கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

1/55

கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

முன்னுரை

கிறிஸ்து தம் சீடஷர்களுடன் ஒலிவமலையின் மேல் அமர்ந்திருக்கிறார். சூரியன் மலைகளுக்குப்பின் மறைய, மாலை நேர கூராப்பு வானங்களில் திரைபோட்டிருந்தது. அங்கிருந்து பார்ப் பதற்கு நன்றாகத் தெரிந்த ஒரு வீட்டில், ஏதோ விசேஷம் நடப்பது போல பிரகாசமாகக் காட்சியளித்தது. வீட்டின் திறப்பான பகுதிகளில் வெளிச்சக் கதிர்கள் தெரிந்தன, எதிர்பார்ப்போடு ஒரு கூட்டம் காத்திருந்தது, சீக்கிரமே திருமண ஊர்வலம் புறப்படவிருந்ததை அது சுட்டிக்காட்டியது. கிழக்கத்திய நாடுகளில் பல பகுதி களில் மாலை வேளைகளில் தாம் திருமண வைபவங்கள் நடக்கும். மணவாளன் புறப்பட்டுப் போய் மணவாட்டியைச் சந்தித்து, தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்வார். தீவட்டிகளுடன் மணவாட்டியின் தகப்பனாருடைய வீட்டிலிருந்து புறப்பட்டு, தன்னுடைய வீட்டிற்கு பெண்ணின் வீட்டாரை அழைத்துச் சென்று, அழைக்கப்பட்டவர்களுக்கு அங்கே விருந்தளிப்பார். கிறிஸ்து பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், திருமண ஊர்வலம் வந்ததும் அதில் சேர்ந்துகொள்வதற்காக சிலர் காத்திருந்தார்கள். COLTam 6.1

வெண்வஸ்திரம் தரித்திருந்த பத்துக்கன்னிகைககள் மணவாட்டியின் வீட்டருகே வெகுநேரமாக நின்றுகொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் எரிகிற ஒரு தீவட்டியையும், எண்ணெய்க்கான ஒரு சிறிய பாத்திரத்தையும் கையில் வைத்திருந்தார்கள். எல்லாருமே மணவாளனின் வருகைக்காக ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால் மணவாளன் வரத் தாமதமானது. ஒவ்வொரு மணிவேளையும் கடந்தது; காத்திருந்தவர்கள்களைப்படைந்து தூங்க ஆர்மபித்தார்கள். நடு இராத்திரியிலே “இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள்” என்கிற சத்தம் கேட்டது. தூங்கிக்கொண்டிருந்தவர்கள் சட்டென விழித்து, எழுந்து நின்றார்கள். தீவட்டிகளின் பளீர் வெளிச்சத்தில், இன்னிசை முழக்கத்தோடும் ஊர்வலம் நகர்ந்து செல்வதைப் பார்க்கிறார்கள். மணவாளனுடைய சத்தத் தையும், மணவாட்டியின் சத்தத்தையும் கேட்கிறார்கள். COLTam 6.2

அந்தப்பத்துக் கன்னிகைகளும் புறப்பட வேண்டுமென்கிற அவசரத்தில் தங்கள் விளக்குகளை எடுத்து, அவற்றைத் தூண்டிவிட முயற்சிக் கின்றனர். ஆனால் ஐந்து பேர் தங்கள் பாத்திரங்களில் எண்ணெய் நிரப்பாமல் அலட்சியமாக இருந்துவிட்டார்கள். அவ்வளவு தாமதமாகுமென அவர்கள் எதிர்பார்க்கவில்லை; அவசரநிலைக்கு தங்களை ஆயத்தப்படுத்தவில்லை. எனவேமிகுந்த மனத்துயரோடு ஞானமுள்ள தங்களது தோழியர்ளிடம், ” உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்து போகிறதே என்று கேட்டார்கள். ஆனால் காத்திருந்த அந்த ஐந்து கன்னிகைகளும், தங்கள் விளக்குகளைத் தூண்டிவிடும் படிக்கு அப்போதுதான் பாத்திரத்திலிருந்து எண்ணெயை எல்லாம் விளக்குகளில் ஊற்றியிருந்தார்கள். கொடுப்பதற்கு வேறு எண்ணெய் இல்லை; எனவே அவர்கள், “எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்தில் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.” COLTam 7.1

அவர்கள் எண்ணெய் வாங்கச் சென்றிருந்தபோது, திருமணக் கூட்டம் கடந்து சென்றது; பின்தங்கிவிட்டார்கள். எரிகிற தீவட்டிகளுடன் சென்ற ஐந்து கன்னிகைகளும் பெண்வீட்டாருடன் சேர்ந்து, கூட்டமாக வீட்டிற்குள் பிரவேசித்தார்கள். கதவும் அடைக்கப்பட் டது. புத்தியில்லாத கன்னிகைகள் விருந்து சாலைக்கு வந்தபோது, உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை; அதை அவர்கள் எதிர்பார்க் கவுமில்லை. விருந்திற்கான எஜமான் அவர்களிடம், “உங்களை அறியேன்” என்று கூறினார். இராவிருளில், யாருமில்லாத தெருவில், வெளியே தனியாக விடப்பட்டார்கள். COLTam 7.2

மணவாளனுக்காகக் காத்திருந்த கூட்டத்தாரைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த இயேசு, அந்தப் பத்து கன்னிகைகளின் சம்பவத்தை தம் சீடர்களிடம் கூறினார். தமது இரண்டாம் வருகைக்குச் சற்று முன்னர் சபையின் அனுபவம் எப்படியிருக்கு மென்பதை அவர்களுடைய அனுபவத்திலிருந்து விளக்கினார். COLTam 7.3

