கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்
5 - “கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது”
கிறிஸ்துவின் போதகத்தைக் கேட்டுக்கொண்டிருந்த பெருங் கூட்டத்தாரில் அநேக பரிசேயர்களும் இருந்தார்கள். அங்கிருந்த சிலர் அவரை மேசியாவென ஏற்றுக்கொண்டதைக் கேட்டு ஏளனம் செய்தார்கள். மாயமாலமின்றி போதிக்கிற அவர் எவ்வாறு இஸ்ர வேலை உலகமனைத்தையும் ஆளுகிற ராஜ்யமாக்க் கொண்டு செல் வாரென தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொண்டனர். ஐசுவரியம், அதிகாரம் அல்லது அந்தஸ்து இல்லாமல் எவ்வாறு அவர் அந்தப் புதிய ராஜ்யத்தை ஸ்தாபிப்பார்? அவர்களுடைய சிந்தனை கைள் அறிந்த கிறிஸ்து, பின்வருமாறு சொன்னார். COLTam 76.1
“தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?” மாற்கு 4:30. உலக இராஜ்யங்களுக்குரியவைகளில் எதுவுமே அதற்கு ஒப்பிட்டுச் சொல்வதற்குப் பயன்படவில்லை. நாகரீகமுள்ள எந்த சமுதாயமும் அதற்கு அடையாளமாக்கப் பயன்படும் பொருளை அவருக்கு வழங்க இயலவில்லை . அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது என்றார். அது பூமியில் விதைக்கப்படும் போது, பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது; விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதனுடைய நிழலின் கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை பரப்பும். COLTam 76.2
விதைக்குள் தேவன் புகுத்தியுள்ள உயிர் நியதி செயல்படத் துவங்கும்போது, முளைவளருகிறது. எந்தவித மனித சக்தியையும் சார்ந்து அதன் வளர்ச்சி இருப்தில்லை. அப்படியே கிறிஸ்துவின் இராஜ்யமும் இருக்கிறது. அது புது சிருஷ்டிப்பின் அனுபவமாகும். அதன் வளர்ச்சி நியதிகள் இவ்வுலக இராஜ்யங்களின் சட்டத்திற்கு எதிரிடையாக உள்ளது. உலக அரசுகள் படைபெலத்தால் தாக்குப் பிடிக்கின்றன ; போர் நடத்தி தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுகின் றன; ஆனால், புதிய இராஜ்யத்தின் ஸ்தாபகர் சமாதான பிரபு. கொடிய மிருகங்களை உருவகங்களாக வைத்து உலக இராஜ்யங்களை பரிசுத்த ஆவியானவர் சுட்டிக்காட்டுகிறார்; ஆனால் கிறிஸ்துவோ, ‘உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று கிறிஸ்து வர்ணிக்கப்படுகிறார். யோவான் 1:29. வலுக்கட்டாயமாக மனச்சாட்சியை வற்புறுத்தும் திட்டம் எதுவும் அவர் ஆளுகையில் இல்லை. உலக இராஜ்யங்களைப் போலவே தேவனுடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட யூதர்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். நீதியைப் பெற்றுக்கொள்ள வெளிப் பிரகாரமான நடவடிக்கைகளில் இறங்கினார்கள். அதற்கான திட்டங்களையும் முறைகளையும் வகுத்தார்கள். ஆனால் கிறிஸ்து ஒரு நியதியைப் புகுத்துகிறார். சத்தியத்தையும், நீதியையும் புகுத்தி, தவறுகளையும், பாவத்தையும் பலமிழக்கச் செய்கிறார். COLTam 77.1
