கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

52/55

26 - “அநீதியான உலகப்பொருளால் நண்பர்கள் ”

உலகப்பிரகாரமான வாழ்க்கை தீவிரமாகியிருந்த ஒரு காலத்தில் கிறிஸ்துவந்தார். மனிதர்கள் உலகப்பிரகாரமானவற்றிற்கு கீழாக நித்தியமானவற்றை வைத்தார்கள்; எதிர்காலத்திற்கான கோரிக்கைகளைத் தள்ளி, தற்கால விவகாரங்களைப் போற்றினார்கள். உண்மைகளை மாயையென்றும் மாயைகளை உண்மையென்றும் தவறாகக் கருதினார்கள். அதரிசனமான உலகத்தை விசுவாசத்தால் காணவில்லை. இவ்வுலககாரியங்களை படுகவர்ச்சியாகவும், சிந்தையை மயக்கும் விதத்திலும் சாத்தான் அவர்களுக்கு முன் வைக்கிறான்; அவனுடைய பாவத் தூண்டல்களுக்கு அவர்கள் அடிபணிகிறார்கள். COLTam 372.1

இந்த நடைமுறையை மாற்றியமைக்க கிறிஸ்து வந்தார். மனிதர்களை மயக்கி, சிக்கவைத்திருந்த மாயையிலிருந்து அவர்களை விடுவிக்க முயன்றார். மனிதர்களின் எண்ணங்களை இம்மையிலிருந்து மறுமைக்குத் திருப்புவதற்கு ஏற்றவகையில் பரலோக கோரிக்கைகளையும் பூலோக கோரிக்கைகளையும் முன்வைத்தார். இம்மைக்குரியவற்றில் நாட்டங்கொள்வதை விட்டுவிட்டு, நித்தியத்திற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய அழைத்தார். COLTam 372.2

“ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக் காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிற தாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.” இந்த ஊழியக்காரனிடத்தில் எஜமான் தனது அனைத்து உடைமைகளையும் ஒப்படைத்திருந்தான். ஆனால் அந்த ஊழியக்காரனிடம் உண்மை இல்லை. திட்டமிட்டு தான் கொள்ளையடிக்கப்படுவது எஜமானுக்குப் புரிந்தது. இனியும் அவனை வேலையில் வைத்திருக் கக்கூடாதெனக் கருதி, அவனுடைய கணக்குகளை பரிசோதிக்க உத்தரவிட்டான். “உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படு கிறதென்ன? உன் உக்கிராணக்கணக்கையொப்பு வி, இனி நீ உக் கிராணக்காரனாயிருக்கக்கூடாது” என்றான். COLTam 373.1

தான் வேலையிலிருந்து நீக்கப்படுவது உறுதியான நிலையில், தனக்கு முன் மூன்றே வழிகள் இருந்ததைக் கண்டான். வேலை செய்யவேண்டும், பிச்சை எடுக்கவேண்டும் அல்லது பட்டினி கிடக்கவேண்டும் . “நான் என்ன செய்வேன், என் எஜமான் உக் கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப் படுகிறேன். உக்கிராணவிசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும் போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு; தன் எஜமானிடத்தில் கடன்பட்ட வர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து, முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிரா ணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான். பின்பு அவன் வேறொரு வனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன் : நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன் : நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது” என்றான். COLTam 373.2

உண்மையற்ற இந்த உக்கிராணக்காரன் தன்னுடையகள்ளத் தனத்தில் மற்றவர்களையும் பங்கெடுக்கச் செய்கிறான். தன் எஜமானை ஏமாற்றி, அவர்களுக்கு நல்லது செய்கிறான். அவனி டமிருந்து நன்மை பெறுவதால், அவனை தங்கள் வீடுகளில் நண்பனாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் ஆளாகிறார்கள். COLTam 373.3

” அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். “தன்னை ஏமாற்றியவன் புத்தியோடு நடந்துகொண்டதாக இந்த உலகப்பிரகாரமான மனிதன் பாராட்டுகிறான். ஆனால் அந்த ஐசுவரியவானுடைய பாராட்டுதல் தேவனுடைய பாராட்டுதல் அல்ல. COLTam 374.1

