கடைசிகாலச் சம்பவங்கள்
பட்டணங்கள்மீது வரப்போகும் நியாயத்தீர்ப்புகள்
பயங்கரமான அதிர்ச்சிகள் பூமியின் மீது வரும். அதிக பொருட்செலவில் எழுப்பப்பட்ட கம்பீரமான அரண்மனைகள் நிச்சயமாக இடிபாடுகளின் குவியல்களாக மாறிவிடும். — 3MR 312 (1891). கச 81.4
தேவனுடைய பாதுகாக்கும் கரம் விலக்கிக்கொள்ளப்படும்போது, அழிவுண்டாக்குகிறவன் தன் வேலையைத் துவங்குவான். அப்போது பேரழிவுகள் நம்முடைய பட்டணங்களில் வரும். — 3MR 314 (1897). கச 81.5
சிக்காகோ பட்டணத்தில் ஏற்பட்ட தீ விபத்தைக்குறித்தும், மெல்போன், லண்டன் மற்றும் நியூயார்க் பட்டணங்களிலே ஏற்பட்ட தீ விபத்துகளைக் குறித்தும் எச்சரிக்கைக் கொடுத்துபோல, பூமியின் குடிகளுக்கு கர்த்தர் எச்சரிப்புகளைக் கொடுக்கின்றார். — Ms 127, 1897. கச 81.6
முடிவு சமீபமாயிருக்கின்றது. எல்லா வகையிலும் அனைத்து பட்டணங்களும் தலைகீழாகக் கவிழ்க்கப்பட இருக்கின்றன. குழப்பம் ஒவ்வொரு பட்டணத்திலும் இருக்கும். அசைக்கப்படக்கூடிய அனைத்தும் அசைக்கப்பட வேண்டும். அடுத்து என்ன சம்பவிக்கும் என்று நமக்குத் தெரியாது. மக்களின் துன்மார்க்கத்தைப் பொறுத்தும், அவர்கள் பெற்றிருந்த சத்திய வெளிச்சத்தைப் பொறுத்தும் நியாயத்தீர்ப்புகள் அவர்களுக்கு இருக்கும். — 1MR 248 (1902). கச 81.7
தற்போது, ஏறக்குறைய முழுமையாக விக்கிரகாராதனைக்கு ஒப்புக்கொடுத்துவிட்ட ஆயிரக்கணக்கான பட்டணங்களின்மீது விரைவில் வரக்காத்திருக்கின்ற அழிவினைக் குறித்த ஒரு உணர்வினை, தேவனுடைய மக்கள் பெற்றிருந்தால் நலமாயிருக்கும். — Ev 29 (1903). கச 81.8
மிகப்பெரிய பட்டணங்களெல்லாம் அடித்துச் செல்லப்பட்டுப் போகக் கூடிய காலம் சமீபத்தில் இருக்கின்றது. வர இருக்கின்ற இந்த நியாயத் தீர்ப்புகளைக் குறித்து அனைவரும் எச்சரிக்கப்படவேண்டும். — Ev 29 (1910). கச 82.1