலையாக வகைதேடிக்கொண்டிருக்கிறான். கிறிஸ்துவின் அற்புதங்களை மனித திறமை மற்றும் வல்லமையின் விளைவுகளாக காண்பிக்க மனிதர்களை அவன் நடத்துகிறான். இவ்வாறாக, கிறிஸ்து தேவ னுடைய குமாரன்தாம் என்னும் விசுவாசத்தை அநேக மனங்களில் அழித்து, மீட்பின் திட்டத்தின் வழியாக கிருபையாக கொடுக் கப்படும் இரக்கங்களை புறக்கணிக்கவும் அவர்களை நடத்து கிறான். PPTam 319.1
அடுத்த நாள் காலையில் இராஜா வழக்கமாக வருகிற ஆற்றங்கரைக்குச் செல்லும்படியாக மோசேயும் ஆரோனும் நடத்தப்பட்ட னர். எகிப்தின் உணவுக்கும் செல்வத்திற்கும் கரைபுரண்டோடின நைல்நதி ஆதாரமாக இருந்ததால், அந்த ஆறு தெய்வமாக ஆராதிக் கப்பட்டிருந்தது. இந்த இடத்திற்கு தன்னுடைய பயபக்தியை காண் பிக்கும்படி அனுதினமும் அரசன் வந்தான். இங்கே இவ்விரண்டு சகோதரர்களும் அவனுக்கு தங்கள் செய்தியை மீண்டும் சொல்லி, பின்னர் தங்கள் கோலை நீட்டி, நீரை அடித்தனர். அந்த புனிதமான நதி இரத்தமாக மாறி, மீன்கள் செத்துப்போய், நாற்றமெடுத்தது. வீடுகளில் இருந்த தண்ணீரும் கிணறுகளில் இருந்த தண்ணீரும் அதே போல இரத்தமாக மாறிற்று. ஆனால் எகிப்தின் மந்திரவாதி களும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; பார் வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான். ஏழு நாட்கள் இந்த வாதை தொடர்ந்தது. ஆனால் எந்த பலனும் இல்லை . PPTam 320.1
மீண்டும் கோல் தண்ணீர் மேல் நீட்டப்பட, நதியிலிருந்து தவளைகள் வந்து தேசம் முழுவதும் பரவியது. அவைகள் வீடுகளின் மேல் ஏறி, படுக்கையறைகளிலும் நுழைந்து, அடுப்பிலும் மாப்பிசையும் பாத்திரங்களிலும் காணப்பட்டன. எகிப்தியர்களால் தவளை புனிதமாகக் கருதப்பட்டது; அவர்கள் அதை அழிக்கமாட் டார்கள். ஆனால் தேசத்தை மூடியிருந்த அந்த ஜீவன்கள் இப்போது சகிக்கக்கூடாதவைகளாயிற்று. அவைகள் பார்வோனுடைய அரண்மனையிலும் கூட, அவைகளை அகற்றுவதில் இராஜா பொறுமையிழந்தான். மந்திரவாதிகளும் தவளைகளை உண்டாக்குவதைப்போல் காண்பித்தனர். ஆனால் அவர்களால் அவைகளை அகற்ற முடியவில்லை. இதைக்கண்ட பார்வோன் கொஞ்சம் தாழ்மைப்பட்டான். மோசேயையும் ஆரோனையும் அழைத்தனுப்பி, அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக் கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும் படி ஜனங்களைப் போகவிடுவேன் என்று சொன்னான். அவனுடைய முந்தைய பெருமையை இராஜாவுக்கு நினைவூட்டினபின், இந்த வாதையை அகற்ற ஜெபிக்கும்படியாக ஒரு நேரத்தை குறிக்கும்படி அவனிடம் அவர்கள் வேண்டினர். தவளைகள் தாங்களாகவே மறைந்து போகும் என்றும், இவ்விதமாக இஸ்ரவேலின் தேவனுக்கு ஒப்புக் கொடுக்கும் கசப்பான தாழ்மையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளலாம் என்றும் இரகசியமாக நம்பி, அவன் அடுத்த நாளைக் குறித்தான். ஆனாலும் குறிக்கப்பட்ட நேரம் வரையிலும் வாதை தொடர்ந்தது. எகிப்து முழுவதிலும் தவளைகள் செத்துப்போன போதும் அங்கேயிருந்த அவைகளுடைய கெட்டுப்போன சரீரங்கள் சுற்றுச்சூழலைக் கெடுத்தன. PPTam 320.2