காத்திருந்தவர்களான அந்த இரண்டு கூட்டத்தார், ஆண்டவ ருக்காகக் காத்திருப்பதாகச் சொல்லும் இருவகுப்பினரைச் சுட்டிக் காட்டுகிறார்கள். தாங்கள் சுத்த விசுவாசமுள்ளவர்களெனச் COLTam 7.4

சொல்லுவதால், அவர்கள் கன்னிகைகளென அழைக்கப்படு கிறார்கள். தீவட்டிகள் தேவ வார்த்தையைச் சுட்டிக்காட்டுகின் றன. “உம்முடைய வசனம் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” என்று சங்கீதக்காரன் சொல்கிறான். சங்கீதம் 119:105. எண்ணெயானது பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளமாக இருக்கிறது. சகரியாவின் தீர்க்கதரிசனத்தில் ஆவியானவர் அவ்வாறுதான் சுட்டிக்காட்டப்படுகிறார். “என்னோடே பேசின தூதன் திரும்பிவந்து நித்திரைபண்ணுகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி: நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான் : இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்து விளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும், அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது. அதின் அருகில் கிண்ணத்திற்கு வலது புறமாக ஒன்றும், அதற்கு இடது புறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன். நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். அப்பொழுது அவர்: செருபா பேலுக்குச் சொல்லப் படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினா லேயே ஆகும் என்றார்..... மறுபடியும் நான் அவரை நோக்கி : இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த்தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.. அப்பொழுது அவர்: இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவரா யிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள்.” என்றார். சகரியா 4:1-14. COLTam 8.1

இரண்டு ஒலிவமரங்களினின்று பொன்னிறமான எண்ணெய் இரண்டு பொற்குழாய்களின் வழியாகக் குத்துவிளக்கின் உச்சி யிலுள்ள கிண்ணத்திற்குள் இறங்கியது. அங்கிருந்து ஆசரிப்புக் கூடாரத்திற்கு வெளிச்சம் கொடுக்கிற அந்த பொன் குத்துவிளக்குகளுக்குச் சென்றது. அதுபோல, தேவனுடைய பிரசன்னத்தில் நிற்கும் பரிசுத்தவான்களின் மூலமாக, தேவ சேவைக்கு தங்களை COLTam 8.2

அர்ப்பணித்திருக்கும் மனிதக்கருவிகளுக்கு அவருடைய ஆவி யானவர் அருளப்படுகிறார். தேவ வார்த்தையை கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாக மாற்றுகிற பரலோகக் கிரு பையை தேவமக்களுக்கு அறிவிப்பதுதான் அபிஷேகிக்கப்பட்ட வர்களான அந்த இருவரின் ஊழியப்பணியாகும்.”பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினா லேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” சகரியா 4:6. COLTam 9.1

பத்துக்கன்னிகைகளும் மணவாளனை சந்திக்கச் சென்றதாக உவமை சொல்லுகிறது. அனைவரிடமும் விளக்குகளும் எண்ணெய்க்கான பாத்திரங்களும் இருந்தன. அவர்களுக்குள் வித்தியாசம் எதுவும் இருந்ததாக முதலில் தெரியவில்லை . அப்படியே, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு சற்று முன் னுள்ள சபையும் இருக்கும். வேதவாக்கியங்கள் குறித்த அறிவு அனைவரிடமும் காணப்படும். கிறிஸ்து சீக்கிர வருகையை அனைவருமே கேள்விப்பட்டு, அவருடைய வருகைக்காக நம்பிக் கையோடு காத்திருப்பார்கள். உவமையில் சொல்லப்பட்ட பிரகாரமே இப்போதும் நடக்கிறது. வருகைக்கு முன் காத்திருக்க வேண்டியுள்ளது, அப்போது விசுவாசம் சோதிக்கப்படுகிறது. “இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டு போகப் புறப்படுங்கள் என்ற சத்தம் கேட்கப்பட்டதும், அநேகர் ஆயத்தமின்றி இருக்கிறார்கள். பாத்திரங்களில் எண்ணெய் இல்லாமல் விளக்குகளோடு நிற்கிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறாதவர்களாக இருக்கிறார்கள். COLTam 9.2

தேவ ஆவியானவரைப் பெறாமல், அவரது வசனத்தை அறிந்திருப்பதில் பயனில்லை . பரிசுத்த ஆவியானவரின் துணையின்றி, வெறுமனே சத்தியத்தை மட்டும் அறிந்திருப்பது ஆத்துமாவை உயிர்ப்பிக்க முடியாது; இருதயத்தைப் பரிசுத்த மாக்கமுடியாது. வேதாகமக் கற்பனைகளையும் வாக்குறுதிகளையும் ஒருவர் மிக நன்றாக அறிந்திருக்கலாம்; தேவ ஆவியானவர் சத்தியத்தை உணர்த்தாவிட்டால், குணம் மாற்றமடையாது. ஆவியானவரின் அறிவூட்டல் இல்லாமல், மனிதர்கள் COLTam 9.3

பொய்யிலிருந்து சத்தியத்தைப் பிரித்தறிய முடியாது; மேலும், சாத்தானின் கைதேர்ந்த சோதனைகளுக்கு இரையாகிவிடுவார்கள். COLTam 10.1

