கடைசிகாலச் சம்பவங்கள்
தேவன் அனைத்தையும் ஒழுங்குபடுத்துவார்
ஊழியம் வெற்றியடையாதோ என்று பயப்படவோ சந்தேகப்படவோ அவசியம் இல்லை. தேவன் ஊழியத்தின் தலைமை இடத்தில் இருக்கின்றனார். அவர் அனைத்தையும் ஒழுங்குப்படுத்துவார். ஊழியத்தின் தலைமைப்பீடத்தில் சரிப்படுத்தப்பட வேண்டிய காரியங்கள் இருக்குமானால், தேவன் அதைக் கவனித்துக்கொள்வார். ஒவ்வொரு தவறையும் திருத்தும் கிரியையை அவர் செயல்படுத்துவார். தேவ ஜனத்தைச் சுமக்கின்ற சிறப்பு வாய்ந்த கப்பலை தேவன் பத்திரமாக நடத்திச்சென்று, துறைமுகத்தினுள் கொண்டு சேர்ப்பார் என்று நாம் விசுவாசிப்போமாக. - 2SM 390 (1902). கச 36.2
தேவனுக்கென்று ஜீவனுள்ள திருச்சபை எதுவும் இல்லையா? அவருக்கென்று ஒரு சபை இருக்கின்றது. ஆனால், அந்த சபை ஜெயம் பெற்றுவிட்ட சபையாக இல்லை; போராடிகொண்டிருக்கின்ற சபையாக இருக்கின்றது. அதில் குறைபாடு நிறைந்த அங்கத்தினர்களும், கோதுமையின் மத்தியில் களைகளும் இருககிதற்காக நாங்கள் வருந்துகின்றோம்... தற்போது சபையில் தீமைகள் இருந்தாலும், உலகத்தின் முடிவுரையிலும் காணப்பட்டாலும், பாவத்தினால் கறைபட்டும் சீர்கெட்டும் இருக்கின்ற இந்த உலகிற்கு, இந்தக் கடைசி நாட்களிலே சபைதான் ஒளியாக இருக்கவேண்டியதாகவிருக்கின்றது. பெலவீனப்பட்டும் குறைபாடுடையதாகவும் இருந்தாலும், கடிந்துகொள்ளப்பட்டு, எச்சரிக்கப்பட்டு, ஆலோசனை கொடுக்கப்படவேண்டிய அவசியமுடையதாயிருந்தாலும், சபைதான் பூமியின்மீது கிறிஸ்து வானவர் தமது மேலான கவனத்தைச் செலுத்தக்கூடிய ஒரே பொருளாக இருக்கின்றது. - TM 45, 49 (1893). கச 36.3
சாத்தானுடைய கோட்டை கொத்தளங்கள் ஒருபோதும் ஜெயம் பெறாது. ஆனால், மூன்றாம் தூதனின் தூது ஜெயம் பெறும். கர்த்தருடைய சேனையின் அதிபதியானவர் எரிகோவின் மதில்களைத் தகர்த்துப் போட்டதுப்போல, கர்த்தருடைய கற்பனையைக் கைகொள்ளுகின்ற ஜனத்தார் ஜெயம் பெறுவார்கள். அவர்கள் எதிர்க்கும் அனைத்து இயற்கை சக்திகளும் (மூலப்பொருட்களும்) தோற்கடிக்கப்படும். - TM 410 (1898). கச 36.4