கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

49/55

ஒரு தாலந்து

“ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்.” COLTam 359.2

மிகக்குறைந்த அளவு ஈவைப் பெற்றிருந்தவனே தன் தாலந்தை மேம்படுத்தவில்லை. தங்களுக்கு குறைவாகக் கொடுக்கப்பட்டிருப்பதால் கிறிஸ்துவுக்கு தாங்கள் சே வை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிற ஒவ்வொருவருக்கும் இதில் எச்சரிப்பு உள்ளது. செய்யவேண்டிய வேலை பெரிதாக இருந்தால், எவ்வளவு சந்தோஷமாக அதை ஏற்றுக்கொள்வார்கள்; கொஞ்சத்திலே தாங்கள் செயல்படவேண்டி யிருப்பதால் தாங்கள் எதுவும் செய்யாமலிருப்பதே சரியென நினைக்கிறார்கள். இது தவறு. இவ்வாறு ஈவுகளைப் பகிர்ந்தளித்து, குணத்தைச் சோதிக்கிறார். தனது தாலந்தை மேம்படுத்தாமல் அலட்சியம் காட்டியவன், உண்மையற்ற ஊழியனாக தன்னை நிரூபித்தான். ஐந்து தாலந்துகளை அவன் பெற்றிருந்தாலும், ஒன்றைப் புதைத்தது போலவே அவற்றையும் புதைத்திருப்பான். ஒரு தாலந்தை அவன் பயன்படுத்தாமல் இருந்தது, பரலோக ஈவுகளை அவன் அவமதித்ததைக் காட்டியது. COLTam 359.3

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான். லூக்கா 16:10. சிறிய காரியங்களின் முக்கியத்துவத்தை அவை சிறியவையாக இருப்பதால், பெரும் பாலும் யாரும் அறிவதில்லை; ஆனால் ஒழுக்கமான வாழ்விற்கு தேவையான அதிக விஷயங்களை அவை கொடுக் கின்றன. கிறிஸ்தவ வாழ்க்கையில் அவசியமற்றவை என்று எதுவுமில்லை. சின்னச் சின்ன காரியங்களின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டால், குணத்தைக் கட்டுவிக்கும் முயற்சியில் அதிக இடர்பாடுகளை உருவாக்குகிறோம். COLTam 360.1

“கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ள வனாயிருக்கிறான். சின்ன சின்ன கடமைகளில் உண்மையற்ற வனாக இருப்பவன், தன் சிருஷ்டிகருக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யாமல் கொள்ளையடிக்கிறான். உண்மையற்ற வனாக இருப்பது அவனையே பாதிக்கிறது. முற்றிலும் தேவனுக்கு தன்னை ஒப்படைப்பதால் கிடைக்கிற கிருபையையும் வல்லமை யையும் குண ஆற்றலையும் பெற்றுக்கொள்ளத் தவறுகிறான். கிறிஸ்துவைவிட்டு விலகி வாழ்வதால் சாத்தானின் பாவத்தூண்டல்களுக்கு தன்னை ஆளாக்குகிறான்; எஜமானின் சேவையில் தவறிழைக்கிறான். சிறு காரியங்களில் சரியான நியதிகளின்படி நடக்காததால், தன்னுடைய சிறப்பான ஊழியமென்று அவன் கருதுகின்ற பெரிய காரியங்களில் தேவ னுக்குக் கீழ்ப்படியத் தவறுகிறான். வாழ்வின் சிறு காரியங்களை அணுகுவதில் அவன் வளர்த்துக்கொண்ட தவறுகள் வாழ்வின் முக்கியமான காரியங்களிலும் வெளிப்படுகின்றன . தான் பழகிக்கொண்ட நியதிகளின்படியே செயல்படுகிறான். அத்தகைய தொடர்ச்சியான செயல்கள் பழக்க வழக்கங்களாக மாறுகின்றன; அந்தக் குணமே நம்முடைய இறுதி முடிவை இம்மையிலும் மறுமையிலும் தீர்மானித்துவிடுகிறது. COLTam 360.2

