கடைசிகாலச் சம்பவங்கள்

110/334

லோம லிண்டா, கலிஃபோர்னியா (Loma Linda, California)

சேன்டியிகோ (Santiago) என்னும் இடத்திலிருந்து ஏழு மைல் தொலைவில் உள்ள பேரடைஸ் வேலியில், (Paradise Valley) ஒரு நல்ல சுகாதார மையம் இருப்பதற்காகவும்; லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) என்னும் இடத்திலிருந்து எட்டு மைல் தொலைவில் உள்ள கிலென்டேலில் (Glendale) அமைந்துள்ள சுகாதார மையத்திற்காகவும் கர்த்தரைத் துதிக்கின்றோம் லாஸ் ஏஞ்ல்ஸ் (Los Angeles) என்னும் இடத்திலிருந்து கிழக்கே அறுபத்திரண்டு மைல் தொலைவிலும், ரெட்லேண்ட்ஸ் (Red Lands), ரிவர் சைட் (River Side) மற்றும் சேன் பெர்நார்டினோ (San Bernardino) ஆகிய இடங்களுக்கு அருகிலுள்ள மிகப்பெரிய அழகான இடமாகத் திகழும் லோம லிண்டாவிற்காகவும், கர்த்தரைத் துதிக்கின்றோம். லோம லிண்டா உடைமை, எல்லா சுகாதார மையங்களிலும் இதுவரை நான் கண்டிராத மிகவும் அழகான ஒரு சுகாதார மையமாகத் திகழ்கின்றது. — LLM 141 (1905). கச 78.3

மருத்துவ ஊழியர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக கர்த்தர் விசேஷமாகத் திட்டமிட்டு நியமித்த ஒரு மையமே லோம லிண்டா என்ற ஒரு இடமாகும். — Letter 188, 1907. கச 78.4

ஒரு பள்ளிக்கூடத்திற்கென்று அற்புதமான அனுகூலமான சூழ்நிலைகள் இங்கு இருக்கின்றன. இங்குள்ள பண்ணை, பழத் தோட்டம், புல்வெளி இடங்கள், பெரிய கட்டிடங்கள், போதுமான நிலங்கள், அதன் அழகு — இவை அனைத்துமே ஒரு மாபெரும் ஆசீர்வாதமாகும். — LLM310 (1907). கச 78.5

லோம லிணடாவாகிய இந்த இடத்திலே, பல அற்புதமான அனுகூலங்கள் இருக்கின்றன. உண்மையான மருத்துவ ஊழியர்களாக மாறுவதற்கு இங்கிருக்கக்கூடிய வசதிகளை, இங்கே தங்கியிருப்பவர்கள் உண்மையுடன் தங்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டால், தங்களைச் சுற்றிலும் இருக்கின்றவர்களுக்கு, தங்களது வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்கின்றவர்களாய் இருப்பார்கள். தேவன் தமது ஞானத்தை தமக்குத் தந்தருளும்படி நாம் அனுதினமும் அவரைத் தேடவேண்டும். — Letter 374, 1907. கச 79.1

இங்கு, ஒரு பள்ளிக்கூடத்திற்கும் ஒரு சுகாதார மையத்திற்கும் மிகவும் சீரான சூழ்நிலைகள் நமக்கு இருக்கின்றன, மேலும் இங்கே மாணவர்களுக்கு நன்மைகளும், நோயாளிகளுக்கு அதிக நன்மைகளும் இருக்கின்றன. தீர்க்கதரிசிகளுக்கான ஆதிகாலத்து பள்ளிகளைப் போன்ற, அதே கொள்கையுடன் நடத்தப்பட ஒரு பள்ளிக்கூடம் நமக்கு இருக்க வேண்டும் என்று நான் அறிவுறுத்தப்பட்டேன். மருத்துவர்கள் தங்களது கல்வியை இங்கே பெற்றுக்கொள்ள வேண்டும். — MM 75, 76 (1907). கச 79.2

ஆங்வின், கலிஃபோர்னியா (Angwin, California) கச 79.3

இந்த உடைமையை (நிலத்தை) நான் பார்த்தபோது, அநேக விதங்களில் இது மேலானதாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றேன். இதைக்காட்டிலும் ஒரு நல்ல இடத்தில் பள்ளிக்கூடம் நிறுவப்பட முடியாது. இந்த இடம் செயின்ட் ஹெலினாவிலிருந்து எட்டு மைல் தொலைவில் அமைந்திருப்பதால், நகரத்தின் சோதனைகளிலிருந்து விலகித் தனித்துக் காணப்படுகின்றது… 1 கச 79.4

இந்நேரத்தில் மாணவர்களுக்காக அநேக சிறிய எளிய குடிசைகள் கட்டப்பட்டிருக்க வேண்டும். திறமையுள்ள ஆசிரியர்களது அறிவுரையின் கீழாக மாணவர்கள் தாங்களாகவே குடிசைகளை ஏற்படுத்திக்கொள்ளாம். அவர்கள் குடிசைகளைக் கட்ட உதவும் மரங்களை இந்நிலத்திலிருந்தே எடுத்துக்கொள்ளாம். ஆதாயமான ஒரு விதத்தில் எப்படிக் கட்டவேண்டும் என்று மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படலாம். கச 79.5

சுத்தமில்லாத நீரைக் குடிக்கிறோமே என்ற பயம் நமக்கு வேண்டாம். கர்த்தருடைய பொக்கிஷசாலையிலிருந்து இலவசமாக தண்ணீர் நமக்குக் கொடுக்கப்படுவதால், இந்த பல நன்மைகளுக்காக நாம் எந்தளவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை… கச 79.6

நமக்கு என்னென்ன தேவை என்பதைக் கர்த்தர் அறிந்திருக்கிறார் என்பதையும், அதனால்தான் இங்கே நம்மை கொண்டுவந்திருக்கின்றார் என்பதையும், நாம் உணருகின்றோம்… நாம் இங்கே இருக்கவேண்டும் என்று தேவன் விரும்பினபடியால், இங்கே நம்மை வைத்திருக்கிறார். இந்த இடங்களுக்கு நான் வந்தபோது, நிச்சயமாக இதைக்குறித்து நன்கு உணர்ந்தேன்… இந்த இடங்களின் வழியாக நடந்து நீங்கள் கடந்து செல்லும்போது, இந்த இடத்தைக் கர்த்தர் நமக்காக நியமித்து வைத்திருக்கின்றார் என்கின்ற அதே முடிவுக்கு நீங்களும் வருவீர்கள் என நம்புகின்றேன். — IMR 340, 341, 343 (1909). 1 கச 79.7

*****