கடைசிகாலச் சம்பவங்கள்

65/334

வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் தேவனுடைய மக்களுக்கு ஓர் நங்கூரம்

இந்தக் கடைசி நாட்களில், முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் தூதனுடைய தூதுகளின் முழுமையான பொருளை ஆராய்ந்து அறிந்துகொள்வது நம்முடைய கடைமையாக இருக்கின்றது. நமது அனைத்து நடவடிக்கைகளும், தேவனுடைய வார்த்தையுடன் இசைவானதாக இருக்கவேண்டும். முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் தூதனுடைய தூதுகள் அனைத்தும், ஒன்றோடொன்று இனைக்கப்பட்டுள்ளன. வெளி. 14 - ம் அதிகாரத்தின் 6 - ம் வசனத்திலிருந்து கடைசி வரையிலும் அவைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. - 13MR 68 (1896). கச 48.7

மூன்றாம் தூதினை ஆர்வமாக ஏற்றுக்கொண்ட அநேகர், முதல் இரண்டு தூதுகளில் அனுபவம் பெற்றிருக்கவில்லை. சாத்தான் இதை நன்கு அறிந்துள்ளான். அவர்களை அழிக்கத்தக்கதாக, அவனுடைய தீமை பயக்கின்ற கண் அவர்கள்மீது பதிந்திருக்கின்றது. ஆனால் மூன்றாம் தூதன், அவர்களை மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு சுட்டிக்காட்டுகின்றான். கடந்த (இரண்டு) துதுகளில் அனுபவம் பெற்றிருந்தவர்கள், பரலோக ஆசரிப்புக்கூடாரத்திற்குச் செல்லவேண்டிய வழியை சுட்டிக்காட்டுகின்றார்கள். அநேகர், தூதர்களின் தூதுகளில் சத்தியத்தின் முழுமையான சங்கிலியைக் கண்டார்கள். அதனுடைய ஒழுங்கில் அதனை, அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, பரலோக ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளா விசுவாசத்துடன் இயேசுவைப் பின்பற்றினார்கள். தேவனுடைய மக்களுக்கு இந்தத் தூதுகள் நங்கூரம் போல் இருப்பது எனக்குக் காட்டப்பட்டது. அவைகளைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கின்றவர்கள், சாத்தானுடைய அநேக தந்திரங்களால் அடித்துச் செல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். - EW 256 (1858). கச 48.8