சிறு காரியங்களில் உண்மையோடு இருப்பதால் மட்டுமே, பெரிய பொறுப்புகளை உண்மையோடு செய்வதற்கு ஆத்துமா பயிற்சி பெற முடியும். தானியேலும் அவனுடைய நண்பர்களும் பாபிலோனின் முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கும் படி தேவன் செயல்பட்டார்; அந்த அஞ்ஞானிகள் மெய்மார்க்கத்தின் நியதிகளை நன்கு அறிந்துகொள்ள வேண்டுமென்பது தேவதிட்டம். சிலைவழிபாட்டு தேசத்தாருக்கு மத்தியில் தேவனுடைய குணத்தை தானியேல் வெளிப்படுத்த வேண்டியிருந்தது. நம்மிக்கை மிக்க அவ்வளவு பெரிய கனத்திற்கு தானியேல் எவ்வாறு தகுதியடைய முடிந்தது? சிறு காரியங்களில் அவன் உண்மையாக இருந்ததே அவனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அழகுடன் மிளிரச் செய்தது. சிறு சிறு கடமைகளில் தேவனைக் கனப்படுத்தினான்; தேவன் அவனோடு ஒத்துழைத்தார். தானியேலுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் தேவன், “சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ள வனாக்கினார்.” தானியேல் 1:17. COLTam 360.3

பாபிலோனிலே சாட்சியிட தேவன் தானியேலை அழைத்தது போல, இந்நாட்களிலே இவ்வுலகில் சாட்சியிட நம்மை அவர் அழைக்கிறார். வாழ்வின் சிறு விவகாரங்களிலும் பெரிய விவ காரங்களிலும் தம்முடைய ராஜ்யத்தின் நியதிகளை மனிதர்களுக்கு நாம் வெளிப்படுத்த விரும்புகிறார். COLTam 361.1

கிறிஸ்து இப்பூமியில் வாழ்ந்தபோது, சிறு காரியங்களில் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தைக் கற்றுக்கொடுத்தார். மீட்பின் மகத்தான ஊழியம் குறித்த பாரம் எப்போதும் அவருடைய ஆத்துமாவில் அழுத்திக்கொண்டிருந்தது. தாம் போதித்த போதும், குணமாக்கின போதும் தம்முடைய மன - ச ரீர ஆற்றல்களை முற்றிலுமாக அதில் ஈடுபடுத்தினார்; ஆனாலும் வாழ்க் கையிலும் இயற்கையிலும் காணப்படும் சாதாரணமான விஷயங்களில் கவனம் செலுத்தினார். அவருடைய மிகச் சிறந்த அறிவுப்போதனைகளை எடுத்துக்கொண்டால், இயற்கையின் ச ராதாரண விஷயங்களை வைத்து, தேவனுடைய ராஜ்யத்தின் மாபெரும் சாத்தியங்களை விளக்கியிருப்பார். இருந்தாலும் தம்முடைய ஊழியர்களில் எளியவர்களின் தேவைகளை அவர் கண்டுகொள்ளாமலில்லை. உதவி கேட்டு வந்த ஒவ்வொருவருக் கும் செவிகொடுத்தார். பெருங்கூட்டத்தில் இருந்த வியாதிப்பட்ட ஸ்திரீ தன்னைத் தொட்டபோது அதை உணர்ந்தார்; அணுபோன்ற விசுவாசத்துடன் தொட்டவளுக்கு பதில் கொடுத்தார். ய வீருவினுடைய மகளை உயிருடன் எழுப்பிய பின்னர், அவளுக்கு உண்பதற்கு ஏதாவது கொடுக்கும்படி அவளுடைய பெற்றோருக்கு நினைப்பூட்டினார். தம்முடைய மகத்தான வல்லமையால் கல்லறையிலிருந்து உயிரோடு எழுந்த போது, தமது உடலைச் சுற்றி வைத்திருந்த துணிகளை மடித்து, வைக்க வேண்டிய இடத்தில் அவற்றை வைப்பதற்கு அவர் மறக்கவில்லை. COLTam 361.2

ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காக கிறிஸ்துவோடு ஒத்து ழைத்து பணியாற்ற கிறிஸ்தவர்களாகிய நாம் அழைக்கப்பட்டிருக் கிறோம். இந்த ஊழியத்தைச் செய்வதாக அவரோடு உடன் படிக்கை செய்திருக்கிறோம். இந்த ஊழியத்தில் அலட்சியம் காட்டினால், கிறிஸ்துவுக்கு உண்மையற்றவர்களென நிரூபித்து விடுவோம். இந்த ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு, சிறு காரி யங்களில் அவர் தம் மனசாட்சியின்படி உண்மையுள்ளவராக இருந்தது போல நாமும் இருக்கவேண்டும். கிறிஸ்தவ மார்க்கத்தின் எத்தகைய முயற்சியும் தாக்கமும் வெற்றியடைவதற்கான இரகசியம் இதுதான். COLTam 362.1

