கடைசிகாலச் சம்பவங்கள்

334/334

தேவன் அன்பானவர் என்று முழு அண்டசராசரமும் அறிவிக்கும்

மாபெரும் போராட்டம் முடிவடைந்தது. பாவமும் பாவிகளும் இனி ஒருபோதும் இருக்கமரட்டார்கள். அண்டசராசரம் முழுவதும் தூய்மையடைந்துவிட்டது. பரந்து விரிந்த படைப்பு முழுவதிலும் ஒருமைப்பாடும், மகிழ்ச்சியும் நாடித்துடிப்புபோல் ஒரே சீராக விளங்கும். எல்லையில்லா விண்வெளி எங்கும், சிருஷ்டி கர்த்தாவாகிய அவரிடமிருந்து, ஜீவனும் ஒளியும் மகிழ்ச்சியும் புறப்பட்டுப் பாய்ந்தோடும். மிக நுண்ணிய அனுவிலிருந்து மிகப் பிரமாண்டமான உலகம் வரை, உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தும் தங்களது நிழலிடாத அழகிலும் பூரண மகிழ்ச்சியிலும் தேவன் அன்பாயிருக்கின்றார் என்பதைப் பறைசாற்றும். — GC 678 (1911). கச 224.1

*****

எலன் ஜி. உவைட் அம்மையார் 130-க்கு மேற்பட்ட நூல்களை இயற்றியவர் ஆவார். இவற்றில் பல, அவரது பரந்த கையெழுத்துப்படிகளின் கோப்பிலிருந்து தொகுக்கப்பெற்று, அவரது மறைவுக்குப் பின்னர் வெளியிடப்பட்டுள்ளன. அவர் உலகின் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட நூல்களை எழுதிய பெண் எழுத்தாளராக இருக்கிறார். அவரது எழுத்துகள் 150-க்கு மேற்பட்ட மொழிகளில் தோற்றம் தருகின்றன. தேவனால் அருட்போதனை பெற்ற அவர், எப்போதும் இயேசுவை உயர்த்திவந்ததுடன், பரிசுத்த வேத வசனங்களின் அடிப்படையிலான விசுவாசத்தையே தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளார். கச 225.1

எலன் ஒயிட் அவர்கள், “நமது சிறு உலகம் பிரபஞ்சத்திற்கு ஒரு பாட புத்தகமாக உள்ளது” (The Desire of Ages, 19). காணப்படாத உலகம் “சொல்லவொண்ணா ஆர்வத்துடன்” (Prophets and Kings, 148) இந்த உலக வரலாற்றின் முடிவுக் காட்சிகளை கவனித்துக்கொண்டிருக்கிறது என்று அறிவிக்கிறார். பூமியின் உச்சகட்ட நிகழ்வுகளில் நன்மைக்கும் தீமைக்குமான மாபெரும் போராட்டத்தின் தொடர்பில் நாம் காண்கையில், நாம் அனைவரும் முக்கியமான எதையாவது தொட்டுப் பிடிக்க முயற்சி செய்வோமா... இயேசுவின் அதிசீக்கிர வருகையின் மகிமை நிறைந்த சத்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வோமா... கச 225.2