அநியாயம் செய்த அந்த உக்கிராணக்காரனை கிறிஸ்து பாராட்டவில்லை. மாறாக, தாம் கற்றுக்கொடுக்க விரும்பின பாடத்தை விளக்குவதற்கு, பிரபலமான அந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தினார். ‘நீங்கள் மாளும் போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப் பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்” என்று கூறினார். COLTam 374.2

இரட்சகர் ஆயக்காரரோடும், பாவிகளோடும் பழகுகிறா ரென்று பரிசேயர்கள் கடுமையாக ஆட்சேபித்தார்கள். ஆனாலும் அவர்கள் மேல் அவருக்கு அக்கறை குறையவில்லை; அவர்களுக் கான முயற்சிகளை நிறுத்தவுமில்லை. அவர்களுடைய பணியே அவர்களுக்கு சோதனையாக இருந்ததைக் கண்டார். அவர்களை மயக்கி, பாவத்திற்குள் இழுக்கிற காரியங்கள் அவர்களைச் சூழ்ந்திருந்தன. முதல் அடியே தவறாகப் போவது எளிதாக இருந்தது; அதன்பிறகு படுவேகமாககள்ளத்தனத்திற்குள்ளும், அதிக குற்றங்களுக்குள்ளும் விழுந்தார்கள். அவர்கள் உன்னத நோக்கங்களையும் மேலான நியதிகளையும் பெற எல்லா வழிகளிலும் கிறிஸ்து முயன்றார். உண்மையற்ற ஊழியக் காரன் பற்றிய உவமையை அதற்காகத்தான் சொன்னார். இந்த உவமையில் சொல்லப்பட்டவன் போலவே பரிசேயர்களிலும் சிலர் இருந்தார்கள். கிறிஸ்து சொன்னபோது, தங்களுடைய நடவடிக் கைகள் அவ்வாறு இருந்ததை உணர்ந்தார்கள். முழுக்கவனமும் அவர்மேல் சென்றது ; தங்களுடையகள்ளத்தனமான நடவடிக்கைகள் குறித்த உணர்வடைந்த பலர் முக்கியமான ஆவிக்குரிய சத்தியத்தை அறிந்துகொண்டனர். COLTam 374.3

ஆனாலும் இந்த உவமையை அவர் சீடர்களிடம் சொன்னார். சாத்தியம் எனும் புளித்தமாவு முதலில் அவர்களுக்கு அறிவிக்கப் பட்டு, அவர்கள் மூலம் பிறருக்குச் சென்றடைய விருந்தது. கிறிஸ்துவின் அநேக போதனைகளை சீடர்கள் முதலில் புரிந்து கொள்ளவில்லை; அவர் கற்பித்த பாடங்களை கிட்டத்தட்ட மறந்துவிட்டது போலத் தெரிந்தது. ஆனால் பரிசுத்த ஆவியான வரின் தாக்கத்தினால் இந்தச் சத்தியங்களை பிற்பாடு அவர்கள் மிகத்தெளிவாகப் புரிந்தார்கள்; புதிதாக மனமாறி சபையில் சேர்க்கப்பட்டு வந்தவர்களுக்கு சீடர்கள் அவற்றை தெளிவுப் படுத்தினார்கள். COLTam 374.4

பரிசேயருக்கும் இரட்சகர் அதைச் சொன்னார். தம் வார்த்தை களின் உண்மையை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கையை அவர் இழக்கவில்லை. அநேகர் ஆழமாக உணர்த்தப்பட்டார்கள். பரிசுத்த ஆவியானவர் அந்தச் சத்தியத்தைப் பேசும்போது அதைக் கேட்டு, அநேகர் கிறிஸ்துவை விசுவாசிக்கவிருந்தார்கள். COLTam 375.1