அவைகள் தூளுக்குத் திரும்பும் படி ஆண்டவர் ஒரு நொடியிலே செய்திருக்கலாம். ஆனால் மந்திரவாதிகளின் வேலையைப் போலவே இது மந்திரம் அல்லது மாயவித்தையின் விளைவுதான் என்று இராஜாவும் அவனுடைய ஜனங்களும் சொல்லிவிடக் கூடாதென்று அவர் அவ்விதம் செய்யவில்லை . தவளைகள் செத் தபின் குவியல் குவியலாக கூட்டப்பட்டன. இது மந்திரத்தினால் செய்யப்படவில்லை, மாறாக பரலோகத்தின் தேவனிடமிருந்து வந்த நியாயத்தீர்ப்பு என்கிறதை தங்களுடைய வீணான தத்துவங்களால் மறுக்க முடியாதபடிக்கு இங்கே இராஜாவுக்கும் எகிப்து அனைத்திற்கும் ஒரு சான்று இருந்தது. PPTam 321.1
இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான். தேவனுடைய கட்டளையின்படி ஆரோன் கோலை நீட்டினான். பூமியின் புழுதி எகிப்து தேசம் முழுவதிலும் பேன்களாயிற்று. அவ்வாறே செய்ய பார் வோன் மந்திரவாதிகளை அழைப்பித்தான். ஆனால் அவர்களால் செய்ய முடியவில்லை. இவ்வாறாக, தேவனுடைய கிரியை சாத் தானுடையதைக் காட்டிலும் மிக மேலானது என்று காட்டப்பட்டது. மந்திரவாதிகள் தானும் இது தேவனுடைய விரல் என்று ஒப்புக் கொண்டனர். என்றாலும் இராஜா இன்னமும் அசைக்கப் படாதிருந்தான். PPTam 321.2
மன்றாட்டுகளும் எச்சரிப்புகளும் பலன் தராது போக மற்றொரு நியாயத்தீர்ப்பு அனுப்பப்பட்டது. அது சந்தர்ப்பத்தினால் வந்தது என்று சொல்லக்கூடாதபடி அது வரும் நேரமும் முன்னறிவிக்கப்பட்டது. தேசம் கெட்டுப்போகும் படியாக வண்டுகள் வீடுகளில் நுழைந்து, நிலத்தின் மீது கூட்டங்கூட்டங்களாக வந்தன . வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போயிற்று. இந்த வண்டுகள் பெரியவைகளாயிருந்தன. அவைகளின் தீண்டுதல் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் மிக அதிக வலியை உண்டாக்கியது. முன்னரே சொல்லப்பட்டபடி, இந்த நியாயத்தீர்ப்பு கோசேன் நாட்டிற்கு வரவில்லை. PPTam 321.3
எகிப்திலேயே பலியிடும் படியாக பார்வோன் இப்போது இஸ்ரவேலர்களுக்கு அனுமதி அளித்தான். ஆனால் அவர்கள் அப்படிப்பட்ட நிபந்தனையை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அப் படிச் செய்யத்தகாது; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் எகிப்தியருடைய அருவருப்பைப் பலியிடுகிறதாயிருக்குமே, எகிப்தியருடைய அருவருப்பை நாங்கள் அவர்கள் கண்களுக்கு முன்பாகப் பலியிட்டால், எங்களைக் கல்லெறிவார்கள் அல்லவா? என்று மோசே கூறினான். பலியிடும்படியாக எபிரெயர்களுக்கு தேவைப்பட்டிருந்த மிருகங்கள் எகிப்தியரால் புனிதமான கருதப்பட்டிருந்தன. எதிர்பாராமல் அவைகளில் ஒன்றைக் கொன்றாலும் அது மரணத்தால் தண்டிக்கப்படுகிற குற்றமாக எண்ணப்படுமளவு இந்த உயிரினங்கள் பயபக்தியானவையாக கருதப்பட்டிருந்தன. எனவே தங்கள் எஜமான்களை காயப்படுத்தாது எபிரெயர்கள் எகிப்திலேயே ஆராதனை செய்வது கூடாதகாரியமாயிருக்கும். மூன்று நாள் பிரயாணமான வனாந்தரத்திற்குள் செல்ல மோசே மீண்டும் கேட்டான். அரசன் ஒப்புக்கொண்டு, வாதை நீக்கப்படும்படி வேண்டிக்கொள்ள தேவனுடைய ஊழியக்காரர்களிடம் மன்றாடினான். செய்வதாக உறுதியளித்து, அவர்களுக்கு எதிராக வஞ்சனையாக நடந்து கொள்ளாதிருக்க அவர்கள் அவனை எச்சரித்தனர். வாதை நிறுத்தப்பட்டது. இராஜாவின் இருதயம் பிடிவாதமான கலகத்தால் கடினப்பட்டு, இணங்கிவர அவன் இன்னமும் மறுத்தான். PPTam 321.4
