கடைசிகாலச் சம்பவங்கள்

54/334

தமது ஜனங்களிடத்தில் தேவனுடைய பொறாமை

சபை தோற்றுபோய் இருக்கின்றது. தனது மீட்பரின் எதிபார்ப்புகளை நிறைவேற்றாமல், வருந்ததக்தக்க விதத்தில் தோற்றுபோய் இருக்கின்றது. இருந்தபோதும், கர்த்தர் தமது ஜனங்களிடமிருந்து தாமாக விலகிப்போய்விடவில்லை. அவர், தம் பிள்ளைகளின் தவறுகளை பொறுத்துகொண்டிருக்கின்றார். அவர்களிடம் ஏதோ நன்மையான காரியங்கள் காணப்படுவதால் அல்ல, சதியத்திற்கும் நீதிக்கும் எதிராக ஜனங்களுக்கு முன்பாக, தேவனுடைய நாமம் கனவீனம் பண்ணப்படாதிருக்கவும், தேவனுடைய ஜனங்கள் அழிந்துபோவதில் சாத்தானின் ஏதுகரங்கள் வெற்றிக் களிப்படையாதிருக்கவும், அவர் இன்னமும் அவர்களிடம் பொறுமையாக இருந்துகொண்டிருக்கின்றார். வியக்கத்தக்க பொறுமையோடும் கனிவோடும், அவர்களை நல்வழிப்படுத்தியிக்கின்றார். அவரது அறிவுரகளுக்கு அவர்கள் செவிகொடுப்பார்களானால், இப்படிப்பட்ட தவறான போக்கை மேற்கொள்கின்ற அவர்களது மனப்பாங்குகளை அவர் சுத்தப்படுத்தி, நித்திய இரட்சிப்புக்கென்று அவர்களைக் காத்துக் கொள்வார்; தமது கிருபையின் வல்லமையின் நித்திய நினைவுச் சின்னங்களாக அவர்களை நிலை நிறுத்துவார். - ST Nov. 13, 1901. கச 40.4

நாம் நினைவுகூர வேண்டியது: சபை பெலவீனமானதாகவும் குறைபாடு நிறைந்ததாகவும் இருக்கின்றபோதிலும், அது பூமியின்மீது கிறிஸ்துவானவர் தமது மேலான கவனத்தைச் செலுத்தக்கூடிய ஒரே பொருளாக இருக்கின்றது. உள்ளார்ந்த அக்கறையுடன், அவர் தொடர்ச்சியாக அதைக் கண்காணித்துக்கொண்டும், தமது பரிசுத்த ஆவியானவாரல் பெலப்படுத்திக்கொண்டும் இருக்கின்றார். - 2SM 396 (1902). கச 40.5