கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

35/55

23 - கர்த்தருடைய திராட்சத்தோட்டம்

யூத தேசம்

இரு குமாரர்கள் குறித்த உவமையைத் தொடர்ந்து திராட்சத் தோட்டம் குறித்த உவமை வருகிறது. முதல் உவமையில், கீழ்ப்படி தலின் முக்கியத்துவத்தை யூதப்போதகர்களுக்கு கிறிஸ்து எடுத் துரைத்தார். அடுத்த உவமையில், இஸ்ரவேலின்மேல் தேவன் பரி பூரணமான ஆசீர்வாதங்களை அருளியிருந்ததையும், அதனால் அவருக்குக் கீழ்ப்படிய அவர்கள் கடமைப்பட்டிருந்ததையும் சுட் டிக்காட்டினார். தேவனுடைய நோக்கம் மகிமையானதென்றும், கீழ்ப்படிதலின் மூலம் அந்த நோக்கத்தை நிறைவேற்றலாம் என்றும் எடுத்துச் சொன்னார். தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற தவறு வதால், ஒட்டுமொத்த தேசமும் தம்முடைய ஆசீர்வாதத்தை இழந்து, தங்கள் மேல் அழிவை வருவித்துக்கொண்டிருந்ததையும் எதிர்காலத் திரையை விலக்கிக்காட்டினார். COLTam 284.1

‘வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலி யடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாகவிட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்” என்று கிறிஸ்து சொன்னார். COLTam 284.2

இந்த திராட்சத்தோட்டத்தைக்குறித்து ஏசாயா தீர்க்கதரிசியும் சொல்லியிருக்கிறார்: ‘இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவ ருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத் தோட்டம் உண்டு. அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக் கட்டி, அதில் ஆலை யையும் உண்டு பண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தரு மென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.” ஏசாயா 5:1,2. COLTam 285.1

வீட்டெஜமான் வனாந்தரத்திலே நிலம் ஒன்றை தெரிவு செய்து, அதை வேலியடைத்து, அதைச் சுத்தப்படுத்தி, பண்படுத்தி அதிலே நற்குலத்திராட்சச்செடிகளை நட்டான்; மிகுதியான அறுவடையை எதிர்பார்த்தான். பண்படுத்தாமல் தரிசாகக் கிடந்த மற்ற நிலங்களை விட இந்த நிலத்தில் அக்கறை காட்டி, கடும்பிராயசப்பட்டு விவசா யம் செய்திருந்ததால், அதற்கேற்ற பலனைத் தந்து தன்னைக் கன மடையச் செய்யவேண்டுமென எதிர்பார்த்தான். அதுபோல கிறிஸ்துவிடமிருந்து கற்றுக்கொண்டு, பயற்சிபெறுவதற்காக ஒரு கூட்டமக்களை தேவனும் இவ்வுலகத்தில் தேர்ந்தெடுத்தார்.’ சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனு ஷரே” என்று தீர்க்கதரிசி சொல்கிறார். ஏசா 5:7. தேவன் அந்த ஜனங்களுக்கு மேலான சிலாக்கியங்களை அருளியிருந்தார்; சொல்லிமுடி யாத தம்முடைய தயவினால் அவர்களை அமோகமாக ஆசீர்வதித் திருந்தார். அவர்கள் கனிகொடுத்து, தம்மைக்கனப்படுத்தவேண்டு மென்று எதிர்பார்த்தார். தமது ராஜ்யத்தின் நியதிகளை வெளிப் படுத்த விரும்பினார். விழுந்து போன இந்த துன்மார்க்க உலகத்தில், தேவனுடைய குணத்தை அவர்கள் பிரதிபலிக்க விரும்பினார். COLTam 285.2

அவர்கள் கர்த்தருடைய திராட்சத்தோட்டம், மற்ற அஞ்ஞான தேசத்தாரைக் காட்டிலும் வித்தியாசமான கனிகளைக் கொடுக்க வேண்டியவர்கள். விக்கிரகாராதனைக்காரர்களான பிற தேசத்தார் துன்மார்க்க கிரியைக்கு தங்களை விற்றிருந்தார்கள். வன்முறை, குற்றச்செயல், பேராசை, சிறுமைப்படுத்தல், மிக இழிவான பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் கட்டுபாடே இல்லாமல் ஈடுபட்டிருந்தார்கள். தீயமரமானது அக்கிரமம், சீர்கேடு, துன்பம் ஆகிய கனிகளைக் கொடுத்தது. இதற்கு நேர்மாறான கனியை, தேவன் நாட்டின் திராட்சச்செடி கொடுக்கவேண்டியிருந்த்து. COLTam 285.3

மோசேக்கு தேவன் வெளிப்படுத்தின நாமத்தை பிரதிபலித்துக் காட்டுகிற சிலாக்கியம் யூதத் தேசத்திற்கு அருளப்பட்டிருந்தது. “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் ” என்று மோசே ஜெபித்தபோது, கர்த்தர் அவனிடம், ‘என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணு வேன்” என்று வாக்குப்பண்ணினார். யாத் 33:18,19. கர்த்தர் அவ னுக்கு முன்பாகக் கடந்துபோகிற போது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமு முள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிற வர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்” என்று சொன்னார். யாத் 34:6,7. தேவன் தம் மக்களிடம் எதிர்பார்த்த கனி இதுதான். தூய்மையான குணங்களோடும், பரிசுத்தத்தோடும், இரக்கத்தோடும், கனிவான அன்போடும், மனதுருக்கத்தோடும் வாழ்ந்து, “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது மாயிருக்கிறது” என்பதைக் காட்ட வேண்டி யிருந்தது. COLTam 286.1

தேவனுடைய நோக்கம் என்னவென்றால், யூத தேசத்தின் மூலமாக சகல மக்களையும் ஆசீர்வதிக்கவேண்டும்; ஒட்டுமொத்த உலகத்திற்கும் அவருடைய வெளிச்சம் பரவிச்செல்ல இஸ்ர வேலர் மூலமாக வழியை ஆயத்தமாக்கவேண்டும் என்பதே. பிற தேசத்தார் தங்களுடைய மோசமான பழக்கவழக்கங்களால் தேவனைக்குறித்த அறிவை இழந்திருந்தார்கள். ஆனாலும் அவர் தம்முடைய இரக்கத்தால் அவர்களை ஒரேயடியாக அழிக்கவில்லை. தம்முடைய சபையின் மூலம் அவர்கள் தம்மைப்பற்றி நன்றாக அறிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்க திட்டங்கொண்டார். அவ ருடைய ஜனங்கள் தங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்துகிற நியதிகள்தாம், மனிதனில் மீண்டும் தேவசாயலைக் கொண்டுவருகிற கருவிகளாக இருக்கவேண்டுமென்பது அவருடைய திட்டம். COLTam 286.2

இந்த நோக்கத்தை நிறைவேற்றும்படியே தேவன் ஆபிரகாமை அவனுடைய விக்கிரகாரதனைக்கார உறவினர்களிடமிருந்து அழைத்து, கானான் தேசத்தில் குடியிருக்குமாறு கட்டளையிட்டார். “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப் படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்’ என்று சொன்னார். ஆதி 12:2. COLTam 286.3

ஆபிரகாமின் சந்ததியான யாக்கோபும் அவனுடைய பிள்ளைகளும் எகிப்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். துன்மார்க்கமாக ஜீவித்துவந்த மிகப்பெரிய அந்தத் தேசத்தாருக்கு மத்தியில் தேவ ராஜ்யத்தின் நியதிகளை அவர்கள் வெளிப்படுத்தவேண்டியிருந்தது. யோசேப்பின் நேர்மையும், ஒட்டுமொத்த எகிப்திய மக்களையும் பாதுகாப்பதற்கு அவன் அற்புதமாகச் செயல்பட்ட விதமும் கிறிஸ் துவின் வாழ்க்கையை அப்படியே எடுத்துக்காட்டின. அதுபோல தேவனுக்கு சாட்சிகளாக ஜீவித்தவர்களில் மோசேயும் இன்னும் பலரும் உண்டு . COLTam 287.1

எகிப்திலிருந்து இஸ்ரவேலரைக் கொண்டுவந்த சமயத்திலும், கர்த்தர் மீண்டும் தமது வல்லமையையும் இரக்கத்தையும் வெளிப் படுத்தினார். அடிமைத்தனத்திலிருந்து அற்புதமான விதங்களில் அவர்களை விடுவித்தார்; அவர்களுடையவனாந்தரப் பயணங்களிலும் அன்போடு கையாண்டார்; அவர்களுடைய நலனுக்காக மட்டுமே அப்படிச் செய்யவில்லை. சுற்றிலுமிருந்து தேசத்தாருக்கு விளக்கப்பாடங்களாக அவற்றைச் செய்தார். மனிதனுடைய சகல அதிகாரங்களுக்கும் மேன்மைகளுக்கும் உயர்ந்தவராக தேவன் தம்மை வெளிப்படுத்தியிருந்தார். தம்முடைய மக்களுக்காக அவர் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்; இயற்கையை விட, இயற்கையை வழிபட்ட மாபெரும் மனிதர்கைள விட அவர் அதிகாரம் படைத்தவர் என்பதை அவை காட்டின. கடைசி நாட் களில் பூமி முழுவதும் தேவன் கடந்து செல்வதுபோல, பெருமை வாய்ந்த எகிப்து தேசம் முழுவதையும் கடந்து சென்றார். அக்கினி யாலும், கடும் புயலாலும், பூமியதிர்ச்சியாலும், சங்காரத்தாலும் “இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்றவர் தமது மக்களை மீட் டார். அடிமைத்தன தேசத்திலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தார். “கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தர வழியாய் அவர்களை அழைத்துச் சென்றார்.” உபாகமம் 8:15. கன் மலையிலிருந்து தண்ணீரைப் புறப்படப் பண்ணி,” வானத்தின் தானி யத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.’” சங்கீதம் 78:24. “கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு ; யாக்கோபு அவருடைய சுதந்தர வீதம். பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார். அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார். கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின் மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின் மேல் சுமந்து கொண்டு போகிறதுபோல, கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை” என்று மோசேசொன்னான். உபாகமம் 32:9-12. உன்னதமானவரின் நிழலிலே அவர்கள் தங்கும்படியாக இவ்வாறு அவர்களைத் தம்மிடத்திற்கு வழி நடத்தினார். COLTam 287.2

