கடைசிகாலச் சம்பவங்கள்

124/334

பட்டணங்களில் பள்ளிகளும், சபைகளும், உணவகங்களும் அவசியம்

பட்டணங்களிலிருந்து தற்போது வெலியேறமுடியாமல் இருக்கின்றவர்களின் பிள்ளைகள் இரட்சிக்கப்படுவதற்கும், பயிற்றுவிக்கப்படுவதற்கும் வேண்டிய அநேக காரியங்கள் செய்யப்படலாம். இது நம்முடைய சிறப்பான முயற்சிகளிலேயே போற்றத்தக்க ஒரு காரியமாகும். சபைப் பள்ளிகள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களிலே நிறுவப்படவேண்டும். இப்படிப்பட்ட பள்ளிகளில் அவசியத்திற்கேற்ப உயர்கல்வியைக் கற்றுத்தருவதற்கான தகுந்த ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும். — CG 306 (1903). கச 87.5

நம்முடைய உணவகங்கள் பட்டணங்களிலே அமைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இப்படிப்பட்ட உணவகங்களில் வேலை செய்கின்றவர்கள் மக்களைச் சென்றடைந்து, சரியான வாழ்க்கைமுறையின் கொள்கைகள்பற்றி அவர்களுக்குக் கற்றுத்தர இயலாது. — 2SM 142 (1903). கச 87.6

பட்டணங்களுக்கு வெளியிலுள்ள மையங்களில் இருந்துகொண்டு, பட்டணங்களிலே வேலை செய்ய வேண்டும் என்று கர்த்தர் நம்மை மீண்டும் மீண்டுமாக வலியுறுத்தியிருக்கின்றார். இந்தப் பட்டணங்களிலே தேவனுடைய நினைவுச்சின்னங்களைப்போன்ற தொழுகைக்கான வீடுகள் நமக்கு இருக்கவேண்டும். ஆனால் நம்முடைய புத்தக வெளியீடுகளுக்கான அச்சக ஸ்தாபனங்கள், நோயுற்றோரைக் குணப்படுத்த சுகாதார மையங்கள், ஊழியர்களைப் பயிற்றுவிப்பதற்கான கல்லூரிகள் ஆகிய இவையனைத்தும், பட்டணங்களுக்கு வெளியே நிறுவப்படவேண்டும். விசேஷமாக நமது வாலிபர்கள், பட்டண வாழ்க்கையின் சேதனைகளிலிருந்து பாதுகாக்கப்படவேண்டியது மிக முக்கியமாகும். — 2SM 358 (1907). கச 87.7