ஆயக்காரரோடும் பாவிகளோடும் கிறிஸ்து பழகுகிறார் என்று சொல்லி, அவருக்கு கெட்டப்பெயரை உண்டாக்க பரிசேயர்கள் முயன்றார்கள். தம்மைக் குற்றஞ்சாட்டினவர்களைக் கண்டிக்கும் படி இப்போது பேசினார். ஆயக்காரர்கள் மத்தியில் நிகழ்ந்ததாக அறியப்பட்ட ஒரு சம்பவத்தை பரிசேயர்களுக்கு முன்பாகச் சொன்னார்; அது அவர்களுடைய போக்கைச் சுட்டிக்காட்டு வதாகவும், அவர்கள் தங்களுடைய தவறுகளைத் திருத்துவதற் கான ஒரே வழியைக் காட்டுவதாகவும் இருந்தது. COLTam 375.2

தர்மகாரியங்களுக்காகப் பயன்படும்படி அந்த எஜமானின் ஆஸ்திகள் உண்மையற்ற அந்த ஊழியக்காரன் வசம் ஒப்படைக் கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை அவன் தன்னலமாகப் பயன்படுத்தினான். இஸ்ரவேலரும் அவ்வாறே செய்தார்கள். ஆபிரகாமின் சந்ததியை தேவன் தெரிந்து கொண்டார். ஓங்கிய புயத்தினால் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவித்தார். உலகத்தை ஆசீர்வதிக்கும்படி பரிசுத்த சத்தியத்தின் களஞ்சியங்களாக அவர்களை உருவாக்கியிருந்தார். மற்ற வர்களுக்கு அவர்கள் வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும் படி ஜீவ னுள்ள கற்பனைகளை அவர்களிடம் ஒப்படைத்திருந்தார். ஆனால் அவரது உக்கிராணக்காரரோ, தங்களைப் புஷ்டியாக்கவும், தங்களை மேன்மைப்படுத்தவும் அந்த ஈவுகளைப் பயன்படுத் தினார்கள். COLTam 375.3

பரிசேயர்கள் சுயமுக்கியத்துவமும், சுயநீதியும் நிறைந்தவர்களாக , தேவன் தமது மகிமைக்காக அவர்களுக்கு இரவலாகக் கொடுத்திருந்தவற்றை தவறாகப் பயன்படுத்தினார்கள். COLTam 375.4

உவமையில் உள்ள ஊழியக்காரன் தனது எதிர்காலத்திற்கு என்த முன்னேற்பாட்டையும் செய்யவில்லை. பிறர் நன்மைக்காக தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த ஆஸ்திகளை தனக்காக அவன் பயன்படுத்தினான்; தற்காலம் பற்றி மட்டுமே சிந்தித் திருந்தான். உக்கிராணத்துவப் பணியிலிருந்து நீக்கப்பட்ட போது, தன்னுடையதென்று சொல்ல அவனிடம் எதுவுமில்லை. ஆனால் அவனது எஜமானனின் ஆஸ்திகள் இன்னும் அவனுடைய கட்டுப்பாட்டில் தான் இருந்தன. எனவே தன்னுடைய எதிர்கால தேவையைச் சந்திக்கும்படி, அவற்றைப் பயன்படுத்த தீர்மானித்தான். அதற்கு, புதிய திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியிருந்தது. தனக்கென சேர்ப்பதற்கு பதிலாக பிறருக்குக் கொடுக்கவேண்டியிருந்தது. அதனால் நண்பர்களைச் சம்பாதிக் கலாம்; இவன் துரத்தப்படும்போது அவர்கள் இவனை ஏற்றுக் கொள்வார்கள். பரிசேயர்களும் இவ்வாறு செய்ய வேண்டியிருந்தது. உக்கிராணத்துவம் சீக்கிரத்தில் அவர்களிடமிருந்து எடுக்கப்படவிருந்தது. எனவே எதிர்காலத்திற்கென ஆயத்தமாக அழைக்கப்பட்டார்கள். பிறர் நன்மையை நாடுவதால் மட்டுமே தங்களுக்கு நன்மையைத் தேடமுடியும். தற்கால வாழ்வில் தேவ னுடைய ஈவுகளை பிறருக்குப் பகிர்ந்தளிப்பதால் மட்டுமே, எதிர் காலத்திற்கு தேவையான ஆயத்தத்தைச் செய்யமுடியும். COLTam 376.1