இஸ்ரவேல் புத்திரரின் வனாந்தர யாத்திரைகளில் கிறிஸ்துவே அவர்களுக்குத் தலைவராயிருந்தார். பகலிலே மேகஸ்தம்பமா கவும் இரவிலே அக்கினிஸ்தம்பமாகவும் சூழ்ந்து, அவர்களை வழிநடத்தினார். வனாந்தரத்தின் ஆபத்துகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்தார்; வாக்குத்தத்த தேசத்திற்குக் கொண்டு வந்தார். தேவனை ஏற்றுக்கொண்டிராத சகல தேசத்தாருக்கும் முன்பாகதம் முடைய சொந்த ஜனமாகவும், கர்த்தருடைய திராட்சத்தோட்டமா கவும் இஸ்ரவேலை ஏற்படுத்தினார். COLTam 288.1

தேவனுடைய பிரமாணங்களை அவர்களிடம் கொடுத்தார். அவருடைய பிரமாணத்தின் போதனைகளும், சத்தியம், நியாயம், தூய்மை, பரிசுத்தம் எனும் நித்திய நியதிகளும் அவர்களைச் சுற்றிலும் வேலியடைத்திருந்தன. இந்த நியதிகளுக்குக் கீழ்ப்படிவதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு: ஏனென்றால் பாவபழக்கவழக்கங்களால் அவர்கள் தங்களையே அழிக்காதபடிக்கு பாதுகாப்பவையாக இருந்தன. திராட்சத்தோட்டத்தின் மத்தியில் இருந்த கோபுரம் போல, தேசத்தின் மத்தியில் தம்முடைய பரிசுத்த ஆலயத்தை தேவன் வைத்தார். COLTam 288.2

கிறிஸ்துவே அவர்களுக்குப் போதகராயிருந்தார். வனாந்தரத்தில் அவர்களைப் போதித்து, வழி நடத்தியது போலவே, அதன்பிற கும் அவர்களைப் போதித்து, வழிநடத்தவிருந்தார். ஆசரிப்புக் கூடாரத்திலும் தேவாலயத்திலும் கிருபாசனத்திற்கு மேலிருந்த பரி சுத்த ஷெக்கினாவில் அவருடைய மகிமை தங்கியிருந்தது. தமது அன்பு, பொறுமை எனும் ஐசுவரியங்களை அவர்களுக்கு தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார். COLTam 288.3

தமது ஜனமாகிய இஸ்ரவேலை புகழ்ச்சியும் மகிமையுமாக வைக்க தேவன் விரும்பினார். அவர்களுக்கு ஒவ்வொரு வகையான COLTam 288.4

ஆவிக்குரிய அனுகூலங்களையம் கொடுத்தார். அவர்களை தம்முடைய பிரதிநிதிகளாக்குவதற்காக, அவர்களுடயை குணத்தை மாற்ற உதவக்கூடிய எதையும் அவர்களுக்குக் கொடுக்காமல் இருக்கவில்லை . COLTam 289.1

தேவனுடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படிவது, அவர்களைச் செழிக்கச்செய்து, பிறதேசங்களை ஆச்சரியத்தில் ஆழ்ந்த விருந்தது. நுணுக்கமான வேலைகளைச் செய்கிற ஞானத்தையும் திறனையும் கொடுக்கவல்லவர் அவர்களுக்குத் தொடர்ந்து போதித்து, தம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது மூலம் அவர்களை உயர்த்தி, மேன்மைப்படுத்த விருந்தார். கீழ்ப்படிந்தால், பிற தேசங்களை வாதித்த நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டு, மேலான அறிவுத்திற னால் ஆசீர்வதிக்கப்படவிருந்தார்கள். சகலவகையிலும் செழிப்பது, தேவமகிமையையும் மகத்துவத்தையும் வல்லமையையும் வெளிப் படுத்தவிருந்தது. அவர்கள் ராஜாக்களும் ஆசாரியராஜ்யமுமாக விளங்கயிருந்தார்கள். உலகிலேயே மிகப்பெரிய தேசமாக மாறு வதற்கான சகல வசதிகளையும் தேவன் அவர்களுக்குக் கொடுத் திருந்தார். COLTam 289.2

தேவனுடைய நோக்கங்களை மிகத்திட்டமாக மோசேயின் மூலமாக கிறிஸ்து அவர்களுக்குக் கொடுத்திருந்தார்; வளமான வாழ்விற்கான நிபந்தனைகளையும் தெளிவாகச் சொல்லியிருந்தார். “நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத் திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படித் தெரிந்துகொண்டார். ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறை மட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும்,... நீ செய்யும்படி நான் இன்று உனக்குக் கட்டளையிடுகிற கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்வாயாக. இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர் களானால், அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையையும் கிருபை யையும் உனக்காகக் காத்து, உன்மேல் அன்புவைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானி யத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப் பார். சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட் டிருப்பாய் .... கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக் குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங் களில் ஒன்றும் உன் மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார்.” உபாகமம் 7:6,9,11-15. COLTam 289.3

அவர்கள் தம்முடைய கற்பனைகளைக் கைக்கொண்டால் உச்சிதமான கோதுமையையும் கன்மலையின் தேனையும் கொடுப் பதாக தேவன் வாக்குப்பண்ணினார். நீடித்த நாட்களால் அவர்களைத் திருப்தியாக்கி, தமது இரட்சிப்பை அவர்களுக்குக் காண்பிக்கவிருந்தார். COLTam 290.1

தேவனுக்குக் கீழ்ப்படியாததால் ஆதாமும் ஏவாளும் ஏதேனை இழந்தார்கள். பாவத்தினிமித்தம் உலகம் முழுவதும் சபிக்கப்பட்டது. ஆனால் தேவனுடைய மக்கள் அவர் சொன்னபடி வாழ்ந்திருந்தால், அவர்களுடைய தேசத்தில் மீண்டும் செழிப்பும், அழகும் காணப்பட்டிருக்கும். நிலத்தைப் பண்படுத்தவேண்டிய விதம் பற்றி தேவன்தாமே அவர்களிடம் சொல்லியிருப்பார்; அதை முந்தைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு தேவனோடு அவர்கள் ஒத்துழைத்திருக்கவேண்டும். இவ்வாறு ஒட்டுமொத்த தேசமும் தேவனுடைய கட்டுப்பாட்டிற்குள் வந்து, ஆவிக்குரிய சாத்தியத்திற் கான ஒரு விளக்கப்பாடமாக அமைந்திருக்கும். அவருடைய இயற் கையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு, பூமி தன் பொக்கிஷங்களை வழங்குவது போல, அவருடைய ஒழுக்க விதிகளுக்குக் கீழ்ப் படிந்து, அவருடைய குணப்பண்புகளை மக்கள் தங்களுடைய இரு தயங்களில் பிரதிபலிக்க வேண்டியிருந்தது. ஜீவனுள்ள தேவனைத் தொழுது, சேவிக்கிற ஜனங்களுடைய மேன்மையை அஞ்ஞானிகளும் கூட உணர்ந்திருப்பார்கள். COLTam 290.2

‘நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும் தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளும் பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன். ஆகையால் அவைகளைக் கைக் கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்கு முன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள். நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுது கொள்ளுகிற போதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறது போல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது? இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப் பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது?” என்று மோசே கேட்டான். உபாகமம் 4:5-8. COLTam 290.3

இஸ்ரவேல் புத்திரருக்கு தேவன் நியமித்திருந்த பகுதிகளை எல்லாம் அவர்கள் ஆக்கிரமிக்கவேண்டியிருந்தது. மெய்தேவனை தொழுது சேவிப்பதைப் புறக்கணித்த தேசங்கள் கொள்ளையடிக் கப்படவிருந்தன. இஸ்ரவேலர்கள் தம்முடைய குணத்தை வெளிப் படுத்தி, பிற மனிதர்களை தம்மண்டைக்கு வழி நடத்துவதே தேவனுடைய நோக்கமாக இருந்தது. உலகம் முழுவதிற்கும் சுவிசஷே அழைப்பைக் கொடுக்கவேண்டியிருந்தது. பலிமுறை ஆராதனை களின் போதனைகள் மூலம் ஜாதிகளுக்கு முன்பாக கிறிஸ்து உயர்த் தப்படவிருந்தார்; அவரை நோக்கிப்பார்க்கிற அனைவரும் பிழைக்க விருந்தார்கள். கானானியப் பெண்ணாகிய ராகாப், மோவாபியப் பெண்ணாகிய ரூத் போன்று விக்கிரகாரதனையை விட்டு மெய்யான தேவனைத் தொழுதுகொள்ள திரும்புகிற அனை வரும், அவர் தெரிந்து கொண்ட மக்களோடு இணைக்கப்படவிருந்தார்கள். இஸ்ரவேலருடைய எண்ணிக்கை அதிகரிக்கிற போது, அவர் ள் தங்களுடைய எல்லயைப் பெரிதாக்கி, உலகம் முழுவ திலும் தங்களுடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்கவேண்டியிருந்தது. COLTam 291.1