தம்முடைய மக்களுக்குதாம் அளிக்கவிரும்புகிற திறன்களைப் பெற்று, அவர்கள் தம்மை மகிமைப்படுத்தும்படி ஏணியின் உச்சப்படிக்கே செல்ல ஆண்டவர் விரும்புகிறார். உலகத்தார் செயல்படுகிற திட்டங்களைக் காட்டிலும் மேலான திட்டங்களின் பேரில் நாம் செயல்படு கிறோம் என்பதை நமக்கு வெளிப்படுத்த தேவகிருபையால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாம் தேவனையும் மனித இருதயங்களில் செயல்படும் அவருடைய வல்லமையையும் விசுவாசிப்பதால், நாம் அறிவுத்திறனிலும் புத்தியிலும் ஆற்றலிலும் அறிவிலும் சிறந்து விளங்குவதைக் காட்டவேண்டும். COLTam 362.2

ஏராளமான ஈவுகளை அருளாகப் பெறாதவர்கள் அதைரியப்பட வேண்டாம். தங்கள் குணங்களிலுள்ள பலவீனப் பகுதிகளை உண்மையாகப் பாதுகாத்து, தேவ கிருபையால் அவை பெலப்படும் படி பிரயாசப்பட்டு, தங்களிடம் உள்ளதை பயன்படுத்துவார்களாக. நம் வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் உண்மைதன்மையும் மெய்ப்பற்றும் பிணைந்து காணப்படவேண்டும்; பணியை நிறைவேற்ற உதவுகிற குணத்தன்மைகளை பேணி வளர்க்கவேண்டும். COLTam 362.3

பொறுப்பற்ற பழக்கவழக்கங்களை தீர்மானமாக மேற் கொள்ள வேண்டும். COLTam 362.4

கீழ்த்தரமான தவறுகளைச் செய்துவிட்டு, பிறகு அதை மறுந்து விட்டதாகச் சொன்னால் போதுமென அநேகர் நினைக்கிறார்கள். ஆனால் மற்றவர்களைப் போல இவர்களும் அறிவுத்திறன்களைப் பெற்றிருப்பதில்லையா? எனவே, உண்மைகளை மறக்காமலிருக்க மனதைப் பழக்கியிருக்க வேண்டும். மறப்பது பாவம். பொறுப்பில்லாமல் இருப்பதும் பாவம். பொறுப்பின்மை ஒரு பழக்கமாக உரு வானால், உங்களது சொந்த ஆத்துமாவின் இரட்சிப்பை கூட அலட் சியம் செய்வீர்கள், தேவ இராஜ்யத்திற்கு இன்னும் ஆயத்தப்பட்டிரா ததைக் கண்டுகொள்வீர்கள். COLTam 362.5

சிறுகாரியங்களைகூட மகத்தான சாத்தியங்களின்படி கையாள வேண்டும். அன்றாட வாழ்வின் மிகச் சாதாரணமான கடமை களிலும் நடைமுறை ஆவிக்குரிய கருத்துகளைக் கையாள வேண்டும். தேவ வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிவதே எந்த மனிதனுக்கும் மிகப்பெரிய தகுதியாகும். COLTam 363.1

ஏதாவது ஆவிக்குரிய பணியில் தாங்கள் நேரடியாக ஈடுபடாததால், தங்கள் வாழ்க்கை பயனற்றதென அநேகர் நினைக்கிறார்கள்; தேவராஜ்யத்தின் ஊழியம் விரிவடைய அவர்கள் எதுவுமே செய்யாமலிருப்பார்கள். ஆனால் இது தவறு. அவர்கள் செய்ய நினைக்கிற பணியை வேறு ஒருவர்தான் செய்யவேண்டும் என்று இருந்தால், தேவகுடும்பத்தில் எந்தப் பயனுமில்லாதவர்களென தங்களையே அவர்கள் குற்றஞ்சாட்டக் கூடாது. சிறு சிறு கடமைகளில் அலட்சியம் காட்டக்கூடாது. நேர்மையாகக் செய்யும் எந்த வேலையும் ஓர் ஆசீர்வாதம்தான்; அதை உண்மையோடு செய்வது நம்பிக்கைக்குரிய மேலான பணிகளுக்க பயிற்சியாக அமையும். COLTam 363.2

ஒரு வேலையானது எவ்வளவு சிறிதாக இருந்தாலும், சுயத்தை முற்றிலும் அர்ப்பணித்து அதை தேவனுக்கென செய்யும் போது, அதை மிகப்பெரிய சேவையாக தேவன் ஏற்றுக்கொள்வார். மெய்மனதோடும் ஆத்தும் மகிழ்ச்சியோடும் கொடுக்கப்படும் எந்தக் காணிக்கையும் குறைவானதே அல்ல. COLTam 363.3