உவமையைச் சொன்ன பிறகு, “ஒளியின் பிள்ளைகளைப் பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்” என்று கிறிஸ்து கூறினார். அதாவது, தேவனுடைய பிள்ளைகளெனச் சொல்பவர்கள் தேவனைச் சேவிப்பதைக் காட்டிலும் உலக ஞானிகள் தங்களைச் சே விப்பதில் அதிக ஞானமாக, ஊக்கமாகச் செயல்படுகிறார்கள். கிறிஸ்துவின் நாட்களிலும் அவ்வாறு இருந்தது. இப்போதும் அப் படியே இருக்கிறது. கிறிஸ்தவர்களெனச்சொல்லும் அநேகருடைய வாழ்க்கையைப் பாருங்கள். தேவன் அவர்களுக்கு திறமைகளையும் ஆற்றலையும் செல்வாக்கையும் வழங்கியிருக்கிறார். மீட்பின் மாபெரும் திட்டத்தில், தம்மோடு உடன் ஊழியர்களாகப் பணி செய்ய பணத்தையும் அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறார். அவ ருடைய சகல ஈவுகளையும் மனிதர்களுக்கு ஆசீர்வாதமாக, துன்பம் நீக்கி, தேவையைச் சந்திக்கப் பயன்படுத்தவேண்டும். பசியோடிருப்பவர்களுக்கு உணவளித்து, வஸ்திரமில்லாதோரை உடுத்து வித்து, விதவைகளையும் திக்கற்றோரையும் பராமரித்து, இடுக் கத்திலும் நெருக்கத்திலும் உள்ளோருக்கு ஊழியஞ்செய்ய வேண்டும். உலகம் முழுவதிலும் துயரவிலை காணப்பட வேண்டு மென்பது தேவனுடைய சித்தமல்ல. யாராவது ஒருவன் வாழ்வின் சுகபோகங்களை ஏராளமாகப் பெற்றிருக்கவும், மற்ற வர்கள் அப்பத்திற்காக அலைந்து திரிவதும் அவருடைய சித்த மல்ல. வாழ்வின் அடிப்படை தேவைகளுக்கும் அதிகமாக ஒரு வனுக்கு வசதி வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருப்பது, அவன் நன்மை செய்வதற்கும், மனிதர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்குவதற்குமே. “உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சை கொடுங்கள்.” ‘தாராளமாய்க் கொடு (ங்கள்), உதாரகுணமுள்ளவர்களுமா யிரு(ங்கள்)” (1தீமோத்தேயு 6:18), “நீ விருந்து பண்ணும் போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழை (ப்பாயாக).” அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ், நுகத்தடி யின் பிணையல்களை நெகிழ், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கு, சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடு, பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடு, துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள், வஸ்திரமில்லாத வனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங்கொடு,... சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கு” (ஏசாயா 58:6,7,10), “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங் கியுங்கள்” என்று ஆண்டவர் சொல்கிறார். மாற்கு 16:15. இவை அனைத்தும் தேவனுடைய கட்டளைகள். கிறிஸ்தவர்களெனச்சொல்லிக்கொள்ளும் பெருங்கூட்டத்தார் இப்பணியைச் செய் கிறார்களா? COLTam 376.2

ஐயோ, தேவனுடைய ஈவுகளை எத்தனை பேர் தங்களுக் கென்றே பயன்படுத்துகிறார்கள் ! எத்தனை பேர் வீட்டிற்குமேல் வீடு, நிலத்திற்குமேல் நிலமென்று சேர்க்கிறார்கள். எத்தனை பேர் சிற்றின்பங்களுக்கும், இச்சையை நிறைவேற்றுவதற்கும், ஆடம்பரமான வீடுகளுக்கும், தட்டுமுட்டு குக்கும், உடைகளுக் கும் தங்கள் பணத்தைச் செலவிடுகிறார்கள். ஆனால் அவர்களுடைய சகமனிதர்களோ துன்பத்திலும், குற்றங்களிலும், வியாதியிலும் மரணத்திலும் சிக்கித்தவிக்கிறார்கள். ஒரு பரிதாப்ப் பார்வை கூட தங்கள் மேல் படாமல், பரிவான ஒரு வார்த்தையை அல்லது செயலை அனுபவியாமல் அழிந்து கொண்டிருப்போர் ஏரளம். COLTam 377.1

