கடைசிகாலச் சம்பவங்கள்

324/334

பிதாவோடும் குமாரனோடும் ஐக்கிய உறவு

தேவனுடைய ஜனங்கள், பிதாவோடும் குமாரனோடும் நேரடியான தொடர்புகொள்ளும் சிலாக்கியத்தை பெற்றிருந்தனர்... நமக்கும் அவருக்கும் இடையே மங்கலான எந்த ஒரு திரையும் இல்லாத விதத்தில், நாம் அவரை முகமுகமாக தரிசிப்போம். — GC 676, 677 (1911). கச 218.1

நாம் எப்போதும் அவரோடு குடியிருந்து, அவரது அன்பான முகத்தின் ஒளியை மகிழ்ச்சியோடு அனுபவிப்போம். இப்படிப்பட்ட மகிழ்ச்சியான எதிர்பார்ப்பினால் என் இதயம் சந்தோஷத்தில் துள்ளுகின்றது. — HP 352 (1856). கச 218.2

கிறிஸ்து இருக்கும் இடம்தான் பரலோகம், கிறிஸ்துவை நேசிப்பவர்களுக்குக் கிறிஸ்து அங்கு இல்லையென்றால், பரலோகம் பரலோகமாக இருக்காது. — Ms 41, 1897. கச 218.3

தேவனுக்கும் உயிர்தெழுந்த பரிசுத்தவாங்களுக்கும் இடையே, நெருக்கமான மென்மையான உறவு அங்கு இருக்கும். — DA 606 (1898). கச 218.4

நமது சிரசின்மீது அவர் அன்பாக வைத்த கிரீடங்களை, மீட்பரது பாதப்படியிலே நாம் வைத்து, நம்முடைய பொற்சுரமண்டலங்களை மீட்டி, சிங்காசனத்தின்மீது வீற்றிருக்கிறவருக்கு துதிகளை ஏறெடுத்து பரலோகம் முழுவதையும் நிரப்புவோம். — 8T 254 (1904). கச 218.5

இந்த வாழ்க்கையில் அவர்கள் தேவனுக்கு உண்மையாக இருப்பார்களானால், கடைசியிலே, “அவருடைய முகத்தை அவர்கள் தரிசிப்பார்கள். அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்” (வெளி. 22:4). தேவனைத் தரிசிப்பதைக்காட்டிலும், வேறென்ன சந்தோஷம் பரலோகத்தில் நமக்கு இருக்க முடியும்? கிறிஸ்துவின் கிருபையினாலே இரட்சிக்கப்பட்ட பாவிக்கு, தேவனுடைய முகத்தைத் தரிசித்து அவரைத் தனது தகப்பனாக அறிந்துக்கொள்வதைக் காட்டிலும், வேறு என்ன பெரும் மகிழ்ச்சி அங்கு இருக்க முடியும்? — 8T 268 (1904). கச 218.6