கடைசிகாலச் சம்பவங்கள்

306/334

20. பரிசுத்தவான்களின் 1 சுதந்தரவீதம்

கர்த்தரிடமிருந்து ஒரு அன்பளிப்பு

கிறிஸ்துவும் கிறிஸ்துவினுடைய நீதியும் மாத்திரமே, பரலோகத்திற்குப் போவதற்கான நுழைவுரிமையை நமக்குப் பெற்றுத்தரும். — Letter 6b, 1890. கச 208.1

அகந்தைமிக்க இருதயம் இரட்சிப்பை சம்பாதிக்க முயலுகின்றது. ஆனால் பரலோகத்திற்கான நமது பட்டமும், அதற்கான நமது தகுதியும் கிறிஸ்துவினுடைய நீதியில் காணப்படுகின்றது. — DA 300 (1898). கச 208.2

நாம் பரலோகக் குடும்பத்தின் அங்கத்தினராக மாறும்படியாக, அவர் பூலோகக் குடும்பத்தின் ஒரு அங்கத்தினரானார். — DA 638 (1898). கச 208.3

பூமியின்மேலுள்ள பெருமைமிகு மாளிகைக்குரியவர் என்று பெயர் பெற்றிருப்பதைவிட, கர்த்தர் ஆயத்தஞ்செய்யச் சென்றிருக்கிற வாசஸ் தலங்களுக்குரிய உரிமையைப் பெற்றிருப்பதே மேன்மையாக இருக்கும். உலகத்தின் புகழ்ச்சியான வார்த்தைகள் அனைத்தையும் காட்டிலும், “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப் பட்டிருக்கின்ற இராஜ்ஜியத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” என்ற அவரது உண்மையான ஊழியக்காரர்களுக்கான இரட்சகரின் வார்த்தைகள் மேன்மையானதாய் இருக்கும். — COL 374 (1900). கச 208.4