கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

29/55

18 - “பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய்”

ஒரு பரிசேயனுடைய வீட்டிற்கு இரட்சகர் விருந்திற்காகச் சென்றிருந்தார். ஏழைகளானாலும் பணக்காரர்களானாலும், அவர்களுடைய அழைப்பை ஏற்றுக்கொள்வார்; அங்கு நிலவுகிற காட் சியை வைத்து ஏதாவது படிப்பினைச்சொல்லிக்கொடுப்பது அவருடைய வழக்கம். வருடாந்தர தேசிப்பண்டிகைகள், மதப் பண்டிகைகள் போல, இத்தகைய விருந்துகளையும் யூதர்கள் புனிதமாகக் கருதினார்கள். நித்திய வாழ்வின் ஆசீர்வாதங்களுக்கு ஓர் அடை யாளமாக அதைப் பார்த்தார்கள். அந்த மாபெரும் விருந்தில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரோடு தாங்கள் பந்தி யிருப்பதாகவும், வெளியே நிற்கிற புறஜாதியார் அதை ஏக்கத்தோடு பார்ப்பதாகவும் கற்பனை செய்து அதிக மகிழ்ச்சியடைவார்கள். இப்போது அந்தப் பெரிய விருந்தை ஓர் உவமையாக எடுத்துக் காட்டி, அதிலிருந்து அவர்களுக்கு எச்சரிப்பையும், போதனையையும் சொல்ல கிறிஸ்து விரும்பினார். இவ்வுலக வாழ்க்கைக்கும் இனிவரும் வாழ்க்கைக்கும் தேவன் வைத்திருக்கிற ஆசீர்வாதங்கள் எல்லாமே தங்களுக்கு மட்டுமே என்று யூதர்கள் நினைத்தார்கள். புறஜாதியார் தேவனுடைய இரக்கத்தைப் பெற பாத்திரரல்ல என் றார்கள். ஆனால் அந்த யூதர்கள் தாமே அந்தச் சமயத்தில் இரக்கம் பெறுவதற்கான அழைப்பையும், தேவராஜ்யத்திற்கான அழைப்பையும் புறக்கணித்து வந்த்தை அந்த உவமையில் கிறிஸ்து காட்டினார். COLTam 220.1

இவர்கள் அலட்சியப்படுத்திய அழைப்பானது இவர்கள் புறக்கணித்த மற்றவர்களுக்குக் கொடுக்கப்படவிருந்தது; தனிமைப்படுத்தப்படவேண்டிய குஷ்டரோகிள் போல தங்கள் வஸ்திரங்களை அவர்களிடமிருந்து உரிந்துகொண்டார்கள். COLTam 221.1

அந்தப் பரிசேயன் தன்னுடைய சுயநலத்தை மனதில் வைத்தே விருந்துக்கு விருந்தாளிகளை அழைத்திருந்தான். கிறிஸ்து அவனிடம், ‘நீ பகல் விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும் போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரை யாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும். நீ விருந்து பண்ணும் போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும்” என்றார். COLTam 221.2

மோசேமூலம் இஸ்ரவேலருக்கு தாம் கொடுத்திருந்த போதனையைத்தான் கிறிஸ்து மீண்டும் இங்கு கூறுகிறார். “உன் வாசல் களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும், விதவையும் வந்து புசித்து திருப்தியடைவார்களாக.’‘உபா. 14:29. அவ்வாறு மக்களை அழைத்து விருந்து செய்வது இஸ்ரவேலருக்கு விளக்கப் பாடங்க ளாகக் கொடுக்கப்பட்டிருந்தன. மெய்யான விருந்தோம்பலிலுள்ள சந்தோஷத்தைப் புரிந்து கொள்வதன் மூலம், தரித்திரர் மற்றும் துக்கத்திலுள்ளவர்கள் மேல் வருடமும் முழுவதும் அவர்கள் அக் கறைகாட்ட வேண்டியிருந்தது. அந்த விருந்துகள் ஏராளமான பாடங்களை உள்ளடக்கியிருந்தன. இஸ்ரவேலர்களுக்குக் கொடுக் கப்பட்டிருந்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் அவர்களுக்கு மட்டும் உரியதல்லவென்பது அதில் ஒன்று. தேவன் அவர்களுக்கு ஜீவ அப்பத்தைக் கொடுத்திருந்தார்; அதை அவர்கள் உலகத்தாருக்குப் பிட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. COLTam 221.3

இந்த வேலையை அவர்கள் செய்யவில்லை. அவர்களுடைய சுயநலத்தைக் கிறிஸ்து கடிந்துகொண்டார். அவர் அவ்வாறு பேசி னது பரிசேயர்களுக்குப் பிடிக்கவில்லை. அந்தப் பேச்சை வேறு பக்கமாகத் திருப்புவதற்காக, அவர்களில் ஒருவன் தன்னை பக்தி மான் போலக்காட்டிக்கொண்டு,” தேவனுடைய ராஜ்யத்தில் போஜ னம்பண்ணுகிறவன் பாக்கியவான்” என்றான். ராஜ்யத்தில் தனக்கு ஓர் இடம் நிச்சயம் என்பது போல மிக உறுதியாக அவன் பேசினான். இவனுடைய மனநிலை யாருடைய மனநிலைக்கு ஒத்திருந்ததென் றால், இரட்சிப்புக்கான நிபந்தனைகளைக் கைக்கொள்ளாமல் இருந்தும், கிறிஸ்து தங்களை இரட்சித்திருப்பதாக மகிழ்கிறவர் களின் மனநிலைக்கு .’ ‘நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக. என் முடிவு அவன் முடிவு போல் இருப்பதாக” என்று ஜெபித்த பிலே யாமின் ஆவி அவனிடம் காணப்பட்டது . எண்23:10. பரலோக் செல்ல தனக்கு தகுதி இருக்கிறதாவென்று அந்தப் பரிசேயன் எண்ணவில்லை ; பரலோகத்தில் அனுபவிக்கப்போகும் சந்தோ ஷத்தை எண்ணிப்பார்த்தான். விருந்துக்கு வந்திருந்தவர்கள் தங்கள் வாழ்க்கை கடமைகளை யோசிக்காதபடி அவர்களுடைய சிந்தைகளைத் திசைதிருப்பும் நோக்கத்தோடு அவன் அவ்வாறு பேசினான். தற்போதைய வாழ்க்கையைச் சிந்திக்கவிடாமல், நீதி மான்கள் உயிர்த்தெழப்போகும் எதிர்காலத்தைச் சிந்திக்கவைக்க முயன்றான். COLTam 221.4

அந்தப் பாசாங்கனின் இருதயத்தை கிறிஸ்து வாசித்தார்; அவ னுடைய கண்களை உற்றுப்பார்த்தவராக, தற்போது அவர்களுக் குள்ள சிலாக்கியங்களின் தன்மையையும் மதிப்பையும் அந்தக் கூட்டத்தாருக்கு விளக்கிக்கூறினார். வருங்கால ஆசீர்வாதமான வாழ்க்கையில் பங்குபெற வேண்டுமானால், இப்போதே அவர்கள் செய்தாக வேண்டிய பங்கை அவர்களுக்குக் காட்டினார். COLTam 222.1

“ஒரு மனுஷன் பெரிய விருந்தை ஆயத்தம் பண்ணி, அநே கரை அழைப்பித்தான்” என்றார். விருந்து வேளை வந்தபோது அவன் தனது ஊழியக்காரனை அனுப்பி, “எல்லாம் ஆயத்தமா யிருக்கிறது, வாருங்கள் என்று இரண்டாவது தூதை அனுப்பினான்; ஆனால் அழைக்கப்பட்டவர்கள் அழைப்பை அலட்சியம் பண்ணத் துவங்கினார்கள். அவர்களெல்லாரும் போக்குச் சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன் : ஒரு வயலைக் கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொரு வன்: ஐந்தேர் மாடுகொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப் போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்” என்றான். வேறொருவன். பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது” என்றான். COLTam 222.2