அநேகர் தேவனைக் கொள்ளையிட்ட பாவத்திற்கு ஆளாகி யிருக்கிறார்கள். மனுகுலத்தாரின் பாடுகளைப் போக்கும் போதும், ஆத்துமாக்களின் இரட்சிப்பிலும் தேவனுக்குச் செலுத்த வேண்டிய மகிமையைத் திருடி, தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்து கிறார்கள். அவர்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட ஆஸ்திகளைத் திருடி, துஷ்பிரயோகம் செய்கிறார்கள். “நான் நியாயத்தீர்ப்புச்செய்யும்படி உங்களிடத்தில் வந்து, எனக்குப் பயப்படாமல், விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அப கரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய் கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன்.... மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக் கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத் திலும் காணிக்கைகளிலுந்தானே. நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னைவஞ்சித்தீர்கள். மல்கியா 3:5,8,9.’‘ஐசுவரியவான்களே, கேளுங்கள் .... உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப் போயின. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்தது, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத்தின்னும் கடைசி நாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள். பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள் ... இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக் காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக் குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.” யாக்கோபு 5:1-3,5,4. COLTam 378.1

தங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட ஈவுகளுக்கு ஒவ்வொரு வரும் கணக்குக் கொடுக்க வேண்டும். மனிதர்கள் தங்களுக்கென குவிக்கும் சொத்துக்களால் இறுதி நியாயத்தீர்ப்பு நாளில் எந்தப் பயனுமில்லை. தங்களுக்குச் சொந்தமானவை என்று அவர்கள் சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. COLTam 378.2

உலக ஐசுவரியங்களைச் சேர்ப்பதிலேயே தங்களது வாழ் நாளைக் கழிப்பவர்கள், பூமியில் தனக்கு நண்பர்கள் வேண்டு மெனச் செயல்பட்ட உண்மையற்ற உக்கிராணக்காரனைவிட ஞானத்தில் குறைந்தவர்களாக, தங்கள் நலன் குறித்த யோசனை யிலும் அக்கறையிலும் குறைந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். ஒளியின் பிள்ளைகளெனச்சொல்லிக்கொள்கிறவர்கள் தாம் தங்கள் தலை முறையில் வாழும் இவ்வுலகத்தின் பிள்ளைகளை விட ஞானத்தில் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். மகா நியாயத் தீர்ப்பின் நாளைக்குறித்த தரிசனத்தில், இவர்களைப் பற்றித்தான் தீர்க்கதரிசி, .பூமியைத் தத்தளிக்கப் பண்ணக் கர்த்தர் எழும்பும் அந்நாளிலே, அவருடைய பயங் கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்து கொள்ளும்படிக்கு, மனுஷன் பணிந்து கொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்த தன் வெள்ளி விக்கிரகங்களையும், தன் பொன் விக்கிரகங்களையும், மூஞ்சூறுகளுக்கும் துரிஞ்சில்களுக்கும் எறிந்துவிடுவான் என்று சொன்னான். ஏசாயா 2:20,21. COLTam 378.3