இயேசு இந்த உவமையைச் சொன்னபோது, அருகிலும் தூரத்திலும் இருந்த கடுகுச் செடிகள் புற்களுக்கும் தானியங்களுக்கும் மேலாக வளர்ந்து, லேசான காற்றில் கொப்புகளை ஆடவிட்டிருக் கும். பறவைகள் கிளைவிட்டு கிளை தாவி, இலைகளுக்குள் மறைந்து பாடியிருக்கும். ஆனால் பிரமாண்டமாகவளருகிற இந்தத் தாவரம், முளைக்கிற விதையானது விதைகளிலெல்லாம் மிகச் சிறி யது. முதலாவது இளந்தண்டு வரும், ஆனால் அது வீரியமிக்கதாக இருந்து, பச்சைப் சேலென ஓங்கி வளர்ந்து, பிரம்மாண்டமான அளவை எட்டும். அதுபோன்றதுதான் கிறிஸ்துவின் இராஜ்யமும்; ஆரம்பத்தில் சாதாரணமானதாக, முக்கியத்துவமற்றதாகத் தெரி யலாம். உலக இராஜ்யங்களோடு ஒப்பிடுகையில், எல்லாவற்றையும் விட அற்பமானதாகத் தோன்றலாம். கிறிஸ்து தம்மை ராஜாவெனச் சொன்ன போது, இவ்வுலக மன்னர்கள் பரிகசித் தார்கள். ஆனாலும் சுவிசேஷம் சுட்டிக்காட்டுகிற ராஜ்யமான து தெய்வீக ஜீவனுடையது ; இயேசு தம் சீடர்களிடம் ஒப்பு வித்த மகத்தான சாத்தியங்களில் அதைக் காணலாம். அந்த ராஜ்யம் எவ்வளவு வேகமாக வளர்ந்தது, அதன் செல்வாக்கு எவ்வளவு தூரம் பரவிச்சென்றது! கிறிஸ்து இந்த உவமையைச் சொன்னபோது, இந்தப் புதிய ராஜ்யத்தை ஏற்றுக்கொண்ட கலிலேய விசுவாசிகள் ஒரு சிலரே அங்கிருந்தனர். COLTam 77.2
அவர்கள் ஒரு சிலராக இருந்ததாலும், வறுமையில் இருந்த தாலும், இயேசுவைப் பின்பற்றின அந்தச் சாதராண மீனவர்களைப் போல தாங்களும் நினைப்பதில் அர்த்தமில்லையென்றே மீண்டும் மீண்டும், காரணம் சொன்னார்கள். ஆனால், கடுகு விதை வளர்ந்து உலகம் முழுவதற்கும் கிளைகளைப் பரவவேண்டும். அப்போது, மனிதர்களின் இதயங்களில் நிறைந்திருந்த உலக இராஜ்யங்கள் குறித்த மகிமை அழிந்து, மகத்தானதும் எங்கும் பரவிச்செல்கிறதுமான வல்லமையாக கிறிஸ்துவின் ராஜ்யம் நிலைக்கவேண்டும். COLTam 78.1
முதலாவது சிறிதளவில் கிருபை இதயத்தில் செயல்பட ஆரம்பிக்கிறது. பேசப்படும் ஒரு வார்த்தை, ஆத்துமாவிற்குள் வீசும் ஓர் ஒளிக்கதிர், தாக்கத்தை உண்டாக்கும் ஒரு செல்வாக்கு புதியதொரு ஜீவியத்தின் ஆரம்பமாக அமைகிறது; அதின் முடிவுகளை யார் அளவிடமுடியும்? COLTam 78.2
கடுகுவிதை குறித்த உவமையானது, கிறிஸ்துவினுடைய இராஜ்யத்தின் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே சுட்டிக்காட்டவில்லை; மாறாக, ராஜ்யத்தினுடைய வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் உவமை யில் சொல்லப்படும் அனுபவம் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. ஒவ்வொரு சந்ததியிலும் தேவன் தமது சபைக்கு விசே ஷித்த சத்தியத்தையும், விசேஷித்த வேலையையும் வைத்திருக் கிறார். உலக ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும் மறைக்கப்பட் டுள்ள சத்தியம் சிறு பிள்ளை போல தாழ்மையுள்ளவர்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. சுயத்தை தியாகம் செய்யுமாறு அது அழைக்கிறது. அதற்காக போராடவேண்டிய போராட்டங்களும் பெற வேண்டிய வெற்றிகளும் உள்ளன. ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்தில் நிற்பவர்கள் சிலரே. உலகத்தில் அதிகாரமுள்ள வர்களும், உலகத்தோடு ஒத்துப்போகும் சபையும் இவர்களை எதிர்த்துப், புறக்கணிக்கிறார்கள். கிறிஸ்துவின் முன்னோடியான யோவான் ஸ்நான்னைப் பாருங்கள்; தனியாளாக நின்று, யூத தேசத்தின் பெருமையையும் ஆச்சாரமுறைகளையும் கண்டித்தார். ஐரோப்பாவிற்கு முதன் முதலில் சுவிசேஷம் சுமந்து சென்றவர்களைப் பாருங்கள். பவுல், சீலாவின் ஊழியத்தைப் பாருங்கள்; கூடாரத் தொழிலாளிகளான இருவரும் தங்களோடு இருந்தவர்களுடன் துரோவாவிலிருந்து பிலிப்பிற்குக் கப்பலேறியபோது, எவ்வளவு நம்பிக்கையற்ற, தெளிவற்ற நிலை காணப்பட்டது. பின்பு முதியவரான