சொல்லப்பட்ட சாக்குப்போக்குகள் எதுவுமே அத்தியாவசிய தேவைகள் அல்ல. வயலை வாங்கினவன் “நான் அகத்தியமாய் போய், அதைப் பார்க்க வேண்டும்” என்று சொல்லுகிறான். அந்த நிலத்தை ஏற்கனவே வாங்கிவிட்டான். அந்த எண்ணம் மட்டுமே அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்ததால், அதைப்போய்ப் பார்க்க அவசரங்காட்டுகிறான். ஏர்மாடுகளையும் கூட ஏற்கனவே வாங்கி யாகிற்று. வாங்கினவன் தன்னுடைய திருப்திக்காக அதைச் சே பாதித்துப்பார்க்க நினைக்கிறான். மூன்றாவது சாக்குப்போக்கு முற்றிலும் காரணமற்றது. பெண்ணை விவாகம் செய்த அந்த விருந்தினன், விருந்தைப் புறக்கணித்திருக்கத் தேவையில்லை. அவனுடைய மனைவியும் கூட விருந்துக்கு அழைக்கப்பட்டிருப் பாள். ஆனால் தன்னுடைய சந்தோஷத்திற்காக சில திட்டங்களை அவன் வைத்திருந்தான்; எனவே தான் கலந்து கொள்வதாகச் சொல்லியிருந்த அந்த விருந்தை விட அந்தச் சந்தோஷங்கள் தாம் பெரி தாக இருந்தன. விருந்துக்குள் அழைத்தவரிடம் அல்லாமல் வேறு கூட்டாளிகளுடன் சந்தோஷத்தைப்பெற்று அவன் பழகியிருந்தான். செல்லமுடியாததற்காக இவன் வருத்தம் தெரிவிக்கவில்லை; மறுப்பு கூறியபோது ஒரு மரியாதைக்காகவாவது அவ்வாறு பேச வில்லை . “நான் வரக் கூடாது’ எனும் வார்த்தைகள் வருவதற்கு எனக்கு விருப்பமில்லை” என்பதைத் தெரிவித்தன COLTam 223.1

வேறு சிந்தனைகளில் மனது நிறைந்திருந்ததை இந்தச் சாக்குப் போக்குகள் காட்டுகின்றன. விருந்துக்கு அழைக்கப்பட்ட இவர்களுடைய சிந்தைகள் வேறு விஷயங்களில் மூழ்கியிருந்தன. விருந்துக்கு வருவதாக கொடுத்திருந்த வாக்கை அலட்சியப்படுத்தினார்கள்; தயாளத்தோடு தங்களை அழைத்த நண்பரை அவமதித்தார்கள். COLTam 223.2

சுவிசேஷம் அருளுகிற ஆசீர்வாதங்களை இந்தப் பெரிய விருந்தின் மூலம் கிறிஸ்து சுட்டிக்காட்டுகிறார். கிறிஸ்துதாமே அந்த ஆசீர்வாதங்களின் ஆதாரம். அவரே வானத்திலிருந்து இறங்கிவந்த அப்பம்; அவரிடமிருந்து இரட்சிப்பின் ஊற்றுகள் பாய்கின்றன. கர்த்தருடைய தூதுவர்கள் இரட்சகரின் வருகை குறித்து யூதர்களுக்கு அறிவித்திருந்தார்கள்; கிறிஸ்துவே “உலகத்தின் பாவத் தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று சுட்டிக்காட்டி யிருந்தார்கள். யோவான் 1:29. பரலோகம் ஏற்பாடு செய்திருந்த COLTam 223.3

விருந்தில், பரலோகம் அருளக்கூடியதிலேயே மிகப்பெரிய ஈவை தேவன் அருளியிருந்தார். நம் கற்பனைக்கும் எட்டாத ஈவு அது. தேவன் தமது அன்பினால் மிகப்பிரமாண்டமான விருந்தை ஏற்பாடு செய்து, அள்ள அள்ளக்குறையாதவளங்களை வழங்கியிருக்கிறார். “இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப் பான்” என்று கிறிஸ்து சொன்னார். யோவான் 6:51. COLTam 224.1

சுவிசேஷ விருந்திற்கான அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு, கிறிஸ்துவையும் அவருடைய நீதியையும் பெறுவதை ஒரே நோக்க மாகக் கொண்டு, உலகப்பிரகாரமான விருப்பகங்களைக் கீழ்ப் படுத்தவேண்டும். மனிதனுக்காக தேவன் அனைத்தையும் கொடுத் தார்; உலக ஆசைகளுக்கும் சுயநல ஆசைகளுக்கும் மேலாக தமக் குச் சேவை செய்வதற்கு முதலிடம் கொடுக்க அவனிடம் கேட் கிறார். இரண்டாங்கெட்ட இருதயத்தை அவர் ஏற்றுக்கொள்ள மாட் டார். உலகப்பற்றுகளில் மூழ்கியிருக்கிற இருதயத்தை தேவனிடம் கொடுக்கமுடியாது. COLTam 224.2

இது எல்லாக் காலத்திற்குமுரிய படிப்பினை. தேவ ஆட்டுக் குட்டியானவர் செல்கிற இடமெல்லாம் அவரை நாம் பின்தொடர் வேண்டும். அவருடைய வழிநடத்துதலைத் தெரிந்து கொள்ள வேண்டும்; உலக நண்பர்களின் தோழமையை விட அவருடய தோழமையை பெரிதாக மதிக்க வேண்டும். “தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிக மாக நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல” என்று கிறிஸ்து சொல்கிறார். மத்தேயு 10:37. COLTam 224.3

குடும்பமாகக் கூடியிருந்து, தினமும் அப்பம்பிட்டுச் சாப்பிடு கிற வேளையில், ” தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம் பண்ணு கிறவன் பாக்கியவான்” என்று சொல்லி சாப்பிடுவது கிறிஸ்துவின் நாட்களில் அநேகருடைய வழக்கமாக இருந்தது. ஆனால் ஈடு இணையற்ற விலைகொடுத்து ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துக்கு, விருந்தினர்களைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினமானது என் பதை கிறிஸ்து காட்டினார். இரக்கத்தின் அழைப்பை தாங்கள் அலட் சியப்படுத்தியிருந்ததை அவர் பேசுவதைக் கேட்டவர்கள் புரிந்து கொண்டார்கள். உலக சொத்துக்கள், ஐசுவரியங்கள், உலக இன் பங்கள் பற்றிய சிந்தனைகளில் தான் அவர்கள் மூழ்கியிருந்தார்கள். எல்லாருமே ஒருமனதாக சாக்குப்போக்குச் சொன்னார்கள். COLTam 224.4

