கடைசிகாலச் சம்பவங்கள்
எதிர்கால உபத்திரவங்களுக்கு ஆயத்தமாகுதல்
கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் தங்களது விசுவாசத்திற்காக பரீட்சிக்கப்பட கொண்டுவரப்படும்பொழுது, திட்டவட்டமான பேச்சை அளிக்கவேண்டும் என்று ஆயத்தப்படக்கூடாது. தங்களது விசுவாசத்தை ஜெபத்தைக்கொண்டும் பெலப்படுத்துவதன் மூலமாகவும், கிறிஸ்துவின் போதனைகளைக்கொண்டு மனதிற்கு உணவளிப்பதின் மூலமாகவும், தேவனுடைய வார்த்தையின் விலையேறப்பெற்ற சத்தியங்களைத் தங்களது இருதயங்களில் பொக்கிஷமாக சேர்ந்து வைப்பதின் மூலமாகவும், அவர்களது ஆயத்தம் ஒவ்வொரு நாளும் செய்யப்படவேண்டும். அதன்பிறகு, பரீட்சிக்கப்பட கொண்டுவரப் படும்பொழுது, கேட்பதற்காக வருகின்ற இருதயங்களைச் சென்றடையத்தக்கதாக சரியான சத்தியங்களை அவர்களது நினைவிற்கு பரிசுத்த ஆவியானவர் கொண்டு வருவார். வேதவாக்கியங்களை ஊக்கமாக தேவைப்படக்கூடிய சரியான நேரத்திலே, ஒரு வினாடியில் தேவன் அவர்களது நினைவிற்கு உடனடியாகக் கொண்டு வருவார். - CSW 40, 41 (1990). கச 49.3
சோதிக்கப்படுகின்ற நேரம் வருகையில், மற்றவர்களுக்கு தற்போது பிரசங்கிக்கின்ற மனிதர்கள் தாங்கள் பற்றிக்கொண்டிருந்த நிலைப்பாட்டினை ஆராய்ந்து பார்க்கும்போது, தங்களால் திருப்திகரமான பதிலளிக்க முடியாத அநேகக் காரியங்கள் இருப்பதை அப்போது கண்டுகொள்வார்கள். அப்படியாக சோதிக்கப்படும்வரை, தங்களது மாபெரும் அறியாமையை அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். தாங்கள் நம்புவதை புரிந்துவைத்திருக்கின்றோம் என்று எண்ணிக்கொண்டு, உய்த்துணராது உண்மையென ஒப்புக்கொண்டிருக்கின்ற அநேகர் சபையில் இருக்கின்றார்கள். கருத்து மாறுபாடுகள் எழும்பும்வரை, தங்களது சொந்த பெலவீனத்தை அவர்கள் பிரிக்கப்பட்டு, தங்களது நம்பிக்கையைக் குறித்து விளக்கம் கொடுப்பதற்கு தனியாக நிற்கக் கட்டாயப் படுத்தப்படும்பொழுது, சத்தியம் என்று தாங்கள் ஏற்றுக்கொண்ட தங்களது கருத்துக்கள் எப்படி குழப்பமானதாக இருக்கின்றன என்று கண்டு அவர்கள் ஆச்சரியப்படுவார்கள். - 5T 707 (1889). கச 50.1