கடைசிகாலச் சம்பவங்கள்
அட்வென்டிஸ்டுகளின் உபத்திரவத்திற்கு தொழிற்சங்கங்கள் ஒரு மூலகாரணம்
உலகம் தோன்றியதுமுதல் இதுவரையிலும் இல்லாத ஒரு உபத்திரவகாலத்தை, இந்தப் பூமியின்மீது கொண்டுவருவதற்கான ஏதுகரங்களில் ஒன்றாக தொழிற்சங்கங்கள் இருக்கும்… கச 85.3
சில குறிப்பிட்ட தொழிமுறைகள் மூலம் நல்ல வருமானத்தைப்பற்றிக்கொள்ள சில மனிதர்கள் ஒன்றுகூடுவார்கள். வர்த்தக சங்கங்கள் உருவாக்கப்படும். இந்த சங்கங்களுடன் இணைய மறுப்பவர்கள்மீது குறிவைக்கப்படும்… கச 85.4
வெகு சீக்கிரத்தில், இப்படிப்பட்ட சங்கங்களினாலும் அரசியல் குழுக்களினாலும், நமது ஸ்தாபனங்கள் தங்களது பணியைப் பட்டணங்களில் எடுத்துச்செல்வதென்பது மிகக் கடினமாகிவிடும், “பட்டண்ங்களை விட்டு வெளியேறுங்கள். பட்டணங்களில் சுகாதார மையங்களை நிறுவாதிருங்கள்” என்பதே என்னுடைய எச்சரிப்பாகும். — 2SM 142 (1903). கச 85.5
தொழிற்சங்கங்களின் கட்டுப்படுத்தும் வல்லமை மிகவும் கடுமையாக அடக்கியாளப்போகிற காலம் விரைவில் வந்துகொண்டிருக்கிறது. — 2SM 141 (1904). கச 86.1