அதுபோலத்தான் இன்றும். விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் சொன்ன சாக்குப்போக்குகளைப்போல, சுவிசேஷ அழைப்பை ஏற்காமல் அனைத்து வித சாக்குப்போக்குகளையும் கூறுகிறார்கள். சுவிசேஷத்தின் கோரிக்கைகளுக்குச் செவிகொடுத்து, உலகத்தில் தங்களுடைய எதிர்கால வாழ்வைக் கெடுத்துக்கொள்ள முடியா தெனச்சொல்கிறார்கள். நித்திய நலன்களைவிட இவ்வுலகிற்கடுத்த நலன்கள்தாம் மிகவும் முக்கியமென நினைக்கிறார்கள். தேவனிட மிருந்து அவர்கள் பெற்றிருக்கிற ஆசீர்வாதங்கள்தாமே அவர்களுடைய சிருஷ்டிகரும் மீட்பருமானவரிடமிருந்து அவர்களுடைய ஆத்துமாக்களைப் பிரிக்கும் தடைகற்களாகின்றன. இவ்வுலகிற் கடுத்த விஷயங்களை நாடுவதற்கு தடைவராததால், இரக்கத்தின் தூதுவரிடம் அவர்கள், “இப்பொ ழுது நீ போகலாம், எனக்குச் சமயமான போது உன்னை அழைப்பிப்பேன்” என்று சொல்கிறார்கள். அப்24:25. வேறுசிலர், தேவனுடைய அழைப்பிற்குக் கீழ்ப்ப டி வதால், சமூக உறவுகளில் பிரச்சனைகள் எழக்கூடுமெனச் சொல் கிறார்கள். உறவினர்களோடும், நண்பர்களோடும் உள்ள உறவை விலைகொடுக்க முடியாதென்கிறார்கள். எனவே, உவமையில் சொல்லப்பட்டவர்கள் போல தாங்கள் நடந்து கொள்வதை அதன்மூலம் நிரூபிக்கிறார்கள். அவர்கள் சொன்ன அற்பமான சாக்குப்போக்குகள் தன் அழைப்பை அவமதித்ததாக வீட்டெஜமான் நினைத்தார். COLTam 225.1

“பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக் கூடாது” என்று சொன்னவனைப் போலத்தான் இன்று அநேகர் இருக்கிறார்கள். கணவன் அல்லது மனைவியைக் காரணங்காட்டி தேவனுடைய அழைப்பிற்குச் செவிகொடுக்காத பலர் இருக்கிறார்கள். “என் மனைவிக்குப் பிடிக்காத கடமை உணர்வுகளுக்கு கீழ்ப் படியமுடியாது. அவள் ஒத்துழைக்காவிட்டால், அவற்றைச் செய் வது மிகவும் கடினம் ” என்று கணவன் சொல்கிறான். “எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள் ” என்ற கிருபையின் அழைப்பை மனைவி கேட்கிறாள். உடனே, “தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். இரக்கத்தின் அழைப்பை என்னுடைய கணவன் மறுக் கிறார். தன் தொழிலுக்கு அது இடையூறாக இருப்பதாகச் சொல் கிறார். என் கணவர் பக்கம்தான் நான் நிற்க வேண்டும்; எனவே என் னால் வரமுடியாது” என்று சொல்கிறாள். இரக்கத்தின் அழைப்பு பிள்ளைகளின் மனதில் தாக்கத்தை உண்டாக்குகிறது. அழைப்பை ஏற்கவிரும்பு கிறார்கள். ஆனால் தங்கள் அப்பா, அம்மா மேலான அன்பினால் இவர்களும் சுவிசேஷத்தின் அழைப்புக்குச் செவி கொடுப்பதில்லை; எனவே தங்களால் அழைப்பை ஏற்கமுடியா தென நினைக்கிறார்கள். “எங்களை மன்னிக்கவும் ” என்று அவர்களும் சொல்கிறார்கள். COLTam 225.2

குடும்ப உறவில் பிளவு ஏற்படுமோ என்று பயந்து, இவர்கள் அனைவரும் இரட்சகரின் அழைப்பை ஏற்க மறுக்கிறார்கள். தேவன் சொல்வதற்குக் கீழ்ப்படியாமல் இருப்பதால், குடும்பத்தில் சமாதானமும் செழிப்பும் உண்டாக தாங்கள் உதவுவதாக நினைக் கிறார்கள். ஆனால் இது ஒரு வஞ்சனையே . சுயநலத்தை விதைப் பவர்கள் சுயநலத்தையே அறுப்பார்கள். கிறிஸ்துவின் அன்பைப் புறக்கணிப்பதால், மனித அன்பில் பரிசுத்தத்தையும் நிலைத்தன்மை யையும் கொடுக்கக்கூடிய ஒரே அன்பை மறுதலிக்கிறார்கள். அவர்கள் பரலோகத்தை இழந்து போவது மட்டுமல்ல, பரலோகப்பலி எதற்காக ஏறெடுக்கப்பட்டதோ அதன் மெய்யான சந்தோஷத்தை இழந்து போகிறார்கள். COLTam 226.1

அந்த உவமையில், தன்னுடைய அழைப்புக்குக் கொடுக்கப் பட்ட பதிலைக் கேள்விப்பட்ட வீட்டெஜமான்,“கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா” என்று சொன்னான். COLTam 226.2

சகலமும் ஆயத்தமாயிருந்த விருந்துக்கு வராதவர்களைப் புறக்கணித்த வீட்டெஜமான், வசதிபடைத்திராத, சொந்தமாக வீடுகளும் நிலங்களும் இல்லாத மக்களை அழைத்தான். தரித்திரரையும் பசியோடிருந்தவர்களையும் விருந்துக்கு அழைக்கப்பட்டதை நன்றியோடு எண்ணுகிறவர்களையும் அழைத்தான்.’ ‘ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிர வேசிக்கிறார்கள்” என்று கிறிஸ்து சொன்னார். மத்தேயு 21:31. அதிக நிர்பந்தமான நிலையில் இருப்பவர்களை மக்கள் வெறுத்து, அவர்களை விலக்கலாம். ஆனால் தேவன் அன்பு செலுத்த முடியாத அளவுக்கு பரிதாபமான நிலையோ, நிர்பந்தமான நிலையோ கிடை யாது. அக்கறையற்ற நிலையில்,களைத்துப்போன நிலையில், சிறுமைப்பட்ட நிலையில் இருப்பவர்கள் தம்மிடம் வருவதற்கு கிறிஸ்து ஏங்குகிறார். எங்குமே கிடைக்காத சமாதானத்தையும் சந்தோஷத்தையும் வெளிச்சத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்ள ஏங்குகிறார். பாவிகளிலேயே மோசமான பாவிகள் தாம் அவருடைய ஆழமான, ஊக்கமான அன்புக்கும் பரிவுக்கும் உரியவர்கள். அவர்களைக் கனிவோடு அணுகி, தம்மிடம் இழுக்க முயற்சிக்கும் படி தம் பரிசுத்த ஆவியானவரை அவர் அனுப்புகிறார். COLTam 226.3

தரித்திரரையும் குருடரையும் அழைத்து வந்தவன் வீட்டெஜமானிடம், “நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான். அப்பொழுது எஜமான் ஊளழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும் படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக் கொண்டுவா” என்றான். சாரமற்றுப்போன யூதேயமார்க்கத்தையும் தாண்டி, உலகத்தின் பெருவழிகளிலும் வேலிகளருகிலும் சுவிசே ஷப்பணி செய்யப்பட வேண்டுமென்பதை கிறிஸ்து இதன்மூலம் சுட்டிக்காட்டுகிறார். COLTam 227.1

இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்த பவுலும் பர்னபாவும் யூதர்களை நோக்கி, ‘முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத்தள்ளி, உங்களை நித்திய ஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளு கிறபடி யினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம். நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள். புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோ ஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்.” அப் 13:46-48. COLTam 227.2