புத்தியில்லாத கன்னிகைகள் சுட்டிக்காட்டுகிற அந்த வகுப் பினர்மாய்மாலக்காரர்கள் அல்ல. சத்தியத்தை மதித்தவர்கள், சத்தியத்திற்காகப் பரிந்து பேசியவர்கள், சத்தியத்தை நம்பினவர்கள் மேல் பாசங்காட்டினார்கள், ஆனால் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு அவர்கள் தங்களை அர்ப்பணிக்கவில்லை. கன்மலை யாகிய கிறிஸ்துவின் மேல் அவர்கள் விழவில்லை ; தங்கள் பழைய சுபாவம் நொறுங்க அனுமதிக்கவில்லை. கற்பாறையான நிலத்தில் விழுந்த விதைபோல வசனத்தைக் கேட்கிறவர்களும் இவர்களைத் தாம் சுட்டிக்காட்டுகிறார்கள். வார்த்தையை உடனே ஏற்றுக்கொள் கிறார்கள்; ஆனால் அதின் கொள்கைகளை தன்மயமாக்கத் தவறு கிறார்கள். அதன் தாக்கம் நிலைத்திருப்பதில்லை. மனிதனுடைய இதயத்தில் ஆவியானவர் கிரியை செய்கிறார்; அவனது விருப்பத்திற்கும் சம்மதத்திற்கும் ஏற்றபடி, புதிய தன்மையை அவனுக்குள் பதிக்கிறார். ஆனால் புத்தியற்ற கன்னிகைகள் சுட்டிக்காட்டுகிற அந்த வகுப்பினர் மேலோட்டமான கிரியையால் திருப்தியடை கின்றனர். தேவனை அவர்கள் அறியவில்லை. அவரது குணத்தை அவர்கள் ஆராயவில்லை. அவரோடு உறவுவைக்கவில்லை. எனவே, எவ்வாறு உறுதியாக நம்பவேண்டும், எவ்வாறு நோக்கிப்பார்த்து வாழ வேண்டும் என்று அவர்கள் அறிவதில்லை. அவர்கள் தேவனுக்குச் செய்யும் சேவையை வெறும் சடங்காக மாற்றி விடு கிறார்கள். ‘ஜனங்கள் கூடி வருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள் போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது.” எசே 33:31. கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குச் சற்றுமுன்வாழ்கிறவர்களின் குறிப் பிடத்தக்க குணங்களும் இவ்வாறே இருக்குமென்று அப்போஸ் தலனாகிய பவுல் சுட்டிக்காட்டுகிறார். “மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும் ...... COLTam 10.2

தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.” 2தீமோத்தேயு 3:1-5. COLTam 11.1

இந்தக் கூட்டத்தார்தான் ஆபத்து காலத்தின் போது சமாதானம், சௌக்கியமென்று கத்துபவர்களாகக் காணப்படுவார்கள். பாதுகாப்புடன் இருப்பதாக இதயங்களைத் தாலாட்டுவார்கள், ஆபத்து பற்றி கனவிலும் எண்ணமாட்டார்கள். மயக்க நிலையி லிருந்து திடீரெனவிழிக்கும்போதுதான், தங்களிடம் எதுவுமில்லை என்பதைக் கண்டு, தங்களது குறைவைப் போக்கும்படி மற்றவர் களிடம் கெஞ்சுகிறார்கள். ஆனால் ஆவிக்குரிய விஷயத்தில் ஒருவனது குறைவை மற்றவன் நிவிர்த்திசெய்ய முடியாது. தேவனுடைய கிருபை ஒவ்வோர் ஆத்துமாவுக்கும் இலவசமாக அருளப்படுகிறது. “தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள் ளக்கடவன்” என்கிற நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குணத்தை பரிமாறிக்கொள்ள முடியாது. ஒருவனுக்காக மற்றவன் நம்பிக்கை கொள்ள முடியாது. ஒருவனுக்காக மற்றவன் ஆவியான வரைப் பெறமுடியாது. ஆவியானவருடையகிரியையின் பலனால் உருவான குணத்தை ஒருவன் மற்றவனுக்குள் செலுத்தமுடியாது. “நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் (தேசத்தில்) இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல், குமாரனையாகிலும், குமாரத்தியையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.” எசேக்கியேல் 14:20. COLTam 11.2

நெருக்கடி ஒருநேரத்தில்தான்குணத்தன்மை வெளிப்படுகிறது. “இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டு போகப் புறப்படுங்கள்” என்று நடு இராத்திரியில் தீவிரமாக அறிவிக்கப்பட்டபோது, தூக்கத்திலிருந்து கன்னிகைகள் விழித் துக்கொண்டார்கள்; அந்த நிகழ்வுக்காக யார் ஆயத்தமாகியிருந்தார்கள் என்பது அப்போதுதான் தெரிந்தது. இரு வகுப்பினருமே எதிர்பாராத சமயத்தில் சத்தம் கேட்கிறது. ஆனால் அந்த COLTam 11.3

அவசரநிலைக்கு ஒரு வகுப்பினர் ஆயத்தமாக இருந்தார்கள்; இன்னொரு வகுப்பினர் ஆயத்தமாக இல்லை. அதுபோல இன்றும், எதிர்பாரா மல் திடீரென ஒரு பேரழிவு உண்டாகும் போது, அது ஆத்துமாவை மரணத்தோடு முகமுகமாக நிறுத்தும் போது, தேவனுடைய வாக்குறுதியில் அவருக்கு உண்மையிலேயே விசுவாசம் இருக்கிறாதாவென்று காட்டிவிடும். அந்த ஆத்துமா கிருபையால் தாங்கி நடத்தப்படுகிறதா என்பதைக்காட்டிவிடும். மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்ட தவணையின்காலம் முடியும் போது, மிகப்பெரிய இறுதிச் சோதனை வரும். அப்போது ஆத்துமாவில் காணப்படும் குறையைப் போக்குவதற்கான காலம் பிந்தியிருக்கும். COLTam 12.1

பூலோக வரலாற்றின் இறுதிக்கட்டத்தில், இந்தப் பத்துக்கன்னி கைகளும் காத்துக்கொண்டிருக்கிறவர்கள். எல்லாருமே தங்களை கிறிஸ்தவர்களென்ச் சொல்கிறார்கள். எல்லாருக்குமே ஓர் அழைப்பு இருக்கின்றது, பெயர் இருக்கிறது, விளக்கு இருக்கிறது; எல்லாருமே தேவனுக்குச் சேவை செய்வதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அனைவருமே கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருப்பது போலக் காணப்படுகிறார்கள். ஆனால் ஐந்துபேர் ஆயத்தமில்லாமல் இருக்கிறார்கள். ஐந்துபேர் திகைத்து, பயந்து, விருந்து சாலைக்கு வெளியே நிற்கப்போகிறார்கள். COLTam 12.2

