கடைசிகாலச் சம்பவங்கள்
எதிர்கால சம்பவங்களைச் சரியான கண்ணோட்டத்தில் நோக்குதல்
எதிர்காலத்தில் நமது உலகில் நடைபெற இருக்கின்ற காட்சிகளைத் துல்லியமாக விவரிப்பதற்கு, இப்பொழுது நம்மால் இயலவில்லை. ஆயினும், கர்த்தருடைய மகா பெரிய நாள் மிகவும் அருகாமையில் இருப்பதனால், நாம் கட்டாயம் விழித்திருந்து ஜெபிக்க வேண்டிய ஒரு காலம் இதுவே என்பதை மாத்திரம் நாம் அறிந்திருக்கின்றோம். - 2 SM 35 (1901). கச 10.4
மிருகத்தின் முத்திரையென்று இதுவரையிலும் எது பறை சாற்றப்பட்டு வந்ததோ, அதுதான் துல்லியமாக மிருகத்தின் முத்திரையாக இருக்கின்றது. இந்தக் காரியத்தைக் குறித்த அனைத்தும், மூழுவதுமாக இன்னும் நம்மால் புரிந்துகொள்ளப்படாதிருக்கின்றது; புஸ்தகங்கள் திறக்கப்படும் வரையிலும், அனைத்தையும் முழுவதுமாக புரிந்துகொள்ளவும் முடியாது. - 6S 17 (1900). கச 10.5
அநேகர், தற்போதைய கடமைகள், தற்போதைய மகிழ்ச்சி மற்றும் ஆசீர்வாதங்களிலிருந்து கவனத்தைக் திருப்பி, எதிர்கால நெருக்கடியைக் குறித்தே சிந்தித்து, தங்களுக்கு தொல்லையை வருவித்துக்கொள்கின்றனர்.இது இக்கட்டுக்காலத்த முன்கூட்டியே உருவாக்கிக்கொள்வதற்கு ஒப்பாகும். இவ்வாறு, முன்னதாகவே எதிர்பார்த்து வரவழைத்துக் கொள்ளப்படும் இப்படிப்பட்ட உபத்திரவங்களுக்காக, நாம் தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொள்ளமாட்டோம். - 3SM 383, 384 (1884). கச 10.6
தேவனுடைய ஜனங்களுக்கு ஒரு இக்கட்டுக்காலம் வந்துகொண்டிருக்கின்றது. ஆயினும், ஜனங்களுக்கு முன்பாக அதையே தொடர்ச்சியாக வைத்து, காலத்திற்கு முன்னதாகவே ஒரு இக்கட்டுக்காலத்தை பெற்றுக்கொள்ளும் வகையில், நாம் அவர்களுக்குக் கடிவாளம் போடக்கூடாது. தேவனுடைய ஜனங்களுக்கு மத்தியில், ஒரு அசைக்கப்படுதல் வர இருக்கின்றது. ஆயினும், சபைகளுக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டிய நிகழ்கால சத்தியம் இது அல்ல. (117 வருடங்களுக்கு முன்பாக இது நிகழ்காலச் சத்தியமாக இல்லை). - 1SM 180 (1890). கச 11.1