கடைசிகாலச் சம்பவங்கள்
கள்ளத்தீர்க்கதரிசிகள்
எருசலேமின் அழிவிற்கான அடையாளங்களில் ஒன்றாக, “அநேகங்கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்” (மத். 24:11) என்று கிறிஸ்து கூறியிருந்தார். கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்பி மக்களை வஞ்சித்துக்கொண்டும், பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்களை தவறான விதமாக பாலைவனத்துக்குள் நடத்திக்கொண்டும் இருந்தனர். அற்புதமான வல்லமையைப் பெற்றிருப்பதாகக் கூறிக்கொண்டு, மந்திரவாதிகளும் சூனியக்காரர்களும், மக்களை அவர்களுக்குப் பின்னாக மலையின் தனிமையான இடங்களுக்கு இழுத்துச் சென்றிருந்தனர். ஆயினும், இந்த தீர்க்கதரிசனம் (அப்பொழுது மாத்திரமல்ல) கடைசி நாட்களுக்காகவுங்கூடக் கூறப்பட்டிருந்தது. இந்த அடையாளம், இயேசுவின் இரண்டாம் வருகைக்கான அடையாளமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. - DA 631 (1898). கச 13.5
நாம் பொய்யான உரிமைபாராட்டுதல்களை சந்திக்க நேரிடும். கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்புவார்கள். பொய்யான சொப்பனங்களும் பொய்யான தரிசனங்களும் நிறைந்து காணப்படும். ஆயினும், வசனத்தைப் பிரசங்கியுங்கள்; தேவனுடைய வார்த்தையில் வெளிப்படும் அவரது சத்தத்திலிருந்து விலகிப்போகாதிருங்கள். - 2 SM 49 (1894). கச 13.6
தேவனால் விசேஷமாக போதிக்கப்பட்டிருக்கின்றோம் என்று கூறிக்கொள்ளுகின்ற, மற்றவர்களை தவறான வழியில் நடத்திச் செல்வதற்கு முயற்சிக்கின்ற அநேகர் எனக்குக் காட்டப்பட்டார்கள். அவர்கள் தங்களது கடமையைக் குறித்த தவறான கருத்துடையவர்களாக இருப்பதினிமித்தம், தேவன் அவர்கள்மீது ஒருபோதும் சுமத்தியிராத ஒரு பணியை செயல்படுத்து வார்கள். குழப்பமே அதன் விளைவாக இருக்கும். ஆதலால், ஒவ்வொருவரும் தேவனுடைய சித்தத்தைத் தனிப்பட்ட விதத்தில் புரிந்துகொள்ளத்தக்கதாக, மிகுந்த ஊக்கத்துடன் அவரைத் தேடக்கடவோம். 2 SM 72 (1893). கச 14.1