கடைசி நாளில் அநேகர், “உம்முடைய சமுகத்தில் போஜன பானம் பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம் பண்ணினீரே ” ” கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?” என்று சொல்லி, கிறிஸ்துவின் இராஜ்யத்தில் பிரவேசிக்க அனுமதி கேட்பார்கள். ஆனால், “நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன்,... என்னை விட்டு அகன்று போங்கள்” என்று சொல்லிவிடுவார். லூக்கா 13:26, 27; மத்தேயு 7:22. உலகத்தில் அவர்கள் கிறிஸ்து வோடு ஐக்கியத்தை ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள்; அதனால் பரலோகப் பாஷையை அறியாதவர்களாகவும், அதின் மகிழ்ச்சி யை அறியாதவர்களாகவும் இருப்பார்கள். ‘‘ மனுஷனிலுள்ள COLTam 12.3

ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனு ஷருக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒரு வனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.’”1கொரிந்தியர் 2:11. COLTam 13.1

மனிதர்களின் காதுகளில் விழுகிற வார்த்தைகளிலெல்லாம் “நான் உங்களை அறியேன்” என்கிற வார்த்தைகள் துக்கம் நிறைந்தவையாக இருக்கும். ஒருவர் அலட்சியம் செய்த ஆவியின் ஐக்கியம் மட்டுமே கலியாண விருந்தில் கலந்து கொள்ளும் சந்தோஷமிக்க கூட்டத்தாரோடு அவரை ஐக்கியமாக்கும். அந்தக் காட்சியில் அவர் பங்குபெற முடியாது. அதின் வெளிச்சம் குருடாய்போன கண்களில் விழுந்தது போலவும், அதின் இன்னிசை செவிடாய்போன காதுகளில் ஒலித்தது போலவும் இருக்கும். உலகத்தால் மரத்துப்போன இருதயத்திலே அதன் அன்பும் மகிழ்ச்சியும் எவ்வித மகிழ்ச்சியின் நாதத்தையும் உரு வாக்க முடியாது. பரலோகத்தின் ஐக்கியத்திலிருந்து உங்களுடைய தகுதியின்மையே உங்களைப் புறம்பாக்கிவிடும். COLTam 13.2

“இதோ, மணவாளன் வருகிறார்” என்ற சத்தம் கேட்டபிறகு எழும்பி, காலியான விளக்குகளை நிரப்பமுயன்றால், ஆண்டவ ரைச் சந்திக்க நாம் ஆயத்தப்படமுடியாது. இவ்வுலக வாழ்க்கை யில் கிறிஸ்துவுக்கு இடங்கொடுக்காமல், பரலோகத்தில் அவரோடு சேர்ந்து வாழ்வதற்குத் தகுதிப்படமுடியாது. COLTam 13.3

புத்தியுள்ள கன்னிகைகள் தீவட்டிகளோடு, பாத்திரங்களில் எண்ணெயும் வைத்திருந்ததாக உவமை சொல்கிறது. இரவில் காத்திருந்த நேரம் முழுவதும் அவர்களது விளக்கு மங்காமல் எரிந்துகொண்டிருந்தது. மணவாளனைக் கனப்படுத்தும்படி, பிரகாசத்தைக் கூட்டிவழங்குவதற்கு உதவியது. இருளிலே பிரகாசி த்தால், மணவாளனுடைய வீட்டிற்கும் கல்யாண விருந்திற்கும் செல்லக்கூடிய பாதையை வெளிச்சமாக்க உதவியது. COLTam 13.4

அதேபோல கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள், இந்த உலகில் இருளுக்கு மத்தியில் ஒளிவீசவேண்டும். தேவவார்த்தை யானது அதை ஏற்றுக்கொள்பவரின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் மூலமாக மறுரூபமாக்குகிற ஒரு வல்லமையாக COLTam 13.5

மாறுவதால், அது ஒளியாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் தேவ்வார்த்தையின் நியதிகளை மனிதர்களுடை இருதயங்களில் நாட்டி, தேவனுடைய பண்புகளை உருவாக்குகிறார். அவரது மகிமை யின் வெளிச்சம், அதாவது அவருடைய குணம் அவரைப் பின் பற்றுகிறவர்களிடமிருந்து பிரகாசிக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தேவனை மகிமைப்படுத்தவேண்டும்; மணவாளனின் வீட்டிற்கும் தேவனுடைய நகரத்திற்கும் ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்திற்கும் செல்கிற பாதையை வெளிச்சமாக்க வேண்டும். COLTam 14.1

