கடைசிகாலச் சம்பவங்கள்
மேடிசன், டென்னிசி (Madison, Tennesse)
தென்புறத்திலே அவர்கள் செய்ய இருக்கின்ற வேலையைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, நாஷ்வில் எனும் இடத்திலிருந்து நீண்ட தொலைவில் ஒரு பள்ளிக்கூடம் நிறுவவேண்டும் என்று அவர்கள் சொன்னதைக் குறித்து நான் ஆச்சரியப்பட்டேன். எனக்குக் கொடுக்கப்படிருக்கின்ற வெளிச்சத்தின்படி, இதைச் செய்வது சரியான காரியமல்ல என்பதை நான் அறிந்திருந்தேன், அதை அவர்களுக்கு நான் தெரியப்படுத்தினேன். இந்த இரு சகோதர்கள் (F. A. சதர்லேண்ட, P.T. மேகன்) பெரியன் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் பெற்றிருந்த அனுபவத்தினால் பணிபுரிந்ததுபோல, நாஷ்வில் என்னும் இடத்தை எளிதில் அடையக்கூடிய விதத்தில் வேலை செய்யப்படவேண்டும். ஏனெனில், செய்யப்படவேண்டும் விதத்தில் நாஷ்வில்லில் இன்னும் பணிசெய்யப்படவில்லை. நாஷ்வில்லிற்கு போதுமான அளவு அருகிலிருந்து அங்கிருக்கக்கூடிய பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடுமானால், அது பள்ளியிலுள்ள பணியாளர்களுக்கு ஒரு மாபெரும் ஆசீர்வாதமாக இருக்கும். கச 77.3
பள்ளிக்கான ஒரு இடத்தைத் தேடிக்கொண்டிருக்கும்போது, நாஷ்வில்லிருந்து ஒன்பது மைல் தொலைவில், நானூறு ஏக்கர் பரப்புள்ள ஒரு பண்ணையை இந்த சகோதரர்கள் கண்டுபிடித்தார்கள், அந்நிலத்தின் பரப்பளவு, அதன் அமைப்பு, நாஷ்வில்லிருந்து அது அமைந்துள்ள தூரம், நிலத்தை வாங்குவதற்கு ஏற்ற சரியான விலை, இவை அனைத்துமே பள்ளிக்கூடத்திற்கு ஏற்ற சரியான இடம் போன்று இருப்பதைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டுவதுபோல தோன்றியது. எனவே, இந்த இடத்தை வாங்கும்படியாக நாங்கள் ஆலோசனை அளித்தோம். இந்த இடம் அனைத்துமே முற்றிலுமாக தேவைப்படும் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன். — RH Aug. 18, 1904. கச 77.4