‘நீங்கள் மாளும் போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்” என்று கிறிஸ்து சொல்கிறார். உபத்திரவத்திலும் இக்கட்டிலும் பாவத்திலும் உள்ள வர்களுக்கு தேவனும் கிறிஸ்துவும் தேவதூதர்களும் ஊழியம் செய்து வருகிறார்கள். தேவபணியில் உங்களை அர்ப்பணியுங்கள். இந்த நோக்கத்திற்காக அவரது ஈவுகளைப் பயன்படுத்துங்கள். பரலோக ஜீவிகளின் கூட்டாளிகளாக மாறுவீர்கள். அவர்களைப் போல உங்களுடைய இருதயமும் பரிவுடன் துடிக்கும். குணத்தில் அவர்களோடு ஒன்றுபடுவீர்கள். நித்திய கூடாரங்களில் வாசஞ்செய்கிற இவர்கள் உங்களுக்கு அந்நியர்களாக இருக்கமாட்டார்கள். பூமியிலுள்ளவைகடந்து போனதும், பரலோகவாசலண்டை நிற்கும் கண்காணிகள் உள்ளே வரும்படி உங்களை வரவேற்பார்கள். COLTam 379.1

பிறருக்கு ஆசீர்வதிமாக நீங்கள் பயன்படுத்துகிற வசதி வாய்ப்புகள், உங்களுக்கே ஆசீர்வாதமாக முடியும். ஐசுவரியங்களை சரியாகப் பயன்படுத்தினால், மிகுந்த நன்மை உண்டாகும். ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்கு ஆதாயப்படுத்தலாம். கிறிஸ்து வின் திட்டத்தின்படி வாழ்கிறவன், இந்த பூமியிலே தான் யாருக் காக ஊழியஞ்செய்ய, தன்னை அர்ப்பணித்தானோ அவர்களை பரலோக மன்றங்களில் காண்பான். தங்களுடைய இரட்சிப்பில் கருவிகளாக விளங்கினவர்களை மீட்கப்பட்டவர்கள் நன்றியோடு நினைவுகூருவார்கள். ஆத்துமாக்களை இரட்சிக்கிற பணியில் உண்மையோடு ஈடுபட்டவர்கள், பரலோகம் எவ்வளவு விலையேறப் பெற்றதெனக் கண்டுகொள்வார்கள். COLTam 379.2

இந்த உவமை சொல்லும் பாடம் அனைவருக்கும் பொருந்தும். கிறிஸ்துவின் மூலம் தான் பெற்ற கிருபைக்கு ஒவ்வொருவரும் கணக்கொப்புவிக்க வேண்டும். இம்மைக்குரிய அல்லது உலகப் பிரகாரமான காரியங்களில் மூழ்கியிருப்பதைவிட மிகமேலானது வாழ்க்கை . நித்தியமும், அதரிசனமுமான உலகம் நம்மிடம் பகிர்ந்துகொள்வதை நாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆண்டவர் விரும்புகிறார். COLTam 380.1

எச்சரிக்கப்படாமலும், இரட்சிக்கப்படாமலும் ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கில் ஆத்துமாக்கள் மடிந்து வருகிறார்கள். ஆத்தாக்களைச் சந்தித்து, அவர்களை இரட்சிப்புக்குள் வழிநடத்த, ஒவ்வொரு மணி நேரமும் வாழ்க்கையில் பலதரப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த வாய்ப்புகள் வருவதும் போவதும் தொடர்ந்து நிகழ்கிறது. அவற்றில் பெரும்பாலான வாய்ப்புகளை நாம் பயன்படுத்த தேவன் விரும்புகிறார். நாட்களும், வாரங்களும், மாதங்களும் கடந்து செல்கின்றன; நாம் செய்யவேண்டிய பணியில் ஒருநாள், ஒரு வாரம், ஒரு மாதம் எனக் கடந்து செல்கிறது. இன்னும் சில ஆண்டுகளே செல்லக் கூடும்; அதன்பிறகு, ” உன் உக்கிராணக் கணக்கை ஒப்புவி” என்கிற குரல் கேட்கும். அதற்கு நாம் பதில் சொல்லாமல் மறுக்கவே முடியாது. COLTam 380.2