தம்முடைய இரக்கத்தின் ஆளுகைக்குள் மக்களை அனை வரையும் கொண்டுவரதேவன் விரும்பினார். பூமியில் சந்தோஷமும் சமாதானமும் நிறைந்திருக்க விரும்பினார். மனிதன் சந்தோஷமாக இருக்கும்படியாக அவனைச் சிருஷ்டித்தார். மனிதர்களுடைய இருதயங்களை பரலோக சமாதானத்தினால் நிரப்ப ஏங்குகிறார். பரலோகத்தின் மாபெரும் குடும்பத்திற்கு ஓர் அடையாளமாக உலகத்திலுள்ள குடும்பத்தினர் இருக்க விரும்புகிறார். COLTam 291.2

ஆனால் இஸ்ரவேலர் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்ற வில்லை. “நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத் திராட்சச் செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?” என்று ஆண்டவர் கேட்கிறார். எரேமியா 2:21.’இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத்தானே கனி கொடுக்கிறது.” ஓசியா 10:1. “எருசலே மின் குடிகளே, யூதாவின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட் டத்துக்கும் நியாயந்தீருங்கள். நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன? இப்போதும் நான் என் திராட்சத்தோட் டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்து போடப்படும்; அதின் அடைப் பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம். அதைப் பாழாக்கிவிடு வேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும்,களை கொத்தி எடுக்கப் படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளை யிடுவேன் என்கிறார். சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட் டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை ; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு.” ஏசாயா 5:3-7. COLTam 291.3

உண்மையற்ற வாழ்க்கையின் விளைவு எப்படியிருக்கு மென் பதை மோசேயின் மூலமாகஜனங்களுக்கு தேவசொல்லியிருந்தார். அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ள மறுப்பதால், தேவனுடைய ஜீவனை முற்றிலும் இழந்து போக விருந்தார்கள்; அவருடைய ஆசீர்வாதத்தையும் இழக்கவிருந்தார்கள்.” உன் தேவ னாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு . நீ புசித்துத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடி யிருக்கும் போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த் திக்கும் போதும், உன் இருதயம் மேட்டிமையடையாமலும் ..... என் சாமார்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளா மலும் .... உன் தேவனாகியகர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைப் COLTam 292.1

பின்பற்றி அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள் வாயானால், நிச்சயமாய் அழிந்து போவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்கிறேன். உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாற் போவதினால், கர்த்தர் உங்களுக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப் போல நீங்களும் அழிவீர்கள்” என்று மோசே சொன்னார். உபாகமம் 8:11-14,17,19,20. COLTam 293.1

யூத ஜனங்கள் இந்த எச்சரிப்புக்குச் செவிசாய்க்கவில்லை. தேவனை மறந்தார்கள்; அவருடைய பிரதிநிதிகள் என்கிற தங்களுடைய மாபெரும் சிலாக்கியத்தைக்காணத்தவறினார்கள். அவர்கள் பெற்றிருந்த ஆசீர்வாதங்களால் உலகிற்கு எந்த ஆசீர்வாதமும் கிடைக்கவில்லை. தாங்கள் பெற்றிருந்த அனுகூலங்களை எல்லாம் தங்களுடைய சுயமகிமைக்காகப் பயன்படுத்தினார்கள். தேவன் சொல்லியிருந்தபடி அவரைச் சேவிக்கவில்லை. தங்களுடைய சக மனிதர்களுக்கும் பக்திக்கேற்ற ஆலோசனைகளையும் முன்மாதிரி யான பரிசுத்த வாழ்க்கையையும் கொடுக்கத் தவறினார்கள். ஜலப்பிரளயத்திற்கு முன்க வாழ்ந்தவர்களைப்போல தங்களுடைய பொல்லாத இதயத்தின் நினைவுகளின்படியெல்லாம் நடந்தார்கள். இவ்வாறு பரிசுத்தமானவற்றையெல்லாம் கேலிக்கூத்தாக்கி, வெறு மனே கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம் இதுவே என்று சொன்னார்கள். எரே 7:4. அதேசமயத்தில், தேவ னுடைய நாமத்தைத் திரித்துக்காட்டி, அவருடைய நாமத்தை கன வீனப்படுத்தி, அவருடைய பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத் தினார்கள். COLTam 293.2

கர்த்தருடைய திராட்சத்தோட்டத்தின் தோட்டக்காரர்களாக நியமிக்கப்பட்டிருந்தவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரவான்களாக இல்லை. ஆசாரியர்களும் போதகர்களும் ஜனங்களுக்கு உண்மை யாக உபதேசிக்கவில்லை. தேவனுடைய இரக்கத்தையும் நற்குணத் தையும் மக்களுக்கு எடுத்துச்சொல்லவில்லை ; தேவன் மக்களுடைய அன்பையும் சேவையையும் அவர் எதிர்பார்க்கிறார் என்பதைச் சொல்லவில்லை. இந்த தோட்டக்காரர்கள் தங்களுடைய சுயமகிமையை நாடினார்கள். திராட்சத்தோட்டத்தின் விளைச்சலை தாங்களே அனுபவிக்க விரும்பினார்கள். தங்களை மக்கள் கவனிக்க வும், தங்களுக்கு வந்தனம் செய்யவும் குறியாக இருந்தார்கள். COLTam 293.3

இஸ்ரவேலின் தலைவர்களுடைய பாவம் சாதாரண மனிதர்களுடைய பாவம் போன்றதல்ல. இவர்கள் தேவனுக்கு பரிசுத்த கடமைகளைச் செய்யவேண்டியவர்கள். “என்று கர்த்தர் சொல்லு கிறார் ” என்று போதிக்கவும், தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்ககவும் வாக்குக் கொடுத்திருந்தார்கள். ஆனால் வாக்குக்கு மாறாக, வேதவாக்கியங்களைப் புரட்டினார்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் சுமக்க இயலாத சுமைகளைச் சுமத்தி, சடங்குமுறைகளை வலுக்கட்டாயமாக்கினார்கள். ரபிமார்களின் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல், இளைப் பாறுதலின்றி மக்கள் தவித்து வந்தார்கள். மனிதனால் ஏற்படுத்தப் பட்ட கட்டளைகளைக் கைக்கொள்வது இயலாமல் போகவே, தேவனுடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவதில் அக்கறை யிழக்க ஆரம்பித்தார்கள். COLTam 293.4

தாம் திராட்சத்தோட்டத்தின் சொந்தக்காரரென்றும், தமக் கென்று பயன்படுத்த அனைத்து உடைமைகளும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதென்றும் மக்களிடம் தேவன் சொன்னார். தேவ னுடைய சொத்தைக் கையாளுகிற பரிசுத்தமான பணியை தாங்கள் செய்வதாக ஆசாரியரும், போதகர்களும் நினைக்கவில்லை . அவருடைய பணியின் வளர்ச்சிக்காக தங்களை நம்பி ஒப்படைக்கப் பட்டிருந்த வசதிகளையும் வாய்ப்புகளையும் திட்டமிட்டு திருடி னார்கள். அவர்களுடைய இச்சையையும் பேராசையையும் பார்த்து அஞ்ஞானிகள் கூட அவர்களை அறுவருத்தார்கள். இவ்வாறு அஞ்ஞான உலகத்தார் தேவனுடைய குணத்தையும் அவருடைய ராஜ்யத்தின் கட்டளைகளையும் தவறாகப் புரிந்து கொள்வதற்கு வாய்ப்புண்டானது. COLTam 294.1

ஒரு தகப்பனைப்போல தேவன் தம் மக்கள் மேல் பொறுமை காத்தார். இரக்கத்தைக் காண்பித்தும், இரக்கத்தை மறுத்தும், அவர்களோடு மன்றாடினார். பொறுமையோடு அவர்களுடைய பாவங்களை எடுத்துச் சொன்னார், தங்களுடைய பாவங்களை அவர்கள் ஒத்துக்கொள்ள நீடிய பொறுமையோடு காத்திருந்தார். தோட்டக்காரர்களிடம் தேவனுடைய கோரிக்கைகளை எடுத்துக் கூற தீர்க்கதரிசிகளையும் தூதுவர்களையும் அனுப்பினார்; ஆனால் அவர்களை அன்போடு ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, எதிரிகளைப்போல நடத்தினார்கள். தோட்டக்காரர்கள் அவர்களைத் துன்பப்படுத்தி, கொலை செய்தார்கள். வேறே தூதுவர்களை தேவன் அனுப்பினார்; முன்பு வந்தவர்களுக்குச் செய்தது போலவே அவர்களுக்கும் செய்தார்கள். ஆனால் முன்பைவிட அதிக வெறுப்புடன் தோட்டக்காரர்கள் நடந்துகொண்டார்கள். COLTam 294.2

இறுதி முயற்சியாக தேவன், “என் குமாரனுக்கு அஞ்சு வார்கள்” என்று சொல்லி, தமது குமாரனை அனுப்பிவைத்தார். பழிவாங்கும் அளவிற்கு வெறுப்பு அதிகரித்தது; அவர்கள் தங்களுக்குள் சொன்னது என்னவென்றால், “இவன் சுதந்தரவாளி, இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்வோம்.” அதன்பிறகு திராட்சத்தோட்டத்தைக் கைப்பற்றி, நாம் இஷ்டம் போல அதன் விளைச்சலை அனுபவிக்கலாம். COLTam 295.1