கிறிஸ்துவின் சீடர்கள் அறிவித்த சுவிசேஷச் செய்தி, அவருடைய முதலாம் வருகையைக் குறித்த அறிவிப்பாகும். அவரை விசுவாசிப்பதால் இரட்சிப்பு கிடைக்கிறது என்கிற நற்செய்தியைச் சாட்சியாக அறிவித்தார்கள். தம்முடையவர்களை மீட்கும்படி இரண்டாம் முறை அவர் மகிமையோடு வரப்போவதை அது சுட்டிக் காட்டியது. விசுவாசத்தாலும், கீழ்ப்படிதலாலும் ஒளியிலுள்ள பரி சுத்தவான்களின் சுதந்திரத்தில் பங்குபெறுகிற நம்பிக்கையை மனி தர்களுக்குக் கொடுத்தது. இன்றும் இந்தச் செய்தி அறிவிக்கப்படுகிறது; ஆனால் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் சமீபமாயிருக்கிறது என்கிற செய்தியும், அதோடு சேர்த்து அறிவிக்கப்படுகிறது. தமது வருகையைக் குறித்து அவர் கூறிய அடையாளங்கள் நிறை வேறிவிட்டன. கர்த்தர் வாசலண்டை நிற்கிறார் என்பதை தேவ வார்த்தையின் போதனையிலிருந்து அறியமுடிகிறது. COLTam 227.3

கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குச் சற்று முன்னர் சுவிசே ஷச் செய்தி அறிவிக்கப்படுமென வெளிப்படுத்தலில் யோவான் முன்னறிவிக்கிறார். வானத்தின் மத்தியில் பறக்கக்கண்ட ஒரு தூதன், “பூமியில் வாசம் பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத் திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு : தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத் துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது” என்று சொன்னான் வெளி. 14:6,7. COLTam 228.1

நியாயத்தீர்ப்பு குறித்த எச்சரிப்பையும், அதோடு சொல்லப்படு கிற செய்திகளையும் தொடர்ந்து, மேகங்களின் மேல் மனுஷ குமா ரன் வருவதாக தீர்க்கதரிசனத்தில் காண்கிறோம். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சமீபமாக இருக்கிறது என்பதைத்தான் நியாயத் தீர்ப்பு பற்றியச் செய்தி அறிவிக்கிறது. இந்த அறிவிப்பு நித்திய சுவி சேஷம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இரண்டாம் வருகை யையும், அது சமீபமாக இருக்கிறது என்பதையும் அறிவிப்பது சுவி சேஷச் செய்தியின் இன்றியமையாத அங்கமாக இருக்கிறது. COLTam 228.2

கடைசி நாட்களில் மக்கள் உலகப்பிரகாரமான நாட்டங்களிலும், இன்பங்களிலும், சம்பாத்தியங்களிலும் மூழ்கியிருப்பார் களென வேதாகமம் கூறுகிறது, நித்திய நிஜங்களைக் காணக்கூடாத குருடராயிருப்பார்கள். ‘நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப் பிரளயம் வந்து அனைவரையும் வாரிக் கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன்வருங்காலத்திலும் நடக்கும்’ என்று கிறிஸ்து கூறுகிறார். மத்தேயு 24:37-39. COLTam 228.3

இன்றைக்கும் இவ்வாறே நடக்கிறது. தேவனும், பரலோகமும், மறுமை வாழ்வும் இல்லாதது போல, ஆதாயத்தையும் சிற்றின்பங்களையும் தேடி ஓடுகிறார்கள். நோவாவின் நாட்களில், மக்களுடைய துன்மார்க்க நிலை குறித்து அவர்களைத் திடுக்கிடச் செய்யவும், மனந்திரும்புதலுக்கு அழைக்கவும் ஜலப்பிரளயம் குறித்த எச்சரிப்பு கொடுக்கப்பட்டது. அதேபோலவே, உலகப்பிர காரமான காரியங்களில் மூழ்கியிருக்கும் மனிதரை விழிக்கச் செய் வதற்காக கிறிஸ்துவின் இரண்டாம் வருகை குறித்த செய்தி கொடுக் கப்படுகிறது. கர்த்தருடைய விருந்தில் கலந்துகொள்வதற்கான அழைப்புக்கு அவர்கள் செவிகொடுக்கும்படி, நித்திய நிஜங்களை உணர்வதற்காக அவர்களை விழிப்படையச் செய்வதே இச் செய்தியின் நோக்கம். COLTam 228.4

சுவிசேஷத்தின் அழைப்பானது “பூமியில் வாசம் பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும்” என உலகம் முழுவதிற்கும் கொடுக்கப் படுகிறது. வெளி 14:6, எச்சரிப்பு மற்றும் இரக்கம் குறித்த செய்தி யின் வெளிச்சமானது உலகம் முழுவதிலும் மகிமையாகப் பிரகாசி க்கவேண்டும். ஏழை - பணக்காரர், உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என அனைத்து தரப்பு மக்களையும் அது சென்றடைய வேண்டும். “நீ பெருவழிகளிலும் வேலிகளிலும் போய், என் வீடு நிறையும்படி யாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டு வா” என்று கிறிஸ்து சொல்கிறார். COLTam 229.1

சுவிசேஷத்தை அறியாமல் உலகம் மடிந்துகொண்டிருக்கிறது. தேவ வார்த்தை கிடைக்காத பஞ்சம் நிலவுகிறது. மனித பாரம் பரியத்தைக் கலக்காமல் தேவவார்த்தையைப் போதிக்கிறவர்கள் வெகுசிலரே. மனிதர்கள் தங்கள் கைகளில் வேதாகமத்தை வைத் திருந்தாலும், அதில் தேவன் அவர்களுக்கு வைத்துள்ள ஆசீர்வா தத்தைப் பெறுவதில்லை. தம்முடைய செய்தியை மக்களுக்குக் அறிவிக்கும்படி தம்முடைய தாசர்களை ஆண்டவர் அழைக்கிறார். COLTam 229.2

தங்கள் பாவங்களில் மடிந்து கொண்டிப்பவர்களுக்கு நித்திய வாழ்வு குறித்த வார்த்தையைப் போதித்தாகவேண்டும். COLTam 229.3

பெருவழிகளுக்கும் வேலிகளுக்கும் செல்லும்படி கிறிஸ்து கட்டளை கொடுக்கிறார்; எனவே தம்முடைய நாமத்தால் ஊழியம் செய்கிறவர்கள் செயல்படகிறிஸ்து அழைக்கிறார். முழு உலகமும் கிறிஸ்துவினுடைய ஊழியக்காரர்களின் ஊழியக்களமாகும். அவர்களது சபையில் ஒட்டுமொத்தமனுக்குலமும் அங்கத்தினர்கள். தம்முடைய கிருபையின் வார்த்தையை ஒவ்வோர் ஆத்துமாவுக்கும் அறிவிக்க ஆண்டவர் விரும்புகிறார். COLTam 229.4

தனிநபர் ஊழியத்தினால் மட்டுமே இது பெருமளவில் சாத் தியப்படும். இதுதான் கிறிஸ்துவின் பாணியாக இருந்தது. தமது ஊழியத்தின் போது தனிப்பட்ட விதத்தில் மக்களைச் சந்தித்தார். ஒரு சமயத்தில் ஒரு ஆத்துமாவைச் சந்திப்பது முக்கியம் என்பதில் அசையா நம்பிக்கையுடையவராக இருந்தார். அந்த ஒரு ஆத்து மாவானது ஆயிரக்கணக்கானோருக்கு செய்தியைக் கொண்டு சென் றது. COLTam 230.1

ஆத்துமாக்கள் நம்மிடம் வருவதற்கு நாம் காத்திருக்கக்கூடாது; அவர்கள் இருக்கிற இடத்திற்கு அவர்களைத் தேடிச் செல்ல வேண்டும். பிரசாங்கமேடையில் வார்த்தையைப் பிரசங்கிப்பது, ஊழி யத்தின் ஆரம்பநிலைதான். சுவிசேஷத்தை நாம் கொண்டு செல்லா விட்டால், ஏராளக்கணக்கானோர் அதை அறியாமலேயே போவார்கள். COLTam 230.2