மணவாளன் நடுராத்தியில் வந்தார்; அது இராவிருட்டு நேரமாக இருந்தது. அதேபோல கிறிஸ்துவின் இரண்டாம் வரு கையும், பூலோக வரலாற்றின் இருண்ட காலக்கட்டத்தில் நிகழும். மனுஷகுமாரனுடைய வருகைக்கு முன் உலகம் என்ன நிலையில் இருக்கும் என்பதை நோவாவின் நாட்களும் லோத்துவின் நாட்களும் காட்டுகின்றன. வேதவாக்கியங்கள் இந்தக்காலத்தைக் குறிப்பிடும்போது, “அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்ச கத்தோடும் ” வல்லமையோடும் சாத்தான் செயல்படுவான் என்று சொல்கிறது. 2தெச 2:10. வேதகமாகப் பெருகிவருகிற அந்தகார மும், பெருமளவில் காணப்படும் தீமைகளும், மத்துரோகங்களும், இந்தக் கடைசிக் கால மருட்சிகளும் சாத்தான் செயல்படுவதை தெளிவாகக் காட்டு கின்றன. அவன் உலகத்தை அடிமைத்தனத்திற் குள் வழிநடத்துவது மட்டுமல்லாமல், நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சபையாரெனச் சொல்வோரையும் கூட தன் னுடைய வஞ்சகங்களால் புளிக்கச்செய்து வருகிறான். இந்த மா பெரும் தேவதுரகமானது நடுராத்திரியின் இருளைப்போல தீவிரமடையும், இரட்டுத்துணியின் சன்னலைப்போல வெளிச்சம் ஊடுருவ முடியாதளவுக்கு இருக்கும். தேவமக்களுக்கு சத்தியத்தினிமித்தம் அது கடுஞ்சோதனையின் இரவாகவும் அழுகையின் இரவாகவும் உபத்திரவத்தின் இரவாகவும் இருக்கும். ஆனால் அந்த இருளி லிருந்துதானே தேவனுடைய வெளிச்சம் பிரகாசி க்கும். COLTam 14.2

அவர் ‘இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் COLTam 14.3

செய்கிறார்.” 2கொரிந்தியர் 4:6. “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமை புமாய் இருந்தது; ஆழத்தின் மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று . ற” ஆதியாகமம் 1:2,3. அதுபோல அந்த ஆவிக்குரிய அந்தகாரத்தின் இரவில் “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்று தேவனுடைய சத்தம் பிறக்கும். அவர் தம் மக்களிடம், “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது” என்று சொல்கிறார். ஏசாயா 60:1. COLTam 15.1

“இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.” ஏசாயா 60:2. COLTam 15.2

தேவனைப்பற்றிய தப்பெண்ணம்தான் அந்தகாரமாக பூமியைச் சூழ்ந்துள்ளது. அவருடைய குணம் பற்றிய அறிவை மனிதர்கள் இழந்து வருகிறார்கள். அவருடைய குணத்தை தவறாகப் புரிந்து கொண்டு, தவறாக விளக்கம் சொல்கிறாகள். தேவனிடமிருந்து ஒரு செய்தி புறப்படுகிற சமயம் இது; அந்தச் செய்தி பிரகாசிப் பிக்கிற ஆற்றலையும், இரட்சிக்கிற வல்லமை யையும் பெற்றிருக்கும். அவருடைய குணத்தை அறிவித்தாக வேண்டும். இந்த உலகத்தின் அந்தகாரத்திற்குள் அவருடைய மகிமையின் வெளிச் சமும், அவருடைய நற்குணம் - இரக்கம் - கிருபை பற்றிய வெளிச்சமும் வீசவேண்டும். COLTam 15.3

இந்த ஊழியத்தைத்தான் ஏசாயா தீர்க்கதரிசி பின்வருமாறு சொல்கிறார்: “சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு ; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதாபட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறி, இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.” ஏசாயா 40:9,10. COLTam 15.4

மணவாளனுடைய வருகைக்காகக் காத்திருக்கிறவர்கள் COLTam 15.5

“இதோ உங்கள் தேவன்” என்று மக்களிடம் அறிவிக்கவேண்டும். இரக்கத்தின் கடைசி வெளிச்சத்தை, கருணையின் கடைசித் தூதை உலகத்திற்குக் கொடுக்கவேண்டும். தேவனுடைய அன்பை வெளிப்படுத்துவதுதான் அது. தேவபிள்ளைகள் அவரது மகிமையை வெளிப்படுத்த வேண்டும். தேவனுடைய கிருபைதங்களுடைய வாழ்க்கையில் நிறைவேற்றியிருப்பதை தங்களுடைய வாழ்க்கையிலும் குணத்திலும் வெளிப்படுத்தவேண்டும். COLTam 16.1

நீதியின் சூரியனுடைய வெளிச்சத்தை, சத்தியவார்த்தைகளைப் பேசுவது, பரிசுத்த கிரியைகளைச் செய்வது போன்ற நற்கிரியை களினால் பிரகாசிக்க வேண்டும். COLTam 16.2

கிறிஸ்துவானவர், பிதாவினுடைய மகிமையைப் பிரதிபலிப்ப வராக, அந்த ஒளியாக இந்த உலகத்திற்கு வந்தார். பிதாவை மனிதர்களுக்குக் காட்டுவதற்காக வந்தார். அவரைக் குறித்து, “பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் ” அபிஷே கிக்கப் பட்டிருந்தார்; அவர், “நன்மை செய்கிறவராக” சுற்றித் திரிந்தார் என்று எழுதப்பட்டுள்ளது. அப்10:38. நாசரேத்தின் ஜெபாலயத்தில், “கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணி னார்; இருதயம் நருங்குண்டவர்களைக்குணமாக்கவும், சிறைப்பட் டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்க வும், கர்த்தருடைய அநுக்கிரகவருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்” என்று சொன்னார். லூக்கா 4:18,19. இந்த ஊழியத்தைச் செய்யும்படியே தம் சீடர்களுக்குக் கட்டளையிட் டுள்ளார். ‘நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். இவ் விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத் திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத் தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” என்றார். மத்தேயு 5:14, 16. COLTam 16.3

இந்த ஊழியத்தையே ஏசாயா தீர்க்கதரிசியும் சொல்கிறார். “பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், COLTam 16.4

வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். அப்பொழுது விடியற்கால வெளுப்பைப் போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். ‘‘ ஏசாயா 58:8. COLTam 17.1

இவ்வாறு ஆவிக்குரிய அந்தகாரத்தின் இரவில் தேவனுடைய மகிமை பிரகாசித்து, முடங்கி விழுந்தோரைத் தூக்கி விடுவதிலும், துயரப்போடுவோரை ஆறுதல் படுத்துவதிலும் காணப்படும். COLTam 17.2