யூத ஆட்சியாளர்கள் தேவனை நேசிக்கவில்லை. அவரிட மிருந்து தங்களைத் துண்டித்துக்கொண்டு, சுமூகமான தீர்வுக்கு அவர் முன்னெடுத்த ஏற்பாடுகளையெல்லாம் புறக்கணித்தார்கள். தேவனுடைய அன்பு குமாரனாகிய கிறிஸ்து, திராட்சத்தோட்ட எஜமானரின் கோரிக்கைகளை எடுத்துக்கூற வந்தார். ஆனால் தோட்டக்காரர்கள் அவரை திட்டமாக அவமதித்து, இந்த மனிதன் எங்கள் மீது ஆளுகை செய்யவிடமாட்டோம்’ என்று சொன்னார்கள். கிறிஸ்துவின் குண அழகில் பொறாமை கொண்டார்கள். அவர்களை விட மிக அருமையாகப் போதித்தார்; அவருடைய வெற்றியைப் பார்த்து பயந்தார்கள். அவர்களைக் கடிந்துகொண்டார், அவர்களுடையமாய்மாலத்தைத் தோலுரித்துக் காட்டினார், அவர்களுடைய செய்கையின் நிச்சயமான விளைவுகளைச் சொன்னார். எனவே கோபத்தால் வெகுண்டெழுந்தார்கள். அவருடைய கண்டனங்களுக்கு பதில் சொல்லமுடியாமல், கடும் எரிச்சலடைந்தார்கள். கிறிஸ்துவிடம் தொடர்ந்து காணப்பட்ட உயர்ந்தபட்ச நீதியை வெறுத்தார்கள். தங்கள் சுயநலத்தை அம்பலப்படுத்துகிற விதத்தில் அவருடைய போதனை இருந்ததைக் கண்டு, அவரைக் கொல்லத் தீர்மானித்தார்கள். உண்மைத்தன்மைக்கும் பயபக்திக்கும் அவர் முன்மாதிரியாக இருந்ததும், அவர் செய்த ஒவ்வொன்றிலும் ஆவிக்குரிய தன்மை வெளிப்பட்டதும் அவர்களுக்குப் பிடிக்க வில்லை . அவரது முழு வாழ்க்கையும் அவர்களுடைய சுயநலத் தைக் கண்டிப்பதாக இருந்தது. இறுதி சோதனை வந்தபோது, அதா வது, நித்தியஜீவனுக்கேதுவான கீழ்ப்படிதல் காணப்படுகிறதா அல்லது நித்திய மரணத்திற்கேதுவான கீழ்ப்படியாமை காணப் படுகிறதா என்கிற சோதனை வந்தபோது, இஸ்ரவேலின் பரிசுத்த ரைப் புறக்கணித்தார்கள். கிறிஸ்துவையா பரபாசையா, யாரை விடு தலை செய்யவேண்டும் என்று கேட்டபோது, ‘பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும்” என்று சத்தமிட்டார்கள். லூக்கா 23:18. “கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும்” என்று பிலாத்து கேட்டபோது, ‘‘ அவனைச் சிலுவையில் அறைய வேண்டும்” என்று கூறினார்கள். மத்தேயு 27:22.’‘உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா” என்று பிலாத்து கேட்ட தற்கு, “இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை” என்று ஆசாரியர்களும் அதிபதிகளும் பதில் சொன்னார்கள். யோவான் 19:15. இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் ” என்று பிலாத்து கூறி, தனது கைகளைக்கழுவியபோது, இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக ” என்று தாங்கள் சொல் வது இன்னதென்று அறியாமல் சொன்ன மக்களோடு சேர்ந்து ஆசா ரியர்களும் கத்தினார்கள் . மத்தேயு 27:24, 25. COLTam 295.2

இதுவே யூதத்தலைவர்களின் தீர்மானமாக இருந்தது. சிங்காசனத்தில் அமர்ந்திருந்தவர் கரத்தில் வைத்திருந்த, ஒருவனும் திறக்கக்கூடாததாக யோவான் கண்ட புத்தகத்தில் அவர்களுடைய தீர்மானம் பதியப்பட்டுள்ளது. யூதா கோத்திரத்தின் சிங்கம் அந்தப் புஸ்தகத்தின் முத்திரையை உடைக்கும் நாளில், அவர்களுக்கு முன் பாக அது வாசிக்கப்பட்டு, நிறைவான தண்டனையைப் பெறுவார்கள். COLTam 296.1

தாங்கள் பரலோகத்தின் அன்பிற்குரியவர்கள் என்றும், தேவ னுடைய சபையார் என்கிற எப்போதும் உண்டென்றும் யூதஜனங்கள் நம்பிவந்தார்கள். தங்களை ஆபிரகாமின் பிள்ளைகளென்றார்கள்; அதுவே தங்களுடைய செழிப்பிற்கான ஆதாரமென்றும், தங்களுடைய அந்த உரிமைகளைப் பறிப்பதற்கு வானத்திற்கும் பூமிக்கும் கூட அதிகாரமில்லையென்றும் உறுதியாக நம்பினார்கள். ஆனால் உண்மையற்றவர்களாக வாழ்ந்து, பரலோகத்தின் ஆக்கினைத் தீர்ப் புக்கும், தேவனைவிட்டுப் பிரிவதற்கும் தங்களை ஆயத்தப் படுத்தி வந்தார்கள். COLTam 296.2

திராட்சத்தோட்டத்தைப்பற்றிய உவமையிலே, ஆசாரியர் களின் உச்சக்கட்ட துன்மார்க்க செயலை கிறிஸ்து சித்தரித்துக் காட்டின பிறகு, ” திராட்சத் தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான்” என்று அவர்களிடம் கேட்டார். அந்த உவமையை மிகுந்த ஆர்வத்துடன் ஆசாரியர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்; அந்தச் சம்பவத்தின் கருத்து தங்களைப் பற்றியது என்பதை உணராமல், ஜனங்களுடன் சேர்ந்து, “அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்ற காலங்களில் தனக்குக்கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக்குத்தகையாகக் கொடுப்பான் ” என்றார்கள். COLTam 296.3

தங்களை அறியாமலேயே தங்களுக்கு தண்டனை தீர்ப்பைச் சொன்னார்கள். இயேசு அவர்களை உற்றுப்பார்த்தார்; தங்களுடைய இருதயங்களின் இரகசியங்களை அவர் ஆராய்ந்து விட்டா ரென்பதை ஊடுருவுகிற அவருடைய பார்வையிலேயே அறிந்து கொண்டார்கள். அவருடைய தெய்வீகதன்மை சந்தேகத்திற்கு இட மின்றி, அவர்களுக்கு முன்பாகப் பளிச்சிட்டது. அந்தத் தோட்டக் கார்ர்கள் வேறு யாருமல்ல, தாங்கள் தாம் என்பதை அறிந்தார்கள்; தங்களை அறியாமலேயே அப்படியாக திருப்பதாக ” என்றார்கள். COLTam 297.1

அக்கறையோடும் மனவருத்தத்தோடும் கிறிஸ்து அவர்களி டம், வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக் குத் தலைக் கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?” என்று கேட்டார். ஆகை யால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற மக்களுக்குக் கொடுக்கப்படும். இந்தக் கல்லின் மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன் மேல் விழுமோ அது அவனை நசுக்கிப்போடும் ” என்று சொன்னார். COLTam 297.2

ஜனங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருந்தால், யூத்தேசத்திற்கு அழிவுவராமல் தடுத்திருப்பார். ஆனால் பொறாமையும், வைராக்கியமும் அவர்களை மனம்மாறவிடாமல் செய்தன. நாச ரேத்தின் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ள முடியாதென உறுதியாக இருந்தனர். உலகத்தின் வெளிச்சத்தைப் புறக்கணித் தார்கள்; அதுமுதல் நள்ளிரவின் இருளைப் போன்ற காரிருளில் அவர்களுடைய வாழ்க்கை மூழ்கியது. முன்னுரைக்கப்பட்ட அழிவு யூத தேசத்திற்கு நேரிட்டது. கட்டுக்கடங்காத, தீவிரமான வெறியுணர்வுகள் அவர்களை அழிவுக்கு நடத்தின. கண்மூடித் தனமான மூர்க்கத்தால் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டார்கள். அகந்தையால் பெருமைக்கும் கலகத்திற்கும் இடம் கொடுத்ததால், ரோம வீர்ர்களின் கோபத்திற்கு ஆளானார்கள். எருசலேம் நகரம் அழிக்கப்பட்டது, தேவாலயம் இடிக்கப்பட்டது, அந்த இடம் உழவுண்டநிலம் போல் காட்சியளித்தது. யூதாவின் புத்திரர் மிகக்கொடுமையான விதங்களில் கொல்லப்பட்டார்கள். இலட்சக்கணக்கான மக்கள் அஞ்ஞானதேசங்களில் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். COLTam 297.3

தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்ற யூதர்கள் தவறியதால், திராட்சத்தோட்டம் அவர்களிடமிருந்த பறிக்கப்பட்டது. அவர்கள் தவறாகக் கையாண்ட சிலாக்கியங்களும், அவர்கள் அற்பமாக எண்ணிய ஊழியமும் மற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. COLTam 298.1

இன்றைய சபை COLTam 298.2

திராட்சத்தோட்டம் குறித்த உவமை யூதத் தேசத்திற்கு மட்டும் பொருந்தக்கூடியதல்ல. நமக்கும் அதில் பாடமுள்ளது. இன்றைய தலைமுறை சபைக்கும் தேவன் மிகப்பெரிய சிலாக்கியங்களையும் ஆசீர்வாதங்களையும் வைத்திருக்கிறார்; அதற்கேற்ற பிரதிபலனை அவர் எதிர்பார்க்கிறார். COLTam 298.3

