கடைசிகாலச் சம்பவங்கள்
பட்டணங்களிலிருந்து ஓடுவதற்கான அடையாளம்
ஆதிகால சீஷர்களைப்போல, நாமும் பாழான இடங்களிலும் தனிமையான இடங்களிலும் ஒரு புகலிடம் தேடும்படி கட்டாயப்படுத்தபடப்போகின்ற காலம் வெகு தொலைவிலில்லை. ரோமச் சேனைகளால் எருசலேம் முற்றுகை போடப்பட்டது. யூதேய கிறிஸ்தவர்கள் ஓடிப்போவதற்கான அடையாளமாக இருந்ததைப்போன்று, நமது நாடு (ஐக்கிய அமெரிக்கா) தன் சார்பிலே அதிகாரத்தைப் பெற்றிருப்பதாக நினைத்துக்கொண்டும் போப்புமார்க்க ஓய்வுநாளைச் சட்டமாகக் கட்டாயப்படுத்துவது நமக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். பெரிய பட்டணங்களை விட்டு வெளியேறுவதற்கும், மலைகளின் நடுவே ஒதுக்குப்புறமான இடங்களில் தனிமையான இடங்களுக்குச் செல்லும் வண்ணம் சிறிய பட்டணங்களைவிட்டு வெளியேற ஆயத்தமாவதற்கும் அதுவே சரியான நேரமாக இருக்கும். — 5T 464, 465 (1885). கச 88.4