இன்னும் அதிக பயங்கரமான அடி வயலில் இருந்த எகிப்திய மிருகங்கள் அனைத்தின் மேலும் கொள்ளை நோய் தொடர்ந்தது. புனிதமான மிருகங்களும் பாரஞ்சுமந்த மிருகங்களுமாக கன்றுகளும் மாடுகளும் ஆடுகளும் குதிரைகளும் ஒட்டகங்களும் கழுதைகளும் அழிந்து போயின. எபிரெயர்கள் இதற்கு விலக்கப்பட வேண்டும் என்பது குறிப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாக வில்லை என்ற மோசேயின் அறிவிப்பை இஸ்ரவேலர்களின் வீடுகளுக்கு தூதுவர்களை அனுப்பினதன் வழியாக பார்வோன் உறுதிப்படுத்திக்கொண்டான். இன்னமும் இராஜா பிடிவாதமாக இருந்தான். PPTam 322.1
அடுத்ததாக சூளையின் சாம்பலை எடுத்து, பார்வோனுடையன்களுக்கு முன் வானத்திற்கு நேராக இறைக்க மோசே நடத் தப்பட்டான். இந்தச் செயல் ஆழமான குறிப்பைக் கொண்டிருந்தது. நானூறு வருடங்களுக்கு முன்பு தமது ஜனங்களின் எதிர்கால ஒடுக்கத்தை புகைகிற சூளை மற்றும் அக்கினி ஜூவாலையின் வழியாக தேவன் ஆபிரகாமிற்குக் காண்பித்திருந்தார். அவர்களை ஒடுக்கினவர்கள் மேல் நியாயத்தீர்ப்புகளை அனுப்பி, சிறைப்பட்ட வர்களை மிகுந்த பொருட்களோடு வெளிக்கொண்டு வருவார் என்று அவர் அறிவித்திருந்தார். எகிப்தின் உபத்திரவச் சூளையில் இஸ்ரவேல் நீண்டகாலம் வாதிக்கப்பட்டிருந்தது. தேவன் தம்முடைய உடன்படிக்கையைக் குறித்து நினைவாயிருக்கிறார் என்பதற்கும் அவர்களுடைய விடுதலையின் நேரம் வந்துவிட்டது என்பதற்குமான உறுதியாக மோசேயின் இந்தச் செயல் அவர்களுக்கு இருந்தது. PPTam 322.2
வானத்தை நோக்கி சாம்பல் தூவப்பட்டபோது, அதன் துகள்கள் எகிப்து முழுவதிலும் படர்ந்தது. எங்கெங்கெல்லாம் அவைகள் தங்கினவோ அங்கெல்லாம் மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் எளிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று. இதுவரையிலும் ஆசாரியர்களும் மந்திரவாதிகளும் பார்வோ னுடைய பிடிவாதத்தை ஊக்கப்படுத்தியிருந்தனர். ஆனால் இப்போது அவர்களையும் சென்றடைந்த நியாயத்தீர்ப்பு வந்திருக் கிறது. அருவருக்கத்தக்க மற்றும் வேதனையான வியாதியால் அடிக்கப்பட்டு, அவர்களுடைய தற்பெருமையின் ஆவி அவர் களுக்கு வெறுப்பேற்ற, இஸ்ரவேலின் தேவனுக்கு எதிராக வாதிட அதற்கு மேல் முடியாதவர்களானார்கள். தங்களுடைய சொந்த சரீ ரத்தையே காத்துக்கொள்ளக் கூடாதிருந்த மந்திரவாதிகளை நம்பும் மடத்தனத்தைக் காண முழு தேசமும் நடத்தப்பட்டது. PPTam 323.1
இன்னமும் பார்வோனின் இருதயம் கடினமடைந்தது. பூமியெங்கும் என்னைப்போல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும் படிக்கு, இந்தமுறை நான் சகலவிதவாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர் மேலும் உன் ஜனங்கள் மேலும் அனுப்புவேன் என்று அறிவித்து ஆண்டவர் இப்போது அவனுக்கு ஒரு செய்தியை அனுப்பினார். இந்த நோக்கத்திற்காக தேவன் அவனுக்கு உயிர்கொடுத்திருந்தார் என்று அல்ல, மாறாக, இஸ்ரவேலர்களின் விடுதலைக்காக குறிக்கப்பட்ட அந்த நேரத்தில் சிங்காசனத்தின்மேல் அவனை வைக்கும்படியாக அவருடைய ஏற்பாடு சம்பவங்களை ஆட்சி செய்தது. இந்த அகந்தையான கொடுங்கோலன் தன்னுடைய குற்றங்களினால் தேவனுடைய இரக்கத்தை தள்ளியிருந்தபோதும், அவனுடைய பிடிவாதத்தினால் எகிப்து தேசத்தில் ஆண்டவர் தமது அதிசயங்களை வெளிக்காட்டு வதற்கேதுவாக அவனுடைய வாழ்க்கை பாதுகாக்கப்பட்டிருந்தது. சம்பவங்களின் நடக்கை தேவனுடைய ஏற்பாட்டின்படியானதே. தெய்வீக வல்லமையின் பயங்கரமான வெளிப்படுத்துதல்களை எதிர்த்து நிற்க துணிவற்றிருக்கிற இரக்கமுள்ள ஒரு இராஜாவை சிங்காசனத்தின் மேல் அவர் வைத்திருக்கலாம். அப்படிப்பட்ட நிலையில் ஆண்டவருடைய