நம்மை மீட்க மிகப்பெரிய பணயத்தொகை செலுத்தப்பட் டுள்ளது. அது எவ்வளவு விலையேறப்பெற்றது என்பதை உணர்ந்தால் மட்டுமே, அதன் பலன்களைப் புரிந்து கொள்ள முடியும். தேவ குமாரனுடைய இரத்தத்தாலும், கண்ணீராலும் ஈரமாக்கப்பட்ட நிலம் இது; பரலோகத்தின் விலையேறப்பெற்ற கனிகளை இங்கே அறுவடை செய்ய வேண்டும். தேவ வார்த்தையிலுள்ள சாத்தியங் களின் மகிமையும் மேன்மையும் தேவனுடைய மக்களின் வாழ்க்கை யில் வெளிப்படவேண்டும். கிறிஸ்துவின் குணமும் அவருடைய ராஜ்யத்தின் நியதிகளும் அவருடைய மக்களுடைய வாழ்க்கையில் வெளிப்படவேண்டும். COLTam 298.4

தேவனுடைய கிரியைகளை எதிர்க்க சாத்தான் வகைதேடு கிறான், தன்னுடைய கொள்களை ஏற்றுக்கொள்ள மனிதர்களை வற்புறுத்திக்கொண்டே இருக்கிறான். தேவன் தெரிந்து கொண்டவர்களை வஞ்சிக்கப்பட்டவர்கள் என்று சொல்கிறான். அவன் சகோ தரரைக் குற்றஞ்சாட்டுகிறவன். நீதியின் கிரியைகளைச் செய்கிற வர்களுக்கு எதிராக அதிகாரத்தோடு குற்றஞ்சாட்டுகிறான். தம்முடைய மக்கள் சரியான நியதிகளுக்குக் கீழ்ப்படிந்து, அதனால் கிடைக்கிற பலன்கள் மூலம் சாத்தானுக்குப் பதிலளிக்க ஆண்டவர் விரும்புகிறார். COLTam 298.5

ஒவ்வொரு கிறிஸ்தவனிலும், குடும்பத்திலும், சபையிலும், தேவசேவைக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் இந்த நியதிகள் வெளிப்படவேண்டும். உலகத்திற்குச் செய்யப்படவேண்டிய பணிக்கு ஒவ்வொருவரும் அடையாளமாகத் திகழவேண்டும். இரட்சிக்கும் வல்லமையுடைய சுவிசேஷ சத்தி யங்களின் மாதிரிப்படிவங்களாக அவர்கள் இருக்கவேண்டும். மனுக்குலத்திற்கான தேவனுடைய மாபெரும் நோக்கத்தை நிறைவேற்றுவதில் அனைவருமே அவருடைய ஏதுகரங்கள் தாம். COLTam 298.6

யூதத்தலைவர்கள் தங்களுடைய பிரமாண்டமான ஆலயத்தையும், முக்கியத்துவமிக்க தங்களுடைய மார்க்கச் சடங்குகளையும் குறித்தும் பெருமை பாராட்டினார்கள்; ஆனால் அவர்களிடம் நியா யமும், இரக்கமும், தேவ அன்பும் காணப்படவில்லை . தேவாலயத்தின் மகிமையும், அவர்களுடைய ஆராதனையின் சிறப்புகளும் அவர்களை தேவனிடம் பரிந்துரைக்க போதவில்லை. ஏனென்றால், அவருடைய பார்வையில் முக்கியமானது ஒன்றுதான்; அது அவர் களிடம் இல்லை. அதாவது, நறுங்குண்டதும் நொருங்குண்டதுமான ஆவியை அவர்கள் பலியாகக் கொடுக்கவில்லை. தேவராஜ்யத்தின் முக்கிய நியதிகள் மறக்கப்படும் போதுதான், சடங்காச்சாரங்கள் அதிகரிக்கின்றன; அவை ஆடம்பரமாகச் செய்யப்படுகின்றன. COLTam 299.1

குணமேம்பாட்டில் கவனம் செலுத்தாமல், ஆத்தும் அலங் கரிப்பை எண்ணாமல், எளிமையான தேவபக்திக்கு முக்கியத்துவ மளிக்காமல் இருக்கும் போதுதான், பெருமையும் பகட்டாசையும் எழும்புகிறது; அது பிரமாண்டமான ஆலயக் கட்டிடங்களும், பகட் டான அலங்கரிப்புகளும், மரூட்சியூட்டும் சடங்காச்சாரங்களும் வேண்டுமென்கிறது. இவற்றினால் தேவனைக் கனப்படுத்தமுடி யாது. சடங்காச்சாரங்களும், வேஷமும், பகட்டும் நிறைந்த ஒரு நாகரீக மார்க்கம் தேவனுக்குப் பிரியமானதல்ல. இத்தகைய ஆராதனைகள் பரலோகத் தூதுவர்களிடமிருந்து எந்தப் பதிலையும் கொண்டுவருவதில்லை. அதன் ஆராதனைகளுக்குப் பரலோகத் தூதுவர்களிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்காது. COLTam 299.2

தேவனுடைய பார்வையில் சபை விலையேறப்பெற்றதாக இருக்கிறது. அதன் வெளிப்புற அனுகூலங்களை வைத்து தேவன் அதை மதிப்பிடுவதில்லை; மாறாக, அதன் மெய்யான பக்திதான் உலகத்திடமிருந்த அதை வேறுபடுத்துக் காட்டுகிறது. அதன் அங் கத்தினர்கள் கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளர்வதையும், ஆவிக்குரிய அனுபவத்தில் வளர்வதையும் வைத்தே அதை மதிப்பிடுகிறார். COLTam 299.3

பரிசுத்தம், சுயநலமின்மை எனும் விளைச்சலை தம்முடைய திராட்சத்தோட்டத்தில் அறுவைடை செய்ய கிறிஸ்து அதிகமாக ஏங்குகிறார். அன்பின் நியதிகளும், நற்குணத்தின் நியதிகளும் வெளிப்படுகின்றனவா என்று பார்க்கிறார். கிறிஸ்துவின் பிரதிநிதி களிடம் வெளிப்படவேண்டிய குணஅழகோடு, மன அழ கோடும் ஒப்பிடும் போது, ஒட்டுமொத்த கலையழகும் ஒன்று மல்ல . விசு வாசியின் ஆத்துமாவைச் சூழ்ந்திருக்கும் கிருபையும், மனதிலும் இருதயத்திலும் நடைபெறுகிற பரிசுத்த ஆவியானவரின் கிரியையும்தான் அவனை ஜீவனுக்கேதுவான ஜீவ்வாசணையாக மாற்றுகிறது; அவனுடைய ஊழியத்தை தேவன் ஆசீர்வதிக்க உதவுகிறது. COLTam 300.1

உலகத்தில் மிக ஏழ்மையான நிலையில் ஒரு சபை இருக்கலாம். வெளிப்படையான கவர்ச்சி காணப்படாமல் இருக்கலாம்; ஆனால் அதன் அங்கத்தினர்களிடம் கிறிஸ்துவினுடைய குணத்தின் நியதிகள் காணப்பட்டால், ஆத்துமாக்களில் அவரது சந்தோஷத்தைப் பெற்றிருப்பார்கள். நன்றியுள்ள இருதயங்களிலிருந்து ஏறெடுக்கப் படும் துதியும், ஸ்தோத்திரமும் நற்கந்தமாக தேவனிடம் எழும்பிச்செல்லும். COLTam 300.2

கர்த்தர் நல்லவர், வல்லமையுள்ளவர் என்று நாம் சாட்சி கூற அவர் விரும்புகிறார். அவரைத் துதித்து நன்றி கூறும் போது, நாம் அவரைக் கனப்படுத்துகிறோம். ‘ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான் ” என்று கர்த்தர் சொல்லுகிறார். ச ங்50:23. வனாந்தர வழியாய் பயணம் செய்த இஸ்ரவேல் ஜனங்கள், பரிசுத்த பாடல்களால் தேவனைத் துதித்தார்கள். கர்த்தருடைய பிர மாணங்களையும் வாக்குத்தத்தங்களையும் இசையோடு பாடி, யாத்ரீக பயணிகள் வழிநெடுகிலும் பாடிக்கொண்டே சென்றார்கள். கானானிலும் கூட பரிசுத்த பண்டிகைகளுக்காகக் கூடி வரும்போது, தேவனுடைய ஆச்சரியமானகிரியைகளை எண்ணிப்பார்த்து, நன்றி யால் நிறைந்து, அவருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டியிருந்தது. தமது ஜனங்களின் வாழ்க்கை முழுவதுமே துதி யின் வாழ்க்கையாக விளங்க தேவன் விரும்பினார். அதன்மூலம் “பூமியில் ” அவருடைய வழியையும்,“எல்லாஜாதிகளுக்குள்ளும்” அவருடைய இரட்சணியத்தையும் பிரஸ்தாப்ப்படுத்த வேண்டி யிருந்தது. சங்கீதம் 67:1. COLTam 300.3

அதுபோலவே இப்போதும் நாம் செய்யவேண்டும். உலகமக்கள் பொய் தேவர்களை வணங்கி வருகிறார்கள். பொய்தொழுகையிலிருந்து அவர்களைத் திருப்புவதற்கு அவர்களுடைய விக்கிரகங்களைத் திட்டக்கூடாது; அதைவிட மேலாக, தேவன் நல்லவர் என்பதை அவர்களுக்குச் சொல்லவேண்டும். ‘நானே தேவன் என் பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” ஏசா 43:12. COLTam 300.4