பவுல் ” சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் ராயரின் அரண்மனையில் கிறிஸ்துவைப் பிரசங்கித்ததைப் பாருங்கள். ரோமப் பேரரசின் அஞ்ஞானமார்க்கத்தை எதிர்த்து நின்ற சிறு கூட்ட அடிமைகளையும் விவசாயிகளையும் பாருங்கள். உலக ஞானத்திற்கு பேர்போன பகட்டான சபையை எதிர்த்து நின்ற மார்டின்லுத்தரைப் பாருங்கள். பேரரசருக்கும், போப்புவுக்கும் எதிராக தேவ வார்த்தையில் உறுதியாக நின்று, ‘இதுவே என் னுடைய நிலை; இதில் மாற்றமே இல்லை. தேவன் எனக்கு உதவி செய்வாராக” என்று கூறியதைப் பாருங்கள். ஆச்சாரமுறைமைகளுக்கும், சிற்றின்ப போக்கிற்கும், நாத்திகத்திற்கும் மத்தியில் கிறிஸ்துவையும் அவருடைய நீதியையும்து பிரசங்கித்த ஜான் வெஸ்லியைப் பாருங்கள். அஞ்ஞான உலகின் அவலநிலையால் பாரமடைந்து, அவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பை அறிக்கிற சிலாக்கியத்தைத் தரும்படி கெஞ்சினவரைப் பாருங்கள். மத அதிகாரம் அவருக்குச் சொன்ன பதிலைக் கேளுங்கள் :“’வாலிபரே, நீங்கள் சும்மா இருங்கள். அஞ்ஞானிகளை தேவன் இரட்சிக்க விரும்பும் போது, உங்கள் உதவியோ எங்கள் உதவியோ இல்லாமல் அவரே அதைச் செய்துகொள்வார்.” COLTam 78.3
அந்தத் தலைமுறையில் பக்தி மார்க்க சிந்தையோடு இருந்த அந்த மாபெரும் தலைவர்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன் சத்தியத்தின் விதையைத் தூவினவர்களின் புகழ் பாடி, அவர்கள் விட்டுச்சென்ற நினைவுச்சின்னங்களைக் கட்டி எழுப்பினார்கள். இந்த வேலையைச் செய்யாமல், அதே விதையிலிருந்து முளைத்து வருகிற முளையை மிதிக்க இன்று அநேகர் புறப்படவில்லையா? “மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் (அவர் அனுப்பிய தூதூவர்தான் கிறிஸ்து) எங்கேயிருந்து வந்தவ னென்று அறியோம் என்கிற அதே குரல் இன்றும் கேட்கிறது. யோவான் 9:29. முற்காலங்களைப்போலவே, இந்தக்காலத்திற்கான விசேஷித்த சாத்தியங்கள் மத அதிகாரமுள்ளவர்களிடத்தில் காணப்படாமல், தங்கள் கல்வியையும் ஞானத்தையும் வைத்து, தேவ வார்த்தையை விசு வாசிக்க முற்படாத ஆன்களிடமும் பெண்களிடமும்தான் காணப்படுகிறது. COLTam 79.1
“எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப் படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத் தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார். உள்ளவைகளை அவமாக் கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்ட வைகளையும், இல்லாத வைகளையும், தேவன் தெரிந்து கொண்டார்” 1கொரி 1:26-28. “உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத் திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு தேவன் அப்படிச் செய்தார்.” 1கொரி 2:4. COLTam 80.1
இந்தக் கடைசித் தலைமுறையில், கடுகுவிதை குறித்த உவமை யானது குறிப்பிடத்தக்க வகையில், வெற்றிகரமாக நிறைவேற உள்ளது. சிறிய விதை மிகப்பெரிய மரமாக வளரும். எச்சரிப்பின் இரக்கத்தின் கடைசி செய்தி, சகல ஜாதிகளுக்கும், கோத்திரத் தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கப்படவேண்டும்” வெளி. 14:614, தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி தேவன் கிரியை செய்வார் அப் 15:14. அவருடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிருக்கும். வெளி. 18:1. COLTam 80.2