விருந்துக்கான அழைப்பு முதலில் யூதர்ளுக்குக் கொடுக்கப் பட்டது. அவர்கள் பிற மனிதர்களுக்கு தலைவர்களாக இருக்கவும், போதகம் பண்ணவும் அழைக்கப்பட்டிருந்தார்கள்; கிறிஸ்துவின் வருகையை முன்னறிவித்த தீர்க்கதரிசன சுருள்கள் அவர்களுடைய கரங்களில் கொடுக்கப்பட்டிருந்தன; அவருடைய ஊழியப்பணி யைச் சுட்டிக்காட்டின அடையாள ஆராதனை முறைகள் அவர்களுக்கே கொடுக்கப்பட்டன. அந்த அழைப்பிற்கு ஆசாரியர்களும் மக்களும் செவிசாய்த்திருந்திருந்தால், கிறிஸ்துவின் ஊழியர்களு டன் சேர்ந்து சுவிசேஷத்தின் அழைப்பை உலகத்திற்குக் கொடுத் திருப்பார்கள். சத்தியத்தை மற்றவர்களுக்கு அறிவிக்கும்படி சாத் தியம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த அழைப்பை அவர்கள் மறுத்தபோது, ஏழைகளுக்கும் ஊனருக்கும், சப்பாணிகளுக்கும் குருடர்களுக்கும் அந்த அழைப்பு கொடுக்கப்பட்டது. ஆயக்காரர்களும், பாவிகளும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். இதே செயல்திட்டத்தோடுதான் புறஜாதியாருக்கும் சுவிசேஷ அழைப்பு கொடுக்கப்பட்டது. இந்தச் செய்தியானது முதலில் “பெருவழிகளில் ” அறிவிக்கப்படவேண்டும்; அதாவது, உலகப் பிரகாரமான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பவர்களுக்கு, மக்களுடைய தலைவர்களுக்கும் போதகர்களுக்கும் அறிவிக்கப் படவேண்டும். COLTam 230.3

கர்த்தருடைய ஊழியர்கள் இதை மனதில் கொள்வார்களாக. மந்தையின் மேய்ப்பர்களும், தேவன் நியமித்துள்ள போதகர்களும் இந்தச் செய்திக்குச் செவிகொடுக்கவேண்டும். சமுதாயத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்களை கனிவான அன்போடும், சகோதர பாசத்தோடும் அணுகவேண்டும். தொழில் செய்பவர்கள், நம் பிக்கைக்குரிய உயர்பொறுப்புகளை வகிப்பவர்கள், கண்டுபிடிப்பு திறன் படைத்தவர்கள் மற்றும் அறிவியல் நுண்ணறிவு படைத்த வர்கள், மேதைகள், இக்காலத்திற்கான விசேஷித்த சத்தியத்தை அறியாத சுவிசேஷப் போதகர்கள் போன்ற இவர்கள் தாம் முதன் முதலாக இந்த அழைப்பைக் கேட்கவேண்டும். இவர்களுக்குத்தான் அழைப்பு கொடுக்கப்படவேண்டும். COLTam 230.4

செல்வந்தர்களுக்குச் செய்யவேண்டிய ஊழியம் ஒன்றும் உண்டு. பரலோக ஈவுகள் தங்களை நம்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன என்கிற பொறுப்புணர்வை உண்டாக்கவேண்டும். மரித்தோரையும் ஜீவனுள்ளோரையும் நியாயந்தீர்ப்பவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியதை அவர்களுக்கு நினைவூட்டவேண்டும். செல்வந்தனுக்கு அன்போடும் தேவபயத்தோடும் நீங்கள் ஊழியம் செய்ய வேண்டியுள்ளது. பெரும்பாலும் தன் ஐசுவரியத்தில் நம்பிக்கை வைத்து, தான் ஆபத்தில் இருப்பதை அறியாதிருப்பான். நித்திய மதிப்புடைய விஷயங்களுக்கு அவனுடைய மனக்கண்களைத் திருப்பவேண்டும். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீ ங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத் தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது” என்று சொல்கிற நற்குணத்தின் அதிகாரத்தை அங்கீகரிக்கச் செய்யவேண்டும். COLTam 231.1

உலகத்தில் தங்கள் கல்வியால், செல்வத்தால் அல்லது அழைப்பால் உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம், அவர்களுடைய ஆத்தும் தேவைகள் குறித்து தனிப்பட்ட முறையில் எடுத் துரைப்பது அரிதாயிருக்கிறது. இவர்களை அணுகுவதற்கு கிறிஸ் தவ ஊழியர்கள் பலர் தயங்குகிறார்கள். அப்படி இருக்கக் கூடாது. வழக்கறிஞராக, வியாபாரியாக அல்லது நீதிபதியாக இருக்கிற ஒருவர் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்தால், அவர் மடிந்து போவ தைப் பார்த்துக்கொண்டு நாம் நிற்க முடியாது. ஒரு செங்குத்தான பாறையின் விளிம்பை நோக்கி பலர் செல்வதைப் பார்த்தால், அவர்கள் எத்தகைய அந்தஸ்தையும் அல்லது அழைப்பையும் பெற் றவர்களாக இருந்தாலும், உடனே திரும்பி வரும்படி எச்சரிக்காமல் இருக்கமுடியாது. அதுபோல அழிவிலிருக்கும் ஆத்துமாக்களை எச்சரிக்க நாம் தயங்கக்கூடாது. COLTam 231.2

உலகத்திற்கடுத்த விஷயங்களில் பற்றுள்ளவர்கள் என்று சொல்லி எவரையும் புறக்கணிக்கக்கூடாது . சமுதாயத்தின் உயர் நிலை யில் இருக்கும் பலர், புண்பட்ட மனதுள்ளவர்களாக, மாயையால் பீடிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். தங்களிடம் காணப்படாத சமாதானத்திற்காக ஏங்குவார்கள். சமுதாயத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்களில், இரட்சிப்பின்மேல் பசிதாகத்தோடு ஏங்குபவர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்துவின் அன்பால் கனிந்த இருதயத் தோடும், இரக்க சுபாவத்தோடும் கர்த்தருடைய ஊழியர்கள் தனிப்பட்ட விதத்தில் அவர்களை அணுகினால், அவர்களில் அநே கர் பயனடைவது நிச்சயம். COLTam 232.1

சுவிசேஷச் செய்தியின் வெற்றியானது பெரும்பாலும் அறி வாற்றல் மிக்க பேச்சுக்களையும், சொல்திறன் மிக்க சாட்சிகளையும் அல்லது ஆழமான விவாதங்களையும் சார்ந்திருப்பதில்லை. ஜீவ அப்பத்தின் மேல் பசியோடிருக்கும் ஆத்துமாக்களுக்கு ஏற்றபடி, புரிந்துகொள்ளும் விதத்தில் அதை அறிவிப்பதைச் சார்ந்து தான் உள்ளது.’‘இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்பதே ஆத்துமாவின் கேள்வியாக இருக்கும். COLTam 232.2

மிகவும் எளிமையான விதத்தில் பல்லாயிரக்கணக்கானோரை ஆதாயப்படுத்தலாம். உலகத்தில் தாலந்துமிக்க ஆண்களாக, பெண்களாக கருதப்படுகிற அறிவுமேதைகளை பெரும்பாலும் சாதாரண வார்த்தைகள் மூலம் புத்துணர்வு கொள்ளச் செய்யலாம். ஆனால் அந்த வார்த்தைகளைப் பேசுகிறவர் தேவன்மேல் அன்பு கூர வேண்டும்; உலகப்பிரகாரமான ஒருவர் தனக்குப் பிடித்த ஒரு விஷ யம் குறித்து ஆழமாகப் பேசுவது போல அந்த அன்புகுறித்து இயல் பாகப் பேசக்கூடியவராக இருக்கவேண்டும். COLTam 232.3

