கடைசிகாலச் சம்பவங்கள்

168/334

பொய்யான அந்நிய பாஷையில் பேசுதல்

மதவெறி, பொய்யான பரபரப்பு, பொய்யான அந்நிய பாஷைகளில் பேசுதல், மற்றும் கூச்சலிடுகின்ற வழிபாட்டுச் செயல்கள் போன்றவை தேவன் சபைகளுக்கு அளித்துள்ள வரங்களாகக் கருதப்பட்டிருக்கின்றன. சிலர் இந்நிலையில் வஞ்சிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த அனதை்துக் கனிகளும், நல்ல கனிகளாக இருந்ததில்லை. “அவர்களுடயை கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” மதவறெியும் கூச்சலும், விசுவாசத்திற்கான விஷேமான அடயைாளங்களாக கருதப்பட்டிருக்கின்றன. ஐெபக்கூட்டத்தின் ஆராதனை நேரம் ஒரு வல்லமை நிறநை்த மற்றும் மகிழ்ச்சியான நேரமாக இல்லையென்றால், சிலர் அப்படிப்பட்ட கூட்டத்தால் திருப்தியடைவதில்லை. அப்படிப்பட்ட மகிழ்ச்சியைப் பெறுவதற்காக, ஏதாவது கிரியை செய்து, கிளர்ச்சியூட்டக்கூடிய ஒரு உணர்வை உண்டு பண்ணுவார்கள். ஆனால் கூட்டங்களின் செல்வாக்கு நன்மை பயக்கக்கூடியதாக இல்லை. அவர்களின் மகிழ்ச்சி உண்மையான மூலாதாரத்தினின்று வராததால், சந்தோஷமான உற்சாகத்தில் மிதக்கின்ற உணர்வு கடந்தசென்ற பின்பு, கூட்டத்திற்கு வருவதற்கு முன்பிருந்த நிலையைக் காட்டிலும் கீழான நிலைக்கு அவர்கள் அமிழ்ந்து போய்விடுகின்றனர். கச 116.3

மிகுந்த அக்கறையுடன் இருதயத்தை ஆழமாக ஆராய்கிற தன்மையுள்ள, ஓவ்வொருவரும் தன்னைக்குறித்து சரியானபடி நிதானித்து அறியவும், ஊக்கமாகவும் மிகுந்த தாழ்மையுடனும் கிறிஸ்துவினிடத்தில் கற்றுக்கொள்ளவும் வழிநடத்துகின்ற கூட்டங்களே, தனிச் சிறப்புடையதாகக் கருதப்படக்கூடிய ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு மிகவும் பிரயோஜனமுள்ள கூட்டங்களாகும். கச 116.4