இதைச் சிந்திக்கும்படி கிறிஸ்து ஒவ்வொருவரையும் அழைக் கிறார். உள்ளதை உள்ளபடி எண்ணிப்பாருங்கள். தராசில் ஒரு பக்கத்தில் இயேசுவை வையுங்கள். அது நித்திய பொக்கிஷத்திற் கும், ஜீவனுக்கும், சாத்தியத்திற்கும், பரலோகம், மீட்கப்பட்ட ஆத்துமாக்களில் காணப்படும் கிறிஸ்துவால் கிடைக்கும் சந்தோ ஷத்திற்கும் சம்மாகும். தராசின் அடுத்த பக்கத்தில் உலகக்கவர்ச்சிகள் அனைத்தையும் வையுங்கள். தராசின் ஒரு பக்கத்தில் உங்களது ஆத்தும் இழப்பையும், நீங்கள் யாரை இரட்சிப்பிற்கு வழி நடத்தி யிருக்கலாமோ அந்த ஆத்துமாக்களையும் வையுங்கள்; அடுத்தப் பக்கத்தில் உங்களுக்காகவும் அவர்களுக் காவும் காத்திருக்கும் தேவனுடைய ஜீவனுக்கு இணையான ஜீவனை வையுங்கள். காலத்தையும் நித்தியத்தையும் மனதில் வைத்து எடைபோடுங்கள். அவ்வாறு செய்யும்போதுதானே,” மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?’ என்று கிறிஸ்து கேட்கிறார். மாற்கு 8:36. COLTam 380.3

உலகத்திற்குரியவைகளை விட்டு விட்டு பரலோகத்திற் குரியவைகளை நாம் தெரிந்து கொள்ள தேவன் விரும்புகிறார். பரலோ கத்தில் முதலீடு செய்வதற்கான சாத்தியங்களை நமக்கு முன் வைக்கிறார். நம்முடைய மிகமிக மேலான நோக்கங்களை ஊக்கப் படுத்தவும், நாம் தெரிந்துகொள்ளும் பொக்கிஷத்தைப் பாதுகாக்கவும் அவர் விரும்புகிறார். “புருஷனைப் பசும்பொன்னிலும், மனுஷனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூருவமாக்குவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 13:12. பூச்சியும் துருவும் கெடுக்கிற பொக்கிஷங்கள் அழியும் போது, அழியாத பொக்கிஷங் களான தங்களுடைய பரலோகப் பொக்கிஷங்களால் கிறிஸ்துவின் பிள்ளைகள் களிகூரலாம். COLTam 381.1

உலக நட்புகளிலெல்லாம் மேலானது கிறிஸ்துவால் மீட்கப்பட் டோரின் நட்பாகும். பூமியிலே போற்றத்தக்க ஓர் இடத்திற்கு உரிமையாளராக இருப்பதைவிட, நம் ஆண்டவர் ஆயத்தம் செய்வதாகச் சொல்லிச் சென்றுள்ள வாசஸ்தலங்களுக்கு உரிமை யாளராக இருப்பதே சிறந்தது. பூமியிலேயே புகழ்ச்சிமிக்க சலக வார்த்தைகளையும் விட,” வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக் கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்” என்று தம் உண்மை ஊழியர்களி டம் இரட்சகர் சொல்லும் வார்த்தைகளே சிறந்தவை. மத்தேயு 25:34. COLTam 381.2

தமது ஆஸ்திகளை வீணடித்தவர்களுக்கு, நிலையான தம் பொக்கிஷங்களைப் பாதுகாக்கிற வாய்ப்பை இன்னமும் கிறிஸ்து வழங்குகிறார். கிறிஸ்து இப்படியாகச் சொல்கிறார்: கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்.” பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கொடுக்கிறதுமில்லை.” லூக்கா 6:38; 12:33.’‘இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் ... நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக் கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற் காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.” 1தீமோத்தேயு 6:17-19. COLTam 381.3

எனவே உங்களுடைய சொத்தானது உங்களுக்கு முன் பரலோகம் செல்லட்டும். தேவ சிங்காசனத்திற்கருகில் உங்களுடைய பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள். கிறிஸ்துவின் ஆராய முடியாத ஐசுவரியங்களுக்கு நீங்கள் உரிமையாளராகப் பாருங்கள். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும் போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகி தரைச் சம்பாதியுங்கள்.”லூக்கா 16:9. COLTam 382.1