நோக்கங்கள் நிறைவேறக்கூடாது போயிருக்கும். விக்கிரகாராதனையின் கீழாக்குகிற செல்வாக்கைக் குறித்து தமது ஜனங்கள் வஞ்சிக்கப்படக்கூடாது என்பதற்காக, எகிப்தியர்களின் நசுக்கும் கொடுமையை அனுபவிக்கும் படி அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பார்வோனுடன் நடந்துகொண்ட விதத்தில் விக்கிரகாராதனையின் மேல் தமக்கிருக்கும் வெறுப்பையும், கொடுமையையும் ஒடுக்குதலையும் தண்டிக்கும் தமது தீர்மானத்தையும் ஆண்டவர் வெளிப்படுத்தினார். PPTam 323.2
பார்வோனைக் குறித்து தேவன்: நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன், அவன் ஜனத்தைப் போகவிடான் (யாத். 4:21) என்று அறிவித்தார். இராஜாவின் இருதயத்தை கடினப்படுத்த இயற்கைக்கு மேலான எந்த வல்லமையும் செயல்படுத்தப்பட வில்லை. தேவன் பார்வோனுக்கு தெய்வீக வல்லமையின் மிக குறிப்பான சான்றுகளைக் கொடுத்தார். ஆனால் இராஜா பிடிவாதமாக வெளிச்சத்தை கவனிக்க மறுத்தான். அவனால் நெகிழப்பட்ட நித்திய வல்லமையின் ஒவ்வொரு வெளிப்பாடும் அவனை அவனுடைய மீறுதலில் அதிகத் தீர்மானமுள்ள வனாக்கிற்று. முதலாவது அற்புதத்தை நிராகரித்தபோது அவன் விதைத்த கலகத்தின் விதைகள் அவைகளின் அறுவடையை உண்டாக்கிற்று. ஒருபடி பிடிவாதத்திலிருந்து அடுத்தபடிக்கு முன்னேறி, தன்னுடைய சொந்த வழியை தொடரத்துணிந்தபோது, மரித்துப்போன முதல் பிள்ளைகளின் குளிர்ந்த முகங்களை காணும்படி அழைக்கப்படும் வரையிலும் அவனுடைய இருதம் அதிகமதிகமாக கடினப்பட்டது. PPTam 324.1
எச்சரிப்புகளையும் ஆபத்தைக்குறித்த அறிவிப்புகளையும் கொடுத்து, பாவத்தைக் கண்டித்து, தேவன் தமது ஊழியக்காரர்களின் மூலமாக மனிதர்களோடு பேசுகிறார். குணத்தில் உறுதிப்படுவதற்கு முன்னதாக ஒவ்வொருவருக்கும் தன்னுடைய தவறுகளை திருத்திக்கொள்ளும் சந்தர்ப்பத்தை அவர் கொடுக்கிறார். ஆனால் சரிப்படுத்தப்பட்ட ஒருவர் மறுக்கும் போது, அவனுடைய சொந்த செயலின் இயல்பை எதிர்த்து செயல்பட தெய்வீக வல்லமை இடைப்படுவது இல்லை. அவன் அதையே மீண்டும் செய்வதை அதிக இலகுவாகக் காண்கிறான். அவன் பரிசுத்த ஆவியானவரின் செல்வாக்கிற்கு எதிராக தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறான். மேலும் ஒளியை நிராகரிக்கும் போது, அதிக செல்வாக்குக்கூட நிலையான பதிப்பை உண்டாக்கக்கூடாத இடத்தில் அவன் தன்னை வைக்கிறான். PPTam 324.2
ஒருமுறை தன்னை சோதனைக்கு ஒப்புக்கொடுத்தவன் இரண்டாம் முறை இன்னும் அதிக ஆயத்தத்தோடு தன்னைக் கொடுப்பான். பாவத்தை ஒவ்வொரு முறையும் திரும்பச் செய்யும் போது, அது அதை எதிர்க்கக்கூடிய வல்லமையை குறைத்து, கண்களைக் குருடாக்கி, மன உணர்த்து தலை மழுங்கலாக்குகிறது. விதைக்கப்பட்ட ஒவ்வொரு திளைப்பின் விதையும் அதின் கனியைக் கொடுக்கும். அறுவடையை தடுக்கும்படியாக தேவன் ஒரு அற்புதத்தையும் நடப்பிப்பதில்லை. மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். கலா. 6:7. நம்பிக்கையின் மையையும் தெய்வீகசத்தியத்தின் மேல் ஒருவிருப்பமின்மையையும் வெளிக்காட்டுகிறவன், தானே விதைத்தவைகளின் விளைவை அறுவடை செய்கிறான். இவ்வாறுதான் திரளானவர்கள் தங்களுடைய ஆத்துமாக்களை ஒருகாலத்தில் தூண்டின சாத்தியங்களை ஈடுபாடின்றி கவனிக்கும்படி வருகிறார்கள். அவர்கள் சத் தியத்திற்கு நிராகரிப்பையும் எதிர்ப்பையும் விதைத்திருக்கிறார்கள். அவர்கள் அறுக்கும் அறுவடையும் அப்படிப்பட்டதாகவே இருக்கிறது. PPTam 325.1