மீட்பின் மாபெரும் திட்டத்தை நாம் புரிந்துகொண்டு போற்ற வும், நாம் தேவனுடைய பிள்ளைகள் என்கிற மேலான சிலாக்கி யத்தை உணரவும், அவருக்கு முன்பாக கீழ்ப்படிந்து, நன்றியோடும் ஸ்தோத்திரத்தோடும் நடக்கவும் தேவன் விரும்புகிறார். புதுசிருஷ்டி களாக, ஒவ்வொருநாளும் மகிழ்ச்சியோடு தம்மைச் சேவிக்க விரும்புகிறார். நம்முடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளன, நம்முடைய கவலைகளை யெல்லாம் அவர்மேல் வைக்க முடியும்’ என்பதை எண்ணி நம் இரு தயங்களில் நன்றி பெருக்கெடுத்து ஓட அவர் விரும்புகிறார். நாம் கர்த்தருடைய சுதந்தரம்; தம்முடைய நீதியையே பரிசுத்தவான்களுக்கு வெண்வஸ்திரமாகத் தரிதிதருக்கிறார்; அதினிமித்தம் நாம் மகிழ்ந்து களிகூர அவர் கட்டளையிடுகிறார். COLTam 301.1

ஜெபத்தைப்போல, உள்ளத்தின் நிறைவோடும் உண்மையோ டும் தேவனைத் துதிப்பதும் ஒரு கடமைதான். விழுந்துபோன மனி தர்கள் மேல் தேவன் காட்டின் அற்புத அன்பை நாம் புரிந்து போற்று கிறோம், அள்ள அள்ளக் குறையாத அவருடைய நிறைவிலிருந்து பெரும் ஆசீர்வாதங்களை நாம் எதிர்பார்க்கிறோம் என்பதை உலகத்திற்கும் பரலோக ஜீவிகளுக்கும் நாம் காட்டவேண்டும். அதைக்காட்டிலும் அதிகமாக, நம் அனுபவத்தின் அற்புதமான பக்கங்கள் குறித்து சாட்சி சொல்லவேண்டும். பரிசுத்த ஆவியின் விசேஷித்த அருள்மாரியைப் பெற்றவர்கள், தேவன் தம் பிள்ளைகளுக்காகச் செய்கிற அற்புத கிரியைகளையும், அவருடைய நற் குணங்களையும் எண்ணிப்பார்க்கும் போது, கர்த்தரில் மகிழ்வார்கள்; பயன்மிக்க வகையில் அவருடைய சேவையில் அதிகமாக ஈடுபடுவார்கள். COLTam 301.2

அவ்வாறு ஈடுபடுவது, சாத்தானின் வல்லமையை முறியடிக்கிறது. முறுமுறுக்கிற, குறை கூறுகிற ஆவியை அகற்றுகிறது. அத னால் சோதனைக்காரன் செயல்பட இடமிருக்காது. பூலோகவாசி களான மனிதர்கள் பரலோக வாசஸ்தலங்களைச் சுதந்தரிக்கிற தகுதியை அதன்மூலம் வளர்த்துக்கொள்வார்கள். COLTam 301.3

இப்படிப்பட்ட சாட்சியானது மற்றவர்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிறிஸ்துவிற்காக ஆத்துமாக்களை ஆதாயம் பண்ண இதைவிட சிறந்த வழிகள் இல்லை . COLTam 302.1

தேவநாமத்தின் மகிமை எங்கும் பரவச்செய்ய நம் திறனுக்குட் பட்ட அனைத்தையும் செய்து, தேவனை உண்மையோடு சேவித்து, அவரைப் போற்ற வேண்டும். தேவன் தம்முடைய வரங்களை நமக்குக் கொடுக்கிறார்; அவற்றை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அவருடைய குணத்தை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும். யூத நிர்வாக அமைப்பில், தேவனைத் தொழுவதில் காணிக்கைகளும் பலிகளும் முக்கிய பங்கு வகித்தன. ஆசரிப்புக் கூடார ஆராதனைக்கென தங்களுடைய வருமானத்திலெல்லாம் ஒரு பகுதியை தசம பாகமாகச் செலுத்தும்படி இஸ்ரவேலருக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது. இது தவிர அவர்கள் பாவநிவாரண பலிகளையும், மனப்பூர்வமான காணிக்கைகளையும், ஸ்தோத்திர காணிக்கைகளையும் செலுத்த வேண்டியிருந்தது. சுவிசேஷ ஊழி யத்தை ஆதரிப்பதற்கான ஏற்பாடாக அவை இருந்தன. முற்காலத்தில் தேவன் தம் மக்களிடம் எதிர்பார்த்ததைவிட எவ்விதத்திலும் குறைவாக இன்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆத்தும இரட்சிப்பிற் கான மாபெரும் பணி தொடர்ந்து செய்யப்படவேண்டும். இப்பணி யைச் செய்யும்படி தசமபாகம், பலிகள், காணிக்கைகள் போன்ற வற்றை முன்னேற்பாடாகக் கொடுத்திருக்கிறார். அதன்மூலம் சுவி சேஷ ஊழியம் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பது அவருடைய நோக்கம். தசமபாகம் தமக்குரியது என்கிறார்; அதைப் பரி சுத்தமாகக் கருதி அவருக்கென்று பிரித்தெடுத்து, அவருடைய நோக்கத்தை நிறைவேவற்றுவதற்காக அவருடைய பொக்கிஷசா லையில் சேர்க்க வேண்டும். மனப்பூர்வமான காணிக்கைகளையும் ஸ்தோத்திர காணிக்கைகளையும் அவர் நம்மிடம் கேட்கிறார். பூமியின் கடையாந்தரங்கள் மட்டும் சுவிசேஷத்தைக் கொண்டுசெல்ல இவற்றை அர்ப்பணம் செய்யவேண்டும். COLTam 302.2

தேவ சேவையில் தனிநபர் ஊழியமும் ஒன்று . உலகத்தை இரட்சிக்கும் பணியில் அவரோடு ஒத்துழைத்து, தனிப்பட்ட விதத் திலும் முயல வேண்டும். ‘நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்பதே கிறிஸ்து வின் ஊழியக்கட்டளை . மாற்கு 16:15. தம்முடைய சீடர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தக் கட்டளையைக் கொடுக்கிறார். கிறிஸ்துவைப்போல வாழ தங்களை தத்தம் செய்தவர்கள், தங்களுடைய சகமனிதர்களுடைய இரட்சிப்பிற்காகவும் தத்தம் செய்யவேண்டும். கிறிஸ்துவோடு இணையும் போது அவருடைய இதயத்தின் தொனி, இவர்களுடைய இருதயங்களிலும் தொனிக்கும். ஆத்துமாக்கள் மேல் அவர் காட்டுகிற ஏக்கம் இவர்களிலும் காணப்படும். எல்லா ருக்கும் ஒரே விதமான பணி இருக்காது; ஆனால் ஒவ்வொருவருக் கும் தனித்தனி பங்கும் பணியும் உண்டு. COLTam 302.3

பண்டைக்காலங்களில் ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும், ஞானமும் சாந்தமும் பெற்றிருந்த மோசேயும், பல்வேறு திறன்களைப் பெற்றிருந்த யோசுவாவும் தேவனுக்கு ஊழியஞ்செய்ய அழைக்கப்பட்டிருந்தார்கள். மிரியாமின் இசை, தெபோராளின் தைரியம் மற்றும் பயபக்தி, ரூத்தின் பிள்ளை பாசம், சாமுவேலின் கீழ்ப்படிதல் மற்றும் உண்மைதன்மை, எலியாவின் உறுதியான விசுவாசம், எலிசாவின் மென்மையான, கீழ்ப்படுத்துகிற செல் வாக்கு - இவை எல்லாமே அவசியமாக இருந்தன. எனவே, இன்று யார்மீதெல்லாம் தேவன் தம்முடைய ஆசீர்வாதங்களை அருளி யிருக்கிறாரோ அவர்கள் உண்மையோடு ஊழியம் செய்யவேண்டும்; அவருடைய ராஜ்யத்தையும் அவருடைய நாமத்தின் மகிமை யையும் பரப்புவதற்கு ஒவ்வொரு வரத்தையும் பயன்படுத்த வேண்டும். COLTam 303.1

கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிற ஒவ்வொருவரும் சுவிசேஷத்தின் சத்தியத்தையும், அதன் இரட்சி க்கும் வல்லமையையும் தங்கள் வாழ்க்கையில் வெளிப் படுத்த வேண்டும். தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிற அனைத்தையும் கிறிஸ்துவினுடைய கிருபையின் மூலம் நாம் நிறைவேற்ற முடியும். பரலோகத்தின் ஐசுவரியங்கள் அனைத்தும் தேவனுடைய பிள்ளைகள் மூலமாக வெளிப்படவேண்டும். ‘நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷரா யிருப்பீர்கள்” என்று கிறிஸ்து சொல்கிறார். யோவான் 15:8. COLTam 303.2

ஒட்டுமொத்த உலகமும் தம்முடைய திராட்சத்தோட்டமென உரிமை கோருகிறார். இப்பொழுது அது அபகரிக்கிறவனிடம் இருந்தாலும், அதன் உரிமையாளர் தேவன்தாம். சிருஷ்டிப்பி னாலும் மீட்பினாலும் அதை தமக்குச் சொந்தமாக்கினார். உலகத்திற்காகவே கிறிஸ்து பலியானார். “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை... தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு COLTam 303.3

கூர்ந்தார்.” யோவான் 3:16. அந்த ஒரே ஈவின் மூலமாகத்தான் மற்ற ஈவுகள் எல்லாம் மனிதருக்கு அருளப்படுகின்றன. ஒட்டுமொத்த உலகமும் தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தை தினமும் பெறுகிறது. நன்றி கெட்ட மனுகுலத்தாருக்குக் கிடைக்கிற ஒவ்வொரு சொட்டு மழைத்துளியும், ஒவ்வொரு ஒளிக்கதிரும், ஒவ்வொரு இலையும், பூவும், கனியும் தேவனுடைய நீடிய பொறுமையையும் அவருடைய மகா அன்பையும் சாட்சியிடுகின்றன. COLTam 304.1

