கடைசிகாலச் சம்பவங்கள்
சபைத் தலைமையகத்தில் அதிகார துஷ்பிரயோகம்
தவறான மனோபாவங்களினாலும் தவறான கொள்கைகளினாலும், ஜெனரல் கான்ஃபரன்சும் கறைப்பட்டதாக மாறிக்கொண்டு வருகின்றது... மனிதர்கள் தங்களது ஆளுகையின்கீழ் இருக்கின்றவர்களைப் பாதகமான முறையில் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். தனி நபர்களை தங்களது கட்டுப்பட்டுக்குள் கொண்டுவருவதற்கு உறுதிபூண்டவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்; அவர்கள் ஆளுகை செய்வார்கள் அல்லது அழிப்பார்கள்... கச 34.3
பதவி மனிதர்களை தெய்வங்களாக்கிவிட்டதைப்போல நினைத்துக் கொண்டு, மற்றவர்களை அடக்கியாளக்கூடிய வகையில் உருவாகியிருக்கின்ற வல்லமை, எனக்கு அச்சத்தைத் ஏற்படுத்துகின்றது; அச்சத்தை ஏற்படுத்திதான் ஆகவேண்டும். எவ்விடத்தில் எவரால் பயிற்சிக்கப்பட்டாலும், இது ஒரு சாபமே. - TM 359-361 (1895). கச 34.4
ஒரு சில மனிதருக்கு முற்றிலும் அளவுக்கதிகமான கனமான பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இருந்தபோதிலும், சிலர் தேவனைத் தங்கள் ஆலோசகராக ஏற்படுத்திகொள்வதில்லை. அயல்நாடுகளில் ஊழியத்தின் அவசியங்களைப்பற்றி இத்தகைய மனிதர்களுக்கு என்ன தெரியும்? தகவல் கேட்டு அவர்களிடம் வருகின்ற கேள்விகளுக்கு எப்படித் தீர்மானிப்பதென்று அவர்கள் எப்படி அறிவார்கள்? எழுதுவதில் தாமதமே இல்லாதிருந்தாலும், அயல் நாடுகளிலுள்ளவர்கள் தங்களது கேள்விக்கான பதிலைப் பெறுவதற்கு மூன்று மாதங்கள் ஆகக்கூடும். - TM 321 (1896). கச 34.5
தூர தேசங்களில் வசிக்கின்றவர்கள், பேட்டில் கிரீக்கிற்கு (அப்போதைய தலைமையாகம்) முதலாவது எழுதி அனுமது பெறாத பட்சத்தில், தங்கள் மனம் தங்களுக்குச் சரி என்று சொல்லுவதை செய்யமாட்டார்கள். முன்னேறிச் செல்வதற்க்கு முன்னதாக, அவ்விடத்திலிருந்து சரி அல்லது வேண்டாம் என்ற பதிலைப் பெறுவதற்கு அவர்கள் காத்திருப்பார்கள். - SpT-A (9) 32 (1896). கச 34.6
ஜெனரல் கான்ஃபரன்சின் தலைவராக இருப்பதற்கு, ஒரு மனிதனைத் தெரிந்துகொள்ளுவது ஞாமற்றதாகும். ஜெனரல் கான்ஃபரன்சின் பணி விரிவடத்திருக்கின்றது. சில காரியங்கள் அவசியமில்லாமல் குழப்பத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கிறன. பகுத்தறியும் காரியம் குறைவுபட்டிருப்பது எனக்குக் காண்பிக்கப்பட்டது. பணித்தளம் ஒவ்வொரு பிரிவாக பிரிக்கப்படவேண்டும், அல்லது தற்போது நடை முறையில் உள்ள காரியங்களில் மாற்றம் கொண்டு வருவதற்கு, வேறு ஏதாவது திட்டம் தீட்டப்பட வேண்டும். 5 - TM 342 (1896). கச 35.1