தாங்கள் தெரிந்துகொள்ளும் போது தங்களுடைய தீமையான பாதையை மாற்றிக்கொள்ளலாம் என்றும், கிருபையின் அழைப்புகளை அலட்சியப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் உணர்த்தப்படுவோம் என்றும் எண்ணி குற்றமுள்ள மனசாட்சியை அமைதிப்படுத்துகிறவர்கள் தங்களுக்கு ஆபத்து உண்டாகவே அந்த வழியைத் தெரிந்து கொள்ளுகிறார்கள். மாபெரும் கலகக்காரனுக்காக தங்களுடைய எல்லா செல்வாக்குகளையும் கொடுத்த பிறகும், மிகக்கடைசியான நேரத்தில், ஆபத்து தங்களைச் சூழ்ந்திருக்கும் போது தலைவர்களை மாற்றிக்கொள்ளலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது இலகுவாக செய்யப் படுவதில்லை. அனுபவம், கல்வி, பாவத்தில் திளைத்த வாழ்க் கையின் ஒழுக்கம் ஆகியவை குணத்தை முழுமையாக வடிவமைத் திருக்கிறதால், இயேசுவின் சாயலை அப்போது அவர்களால் பெறவியலாது. அவர்களுடைய பாதையில் எந்த ஒளியும் பிரகாசிக்கவில்லையெனில் அவர்களுடைய நிலைமை வேறாக இருக்கும். அப்போது கிருபை இடைப்பட்டு அதன் அனுகலை ஏற்றுக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம். ஆனால் வெகுகாலமாக வெளிச்சம் நிராகரிக்கப்பட்டு தள்ளப்படும் போது, முடிவாக அது திரும்ப எடுத்துக்கொள்ளப்படும். PPTam 325.2
அடுத்ததாக கல்மழையின் வாதை . இப்பொழுதே ஆள் அனுப்பி, உன் மிருகஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள், வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியி லிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகத்தக்க தாய் அந்தக் கல் மழை பெய்யும் என்ற எச்சரிப்போடு பார்வோனை பயமுறுத்தியது. எகிப்தில் மழையோ அல்லது கல்மழையோ அச ராதாரணமான காரியம். அதிலும் முன் சொல்லப்பட்டிருப்பதைப் போன்ற ஒரு புயல் ஒருபோதும் அங்கு காணப்பட்டதில்லை. இந்த அறிவிப்பு விரைவாகப் பரவியது. எச்சரிப்பை அலட்சியம் செய்த வர்கள் அவைகளை வயலிலேயே விட்டுவிட்டபோது, ஆண்டவருடைய வார்த்தையை நம்பின் அனைவரும் தங்கள் ஆடு மாடுகளை கூட்டிச் சேர்த்தனர். இவ்வாறாக, நியாயத்தீர்ப்பின் மத்தியில் தேவனுடைய கிருபை வெளிக்காட்டப்பட்டு, ஜனங்கள் சே பாதிக்கப்பட்டனர். அவருடைய வல்லமையின் வெளிக்காட்டுதல் களால் தேவனுக்குப் பயப்படும்படி எத்தனைபேர் நடத்தப்பட்டார்கள் என்று காண்பிக்கப்பட்டது. PPTam 326.1
முன்சொல்லப்பட்டபடியே புயல் வந்தது. இடியும் கல்மழையும் அதோடு கலந்த அக்கினியும் மிகவும் கொடிதாயிருந்தது; எகிப்து தேசம் குடியேற்றப்பட்ட நாள் முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை. எகிப்து தேசம் எங்கும் மனிதரையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக்கல் மழை அழித்துப்போட்டது, அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது. அழிக்கும் தூதனின் பாதையை நாசமும் அழிவும் குறித்தது. கோசேன் நாடு மாத்திரமே பாதிக்கப்படவில்லை . பூமி ஜீவனுள்ள தேவனின் அதிகாரத்தில் இருக்கிறது என்றும், இயற்கை சக்திகள் அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறது என்றும், அவருக்கு கீழ்ப்படிவத்தில் மாத்திரமே பாதுகாப்பு இருக்கிறது என்றும் எகிப்தியருக்கு விளக்கிக் காட்டப்பட்டது. PPTam 326.2