நாம் எங்கிருந்தாலும், அங்கு நமக்குள்ள கடமைகளைச் செய்யும்படி கிறிஸ்து கட்டளையிடுகிறார். குடும்பமாக இருந்தால், குடும்பத்தை மிகவும் விரும்பத்தக்க இடமாக மாற்றுவதில் உறுதியோடும் ஊக்கத்தோடும் இருங்கள். நீங்கள் ஒரு தாயாக இருந்தால், கிறிஸ்துவுக்கென உங்கள் பிள்ளைகளைப் பயிற்று வியுங்கள். பிரசங்கமேடையில் ஒரு போதகர் செய்கிற பணிக்கு ஒப்பாக இந்தப் பணியும் இருக்கிறதென்பது உண்மை . உங்கள் பணி சமையல் செய்வதென்றால், மிகச்சிறப்பாக சமைக்க முயலுங்கள். ஆரோக்கியமான, ஊட்டச்சத்துள்ள, ருசியுள்ள ஆகாரங்களைச் சமையுங்கள். சமையலை ருசியாக்கும் பொருட்களைச் சேர்க்கும் போது, நன்றாக யோசித்துச் செயல்படவேண்டுமென்பதை மறந்துவிடாதீர்கள். நிலத்தைப் பண்படுத்துவது அல்லது வேறு ஏதாவது வியாபாரத்திலோ தொழிலிலோ ஈடுபடுவது உங்கள் வேலையானால், செய்கிற வேலையை மிகச்சிறப்பாகச் செய்யுங்கள். செய்யும் வேலையில் மனது ஈடுபடவேண்டும். உங்கள் பணிகளிலெல்லாம் கிறிஸ்துவைப் பிரதிபலியுங்கள். உங்கள் இடத்தில் அவர் இருந்தால் எவ்வாறு செயல்படுவாரோ அவ்வாறே செயல்படுங்கள். COLTam 363.4

உங்களுடைய தாலந்து மிகச் சிறியதானாலும் அதைப் பயனுள்ள தாக்க தேவனுக்குத் தெரியும். அந்த ஒரு தாலந்தையும் ஞானத் தோடு பயன்படுத்தினால், அதற்காக நியமிக்கப்பட்ட பணியை அது நிறைவேற்றும். சிறு சிறு கடமைகளில் உண்மையுள்ளவர்களாக, ஒன்றோடு ஒன்றைக் கூட்டி நாம் செயல்படும் போது, அதை நமக்கு பெருக்கமாக மாற்றித்தர தேவன் செயல்படுவார். இந்தச் சிறு கடமைகள் அவருடைய பணியில் மிகவும் விலை யேறப்பெற்ற தாக்கங்களாக மாறும். COLTam 364.1

மிகச்சிறிய கடமைகளைச் செய்யும்போது கூட, உயிருள்ள விசு வாசமானது பொன்னிழைகளாக அதில் ஊடுருவியிருக்க வேண்டும். அப்போது நம் அனுதின பணிகள் யாவும் கிறிஸ்தவ வளர்ச்சிக்கு உதவி செய்யும். இயேசுவையே தொடர்ந்து நோக்கிப்பார்க்க வேண்டும். நாம் மேற்கொள்கிற ஒவ்வொரு முயற்சியையும் செய்வதற்கு அவர் மேலான அன்புதான் துடிப்பு மிக்க ஆற்றலைக் கொடுக்கும். இவ்வாறு நம் தாலந்துகளை நாம் சரியாகப் பயன்படுத்தும் போது, உன்னத உலகத்தோடு பொற் ச ங்கிலியால் நம்மை நாம் இணைத்துக் கொள்ளலாம். இதுவே மெய்யான பரிசுத்தமாக்கப்படுதல் ; ஏனெனில், அனுதின கடமைகளை தேவசித்தத்திற்கு முற்றிலுமாகக் கீழ்ப்படிந்து செய்வதில் தான் பரிசுத்தமாக்கப்படுதல் அடங்கியிருக்கிறது. COLTam 364.2

ஆனால் ஏதாவது மிகப்பெரிய பணிக்கு அழைக்கப்பட மாட்டோமா என்று அநேக கிறிஸ்தவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் ஆசையை நிறைவேற்றுமளவிற்கு பெரிய பதவி கிடைக்காதபோது, வாழ்வின் சாதாரணமான கடமைகளை உண்மையோடு நிறைவேற்றத் தவறிவிடுகிறார்கள். அவற்றில் அவர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. தேவனுக்கு தாங்கள் உண்மைடோடு இருப்பதைக் காட்டு வதற்காக ஒவ்வொருநாளும் வாய்ப்புகளைத் தவறவிடுகிறார்கள். ஏதாவது மிகப்பெரிய பணி வருமெனக் காத்திருக்கும் போது, வாழ்க்கையின் நோக்கங்கள் நிறைவேறாமல், அதன் பணி செய்து முடிக்கப்படாமல், வாழ்க்கை கடந்து போகிறது. COLTam 364.3