அநேக சமயங்களில், நன்கு ஆராய்ச்சி செய்து ஆயத்தத்துடன் வழங்கும் செய்தியானது எதிர்பார்க்கிற விளைவை ஏற்படுத்துவதில்லை. ஆனால் உண்மையும் நேர்மையும் கொண்ட தேவனுடைய மகனோமகளோ, சாதாரணமாகச் சொல்கிற செய்தி, கிறிஸ்துவுக்கும் அவருடைய அன்புக்கும் எதிராக வெகுநாட்களாக அடைக்கப்பட் டிருந்த இருதயக்கதவுகளைத் திறக்கிற வல்லமையைப் பெற்றிருக்கும். தன் சொந்தப் பெலத்தால் தான் ஊழியம் செய்யவில்லை என் பதை கிறிஸ்துவின் ஊழியர் நினைவில் வைத்திருக்க வேண்டும். இரட்சிக்கவல்ல தேவ வல்லமையில் விசுவாசத்துடன், அவருடைய சிங்காசனத்தை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். ஜெபத்தில் தேவனோடு போராடி, பிறகு தேவன் தனக்குக் கொடுத்திருக்கிற ஆற்றல்களோடு ஊழியம் செய்ய வேண்டும். அவனைப் பெலப் படுத்தும்படி பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டிருக்கிறார். பணி விடை தூதர்கள் அவனுடைய பக்கத்தில் இருந்து, இருதயங்களில் தாக்கத்தை உண்டாக்குவார்கள். COLTam 232.4

கிறிஸ்து சொன்ன சத்தியத்தை எருசலேமின் தலைவர்களும் போதகர்களும் ஏற்றிருப்பார்களானால், அவர்களுடைய நகரம் எத்தகைய ஊழியப்பணியின்மையமாக மாறியிருக்கும் ! பின்வாங் கிப்போன இஸ்ரவேலர் மனம் மாறியிருப்பார்கள். ஆண்டவருக் காக ஒரு பெரிய சேணை உருவாகியிருக்கும். உலகத்தின் அனைத் துப் பகுதிகளுக்கும் துரித வேகத்தில் சுவிசேஷத்தை அவர்கள் கொண்டு சென்றிருப்பார்கள். இப்போதும் கூட நல்செல்வாக்கும், பெரும் திறமைகளும் படைத்த மனிதர்களை கிறிஸ்துவுக்காக ஆயத்தம் பண்ணமுடிந்தால், விழுந்துபோனோரைத் தூக்கி நிறுத்து வதிலும், துரத்துண்டோரைக் கூட்டிச் சேர்ப்பதிலும், இரட்சிப்பின் செய்திகளை தூர இடங்களில் பரப்புவதிலும் அவர்கள் மூலம் எத் தகைய பணி நடந்திருக்கும். உடனடியாக அழைப்பைக் கொடுக்க முடியும்; கர்த்தருடைய விருந்துக்கு விருந்தினர்களைக் கூட்டிச்சேர்க்க முடியும். COLTam 233.1

அதற்காக, அதிகாரமும் தாலந்தும் படைத்த மனிதர்களை மட் டுமே மனதில் கொண்டு, ஏழை எளியவர்களை மறந்துவிடக்கூடாது. உலகத்தில் குறுஞ்சாலை மற்றும் வேலிகள் அருகே உள்ளோரிடமும், ஏழை எளியோரிடமும் செல்லும்படி கிறிஸ்து தம் சீடர்களுக்குப் போதிக்கிறார். மாநகரங்களின் விசாலமான வீதிகளிலும் கிராமப் புறத்தின் ஒற்றையடி பாதைகளிலும் குடியிருக்கிற குடும்பத்தினர்களும் தனிநபர்களும், ஒருவேளை ஓர் அந்நிய தேசத்தில் வாழும் அந்நியர்களாக இருக்கலாம்; அவர்கள் சபையோடு உறவில்லாதவர்களாக இருக்கலாம்; தேவன் தங்களை மறந்துவிட்டாரோவென்று தங்கள் தனிமையுணர்வால் யோசிக்கலாம். இரட்சிக்கப்படு வதற்கு தாங்கள் என்ன செய்யவேண்டுமென்று புரியாமல் இருப் பார்கள். அநேகர் பாவத்தில் மூழ்கியிருப்பார்கள். அநேகர் இக்கட்டில் இருப்பார்கள். உபத்திரவமும், பற்றாக்குறையும், அவநம் பிக்கையும், விரக்தியும் அவர்களை அழுத்திக்கொண்டிருக்கும். ஆத்துமாவிலும் சரீரத்திலும் ஒவ்வொரு வகை நோயும் வேதனை கொடுக்கும். தங்கள் இக்கட்டுகளில் தங்களுக்கு ஆறுதல் கிடைக் காதாவென ஏங்குவார்கள். இச்சைகளிலும் இன்பங்களிலும் ஆறு தல்காணும்படி சாத்தான் தூண்டுவான்; அது அவர்களை அழிவிலும் மரணத்தலும் கொண்டுவிடும். சோதோமாகிய ஆப்பிகள்களைக் கொடுப்பான்; அவை உதடுகளில் சாம்பலாகிப்போம். அப்பமல்லா ததற்காக தங்கள் பணத்தையும் திருப்தி செய்யாத பொருளுக்காக தங்கள் பிரயாசத்தையும் செலவிடுகிறார்கள். COLTam 233.2

இவ்வாறு உபத்திரவத்தில் உள்ளவர்களை இரட்சிக்கவே கிறிஸ்து வந்தாரென்பதை அறியுங்கள். “ஓ, தாகமாயிருக்கிறவர் களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பண மில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள் ளுங்கள் ...... நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமான தைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப் பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும். உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள் : கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும் ” என்று அவர்களை அவர் அழைக்கிறார். ஏசாயா 55:1-3. COLTam 234.1

அந்நியர் மேலும், புறக்கணிக்கப்பட்டோர் மேலும், ஒழுக்க நிலையில் பெலவீனமான ஆத்துமாக்கள் மேலும் அக்கறைகாட் டும்படி தேவன் விசேஷித்த கட்டளை கொடுத்திருக்கிறார். பக்தி மார்க்கங்களில் முற்றிலும் ஈடுபாடில்லாதது போலக் காணப்படுகிற பலர் தங்கள் இருதயத்தில் இளைபாறுதலுக்காகவும் சமாதானத்திற்காகவும் ஏங்குவார்கள். பாவத்தின் கொடும் ஆழங்களில் அவர்கள் மூழ்கியிருக்கலாம்; ஆனாலும் அவர்கள் இரட்சிக்கப் படுவதற்கான சாத்தியம் இருக்கிறது. COLTam 234.2

கிறிஸ்துவின் ஊழியர்கள் அவருடைய முன்மாதிரியைப் பின் பற்றவேண்டும். அவர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் உபத்திர வப்பட்டோரைத் தேற்றினார்; வியாதியஸ்தரைக் குணப்படுத்தி னார். அதன்பிறகு, தம்முடைய இராஜ்யத்திற்கடுத்த மேன்மையான சாத்தியங்களை அவர்களுக்கு எடுத்துரைத்தார். அவரைப் பின்பற்று கிறவர்கள் செய்யவேண்டிய பணியும் இதுதான். சரீரப்பிரகாரமான பாடுகளைப் போக்க முயற்சிக்கும் போது, ஆத்தும் தேவைகளைச் சந்திப்பதற்கான வழிகளைக் கண்டு கொள்வீர்கள். உயர்த்தப்பட்ட இரட்சகரைச் சுட்டிக்காட்டலாம், மாபெரும் மருத்துவரின் அன்பை அவர்களுக்குக் கூறலாம்; அவர் மட்டுமே குணமாக்கும் வல்லமை படைத்தவர். COLTam 234.3