பயங்கரமாக ஊற்றப்பட்ட தெய்வீக நியாயத்தீர்ப்பினால் எகிப்து முழுவதும் நடுங்கியது. பார்வோன் அவசரமாக இரண்டு சகோதரர்களையும் அழைப்பித்து : நான் இந்த முறை பாவம் செய்தேன், கர்த்தர் நீதியுள்ளவர், நானும் என் ஜனமும் துன்மார்க்கர். இது போதும், இந்த மகா இடி முழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள்; நான் உங்களைப் போக விடுவேன், இனி உங்களுக்குத் தடையில்லை என்று கதறினான். நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடனே என் கைகளைக்கர்த்தருக்கு நேராக விரிப்பேன், அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல் மழை நின்றுபோம், அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர். ஆகிலும் நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இன்னும் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்பட மாட்டீர்கள் என்பதை அறிவேன் என்று அவனுக்கு பதில் கொடுக்கப்பட்டது. PPTam 326.3
போட்டி இன்னும் முடிய வில்லை என்று மோசே அறிந்திருந்தான். பார்வோனின் அறிக்கைகளும் வாக்குறுதிகளும் அவனுடைய மனதிலோ இருதயத்திலோ வந்த மாற்றங்களின் விளைவு அல்ல, மாறாக பயத்திலும் வேதனையிலும் எழும்பியவையே. எனினும் இன்னமும் பிடிவாதமாயிருக்க அவனுக்குச் சந்தர்ப்பம் தராதிருக்கும் படி அவனுடைய விண்ணப்பத்தை கேட்பதாக மோசே வாக்குக் கொடுத்தான். புயலின் சீற்றத்தைக் கண்டுகொள்ளாது தீர்க்கதரிசி முன் சென்றான். பார்வோனும் அவனுடைய அனைத்து சேனையும் தம்முடைய தூதுவனை காக்கும் யெகோவாவின் வல்லமைக்கு சாட்சி களாயிருந்தனர். பட்டணத்திற்கு வெளியே சென்றதும் மோசே தன் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரித்தான், அப்பொழுது இடி முழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமலிருந்தது. ஆனால் தன்னுடைய பயத்திலிருந்து வெளியே வந்தவுடனே இராஜாவின் இருதயம் மீண்டும் முறைகேட்டிற்குத் திரும்பியது. PPTam 327.1
பின்னர் ஆண்டவர் மோசேயிடம் : நீ பார்வோனிடத்தில் போ. அவர்கள் நடுவே நான் இந்த என் அடையாளங்களைச் செய்யும் படிக்கும், நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும் படிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும் படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்று கூறினார். தாம் ஒருவரே உண்மையும் ஜீவனுள்ள தேவன் என்கிற விசுவாசத்தை இஸ்ரவேலில் உறுதிப்படுத்தவே ஆண்டவர் தமது வல்லமையை வெளிக்காட்டிக் கொண்டிருந்தார். அவர்களுக்கும் எகிப்தியருக்கும் நடுவே அவர் வைத்த வித்தியாசத்திற்கான தவறில்லாத சான்றுகளைக் கொடுத்து, தாங்கள் அடலட்சியப்படுத்தி ஒடுக்கின் எபிரெயர்கள், பரலோக தேவனுடைய பாதுகாப்பின் கீழ் இருக்கிறார்கள் என்பதை அனைத்து தேசங்களும் அறியச் செய்வர். PPTam 327.2
இன்னமும் பிடிவாதமாயிருந்தால், பூமி முழுவதையும் மூடி பச்சையாக மீந்திருக்கிற அனைத்தையும் தின்று போடுகிற வெட்டுக்கிளிகளின் வாதை அனுப்பப்படும் என்று மோசே அரசனை எச்சரித்தான். அவைகள் அவர்களுடைய வீடுகளையும் அரண்மனையையும் கூட நிரப்பும். உன் பிதாக்களும் உன் பிதாக்களின் பிதாக்களும் தாங்கள் பூமியில் தோன்றின் நாள் முதல் இந்நாள் வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்றான். PPTam 328.1