உலகத்தாரின் துயரநிலையைக் கண்டு நம்மைச் சுற்றுமுள்ள அனைவருமே புலம்புவதைக் கேட்கிறோம். தேவையிலும் இக்கட்டிலும் இருப்போரை எப்பக்கத்திலும் காணமுடிகிறது. வாழ்க்கையின் கஷ்டங்களையும் துயரங்களையும் தணிக்கவும், அவற்றைப் போக்கவும் உதவுவது நம்முடைய கடமையாகும். COLTam 17.3

பிரசங்கம் செய்வதைவிட நடைமுறை வாழ்க்கைதான் அதிக பயனளிக்கக்கூடியது. பசித்தோருக்கு ஆகாரமும் நிர்வாணிகளுக்கு உடையும், வீடில்லாதோருக்கு உறைவிடமும் கொடுக்க வேண்டும். இதைவிட இன்னும் அதிகமாகச் செய்யும்படி அழைக் கப்பட்டிருக்கிறோம். ஆத்துமாவின் தேவைகளை கிறிஸ்துவின் அன்பு மட்டுமே பூர்த்திச் செய்ய முடியும். கிறிஸ்து நம்மில் வாசஞ்செய்தால், தேவனுடைய பரிவு நம்முடைய இருதயங்களில் நிரம்பியிருக்கும். கிறிஸ்துவைப் போன்ற, ஊக்கமான அன்பின் ஊற்றானது அடைப்பு திறக்கப்படும். COLTam 17.4

தேவையில் இருப்போருக்கு நம் பொருட்களால் உதவி செய் வது மட்டுமல்ல, அவர்களிடம் முகமலர்ச்சியோடு நடக்கவும், நம்பிக் கையான வார்த்தைகளைப் பேசவும், அன்போடு அவர்களுடைய கரங்களைப் பற்றிக்கொள்ளவும் தேவன் நம்மிடம் சொல்கிறார். வியாதியஸ்தர்களை கிறிஸ்து குணமாக்கினபோது, அவர்கள் மேல் தமது கரங்களை வைத்தார். அதுபோல நாம் நன்மை செய்யும்படி யாரிடம் செல்கிறோமோ அவர்களிடம் அவ்வளவு நெருக்கமாக இருக்கவேண்டும். COLTam 17.5

நம்பிக்கையிழந்த நிலையில் காணப்படுகிற அநேகர் இருக் கிறார்கள். அவர்கள் மேல் மீண்டும் வெளிச்சம் வீசச் செய்யுங்கள். அநேகர் தைரியமிழந்த நிலையில் இருக்கிறார்கள். அவர்களிடத்தில் உற்சாகமான வார்த்தைகளைப் பேசுங்கள். அவர்க ளுக்காக ஜெபியுங்கள். ஜீவ அப்பம் தேவைப்படுகிற அநேகர் இருக்கிறார்கள். தேவ வார்த்தையிலிருந்து அவர்களுக்கு வாசியுங்கள். பூமியன் எந்தத் தைலத்தாலும் நெருங்க முடியாத, எந்த வைத்தியனும் குணப்படுத்தமுடியாத ஆத்தும பிணியில் அநேகர் இருக்கிறார்கள். அந்த ஆத்துமாக்களுக்காக ஜெபித்து, அவர்களை இயேசுவிடம் கொண்டு வாருங்கள். கீலேயாத்திலே தைலம் உண்டென்றும், அங்கே ஒரு வைத்தியர் இருக்கிறாரென்றும் அவர்களிடம் சொல்லுங்கள். COLTam 18.1

வெளிச்சம் ஓர் ஆசீர்வாதம்; உலகளாவிய ஆசீர்வாதம்; நன்றி கெட்ட, பரிசுத்தமற்ற, ஒழுக்கங்கெட்ட ஓர் உலக்கிற்கு தன் பொக்கிஷங்களைப் பொழிகிறது. நீதியின் சூரியனும் அப்படித் தான். பாவ இருளும் துயரமும் வேதனையும் சூழ்ந்துள்ள உலகம் முழுவதுமே தேவ அன்பைக் குறித்த அறிவால் பிரகாசமடைய வேண்டும். பரலோக சிங்காசனத்திலிருந்து வீசுகிற வெளிச்சமான து எந்தப் பிரிவினருக்கும் அந்தஸ்தினருக்கு அல்லது பிரி வினருக்கும் கிடைக்காமல் இருக்கக்கூடாது. COLTam 18.2

நம்பிக்கையின் தூதையும் இரக்கத்தின் தூதையும் பூமியின் கடையாந்திர மட்டும் கொண்டு செல்லவேண்டும். சித்தமுள்ள எவரும், எழுந்து சென்று அவருடைய பெலத்தைப் பற்றிக் கொண்டு, அவரோடு சமாதானமாகலாம்; அவரும் அவனோடே சமாதானமாவார். தேவனை அறியாதவர்கள் இனியும் நடுராத் திரியின் அந்தகாரத்தில் சிக்கிக்கொள்ள வேண்டியதில்லை. நீ தியின் சூரியனுடைய பிரகாசமிக்க ஒளிக்கதிர்கள் வரும்போது இருள் அகன்று விடும். நரகத்தின் வல்லமை மேற்கொள்ளப் பட்டாயிற்று. COLTam 18.3

எவனும் தான் பெற்றிராத ஒன்றை இன்னொருவனுக்கு வழங்க முடியாது. தேவனுடைய ஊழியத்தைப் பொறுத்தவரை, மனிதன் எதையும் துவக்கமுடியாது. மனிதன் தன்னுடைய COLTam 18.4