அந்த மகாவள்ளலுக்கு நாம் என்னத்தைத் திரும்பக் கொடுக்கி றோம்? தேவனுடைய கோரிக்கைகளை மனிதர்கள் எவ்வாறு கையாளுகிறார்கள்? மக்கள் தங்கள் வாழ்க்கையில் யாரைச் சே வித்து வருகிறார்கள்? உலகப்பொருட்களைச் சேவிக்கிறார்கள். வசதி, பதவி, உலக இன்பம் இவைதாம் அவர்களுடைய இலக்கு. வசதிக்காகக் கொள்ளையடிக்கிறார்கள்; மனிதனை மட்டுமல்ல தேவனையும் . சுயநல திருப்திக்காக அவருடைய ஈவுகளைப் பயன் படுத்துகிறார்கள். தங்களுக்குக் கிடைக்கிற ஒவ்வொன்றையும் தங்கள் பேராசையையும் சிற்றின்ப நாட்டத்தையும் பூர்த்தி செய்ய பயன் படுத்துகிறார்கள். COLTam 304.2

இன்று உலகத்தில் காணப்படும் அதே பாவம்தான் அன்று இஸ்ரவேலில் அழிவைக் கொண்டு வந்தது. இஸ்ரவேலர் மேல் அழிவைக் கொண்டு வந்த பாவங்களாக எவற்றையெல்லாம் சொல்லலாம்? தேவனிடம் நன்றியில்லாமை, வாய்ப்புகளையும் ஆசீர் வாதங்களையும் புறக்கணித்தல், தேவனுடைய ஈவுகளை சுயநலத்திற்காகப் பயன்படுத்துதல். இந்தப் பாவங்கள் தாம் இன்று உல கத்தை அழித்துக்கொண்டிருக்கின்றன. COLTam 304.3

ஒலிவமலையில் நின்று, தெரிந்து கொள்ளப்பட்ட எருசலேமைப் பார்த்தவாறு கிறிஸ்து கண்ணீர் விட்டாரே, அது அந்த நகரத்திற்காக மாத்திரமல்ல. எருசலேமைப் போலவே இந்த உலகமும் அழியப்போவதைக் கண்டார். COLTam 304.4

“உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத் துக்கு ஏற்றவைகளை அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. “” லூக்கா 19:42. COLTam 304.5

‘ இந்த நாளிலாகிலும்.” அந்த நாள் நெருங்கி விட்டது. கொடுக்கப்பட்ட சிலாக்கியமும் இரக்கமும் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டன. பழிவாங்குதலின் மேகம் சூழ்ந்து வருகிறது. தேவனுடைய கிருபையைப் புறக்கணித்தவர்கள் சடுதியில் அழிக் கப்படுவார்கள்; தப்புவதில்லை . COLTam 304.6

ஆனால் உலகம் தூங்கிக்கொண்டிருக்கிறது. தாங்கள் தண்டிக்கப்படும் நாளை மக்கள் அறியாதிருக்கிறார்கள். COLTam 305.1

இப்படிப்பட்ட நெருக்கடியில் சபையின் நிலை என்னவாக இருக்கவேண்டும்? அதன் அங்கத்தினர்கள் தேவனுடைய கோரிக் கைகளின்படி நடக்கிறார்களா? அவருடைய ஊழியப்பணியை நிறைவேற்றி, அவருடைய குணத்தை உலகிற்குப் பிரதிபலிக் கிறார்களா? எச்சரிப்பாகக் கொடுக்கப் படும் கடைசி எச்சரிப்பின் செய்தியை தங்கள் சகமனிதர்களிடம் வலியுறுத்திக் கூறுகிறார்களா? COLTam 305.2

மனிதர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். திரளானோர் அழிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் சீடர்களெனச் சொல்வோரில் ஒரு சிலர்தானே இந்த ஆத்துமாக்கள் மேல் பாரத்தோடி ருக்கிறார்கள். உலகத்தின் முடிவு தராசில் ஊசலாடுகிறது; ஆனாலும் மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதிலேயே மிக ஆழமான சத்தியத்தைப் பெற்றிருப்பதாகச் சொல்கிறவர்கள் கூட இந்நிலை கண்டு அசைவதில்லை. மனுகுலத்தைத் தொடுவதற்கும், அவர்களை தேவன் பக்கம் இழுப்பதற்கும் கிறிஸ்துவானவர் மனித சுபாவத்தைத் தரித்தார், தம் பரலோக வீட்டையே விட்டார். அவருடைய அன்புதான் அதற்கு காரணம். அந்த அன்பு இன்று மனிதர் களிடம் இல்லை. தேவனுடைய மக்கள் மதிமயங்கி, முடங்கிப்போன நிலையில் காணப்படுகிறார்கள். அதுதான் இச்சமயத்திற்கான கடமையை அவர்கள் புரிந்துகொள்ள முடியாதபடி செய்கிறது. COLTam 305.3

கானானுக்குள் சென்றதும் அந்தத் தேசம் முழுவதையும் இஸ்ர வேலர் தங்களுக்குச் சொந்தமாக்கவேம்டும் என்பது தேவனுடைய திட்டம். அதை அவர்கள் செய்யவில்லை. அத்தேசத்தை அரை குறையாக ஆக்கிரமித்து, தங்கள் வெற்றியின் பலனை அனுபவிப் பதில் திருப்தியடைந்து விட்டார்கள். தாங்கள் ஏற்கனவே ஆக்கிர மித்த பகுதிகளைச் சுற்றியே குடியிருந்தார்களே தவிர, புதிதாக இடங்களைப் பிடிக்கும்படி முன்னேறிச் செல்லவில்லை. அவநம் பிக்கையும் மெத்தனப்போக்கும்தான் காரணம். அதனால் தேவனை விட்டு பின்வாங்கத் துவங்கினார்கள். அவருடைய நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றத் தவறியதால், அவர்களை ஆசீர்வதிப்பதாக தேவன் கொடுத்திருந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற இயலாமற் போயிற்று. இன்றைய சபையும் இதேபோல செயல்படவில்லையா? உலகம் முழுவதிற்கும் சுவிசேஷச்செய்தியை அறிவிக்க வேண்டும்; ஆனால் கிறிஸ்தவர்களெனச் சொல்பவர்கள், சுவிசேஷத்தின் சிலாக்கியங்களை தாங்கள் மட்டுமே அனுபவிக்கும்படி கூடுகிறார்கள். புதிய பகுதிகளில் கால் மிதித்து, அப்பாலுள்ள பகுதிகளுக்கும் இரட்சிப்பின் செய்தியைக் கொண்டு செல்ல வேண்டியதின் அவ சியத்தை உணர்வதில்லை. ‘நீங்கள் உலகெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்கிற கிறிஸ்து வின் ஊழியக்கட்டளையை நிறைவேற்ற மறுக்கின்றார்கள். மாற்கு 16:15. யூதசபையின் பாவத்தைவிட எவ்விதத்திலும் இது குறைந்ததா? COLTam 305.4

கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்வோர், பர லோகத்திற்கு முன்பாக பரிட்சைக்கு நிற்கிறார்கள். தேவனுடைய சேவையில் உற்சாகமின்மையும், அதற்கான முயற்சியில் தளர்வும் காணப்படுவதால் உண்மையற்றவர்கள் என்று தீர்க்கப்படுகிறார்கள். தாங்கள் செய்கிற ஊழியத்தைமிகச்சிறப்பாகச் செய்வார்களானால், ஆக்கினைக்கு ஆளாக மாட்டார்கள்; முழு ஈடுபாட்டுடன் ஊழியத் தைச் செய்தால், இதைவிட இன்னும் அதிகமாகச் சாதிக்கலாம். COLTam 306.1

சுயமறுப்பு ஆவியையும், சிலுவையைச் சுமக்கிற மனநிலை யையும் பெருமளவில் அவர்கள் இழந்து போனதை அவர்களும் அறிவார்கள், மற்றவர்களும் அறிவார்கள். அநேகர் இருக்கிறார்கள்; பரலோகப்புத்தகங்களில் அவர்களுடைய பெயர்களுக்கு நேராக, ‘உற்பத்தியாளர்கள் அல்ல, நுகர்ந்து மகிழ்ந்தவர்கள்’ என்று எழுதப்பட்டிருக்கும். கிறிஸ்துவின் நாமம் அவமிக்கப்படு வதற்கு அவருடைய நாமத்தைத் தரித்திருக்கிற பலர் காரணமாக இருக்கிறார்கள்; அவர்கள் அவருடைய அழகை மறைக்கிறார்கள், அவருடைய கனத்திற்கு இழுக்குண்டாக்குகிறார்கள். COLTam 306.2

சபைப் பதிவேடுகளில் பெயர்கள் இருந்தும், கிறிஸ்துவின் ஆளுகைக்கு உட்பட்டிராத அநேகர் இருக்கிறார்கள். அவருடைய போதனைக்கு அவர்கள் செவிகொடுப்பதில்லை; அவருடைய வேலையைச் செய்வதுமில்லை. அதனால் எதிரியின் கட்டுப்பாட் டின்கீழ் இருக்கிறார்கள். நன்மையுண்டாக்குகிற எதையும் அவர்கள் செய்வதில்லை; எனவே கணக்கிடமுடியாத பாதிப்புகளை உண்டாக் குகிறார்கள். அவர்களுடைய செல்வாக்கானது ஜீவனுக்கேதுவான ஜீவவாசணையாக இராத்தால், மரணத்துக்கேதுவான மரண வாசனையாக இருக்கிறது. COLTam 306.3