பார்வோனின் ஆலோசகர்கள் திகைத்து நின்றனர். தங்கள் ஆடு மாடுகளின் மரணத்தினால் தேசம் மாபெரும் இழப்பை சந்தித்திருக்கிறது. கல்மழையினால் அநேக மக்கள் கொல்லப் பட்டிருந்தனர். காடுகள் முறிந்து போய், பயிர்கள் அழிக்கப்பட்டிருந்தன. எபிரெயர்களின் உழைப்பினால் சம்பாதித்திருந்த அனைத்தையும் அவர்கள் வேகமாக இழந்து கொண்டிருந்தனர். முழு தேசமும் பஞ்சத்தைக் குறித்து பயமுறுத்தப்பட்டது. இளவரச ர்களும் அவையோர்களும் இராஜாவை நெருக்கி : எந்த மட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாயிருப்பான்? தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்ய அந்த மனிதரைப் போகவிடும், எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா? என்று கோபமாகக் கேட்டனர். PPTam 328.2
மோசேயும் ஆரோனும் மீண்டும் அழைக்கப்பட்டு, இராஜா அவர்களிடம், நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி ; யாரார் போகிறார்கள் என்று கேட்டான். PPTam 328.3
அவர்களுக்கான பதில் : எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்தி களோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக் கொண்டு போவோம், நாங்கள் கர்த்தருக்குப்பண்டிகை கொண்டாட வேண்டும் என்று இருந்தது. PPTam 328.4
இராஜா வெகுண்டான். நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே கர்த்தர் உங்களோ டிருப்பாராக, எச்சரிக்கையாயிருங்கள், உங்களுக்குப் பொல்லாப்பு நேரிடும்; அப்படி வேண்டாம், புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்தினின்று துரத்திவிடப்பட்டார்கள். இஸ்ரவேலரை கடின உழைப்பினால் அழித்துவிட பார்வோன் முயற்சித்திருந்தான். ஆனால் இப்போது அவர்களுடைய நன்மையில் ஊக்கமாக ஆர்வமும் அவர்களுடைய சிறியவர்கள் மேல் உருக்கமான கவனிப்பும் இருப்பது போல நடித்தான். ஆண்கள் திரும்பி வருவதற்கான நிச்சயத்திற்காக பெண்களையும் குழந்தைகளையும் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய உண்மையான நோக்கமாயிருந்தது. PPTam 328.5
மோசே இப்போது தன்னுடைய கோலை தேசத்தின் மேல் நீட்ட, ஒரு கீழ்க்காற்று வீசி வெட்டுக்கிளிகளை கொண்டு வந்தது. அவைகள் மிகவும் ஏராளமாய் இறங்கிற்று; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்கு முன் இருந்ததும் இல்லை, அதற்குப்பின் இருப்பதும் இல்லை. தேசம் இருண்டு போகுமளவு அவைகள் வானத்தை மூடி மீந்திருந்த அனைத்து பச்சையையும் பட்சித்துப்போட்டது. பார்வோன் தீர்க்கதரிசிகளை அவசரமாக வரவழைத்து உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன். இந்த ஒரு முறை மாத்திரம் நீ என் பாவத்தை மன்னிக்கவேண்டும், உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தச் சாவை மாத்திரம் என்னைவிட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள் என்று கூறினான். PPTam 329.1
அவர்கள் அவ்வாறே செய்ய, ஒரு பலமான மேல்காற்று வெட்டுக்கிளிகளை செங்கடலின் பக்கம் கொண்டு சென்றது. இன்னமும் இராஜா பிடிவாதமான தீர்மானத்தில் நின்றிருந்தான். PPTam 329.2