சொந்த முயற்சியால், தேவனுக்காக விளக்கேந்தி செல்பவனாக தன்னை மாற்ற முடியாது . பரலோகத்தூதுவர்கள் பொன்னிற எண்ணெயை பொற்குழாய்கள் மூலமாக ஆசரிப்புக்கூடார குத்து விளக்கின் பொற்கிண்ணத்திற்குள் செலுத்தவேண்டும். அப்போது பிரகாசமிகுந்த தீபம் தொடர்ந்து எரியும். மனிதனுக்குள் தொடர்ந்து செலுத்தப்படுகிற தேவ அன்புதான் அவன் வெளிச்சத்தைக் கொடுப்பதற்கு உதவுகிறது. விசுவாசத்தால் தேவனோடு இணைக் கப்பட்டுள்ள அனைவருடை உள்ளங்களிலும் அன்பென்னும் பொன்னிற எண்ணெய் தாரளமாக ஊற்றப் படுகிறது; அது தன் பிரகாசத்தை நற்கிரியைகளிலும், மெய்யான - மனப்பூர்வமான தேவசேவையிலும் வெளிப்படுத்தவேண்டும். COLTam 19.1

பரிசுத்த ஆவியானவர் எனும் மாபெரும், அளவிடமுடியாத ஈவில் பரலோக வாய்ப்புளங்கள் அனைத்தும் அடங்கியுள்ளன. அவருடைய கிருபையின் ஐசுவரியங்கள் பூமியிலுள்ள மனிதர்கள் மேல் பொழியப்படாமல் இருப்பதற்கான காரணம், தேவனுடைய ஏதாவது கட்டுப்பாட்டினால் அல்ல. அவற்றைப் பெற்றுக் கொள்ள எல்லா மனிதருமே சித்தமுள்ளவர்களாக இருந்தால், எல்லாருமே அவருடைய ஆவியால் நிரப்பப்படு வார்கள். COLTam 19.2

தேவனுடைய கிருபையின் பொக்கிஷங்களையும், கிறிஸ்து வின் ஆராய்ந்து முடியாத ஐசுவரியங்களையும் உலகத்திற்குத் தேவன் தெரிவிக்கும்படி ஜீவனுள்ள ஊடகங்களாக விளங்குகிற சிலாக்கியத்தை ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் கொடுத்திருக்கிறார். உலகத்திற்கு தம்முடைய ஆவியையும் குணத்தையும் வெளிப் படுத்திக்காட்டுகிற பிரதிநிதிகளாவாழ்வேண்டும் என்பதைத் தவிர அவர் அதிகமாக விரும்புவது வேறு எதுவும் இல்லை. இரட்ச கருடைய அன்பு மனிதர்கள் மூலம் வெளிப்படுவதைக் காட்டிலும் இந்த உலகத்திற்கு அதிகம் தேவைப்படுவது எதவும் இல்லை. மனித இருதயங்களில் மகிழ்ச்சியையும் ஆசீர்வாதத் தையும் கொடுக்கிற பரிசுத்த எண்ணெயை ஊற்றுகிற ஊடகங்களுக்காக பரலோகம் முழுவதும் காத்துக்கொண்டிருக்கிறது. COLTam 19.3

தம்முடைய சபையானது இம்மானுவேலின் மகிமையைப் COLTam 19.4

பெற்ற, உலகத்தின் ஒளியானவரால் பிரகாசமாக்கப்பட்ட, மறு ரூபமாக்கப்பட்ட சரீரமாக விளங்குவதற்கு ஒவ்வோர் ஏற்பாட்டையும் கிறிஸ்து செய்திருக்கிறார். ஒவ்வொருகிறிஸ்தவனும் வெளிச்சத்தையும் சமாதானத்தையும் பெற்று, ஆவிக்குரிய சூழலால் நிறைந்திருக்க வேண்டுமென்பதே அவருடைய சித்தம். அவருடைய சந்தோஷத்தை நம்முடைய வாழ்க்கையில் நாம் வெளிப்படுத்த அவர் விரும்புகிறார். COLTam 20.1

ஆவியானவர் உள்ளுக்குள் வாசஞ்செய்வதை, நிரம்பிவழிகிற பரலோக அன்பு காட்டிவிடும். தங்களை தங்கி அர்ப்பணித்துள்ள மனிதர்கள் மூலம் தேவனுடைய பரிபூரணமானது மற்றவர்களுக்கும் வழங்கப்படும். COLTam 20.2

“நீதியின் சூரியனுடைய செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கிறது.” மல்கியா 4:2. எனவே ஒவ்வொரு மெய்யான சீடனிட மிருந்தும் ஜீவனுக்கும், தைரியத்திற்கும், உதவி செய்வதற்கும், மெய்யாகக் குணமாக்குவதற்கும் ஏதுவான தாக்கம் பரவிச்செல்ல வேண்டும். COLTam 20.3

கிறிஸ்துவின் மார்க்கமென்பது, பாவமன்னிப்பு மட்டும் அடங்கிய ஒன்றல்ல; நம்முடைய பாவங்களை அகற்றி விட்டு, அந்த இடத்தில் பரிசுத்த ஆவியின் கிருபைகளில் நிரப்புவதாகும். தேவன் பிரகாசிக்கச்செய்கிற, தேவனில் களிகூறுகிற அனுபவ மாகும். சுயமானது முற்றிலும் அகன்று, கிறிஸ்துவின் பிரசன்னத் தால் ஆசீர்வதிக்கப்பட்ட அனுபவமாகும். கிறிஸ்து ஆத்துமாவில் ஆட்சி செய்யும்போது, அங்கு பரிசுத்தமும், பாவத் திலிருந்து விடுதலையும் காணப்படும். சுவிசேஷம் முன்வைக்கிற மகிமையும் பூரணமும் முழுமையும் வாழ்க்கையில் நிறைவேறி யிருக்கும். இரட்சகரை ஏற்றுக்கொண்டதுமே பூரண சமாதான மும், பூரண அன்பும், பூரண நிச்சயமும் கொளுந்துவிட்டு எரியும். கிறிஸ்துவின் குணத்தின் அழகும் நறுமணமும் வாழ்க்கையில் வெளிப்படும் போது, இந்த உலகத்தை இரட்சிக்கும்படி தேவன் மெய்யாகவே தம்முடைய குமாரனை அனுப்பினார் என்பதை அது சாட்சியிடும். COLTam 20.4

