கடைசிகாலச் சம்பவங்கள்
பரிசுத்த ஆவியினால் வனையப்படுதல்
தேவ ஆவியானவர் மூலமாக வனையப்பட்டத்தக்கதாக ஒப்புக்கொடுக்கப்படும்வரை, மனித இருதயம் மகிழ்ச்சியை அறியாது. ஆவியானவர் மனமாற்றமடைந்த ஆத்துமாவை, இயேசு கிறிஸ்து என்ற முன்மாதிரிக்கு ஏற்ற விதத்தில் ஒத்திருக்கச் செய்வார். ஆவியானவரது ஆதிக்கத்தின் மூலமாக தேவனுக்கு விரோதமான பகை, அன்பு மற்றும் விசுவாசத்திற்குள்ளாகவும், பெருமை, தாழ்மைக்குள்ளாகவும் மாற்றப்படும். சத்தியத்தின் அழகை, ஆத்துமா அறிந்துகொள்ளும். குணத்தின் பூரணத்தினாலும், நேர்த்தியினாலும் கிறிஸ்தவானவர் மகிமைப்படுத்தப்படுவார். - OHC 152 (1896). கச 46.5
நமது சுபாவத்தின் ஒரு உணர்ச்சியோ, மனதின் வலிமையோ, அல்லது இருதயத்தின் ஒரு விருப்பமோ நம் கட்டுப்பாட்டின் கீழாக அல்ல, மாறாக, இவை அனைத்தும் ஒவ்வொரு கணப்பொழுதும், கண்டிப்பாக தேவ ஆவியின் கட்டுப்பாட்டின் கீழாக இருக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது. - PP 421 (1890). கச 46.6
ஆவியானவர் நமது இருளை பிரகாசிக்கச் செய்து, நமது அறியாமையை நமக்கு அறிவித்து, நமது எண்ணற்ற இன்றியமையாத தேவைகளில் நமக்கு உதவி செய்கினறார். ஆயினும், மனம் தொடர்ந்து தேவனுக்குப் பின்னாகச் சென்றுகொண்டிருக்க வேண்டும். உலகப்பற்று உள்ளே வர அனுமதிக்கப்பட்டால், ஜெபிப்பதற்கு நமக்கு விருப்பம் இல்லையென்றால், ஞானத்திற்கும் பெலத்திற்கும் ஊற்றாக இருக்கின்ற ஆண்டவருடன் ஐக்கியப்பட நமக்கு விருப்பம் இல்லையென்றால், ஆவியானவர் நம்முடன் நிலைத்திருக்கமாட்டார். - OHC 154 (1904). கச 46.7