எகிப்தின் ஜனங்கள் விரக்தியடையவிருந்தனர். ஏற்கனவே அவர்கள் மேல் விழுந்திருந்த அடி தாங்கக்கூடிய அளவிற்கும் அதிகமாக காணப்பட்டது. எதிர்காலத்தைக் குறித்த பயத்தினால் அவர்கள் நிரப்பப்பட்டனர். தங்கள் தெய்வத்தின் பிரதிநிதியாக தேசம் பார்வோனை தொழுது வந்தது. ஆனால் இயற்கையின் வல்லமைகள் அனைத்தையும் தமது சித்த்திற்கு உழைக்கும்படியாக உண்டாக்கியிருந்த ஒருவரை அவன் எதிர்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை அநேகர் இப்போது நம்பினர். அதிசயமாக தயவு பெற்றுக்கொண்ட எபிரெய அடிமைகள் விடுதலையைக் குறித்த உறுதியைப் பெற்றுக்கொண்டிருந்தனர். இதற்கு முன் செய்ததைப் போல அவர்களுடைய ஆளோட்டிகள் அவர்களை ஒடுக்க தைரியமற்றிருந்தனர். அடிமைப்படுத்தப்பட்டிருந்த இனம் எழும்பி தங்களுக்கு இழைக்கப்பட்ட தவறுகளுக்கு பழிவாங்கும் என்கிற ஒரு இரகசிய பயம் எகிப்து முழுவதும் இருந்தது. அடுத்து என்ன வரும் என்று படபடக்கும் இருதயத்தோடு எவ்விடத்திலும் மனிதர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். PPTam 329.3
சடிதியாக, தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருளாகத் தோன்றிய அடர்ந்த காரிருள் தேசத்தின்மேல் தங்கியது. மக்களுக்கு வெளிச்சம் கிடைக்காது போனதுமாத்திரம் அல்ல, வளிமண்டல மேநெருக்கியதைப்போன்று இருக்க, அதினால் சுவாசிப்பதும் கடினமாயிற்று. மூன்று நாள் மட்டும் ஒருவரை ஒருவர் காணவும் இல்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாச ஸ்தலங்களிலே வெளிச்சம் இருந்தது. எகிப்தியருக்கு சூரியனும் சந்திரனும் ஆராதனைக்குரியவைகளாயிருந்தன. இந்த இரகசிய மர்மமான இருளினால் எபிரெயர்களை பொறுப்பெடுத்துக்கொண்ட வல்லமை மக்களையும் அவர்கள் தெய்வங்களையும் ஒரேவிதமாக அடித்தது. பயங்கரமாக இருந்தபோதிலும் இந்த நியாயத்தீர்ப்பு தேவனுடைய உருக்கத்திற்கும், அழிப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பதற்கும் ஒரு சான்றாக இருந்தது. வாதைகளில் கடைசியானதும் பயங்கரமானதுமானதை அவர்கள் மேல் கொண்டுவருமுன், திரும்பிப்பார்க்கவும் மனந்திரும்பவும் அவர் மக்களுக்கு நேரம் கொடுப்பார். PPTam 330.1
பயம் கடைசியாக பார்வோனிடமிருந்து இன்னும் கொஞ்சம் சலுகைகளை கொடுத்தது. இருண்டிருந்த மூன்றாம் நாளின் முடிவில் அவன் மோசேயை அழைத்து, ஆடுமாடுகளும் மந்தைகளும் இங்கேயே தங்கியிருக்கும் பட்சத்தில் ஜனங்கள் புறப்பட தான் சம்மதிப்பதாக அறிவித்தான். ஒரு குளம்பும் பின்வைக்கப்படு வதில்லை. இன்னதைக் கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்று தீர்மானமான எபிரெயன் பதிலளித்தான். அடக்கக்கூடாதபடி இராஜாவின் கோபம் வெடித்தது. என்னை விட்டு அப்பாலே போ ; நீ இனி என் முகத்தைக் காணதபடி எச்சரிக்கையாயிரு, நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய் என்று கூக்குரலிட்டான். PPTam 330.2
(நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைக் காண் பதில்லை என்று பதில் வந்தது. PPTam 330.3
(மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரரின் பார்வைக்கும் ஜனங்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாயிருந்தான். மோசே எகிப்தியர்களால் பயபக்தியோடு பார்க்கப்பட்டான். வாதைகளை விலக்கக்கூடிய வல்லமையை பெற்றிருக்கும் ஒரே மனிதனாக மக்கள் அவனைப் பார்த்ததினால் அவனுக்கு தீங்கு செய்ய இராஜா தைரியமற்றிருந்தான். இஸ்ரவேலர்கள் வெளியேற அனுமதிக்கப்படவேண்டும் என்று அவர்கள் விரும்பினர். மோசேயின் கோரிக்கைகளை இராஜாவும் ஆசாரியர்களும்தான் கடைசியில் எதிர்த்தனர். PPTam 330.4