கடைசிகாலச் சம்பவங்கள்
பொய்யான எழுப்புதல்கள்
பெயரளவிலுள்ள அட்வென்டிஸ்ட் மக்களின் மத்தியிலும், விழுந்து போன சபைகளிலும், தேவனுக்கு உண்மையான மக்கள் இருப்பதை நான் கண்டேன். வாதைகள் ஊற்றப்படுமுன்பாக, ஊழியக்காரர்களும் மக்களும் இப்படிப்பட்ட சபைகளிலிருந்து வெளியே அழைக்கப்பட்டு, மகிழ்ச்சியுடன் சத்தியத்தைப் பெர்றுக்கொள்வார்கள். சாத்தானும் இதை அறிந்திருப்பதால், மூன்றாம் தூதனின் உரத்த சத்தம் கொடுக்கப்படுவதற்கு முன்னதாகவே, அவன் மத அமைப்புகளில் ஒரு எழுச்சிபை உண்டாக்குவான். அப்போது சத்தியத்தை நிராகரித்தவர்கள், தேவன் தங்களோடு இருப்பதாக நினைத்துக்கொள்வார்கள். — EW 261 (1858). கச 115.2
தேவனுடைய நியாயத்தீர்ப்புகளின் முடிவான சந்திப்பிற்குமுன், பூமியின்மீது கர்த்தருடைய மக்கள் மத்தியிலே, அப்போஸ்தலர்கள் காலத்திலிருந்து இதுவரையிலும் கண்டிராத — ஆரம்ப காலத்தில் இருந்தது போன்ற தேவபக்தியின் ஒரு மாபெரும் எழுப்புதல் உண்டாகும்... ஆத்துமாக்களின் எதிரியானவன் இந்த எழுப்புதலைத் தடுக்க விரும்புகின்றான். அதற்காக அவன், அப்படிப்பட்ட ஒரு இயக்கத்திற்கான காலம் வருமுன்னதாக ஒரு போலியான எழுப்புதலை அறிமுகப் படுத்துவதால், அதைத் தடுக்க முயலுவான். தன்னுடைய வஞ்சக வல்லமைக்குள் கொண்டுவரக்கூடிய அந்த சபைகளில், தேவனுடைய விசேஷித்த ஆசீர்வாதம் ஊற்றப்படுவதுபோன்று அவன் தோன்றச் செய்வான்; மாபெரும் சமய ஆர்வம் என்று கருதப்படக்கூடிய காரியங்கள் அங்கு வெளிக்காட்டப்படும்... கச 115.3
ஜனங்களை தவறான வழியில் நடத்திச்செல்வதற்கு மிகவும் பொருந்தக்கூடியவிதத்தில், உண்மையோடு பொய் கலக்கப்பட்ட உணர்ச்சி பூர்வமான எழுச்சி ஒன்று உண்டாயிருக்கும். ஆனாலும் ஒருவரும் வஞ்சிக்கப்படவேண்டிய அவசியமில்லை. தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில், இது போன்ற இயக்கங்களின் தன்மையை முடிவு செய்வது கடினமல்ல. சுய மறுப்பையும், உலகப்பிரகாரமான தன்மையை மறுப்பதையும் அவசியமானதாக்குகிற, வெளிப்படையான, ஆத்துமாவைச் சோதிக்கின்ற சத்தியங்களிலிருந்து விலகிச்சென்று, வேதாகமத்தின் சாட்சியை எங்கெல்லாம் மக்கள் அலட்சியம் செய்கின்றார்களோ, அங்கெல்லாம் தேவனுடைய ஆசீர்வாதம் பொழியப்படாது என்பதைக் குறித்து நாம் உறுதியாக இருக்கலாம். — GC 464 (1911). கச 115.4