கடைசிகாலச் சம்பவங்கள்
ஸ்டேன்ஹம். மசாசுசெட்ஸ் (Stoneham, Massachusetts)
அதிக விசேஷமான வேலை செய்யப்படவேண்டிய ஒரு இடமாகிய நியூ இங்கிலாந்தில் தமது ஊழியக்காரர்கள் முன்னேறிச் செல்லத்தக்கதான அடி எடுத்துவைப்பதற்கு, கர்த்தர் தமது கிருபையின்படியே வழியைத் திறந்திருக்கின்றார். அங்குள்ள சகோதரர்கள், சுகாதார மையத்தை செளத்லான்கேஸ்டரிலிருந்து பாஸ்டனுக்கு மிகவும் அருகில் உள்ள மெல்ரோஸ் என்னும் இடத்திற்கு ஒழுங்குடன் மாற்றம் செய்வதற்கு திறமையுடயவர்களாக இருந்திருக்கின்றனர். அதிலும் பரபரப்பாக இருக்கும் நகரத்திலிருந்து போதுமான தொலைவிற்கு மாற்றப்பட்டிருக்கின்றது. அதனால், நோயாளிகளின் உடல்நிலை விரைவில் திரும்ப குணமடைவதற்கேற்ற சாதகமான சூழ்நிலைகள் இங்கு நிலவுகின்றன. நியூ இங்கிலாந்திலுள்ள சுகாதார மையத்தை மிகவும் வசதியான இடமாகிய பாஸ்டன் எனும் நகரத்திற்கு மாற்றம் செய்வதென்பது தேவனுடைய சித்தத்துக்குட்பட்டதாக இருக்கின்றது. கச 75.6
நமக்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்துவதற்கும் கர்த்தர் தம்முடைய கரத்தை செயல்படுத்தும்போது, நம்மில் பலரும் பின்னாக தயங்கி நின்றுகொண்டு, அவ்வழியில் முன்னோக்கிச் செல்வதற்கான குணத்தைக் குறித்து ஆண்டவரை கேள்வி கேட்பதையும், அல்லது கீழ்ப்படிய பிரயாசப்படுகிறவர்களுக்கு உதவுயையும் உற்சாகத்தையும் தரமறுப்பதையும் தேவன் அனுமதிப்பதில்லை. நியூ இங்கிலாந்து சுகாதார மையத்தை செளத்லான்கேஸ்டரிலிருந்து மெல்ரோஸ் என்னும் இடத்திற்கு மாற்றினது கர்த்தருடைய வழிநடத்துலால் நிகழ்ந்தது என்று எனக்கு காண்பிக்கப்பட்டது. — SpT-B (13) 3 (1902). கச 76.1