வழிதவறிப் போய், கொடிய விரக்கியில் இருப்பவர்களிடம் நம்பிக்கையிழக்க வேண்டாமெனச் சொல்லுங்கள். அவர்கள் பாவம் செய்திருக்கலாம், நற்குணங்களை வளர்க்காதவர்களாக இருக்கலாம்; ஆனால் அவர்களைக் குணமாக்கி, தம்முடைய இரட் சிப்பின் சந்தோஷத்தை அருளுவதில் தேவன் மகிழ்ச்சியடைகிறார், சாத்தானின்கிரியைகளுக்கு இடமளித்து, முற்றிலும் நம்பிக்கையற்ற நிலையில் காணப்படுபவர்களை எடுத்து, தம்முடைய கிருபையின் பாத்திரங்களாக மாற்றுவதில் அவர் களிகூருகிறார். கீழ்ப்படியா தோருக்கு நேரிடக்கூடிய கோபாக்கினையிலிருந்து அவர்களை விடுவிப்பதில் சந்தோஷமடைகிறார். ஒவ்வோர் ஆத்தமாவுமே குணமாக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட முடியுமென்பதை அவர்களி டம் சொல்லுங்கள். கர்த்தருடைய பந்தியில் அவர்களுக்கு ஓர் இட முண்டு. அவர்களை வரவேற்பதற்கு அவர் காத்துக்கொண்டிருக்கிறார். COLTam 235.1

குறுஞ்சாலைகளிலும் வேலிகளருகிலும் இருப்போரைத் தேடிச் செல்பவர்கள், தாங்கள் ஊழியம் செய்யவேண்டிய முற்றிலும் வித்தியாசமான ஜனங்களைச் சந்திப்பார்கள். அந்த ஜனங்கள் தங்களுக்குக் கிடைத்த வெளிச்சத்தில் உண்மையாயிருந்து, தாங்கள் அறிந்து அளவிற்கு தேவனைச் சிறப்பாகச் சேவிக்கிற வர்கள். தங்களுக்கும் தங்களைச் சுற்றிலுமுள்ளவர்களுக்கும் செய் யப்படவேண்டிய ஒரு மாபெரும் ஊழியம் இருப்பதை உணர்கிறார்கள். தேவனைக்குறித்து அதிகமாக அறிய ஏங்குகிறார்கள்; ஆனால் அந்த மாபெரும் வெளிச்சத்தின் சிறு மினு மினுப்பை மட் டுமே முதலில் கண்டிருப்பார்கள். விசுவாசக் கண்ணால் தூரத்திலே தாங்கள் கண்ட ஆசீர்வாதத்தை தேவன் தங்களுக்கருகில் கொண்டு வர கண்ணீரோடு ஜெபிக்கிறார்கள். துன்மார்க்கம் நிறைந்த மாந்கரங்களில் இதுபோன்ற ஆத்துமாக்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களில் பலர் மிகவும் சாதாரண சூழ்நிலைகளில் வசிப்பதால், உலகக்கவனத்தைப் பெற்றிருக்க மாட்டார்கள். இவர்களில் அநே கரைப்பற்றி ஊழியர்களுக்கும் சபையாருக்கும் எதுவும் COLTam 235.2

தெரிந்திருக்காது. ஆனால் மிகவும் இழிவான, துயர்மிகுந்த இடங் களில் ஆண்டவருக்கு சாட்சியாக வாழ்வார்கள். குறைவான வெளிச்சத்தையும், கிறிஸ்தவ பயிற்சியில் குறைவான வாய்ப்புகளையும் பெற்றிருந்தும், நிர்வாணத்திற்கும், பசிக்கும், குளிருக்கும் மத்தியில் பிறருக்கு ஊழியம் செய்ய முயல்கிறார்கள். தேவ கிரு பையை ஏராளமாகப் பெற்றிருக்கும் உக்கிராணக்காரர்கள் இந்த ஆத்துமாக்களைத் தேடிச்சென்று, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் அவர்களுடைய தேவைகளைச் சந்திக்கவேண்டும். ஆத்துமாவுக்கு பரலோகத்தின் அப்பம் போல விளங்குகிற ஒரு செய்தியை கிறிஸ்து தம் தாசர்களுக்குக் கொடுப்பார். விலைகே யறப்பெற்ற இந்த ஆசீர்வாதம் ஒரு இருதயத்திலிருந்து மற்றொரு இருதயத்திற்கும், ஒரு குடும்பத்திலிருந்து மற்றொரு குடும்பத்திற்கும் கொண்டு செல்லப்படும். COLTam 236.1

“ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டு வா” என்று உவமையில் கொடுக்கப்பட்டுள்ள கட்டளை தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள மக்களைக் கட்டாயப்படுத்தும் போதனையென நினைக்கிறார்கள். ஆனால் அழைப்பு எவ்வளவு அவசரமானது, அதை எவ்வளவாகத் துரிதப்படுத்வேண்டும் என்பதையே அது சுட்டிக்காட்டுகிறது. மனி தர்களை கிறிஸ்துவண்டை கொண்டுவர சுவிசேஷமானது ஒருபோ தும் பலவந்தத்தைப் பயன்படுத்துவதில்லை . “ஓ, தாகமாயிருக் கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்” என்பதே அதின் பொருள். ஏசா 55:1. ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள். விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” வெளி 22:17. தேவ அன்பின் வல்லமையும் கிருபையும் அவரிடத்தில் செல்வதற்கு நம்மை நெருக்கி ஏவுகின்றன. COLTam 236.2

“இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான் ” என்று இரட்சகர் கூறுகிறார். வெளி 3:20. ஏளனத்தைக் கண்டு அவர் பின்வாங்குவதில்லை; மிரட்டுதலைக் கண்டு ஒதுங்குவதுமில்லை; ஆனால் நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்?” என்று சொல்லி, காணா மற்போனவர்களை தொடர்ந்து தேடுகிறார். ஓசியா 11:8. கடின இருதயமுள்ள வர்கள் அவருடைய அன்பைப் புறக்கணித்தாலும் கூட, மேலும் தீவிரமாக அவர்களோடு மன்றாட அவர் திரும்பி வரு கிறார்: “இதோ, வாசற்படியில் நின்று தட்டுகிறேன். அவருடைய அன்பு வெற்றிகொள்ளும் வல்லமை படைத்தது; அவரண்டைச் செல் தற்கு ஆத்துமாக்களை அது நெருக்கி ஏவுகிறது. அதனால் கிறிஸ்துவிடம் அவர்கள், ‘உம்முடைய காருண்யம் என்னைப் பெரியவனாக்கும்” என்று சொல்கிறார்கள். சங் 18:35. COLTam 236.3

காணாமற்போனோரைத் தேடுவதில் தமக்குள்ள அன்பைதம் முடைய ஊழியர்களுக்கும் கிறிஸ்து கொடுப்பார். “வாருங்கள்” என்று நாம் அழைத்தால் மட்டும் போதாது. ஏனெனில், அழைப் பைக் கேட்டும், அதன் அர்த்தம் விளங்காத அளவிற்கு மந்த செவியுள்ளவர்கள் இருக்கிறார்கள். தங்களுக்காக வைக்கப்பட்டிருக் கும் நன்மைகளைக் காணக்கூடாத அளவிற்கு குருடர்களாக இருப் பார்கள். தாங்கள் அதிகமாகச் சீர்கெட்டிருப்பதை அநேகர் உணர் கிறார்கள். உதவி பெறுமளவிற்கு எங்களுக்கு தகுதியில்லை ; எங்களை விடுங்கள்’ என்று சொல்கிறார்கள். ஆனால் ஊழியர்கள் பின் வாங்கக்கூடாது. அதைரியமடைந்து, ஆதரவற்று நிற்போரை கனி வும் பரிவுமிக்க அன்பால் பற்றிக்கொள்ளுங்கள். உங்களது தைரி யத்தையும் உங்களது நம்பிக்கையையும் உங்களது ஊக்கத்தையும் கொடுங்கள். கிறிஸ்துவண்டை வரும்படி அன்போடு வருந்தி அழையுங்கள் . “சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியி லிருந்து இழுத்துவிட்டு பயத்தோடே இரட்சித்து.” யூதா 22, 23. COLTam 237.1