கடும்பிராயசப்பட்டு வெளிச்சம் வீசும்படி கிறிஸ்து தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிடவில்லை . உங்கள் வெளிச்சம் COLTam 20.5

பிரகாசிக்கக்கடவது என்று சொல்கிறார். நீங்கள் கிறிஸ்துவின் கிருபையைப் பெற்றிருந்தால், அந்த வெளிச்சம் உங்களுக்குள் இருக்கும். இருளை ஊடுருவிச்சென்று, அதை அகற்றும்படி வெளிச்சம் வீசும். உங்களது செல்வாக்கு வட்டத்திற்குள் பிரகாசிக்காமல் உங்களால் இருக்கமுடியாது. COLTam 21.1

மனிதர்கள் அவருக்குரிய மகிமையை வெளிப்படுத்தும் போது, அது பரலோகத்தை மனிதர்களுக்கு அருகில் கொண்டு வரும்; இரட்சகர்வாசஞ்செய்கிற ஒவ்வோர் ஆத்தும் ஆலயத்திலும், அதன் உட்புறங்கள் எவ்வளவு அலங்கரிக்கப்பட்டுள்ளன என்பது காணப்படும். கிறிஸ்து வாசஞ்செய்வதால் காணப்படும் மகிமை யைக் கண்டு, மனிதர்கள் தங்களையே தத்தம் செய்வார்கள். இவ்வாறு தேவனை ஏற்றுக்கொண்ட அநேக ஆத்துமாக்கள், தொடர்ந்து துதியையும் ஸ்தோத்திரத்தையும் ஏறெடுக்கும்போது, மாபெரும் கொடையாளராகிய ஆண்டவரை அவை மீண்டும் சென் றடையும். COLTam 21.2

“எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.’” ஏசாயா 60:1. மணவாளனைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றவர்களுக்கு இந்தத் தூது கொடுக்கப் படுகிறது. மிகுந்த மகிமையோடும் வல்லமையோடும் கிறிஸ்து வருகிறார். தம்முடைய மகிமையோடும் தம் பிதாவின் மகிமை யோடும் அவர் வருகிறார். சகல பரிசுத்த தூதர்களோடுங்கூட வருகிறார். உலகம் முழுவதும் இருளில் மூழ்கிக்கிடக்கும் போது, பரிசுத்தவான்கள் வாசஞ்செய்கிற இடங்களில் வெளிச்சம் இருக்கும். அவரது இரண்டாம் வருகைக்கான முதல் வெளிச்சத்தை அவர்கள் அடையாளம் கண்டு விடுவார்கள். அவருடைய மகிமை யிலிருந்து பிரகாசமான ஒளிக்கதிர்கள் புறப்படும்; மீட்பராகிய கிறிஸ்துவைச் சேவித்த அனைவருமே அவரைக்கண்டு பரவசமடைவார்கள். துன்மார்க்கர் அவரது பிரசன்னத்தினின்று ஓடும்போது, கிறிஸ்துவைப் பின்பற்று கிறவர்கள் களிகூருவார்கள். முற்பிதாவாகிய யோபு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நோக்கிப்பார்த்தவராக: அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்” என்று சொன்னார். யோபு 19:27. கிறிஸ்துவை COLTam 21.3

உண்மையாகப் பின்பற்றுகிறவர்களுக்கு அவர் அன்றாடத் துணையாகவும், நன்றாகப் புரிந்துவைத்திருக்கும் நண்பராகவும் இருந்துள்ளார். அவர்கள் எப்போதும் தேவனிடம் பேசி, நெருக்கமான உறவுள்ளவர்களாக வாழ்ந்தார்கள். அவர்கள் மேல் கர்த்தருடைய மகிமை உதித்திருந்தது. இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தேவனுடைய மகிமையின் அறிவைப்பற்றிய வெளிச்சமானது அவர்களிலே பிரதிபலித்தது. இப்போது பூரண பிரகாசத்தோடும், மகிமையோடும் ஜொலித்த மகத்துவம் பொருந்திய ராஜாவைக் கண்டு களிகூருகிறார்கள். பரலோகத் தைப்பற்றியே தங்கள் இருதயங்களில் சிந்தித்து வந்ததால், பரலோக ஐக்கியத்திற்கு தங்களை ஆயத்தப்படுத்தியிருந்தார்கள். COLTam 22.1

நீதியின் சூரியனுடைய பிரகாசம் தங்கள் மேல் ஜொலிக்க, தங்களது தலைகளை உயர்த்தினவர்களாக, தங்களுடைய மீட்பு சமீபித்துவிட்டதைக் கண்டு களிகூர்ந்தவர்களாக, “இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார் என்று சொல்லி, மணவாளனைச் சந்திக்கப் புறப்பட்டுப் போகிறார்கள். ஏசாயா 25:9. COLTam 22.2

“அப்பொழுதுதிரளானஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல் போலவும், பலத்த இடிமுழக்கம் போலவும், ஒரு சத்தமுண்டாகி : அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம் பண்ணுகிறார். நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கட வோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள். பின்னும், அவன் என்னை நோக்கி : ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான்” “ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமா யிருக் (கிறார்); அவரோடு கூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்ட வர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்.” வெளிப்படுத்தல் 19:6-9; 17:14. COLTam 22.3