கடைசிகாலச் சம்பவங்கள்

7/334

தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் புத்தகங்களை விசேஷமாக ஆராய்தல்

தேவனுடைய வார்த்தையை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து படிக்கவேண்டியது அவசியமாக இருக்கின்றது. முக்கியமாக தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் புத்தகங்கள், முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு கண்டிப்பாக கவனத்தைப் பெற்றிருக்க வேண்டும்… தேவனிடமிருந்து தானியேல் பெற்ற வெளிச்சம், முக்கியமாக இந்தக் கடைசி நாட்களுக்காகவே கொடுக்கப்பட்டது. - TM 112, 113 (1896). கச 9.4

தானியேல் பன்னிரெண்டாம் அதிகாரத்தை நாம் வாசித்து ஆராய்ந்து பார்ப்போமாக. அது, முடிவுகாலத்திற்கு முன்பாக நாம் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டிய ஒரு எச்சரிப்பாக இருக்கிறது. - 15 MR 228 (1903). கச 9.5

புதிய ஏற்பாடு வேதவாக்கியங்களின் கடைசி புத்தகம், நாம் கட்டாயமாகப் புரிந்துகொள்ள வேண்டிய சத்தியம் நிறைந்ததாக இருக்கின்றது. - COL 133 (1900). கச 9.6

வெளிப்படுத்தல் புத்தகத்தில் சொல்லப்பட்டவற்றில், இன்னும் நிறைவேறாத தீர்க்கதரிசனங்கள் விரைவில் நிறைவேற இருக்கின்றன. இந்த தீர்க்கதரிசன புத்தகம், தேவனுடைய ஜனங்களால் இப்பொழுது ஜாக்கிரதையாக ஆராயப்பட்டு, தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அது சத்தியத்தை மூடிமறைக்கவில்லை; மாறாக, எதிர் காலத்தில் என்ன நிகழும் என்பதை நமக்குக் கூறி, தெளிவாக முன்னெச்சரிக்கிறது. - INL 96 (1903). கச 9.7

வெளிப்படுத்தின விசேஷத்திலே, அவற்றின் வரிசைப்படி கொடுக்கப்பட்டிருக்கின்ற பக்திவிநயமாக தூதுகள், தேவனுடைய ஜனங்களின் மனங்களிலே முதலிடத்தைப் பிடித்திருக்கவேண்டும். - 8T 302 (1904). கச 9.8