கடைசிகாலச் சம்பவங்கள்
ஒவ்வொரு உன்னதமான செயலின் பலன்
சுயநலமற்ற ஆவியுடன் ஊழியம் செய்த அனைவரும், தங்களது கடின உழைப்பின் பலனைக் காண்பார்கள். ஒவ்வொரு சரியான கொள்கை மற்றும் உன்னதமான செயலின் முடிவான பலனும் தெரியவரும். இப்படிப்பட்ட பலாபலன்களில் சிலவற்றை நாம் இவ்வுலகிலேயே காண்கிறோம். ஆயினும் இந்த உலகத்தினுடைய உன்னதமான வேலையின் பலன், அதை செய்தவருக்கு எவ்வளவு குறைவாக இந்த வாழ்க்கையில் வெளிக்காட்டப்பட்டுள்ளது! தங்களுடைய எல்லைக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்ட நிலையைக் கடந்துசெல்லும் மக்களுக்காக, எத்தனை பேர் சுயநலமின்றி சோர்ந்துபோகாமல் உழைக்கின்றனர்! தங்களது வாழ்நாளின் பணி வீணாக செய்யப்பட்டதுபோன்று தோற்றமளிக்கின்றவிதத்தில், தங்கள் செய்கையின் பலனைக் காணாமலேயே, பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள் படுக்கையை மண்ணில் போடுகின்றனர். அவர்களது நேர்மை, ஒருபோதும் வற்றிப்போகாத ஆசீர்வாதமான ஊற்றுகளைத் திறந்திருக்கின்றது என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். தாங்கள் பயிற்றுவித்த பிள்ளைகள், அவர்களது சகமனிதர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாகவும் தூண்டுதலாகவும் மாறியிருக்கின்றனர் என்பதையும், அவர்களது செல்வாக்கு ஒரு ஆயிரம் மடங்காக திரும்பவுமாகச் செயல்பட்டிருக்கின்றது என்பதையும், விசுவாசத்தின் மூலமாக மாத்திரமே அவர்கள் காண்கின்றனர். கச 222.1
ஊழியக்காரர் அநேகர் நம்பிக்கை அளிக்கக்கூடிய, தைரியமூட்டுகின்ற, மற்றும் ஊக்கப்படுத்தக்கூடிய தூதுகளை உலகத்திற்கு அனுப்பி, அவ்வார்த்தைகளால் ஒவ்வொரு தேசத்திலுமுள்ள இருதயங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுசென்றிருக்கின்றார்கள். ஆயினும் தனிமையிலும் இருளான சூழ்நிலைகளிலும் உழைத்த அவர்கள், அதன் முடிவுகளைப்பற்றி குறைவாகவே அறிந்திருக்கின்றனர். இப்படியாக, ஈவுகள் அளிக்கப்பட்டு, பாரங்கள் சுமக்கப்பட்டு, வேலை செய்யப்பட்டிருக்கின்றது. மனிதர்கள் விதை விதைத்துவிட்டுக் கல்லறைக்குட்படுகிறார்கள்; மற்றவர்கள் கனிகளைப் புசிக்கத்தக்கதாக இவர்கள் மரங்களை நடுகின்றனர். தாங்கள் நன்மைக்கேதுவான காரியங்களை நடப்பித்திருக்கின்றோம் என்பதை அறிந்திருப்பதிலே, அவர்கள் இங்கே திருப்தியடைகின்றார்கள். இவையனைத்துக் கிரியைகளின் பலன்களும் பிரதிபலன்களும் இனிமேல்தான் தெரியவரும். — Ed 305, 306 (1903). கச 222.2