தேவ ஊழியர்கள் விசுவாசமுள்ளவர்களாக அவரோடு நெருங்கி ஜீவிக்கும் போது, அவர்களுடைய செய்திக்கு அதுவல்லமையைக் கொடுக்கிறார். மனிதர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள் ளும்படி நெருக்கி ஏவப்படுமளவிற்கு தேவ அன்பையும், தேவ கிருபையைப் புறக்கணிப்பதின் ஆபத்தையும் எடுத்துக்கூற பெல மளிக்கிறார். தேவன் தங்களுக்கு நியமித்துள்ள பங்கை மனிதர்கள் நிறைவேற்றும் போது, பிரமிப்பூட்டும் அற்புதங்களை கிறிஸ்து செய்வார். முன் சந்ததியாரில் ஏற்பட்டிராத அளவுக்கு ஒரு மாபெரும் மனமாற்றமானது மனிதர்களுடைய இதயங்களில் இன்று நடைபெறச் செய்வார். ஜான் பன்யன், தேவனை நிந்திப்பவ ராகவும் களியாட்ட நாட்டமுள்ளவராகவுமிருந்து மீட்கப்பட்டவர்; ஜான் நியூட்டன் அடிமை வியாபாரம் செய்பவராக இருந்து, விடு தலைபெற்று, உயர்த்தப்பட்ட இரட்சகரை அறிவித்தார். இன் றும் கூட பன்யன், நியூட்டன் போன்றோர் இரட்சிக்கப்படக் கூடும். தேவனோடு ஒத்துழைக்கிற மனித பிரதிநிதிகள் மூலம், மனி தர்களால் புறக்கணிக்கப்பட்ட பலர் மீண்டும் சேர்க்கப்படுவார்கள், அவ்வாறு சேர்க்கப்பட்டவர் மனிதனில் தேவசாயல் மீண்டும் உருவாக முயற்சிப்பார். சொற்ப அளவு வாய்ப்பு பெற்றவர்களும், வேறு நல்லவழிதெரியாததால் தவறான வழிகளில் சென்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மேல் வெளிச்சக் கதிர்கள் வீசப்படும். “இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்க வேண்டும்” என்று சகேயுவிடம் சொன்னதுபோல, அவர்களிடமும் கிறிஸ்து பேசுவார். லூக் 19:5. கடினமான பாவிகளென கருதப்பட்டிருந்ததவர்கள் கூட, கிறிஸ்து அவர்கள் மேல் சிந்தை வைத்ததால், சிறு பிள்ளையைப் போன்று கனிவான இருதயமுள்ளவர்களாக மாறுவார்கள். படு மோசமான தவறுகளிலும் பாவங்களிலுமிருந்து மனமாறுகிற பலர், நல்ல வாய்ப்புகளையும் சிலாக்கியங்களையும் பெற்றிருந்தும் அவற்றின் மதிப்பை உணரத்தவறினவர்களின் இடத்தைப் பெறுவார்கள். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக, விலையேறப்பெற்றவர்களாக எண்ணப்படுவார்கள். கிறிஸ்து தமது இராஜ்யத்தில் வரும்போது, அவருடைய சிங்காசனத்திற்கு அருகே நிற்பார்கள். COLTam 237.2

“பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்.” எபிரெயர் 12:25. அழைக் கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசி பார்ப்பதில்லை” என்று கிறிஸ்து சொன்னார். அழைப்பை மறுத்தார்கள்; அவர்களில் எவருக்கும் இனி அழைப்பு கொடுக்கப்படாது. கிறிஸ்துவை மறுதலித்த யூதர்களின் மனது கடினப்பட்டது, சாத்தானின் வல்லமைக்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். எனவே, அவருடைய கிருபையை ஏற்றுக்கொள்வது அவர்களுக்குக் கூடாத காரியமானது. அதுபோலத்தான் இன்றைக்கும் உள்ளது . தேவ அன்பை உணர்ந்து, போற்றி, அது ஆத்துமாவை மென்மையாக்கி, கீழ்ப்ப்ப டுத்துகிற நியதியாக மாறாவிட்டால், முற்றிலும் தொலைந்த நிலைக்கு ஆளாகிறோம் . தம் அன்புகுறித்து ஆண்டவர் இதுவரை கொடுத்திருக்கிற வெளிப்பாட்டைவிட அதிகமாக கொடுப்பதற்கு எதுவுமில்லை. இயேசுவின் அன்பு உங்கள் இருதயத்தில் கீழ்ப் படிதலை உருவாக்காவிட்டால், வேறு எந்த வழிகளிலும் நம்மை அவர் ஆதாயப்படுத்த முடியாது. COLTam 238.1

இரக்கத்தின் செய்திக்குச் செவிகொடுக்க ஒவ்வொருமுறை மறுக்கும் போதும், உங்களுக்குள் அவிசவாசம் பெலப்படுகிறது. கிறிஸ்துவுக்கு உங்கள் இருதயக் கதவைத் திறக்கு ஒவ்வொரு முறை மறுக்கும்போதும், பேசுகின்ற அவருடைய குரலுக்குச் செவிசாய்க்க மேலும் மேலும் விருப்பமில்லாமல் போகிறது. முற்கால இஸ்ரவேலைப் பற்றிச் சொல்லப்பட்டது போல, உங்களைப் பற்றியும்,“எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான். அவனைப் போகவிடு” என்று சொல்லப்படவேண்டாம். ஓசியா 4:17. கிறிஸ்துவானவர் எருசலேமைப் பற்றி, “கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ண மாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன் ; உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப் படும்” என்று கதறியதுபோல் உங்களைக் குறித்தும் கதறாதிரு க்கட்டும். லூக்கா 13:34, 35. COLTam 239.1

கடைசி அழைப்பும், கடைசி இரக்கத்தின் செய்தியும் மனுபுத் திரருக்குக் கொடுக்கப்படுகிற காலத்தில் வாழ்கிறோம் . “பெரு வழிகளுக்கும் வேலிகளுக்கும் செல்லுங்கள்” என்கிற கட்டளை இறுதியாக நிறைவேறுகிற நிலைக்கு வந்துவிட்டது. கிறிஸ்துவின் அழைப்பு ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் கொடுக்கப்படும். “வாருங்கள் எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது.” தேவ தூதர்கள் மனிதப் பிரதிநிதிகளுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். அவ ரிடம் செல்ல உங்களை நெருக்கி ஏவும்படி பரிசுத்த ஆவியானவர் எல்லா விதங்களிலும் தூண்டி வருகிறார். பூட்டப்பட்டுள்ள உங்களுடைய இருதயக்கதவை அவர் உள்ளே வரும்படி திறப்பதற்கான ஏதாவது அறிகுறி தென்படுகிறதாவென கிறிஸ்து கவனிக்கிறார். காணாமற்போன இன்னொரு பாவி கண்டுபிடிக்கப்பட்ட மகிழ்ச்சியான செய்தியைப் பரலோகம் கொண்டு செல்ல தேவதூதர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சுவிசேஷ விருந்திற்கான அழைப்பை இன்னோர் ஆத்துமா ஏற்றுக்கொண்டதை சுரமண்டலங்களை வாசித்து, பாடல் பாடி மகிழ்வதற்கு பரலோகசேனையே காத்துக்கொண்டிருக்கிறது. COLTam 239.2