கடைசிகாலச் சம்பவங்கள்

23/334

பூமியின் நிகழ்வுகளைக் குறித்த பரலோகத்தின் அக்கறை

முதல் கொலையாளியின் ஜீவனைத் தப்பவிட்டதன் மூலம், மாபெரும் போராட்டத்தைக் குறித்ததான ஒரு பாடத்தை, முழு உலகத்தின் முன்பாகவும் தேவன் எடுத்துக் காண்பித்தார்... அவரது நோக்கம், கச 20.6

கலகத்தை வெறுமனே அடக்கிவிடுவதல்ல, மாறாக, கலகத்தின் தன்மையை அண்டசராசரத்திற்கு முன்பாக விளக்கிக் காட்டுவதாக இருந்தது... மற்ற உலகங்களின் பரிசுத்த குடிமக்கள், பூமியின்மீது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சம்பவங்களை, ஆழ்ந்த ஆர்வத்துடன் கவனித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்... 5 கச 21.1

தேவனுடைய மாபெரும் திட்டம், அதனுடைய முழுமையான நிறைவேற்றத்தை நோக்கி படிப்படியாக முன்னேறிக்கொண்டிருக்கும் பொழுது, அவர், முழு அண்டசராசரத்தின் இரக்கத்தையும் அங்கீகாரத்தையும் தன்னுடன் எடுத்துச் செல்கின்றார். - PP 78, 79 (1890). கச 21.2

மனிதனுடைய இரட்சிப்புக்காக மரித்த கிறிஸ்துவின் செயல், மனிதருக்குப் பரலோகத்தை எளிதில் அடையக்கொடியதாக்கியது மட்டுமல்லாமல், சாத்தானின் கலகத்துடனான அவர்களது அணுகு முறையில், தேவனும் அவரது குமாரனும் நீதியுள்ளவர்கள் என்பதை அண்டசராசரத்திற்கு முன்பாகவும் அது காட்டுகின்றது. - PP 68, 69 (1890). கச 21.3

நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான மாபெரும் போராட்டத்தின் கடைசிக் காட்சிகளை, அண்டசராசரமும் சொல்லி முடியாத ஆர்வத்துடன் உற்றுநோக்கிக்கொண்டு இருக்கின்றது. - PK 148 (c. 1914). கச 21.4

நமது சிறு உலகம், பிரபஞ்சத்தின் பாடநூலாக இருக்கின்றது. - DA 19 (1898). கச 21.5

*****