“இவைகளை விசாரியாதிருப்பேனோ?” என்று ஆண்டவர் கேட்கிறார். எரே 5:9. இஸ்ரவேல் புத்திரர் தேவ நோக்கத்தை நிறை வேற்றத் தவறியதாலேயே புறக்கணிக்கப்பட்டார்கள்; தேவ அழைப்பு மற்ற ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டது. அந்த ஜனங்களும் உண்மையற்றவர்களாகக் காணப்பட்டால், அதேபோல புறக்கணிக்கப்படமாட்டார்களா? COLTam 307.1

திராட்சத்தோட்டம் குறித்த உவமையில் தோட்டக்காரர்களை குற்றவாளிகளெனகிறிஸ்து கூறினார். அவர்கள்தாம் தோட்டத்தின் விளைச்சலை தங்கள் எஜமானுக்குக் கொடுக்க மறுத்தார்கள். யூத தேசத்தில் ஆசாரியர்களும், போதகர்களும் தான் ஜனங்களைத் தவறாக வழிநடத்தினார்கள்; தேவன் அவர்களிடம் எதிர்பார்த்த சேவையைச் செய்யாமல் அதன்மூலம் அவரைக் கொள்ளையடித் தார்கள். அவர்கள் தாம் அந்தத் தேசத்தரை கிறிஸ்துவை விட்டு தூரே வழிநடத்தினார்கள். COLTam 307.2

மனிதர்களுடைய பாரம்பரியம் கலக்கப்பட்டிராத தேவனுடைய கட்டளையை கீழ்ப்படிதலின் அளவுகோலாக கிறிஸ்து ஜனங்களுக்கு உபதேசித்தார். இதனால் ரபிமார்கள் அவரை மிகவும் வெறுத்தர்கள். அவர்கள் தேவவார்த்தைக்கு மேலாக மனிதர்களுடைய போதனையை உயர்த்தினார்கள்; தேவ போதனைகளை மக்கள் காணாதபடிச் செய்தார்கள். மனிதர்கள் இயற்றிய கட்டளைகளை ஒதுக்கிவிட்டு, தேவவார்த்தையின் நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படிய அவர்களுக்கு விருப்பமில்லை. சத்தியத்தை முக்கியப் படுத்தி, பகுத்தறிவால் உண்டாகும் அகந்தையையும், மனிதர்களிட மிருந்து கிடைக்கிற புகழ்ச்சியையும் ஒதுக்கித்தள்ள விருப்பமில்லை. கிறிஸ்து வந்து, தேவனுடைய கோரிக்கைகளை அவர்களுக்கு அறி வித்தபோது, தங்களுக்கும் மக்களுக்கும் இடையே தலையிடு வதற்கு அவருக்கு உரிமையில்லையென ஆட்சேபித்தார்கள்; அவருக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு, அவரைக் கொல்ல திட்டம் தீட்டினார்கள். COLTam 307.3

கிறிஸ்து புறக்கணிக்கப்பட்டதற்கும், அதன் விளைவுகளுக்கும் அவர்கள்தாம் பொறுப்பு. ஒரு தேசம் பாவத்திற்குள் மூழ்கியதற்கும், ஒரு தேசம் அழிந்துபோனதற்கும் மதத்தலைவர்கள்தாம் காரணம். COLTam 307.4

நம்முடைய நாட்களிலுங்கூட இதே செல்வாக்கு செயல்பட வில்லையா? கர்த்தருடைய திராட்சத்தோட்டத்தின் ஊழியக்கா ரர்களில் பலர் யூதத்தலைவர்கள் போல நடந்து கொள்ளவில் லையா? தேவவார்த்தையின் திட்டமான நிபந்தனைகளை விட்டு மக்களை மதத்தலைவர்கள் வழிவிலகச் செய்யவில்லையா? தேவ னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியக் கற்றுக்கொப்பதற்கு பதி லாக, மீறுவதற்குக் கற்றுக்கொடுக்கவில்லையா? தேவனுடைய கட்டளைகளுக்கு மனிதர்கள் கட்டுப்பட்டவர்கள் அல்லர் என்கிற செய்திதான் இன்றைய பெரும்பாலான சபைகளின் பிரசங்கமேடை களில் பிரசங்கிக்கப்படுகின்றன. மனிதப் பாரம்பரியங்களும், நிய மங்களும், பழக்கவழக்கங்களும் உயர்த்தப்படுகின்றன. தேவனுடைய ஈவுகளைப் பெற்றவர்கள் பெருமைக்கும் சுயநிறைவுக்கும் இடமளிக்கிறார்கள்; தேவனுடைய கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் விடுகிறார்கள். COLTam 308.1

தேவனுடைய கட்டளைகளைப் புறக்கணிக்கிறவர்கள், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள். தேவனுடைய குணமானது, எழுத்துவடிவில் அவருடைய கட்டளைகளாக எழுதப் பட்டுள்ளன. அவருடைய ராஜ்யத்தின் நியதிகளும் அவற்றில் உள் ளடங்கியுள்ளன. இந்த நியதிகளை ஏற்றுக்கொள்கிற மறுக்கிறவன், தேவனுடைய ஆசீர்வாதங்கள் புரண்டோடுகிற வழியைவிட்டு தள்ளி நின்று கொள்கிறான். COLTam 308.2

இஸ்ரவேலருக்கு எவ்வளவு மகிமையான வாய்ப்புகள் வழங் கப்பட்டிருந்தன என்பதை தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப் படிவதால் மட்டுமே உணரமுடியும். அதே குணமேம்பாட்டையும், அதே பரிபூரண ஆசீர்வாதத்தையும் கீழ்ப்படிதலால் மட்டுமே நாம் பெறமுடியும். மனதிலும் ஆத்துமாவிலும் சரீரத்திலும் கிடைக்கிற ஆசீர்வாதமும், வீட்டிலும் வயலிலும் கிடைக்கும் ஆசீர்வாதமும், இம்மையிலம் மறுமையிலும் கிடைக்கும் ஆசீர்வாதமும் அதில் அடங்கும். COLTam 308.3

ஆவிக்குரிய உலகிலும் இயற்கை உலகிலும் நல்ல விளைச்ச லைப் பெறுவதற்கான நிபந்தனை தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதுதான். தேவனுடைய கட்டளைகளை அவமதிக்குமாறு மக்களுக்குப் போதிக்கிறவர்கள், தேவ மகிமைக்காக மக்கள் கனி கொடுக்க முடியாதபடி தடை செய்கிறார்கள் COLTam 308.4

கர்த்தருடைய திராட்சத்தோட்டத்தின் பலனை அவரிடமே மறைக்கிற குற்றத்திற்கு ஆளாகிறார்கள். COLTam 308.5

தேவன் அனுப்புகிற தூதுவர்கள் தங்கள் எஜமானுடைய கட்ட ளைக்கு இணங்கி நம்மிடம் வருகிறார்கள். தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுமாறு கிறிஸ்துவைப்போலவே வலியுறுத்திக் கூறுகிறார்கள். திராட்சத்தோட்டத்தின் பலன்களை, அன்பு - தாழ்மை - சுயதியாக சேவை எனும் கனிகளை அவர் நம்மிடம் எதிர் பார்ப்பதாகச் சொல்லுகிறார்கள். இதைக் கேட்கும் தோட்டக்காரர்கள் பலர் யூதத்தலைவர்களைப்போலவெகுண்டெழுவதில்லையா? தேவனுடைய கட்டளையின் கோரிக்கையை மக்களிடம் அறிவிக் கும்போது, அதைப் புறக்கணிக்குமாறு இந்தப் போதகர்கள் தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்துவதில்லையா? இவர்களை உண்மையற்ற ஊழியர்களென தேவன் சொல்லுகிறார். COLTam 309.1

பண்டைய இஸ்ரவேலரிடம் தேவன் சொன்னவற்றில், இன் றைய சபைக்கும் சபைத்தலைவர்களுக்கும் ஒரு முக்கிய எச்சரிப்பு உள்ளது. இஸ்ரவேலரைக்குறித்து கர்த்தர், “என் வேதத்தின் மகத்து வங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்” என்று சொன்னார். ஓசியா 8:12. ஆசாரியர்களையும் போதகர்களையும் குறித்து, “என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத் தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்” என்று சொன்னார். ஓசியா 4:6. COLTam 309.2

தேவனுடைய எச்சரிப்புகளுக்குச் செவிகொடுக்காமல் போக லாமா? அவருக்குச் சேவை செய்யகிடைக்கும் வாய்ப்புகளை மேம் படுத்தாமல் இருக்கலாமா? உலகத்தாரின் பரிகாசம், பகுத்தறிவு பெருமை, மனிதப்பாரம்பரியத்திற்கும் பழக்கவழக்கங்களுக்கும் ஒத்துப்போகுதல் போன்றவற்றைக் காரணங்காட்டி, பெயர்ச்சீடர்கள் அவருக்குச் சேவை செய்யாமல் இருக்கலாமா? யூதத் தலைவர்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்தது போல, அவர்கள் தேவவார்த்தை யைப் புறக்கணிக்கலாமா? இஸ்ரவேலருடைய பாவத்தின் விளைவை நாம் அறிவோம். இன்றைய சபை அதிலுள்ள எச்சரிப் புக்குச் செவிகொடுக்குமா? COLTam 309.3

“சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவ மரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவ மரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன் பங்காளியா யிருந்தாயானால், நீ அந்தக்கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டாதே... அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப் பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையா யிராமல் பயந்திரு . சுபாவக்கிளைகளைத் தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு . ரோமர் 11:17-21. COLTam 309.4